01. அரச அதிகாரிகளின் கொள்ளளவு விருத்தி தொடர்பில் துறையில் ஒத்துழைப்பினை பெறல் தொடர்பாக சிங்கப்பூர் அரசாங்கம் மற்றும் இலங்கை அரசாங்கம் ஆகியவற்றுக்கு இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் (விடய இல. 07)
சிங்கப்பூர் சிவில் சேவை கல்லூரியில் நடைபெறவிருக்கும் “இலங்கையின் சிரேஷ்ட அதிகாரிகளுக்கான அரச சேவை பிரிவில் தலைமைத்துவ வேலைத்திட்டம்” (Pரடிடiஉ ளுநஉவழச டுநயனநசளாip Pசழபசயஅஅந கழச ளுநnழைச ழுககiஉயைடள கசழஅ ளுசi டுயமெய)எனும் ஐந்து நாள் பயிற்சிநெறியினை சிங்கப்பூர் அரசாங்கம் இலங்கைக்கு வழங்கியுள்ளது.
அவ்வேலைத்திட்டமானது ஒரு தடவைக்கு 35 பேர் வீதம் இரு குழுக்களாக நடாத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதனடிப்படையில் அடுத்த மாதம் பிரதமரினால் மேற்கொள்ளப்படவுள்ள சிங்கப்பூர் விஜயத்தின் போது அரச அதிகாரிகளின் கொள்ளளவு விருத்தி தொடர்பில் துறையில் ஒத்துழைப்பினை பெறல் தொடர்பாக சிங்கப்பூர் அரசாங்கம் மற்றும் இலங்கை அரசாங்கம் ஆகியவற்றுக்கு இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில் கைச்சாத்திடுவதற்கு கௌரவ பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் பொது நிர்வாக மற்றும் முகாமைத்துவ அமைச்சர் கௌரவ ரன்ஜித் மத்தும பண்டார ஆகியோர் இணைந்து முன்வைத்த யோசனைகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.