• #163, கிருலபன எவனியூ, கொழும்பு 05, இ லங்கை​
  • +94 112 51 5759

engsin

அமைச்சரவை தீர்மானங்கள் 2016.06.28

01. அரச அதிகாரிகளின் கொள்ளளவு விருத்தி தொடர்பில் துறையில் ஒத்துழைப்பினை பெறல் தொடர்பாக சிங்கப்பூர் அரசாங்கம் மற்றும் இலங்கை அரசாங்கம் ஆகியவற்றுக்கு இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் (விடய இல. 07)
சிங்கப்பூர் சிவில் சேவை கல்லூரியில் நடைபெறவிருக்கும் “இலங்கையின் சிரேஷ்ட அதிகாரிகளுக்கான அரச சேவை பிரிவில் தலைமைத்துவ வேலைத்திட்டம்” (Pரடிடiஉ ளுநஉவழச டுநயனநசளாip Pசழபசயஅஅந கழச ளுநnழைச ழுககiஉயைடள கசழஅ ளுசi டுயமெய)எனும் ஐந்து நாள் பயிற்சிநெறியினை சிங்கப்பூர் அரசாங்கம் இலங்கைக்கு வழங்கியுள்ளது.

அவ்வேலைத்திட்டமானது ஒரு தடவைக்கு 35 பேர் வீதம் இரு குழுக்களாக நடாத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதனடிப்படையில் அடுத்த மாதம் பிரதமரினால் மேற்கொள்ளப்படவுள்ள சிங்கப்பூர் விஜயத்தின் போது அரச அதிகாரிகளின் கொள்ளளவு விருத்தி தொடர்பில் துறையில் ஒத்துழைப்பினை பெறல் தொடர்பாக சிங்கப்பூர் அரசாங்கம் மற்றும் இலங்கை அரசாங்கம் ஆகியவற்றுக்கு இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில் கைச்சாத்திடுவதற்கு கௌரவ பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் பொது நிர்வாக மற்றும் முகாமைத்துவ அமைச்சர் கௌரவ ரன்ஜித் மத்தும பண்டார ஆகியோர் இணைந்து முன்வைத்த யோசனைகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

02. ஊழல் எதிர்ப்பு குழுக் செயலாகத்தை தொடர்ந்து முன்னெடுத்துச் செல்லல் (யூவெi – ஊழசசரிவழைn ஊழஅஅவைவநந ளுநஉசநவயசயைவ – யூஊஊளு) (விடய இல. 08)
பாரதூரமான குற்றம் மற்றும் ஊழல் தொடர்பில் முறைப்பாடுகளை ஏற்றுக் கொள்ளுதல் மற்றும் அது தொடர்பில் பரிசீலனைக்கான வசதிகளை செய்து கொடுப்பதற்காக வேண்டி ஊழல் எதிர்ப்பு குழு செயலகமானது அமைச்சரவை தீர்மானத்தின் படி 2015 ஆம் ஆண்டு ஸ்தாபிக்கப்பட்டது. தற்போது இந்நாட்டில் காணப்படும் ஊழல் எதிர்ப்பு குழுவின் அமைப்பு முறையில் மறுசீரமைப்பை செய்வது தொடர்பில் ஆலோசிக்கப்பட்டு வருகின்றது. அது ஐக்கிய இராச்சியத்தில் காணப்படும் பலமான ஊழல் எதிர்ப்பு குழுவிற்கு சமமான முறையில் ஸ்தாபிப்பதற்கும் யோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. அதனடிப்படையில் அவ்வமைப்பு முறை பூர்த்தியடையும் வரையில் தொடர்ச்சியாக ஊழல் எதிர்ப்பு குழச் செயலகத்தை முன்னெடுத்துச் செல்ல கௌரவ பிரதமர் ரணில் விக்ரமசிங்க அவர்களினால் முன்வைக்கப்பட்ட அமைச்சரவை யோசனைகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

03. வருடாந்த பஸ் கட்டணத்தில் திருத்தம் செய்தல் (விடய இல. 15)
தனியார் பஸ் கட்டண திருத்தம் தொடர்பில் தற்போது காணப்படும் கொள்கைகள் மற்றும் நிபந்தனைகளை தற்காலத்துக்கு பொருந்தும் வகையில் திருத்தப்பட வேண்டும் என தனியார் பஸ் உரிமையாளர்களின் சங்கத்தினரினால் முன்வைக்கப்பட்ட வேண்டுகோளினை கருத்திற் கொண்டுஇ முறையான போக்குவரத்து சேவையினை முன்னெடுத்துச் செல்லும் நோக்கில் வருடாந்த பஸ் கட்டண திருத்தம் செய்வது தொடர்பில் 2002 ஆம் ஆண்டு தயாரிக்கப்பட்ட கொள்கைகள் மற்றும் நிபந்தனைகளை சாராம்சம் செய்வதற்காக குறித்த நிறுவனங்களின் உறுப்பினர்கள் அடங்கிய குழுவொன்றினை நியமிக்க போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் கௌரவ நிமல் சிறிபால டி சில்வா அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

