• #163, கிருலபன எவனியூ, கொழும்பு 05, இ லங்கை​
  • +94 112 51 5759

engsin

வெளியீட்டு பணியகம்


நாடு சுதந்திரமடைவதற்கு முன்னர் இப் பணியகமானது அரசாங்க பதிவுகள் அலுவலகம் என அழைக்கப்பட்டது. அதன் பின்னர் 1950 ஆம் ஆண்டு காலப்பகுதியில் இப்பிரிவானது அரசாங்க புத்தகங்கள் மற்றும் பத்திரிகைகளை பேணிப் பாதுகாக்கும் நிறுவனமாக இருந்து வந்தது. அதன் பின்னர் 1978 ஆம் ஆண்டில் இவ் பணியகம் அரசாங்கத்தின் வெளியீட்டுப் பணியகமாக பெயர் மாற்றம் பெற்றது. அதனுடன் அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படும் சட்டமூலங்கள், வரைபுகள் அரசாங்க வர்த்தமானி பாராளுமன்ற செயற்பாடுகள் சட்ட அறிக்கைகள் போன்றவற்றினை மக்களுக்கு வழங்கும் உன்னத சேவையை ஆற்றி வருகின்றது.

அத்துடன் இலங்கையிலுள்ள ஊடகத்துறையின் கொள்கை திட்டமிடல் , பயிற்சி நெறிகளை வழங்குதல் , மற்றும் ஊடகத்துறைக்கான அங்கீகாரங்களை வழங்குவதிலும் இந்நிறுவனம் முன்னின்று உதவுகின்றது.