ஆய்வு மற்றும் கண்காணிப்பு பிரிவு
நாட்டிலுள்ள அச்சு மற்றும் இலத்திரினியல் ஊடகங்களை கண்காணிக்கும் பொருட்டே இவ் ஆய்வு மற்றும் கண்காணிப்பு பிரிவு ஆரம்பிக்கப்பட்டது. அத்துடன் அரசாங்கத்தின் தகவல்கள், நுண்ணறிவுத் தகவல்கள் பொருத்தமான தகவல்களை சரியான முறையில் தொகுத்தெடுத்து வழங்கும் முறையிலும் இப்பிரிவு செயற்படுகின்றது. இப்பிரிவு நாளாந்தம் தொலைக்காட்சி மற்றும் வானொலிகளில் ஒலி/ஒளி பரப்பப்படும் அனைத்து விடயங்களையும் கண்காணிக்கின்றது. அத்துடன் தமிழ் சிங்கள ஆங்கில மொழி இணையத்தளங்களில் வெளியாகும் நாளாந்த வாராந்த செய்திகளை சேகரித்து அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லும் வகையில் அறிக்கை தயாரித்தல் பணியிலும் ஈடுபடுகின்றது.
இத்துடன் மேலதிகமாக ஜனாதிபதி கடல்கடந்து வெளிநாடுகளில் சென்று உரையாற்றும் சந்தர்ப்பங்களிலும் நாட்டில் இடம்பெறும் விசேட சந்தர்ப்பங்களிலும் வழங்கப்படுகின்ற உரையினை தயாரித்து புத்தகம் வெளியிடல். இதற்கு மேலதிகமாக இப் பிரிவினால் வழங்கப்படுகின்ற பணிகளாக அரசாங்க அரசியல்வாதிகளின் உரைகள், அரசாங்க சார்பானவர்களின் கருத்துக்கள், எதிர்த்தரப்பினரின் கருத்துக்கள் முக்கியமான நடைமுறை விடயங்கள் போன்றவற்றினை சேகரித்தலிலும் உதவுகின்றது.