04. சைப்பிரஸின் நிகோசியாவில் இலங்கை கொன்சுலேற்று நாயகத்தின் அலுவலகம் ஒன்றினை நிறுவுதல் (விடய இல. 16)
சைப்பிரஸ் நாட்டில் தற்போது பணிபுரியும் 20இ000 – 25இ000 இடையிலான இலங்கை பணியாளர்களின் நலனினை உறுதி செய்து கொள்ளுதல் மற்றும் தொழில் வாய்ப்புக்களை விருத்தி செய்து கொள்ளுவதற்காக சைப்பிரஸ் நிகோசியாவில் கொன்சல்; நாயகத்துக்கான அலுவலகம் ஒன்றினை அமைப்பதற்கான தேவை எழுந்துள்ளது. அதனடிப்படையில் வியாபாரம்இ முதலீடுஇ வேலைவாய்ப்பு மற்றும் கல்வி வாய்ப்புக்கள் ஆகியவற்றினை விருத்தி செய்தல் மட்டுமல்லாது சைப்பிரஸில் இலங்கை தொழிலாளர்களின் நலனோம்பல் தேவைகளை பெற்றுக் கொடுக்கும் நோக்கில் அந்நாட்டின் நிக்கோசியா நகரில் இலங்கைக்கான கொன்சுலேற்று அலுவலகம் ஒன்றினை ஸ்தாபிப்பதற்கு வெளிவிவகார அமைச்சர் கௌரவ மங்கள சமரவீர அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

05. இலங்கை சமூகப் பாதுகாப்புச் சபைச் சட்டம் திருத்தம் (விடய இல. 18)
சுய தொழில்களில் ஈடுபட்டுள்ளோர்களுக்கான ஓய்வூதியம் மற்றும் சமூகப் பாதுகாப்பு பிரதிபலன் உத்தேசத் திட்டத்தைச் செயற்படுத்துவதுஇ சபையின் பணியாகும். 2016.03.31 ஆம் திகதிக்கு உத்தேசத் திட்டத்தின் அங்கத்தவர்களின் எண்ணிக்கை 497இ102 ஆவதுடன்இ மாதாந்தம் ஓய்வூதியம் பெறுகின்ற ஓய்வூதியக்காரர்களின் எண்ணிக்கை 22இ973 ஆகும். குறித்த திட்டமானது சுய தொழில்களில் ஈடுபடுவோருக்காக வேண்டி செயற்படுத்தப்படினும்இ இலங்கையின் சனத்தொகை வயதுக் கட்டமைப்பு மற்றும் சமூக மற்றும் பொருளாதார காரணங்களை கருத்திற் கொண்டு சுய தொழில்களில் ஈடுபட்டுள்ளோர்களுக்கு மேலதிகமாக தனியார் துறைகளில் சேவையில் ஈடுபட்டுள்ளோர்இ தொழில் வாண்மையாளர்கள்இ கலைஞர்கள்இ உள்நாட்டு வைத்தியர்கள்இ வெளிநாட்டில் தொழில் புரிபவர்கள்இ விவசாயம் மற்றும் மீன் பிடித் தொழில்களில் ஈடுபடுவர்கள் ஆகியோர்களுக்காகவும் இவ் உத்தேச திட்டத்தினை செயற்படுத்துவதற்கான தேவையும் சந்தர்ப்பமும் நிலவுகின்றது. எனவே அது தொடர்பில் கவனத்தை செலுத்தி இலங்கை சமூகப் பாதுகாப்புச் சபைச் சட்டத்தில் திருத்தம் செய்வதற்கு சமூக வலுவூட்டல் மற்றும் நலனோம்புகை அமைச்சர் கௌரவ எஸ்.பி. திசாநாயக்க அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

