• #163, கிருலபன எவனியூ, கொழும்பு 05, இ லங்கை​
  • +94 112 51 5759

engsin

அரசாங்க திரைப்படப் பிரிவு (GFU)

அரசாங்க திரைப்படப் பிரிவு 1948 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 05 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டது. இதன் முதல் பணிப்பாளராக இத்தாலியைச் சேர்ந்த திரைக்கதை எழுத்தாளரும் இயக்குனருமான ஜூலியோ பெற்றோனி (Giulio Petroni) (1917 - 2010) வரை பதவி வகித்தார்.

 

தேசிய முக்கியத்துவம் மிக்க நிகழ்வுகளில் செய்தி சேகரிப்புக்களிலும் ஆவணப் படத் தயாரிப்புக்களிலும் ஈடுபடவென இப்பிரிவு ஒப்படைக்கப்பட்டது. இப் பிரிவின் மூலம் தயாரிக்கப்படும் ஆவணப்படங்கள் சினிமாக்களில் திரையிடப்பட்டன. அத்துடன் நாட்டின் பல பாகங்களிலுமுள்ள பொதுக்கல்விக்காகவும் இவை பயன்படுத்தப்பட்டன. இத் திரைப்படப் பிரிவானது தன்னகத்தே தயாரிப்பு, தொகுப்பாக்கம், நிற ஆய்வகம், ஒலிப்பிரிவு, திரைப்பட அரங்கு  மற்றும் காப்பகம் ஆகிய பிரிவுகளை கொண்டுள்ளது.

 

இவற்றுள் நிற ஆய்வகத்தினை தன்னகத்தே கொண்டுள்ளமையானது மிகவும் பெரியதொரு திருப்புமுனையாக குறிப்பிட்டுக் கூறக்கூடியது. 1981 ஆம் ஆண்டில் ஜேர்மன் நாட்டின் உதவியுடன் இவ் ஆய்வகமானது நிற ஆய்வகமாக மாற்றப்பட்டது. திரைப்படக் காப்பகமானது இத்திணைக்களத்தின் பெறுமதி மிக்க சொத்தாக குறிப்பிட்டுக் கூறக்கூடியதொன்றாகும்.

 

நாடு சுதந்திரமடைந்த காலந்தொட்டு இவ் திரைப்பட பிரிவினரால் தயாரிக்கப்பட்ட அனைத்து ஆவணப்படங்களும் இறுவட்டுக்களில் பதிவு செய்யப்பட்டு பாதுகாக்கப்பட்டு வருகின்றன. இவ்வாறு பாதுகாக்கப்படும் ஒலி ஒளி நாடாக்களிலுள்ள தகவல்கள் பழைய திரைப்பட தகவல்கள் வேறு ஊடக நிறுவனங்களின் தேவைக்கேற்ப வழங்கப்படும். இவ்வாறு வழங்கப்படும் வீடியோவின் நேரத்திற்கேற்ப பணம் அறவிடப்படும். எனவே வெளியக ரீதியிலான திரைப்பட காட்சிப்படுத்தல்களுக்கு தேவையான வளங்களை வழங்கி உதவுதலும் அரசாங்க திரைப்படப் பிரிவின் இன்னொரு சேவையாக அமைகின்றது. 

 

 

More details: Preserving Sri Lanka’s documentary heritage by Richard Boyle

அத்துடன் இலங்கையிலுள்ள ஊடகத்துறையின் கொள்கை திட்டமிடல் , பயிற்சி நெறிகளை வழங்குதல் , மற்றும் ஊடகத்துறைக்கான அங்கீகாரங்களை வழங்குவதிலும் இந்நிறுவனம் முன்னின்று உதவுகின்றது.