06. சிறுவர்களுக்கான லேடி நிட்ஜ்வே வைத்தியசாலையில் “வேலை நேரத்திற்குப் பின்னரான சத்திர சிகிச்சை அறிமுகம்” (விடய இல. 21)
இலங்கையில் பிறவியிலான இருதயக் கோளாறுகளுடன் வருடாந்தம் சுமார் 2500 தொடக்கம் 3000 வரையான சிறுவர்கள் பிறப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. அவற்றுள் 2000 சிறுவர்களுக்கு சரியான சத்திரசிகிச்சை தேவைப்படுகின்றது. தற்போது 900 சிறுவர்கள் அளவில் ஒவ்வொரு வருடமும் லேடி றிட்ஜ்வே வைத்தியசாலையில் இருதய சம்பந்தமான சிகிச்சையைப் பெறுகின்றனர். சிறு தொகையினரே பிற வைத்தியசாலைகளுக்கு செல்கின்றனர். குறித்த காலத்துக்குள் சத்திர சிகிச்சை செய்து கொள்ளாத சிறுவர்கள் இறக்கவோ அல்லது அசாதாரண நிலைக்கு செல்லவோ நேரிடுகின்றது. குறித்த சிசிக்சை தொடர்பில் பெயர்ப்போன வைத்தியசாலையாக லேடி றிட்ஜ்வே வைத்தியசாலை மட்டுமே திகழ்கின்றது. இங்கு அவசியமான உட்கட்டமைப்பு வசதிகள்இ நுட்பமான உபகரணங்கள் மற்றும் விஷேடமாக பயிற்றப்பட்ட அலுவலகர்கள் என அனைத்து வசதிகளும் காணப்படுகின்றன. எனினும் இங்கு விஷேட நிலையத்தின் பயிற்றப்பட்ட அலுவலகர்களின் சேவைகள் என்பன வார நாட்களில் பி.ப. 4.00 மணிக்குப் பின்னரும் வார இறுதி நாட்களிலும் பயன்படுத்தப்படாததால் அவை பயன்பாடற்றவையாக காணப்படுகின்றன. குறித்த வைத்திய சிகிச்சையின் முக்கியத்துவம் தொடர்பில் கவனத்திற் கொண்டு வேலை நேரத்திற்குப் பின்னரான சத்திர சிகிச்சை மேற்கொள்வதற்கு கடந்த வருடம் அனுமதி வழங்கப்பட்டது.

சமுதாயத்தில் பின்தங்கிய சிறுவர்களுக்கு அவர்களது இருதய நோய்களுக்கு சிகிச்சை பெறுவதற்கு உதவும் “புகைவ ழக டகைந ஐவெநசயெவழையெட” எனும் அமைப்பு வேலை நேரத்திற்கு பின்னரான சத்திர சிகிச்சைகளுக்கு ஒவ்வொரு சத்திர சிகிச்சையின் பொருட்டும் 1000 ருளுனு பணம் செலுத்துவதற்கு உடன்பட்டுள்ளது. எனவே குறித்த நிதியினை பெற்று சிறுவர்களுக்கான லேடி நிட்ஜ்வே வைத்தியசாலையில் வேலை நேரத்திற்குப் பின்னரான சத்திர சிகிச்சை அறிமுகம் செய்வதற்கு சுகாதாரஇ போசணை மற்றும் சுதேச வைத்திய அமைச்சர் கௌரவ ராஜித சேனாரத்ன அவர்களினால் முன்வைக்கப்பட்ட அமைச்சரவை பத்திரத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

07. இலங்கையில் அவசரகால வைத்தியசாலைக்கு முன்னரானஇ பராமரிப்பு அம்புலன்ஸ் சேவையின் அவசரகால பதில் நடவடிக்கை நிலையத்திற்கான கட்டணமில்லா இலவச அழைப்பு இலக்க ஒதுக்கீடு (விடய இல. 26)
இலங்கையில் அவசரகால வைத்தியசாலைக்கு முன்னரானஇ பராமரிப்பு அம்புலன்ஸ் சேவையின் அவசரகால பதில் நடவடிக்கை நிலையத்திற்கான கட்டணமில்லா இலவச அழைப்பு இலக்கமாக “1990” குறும் இலக்கத்தை கட்டணமின்றி செயற்படுத்த சுகாதாரஇ போசணை மற்றும் சுதேச வைத்திய அமைச்சர் கௌரவ ராஜித சேனாரத்ன அவர்களினால் முன்வைக்கப்பட்ட அமைச்சரவை பத்திரத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

08. தேசிய வாழ்க்கைத் தொழில் தகைமையை (Nஏஞ) வேலை வாய்ப்புக்களுக்காக அங்கீகரித்தல் (விடய இல. 28)
இலங்கையில் 02 தேசிய தகைமை சட்டகங்கள் உள்ளன. உயர் கல்வி நிறுவனங்களால் வழங்கப்படும் தகைமைகள் மற்றும் தொழில்நுட்ப மற்றும் தொழில் கல்வி மற்றும் பயிற்சி துறையில் உள்ள நிறுவனங்களால் வழங்கப்படும் தகைமைகளே அவையாகும். எனினும் இதுவரை தேசிய தகைமை சட்டகங்களை மாத்திரம் கவனத்திற் கொண்டு வேலை வாய்ப்புக்களுக்கு சேர்த்துக் கொள்ளல் இடம்பெறவில்லை. மேலும் சில இடங்களில் கல்வித் தகைமைகளுக்கு பதிலாக தொழில் வசதிகள் தொடர்பான தகைமைகளுக்கே முன்னுரிமை கொடுக்கப்படுகின்றன. அதனடிப்படையில் குறித்த துறையில் வேலைக்கு சேர்த்துக் கொள்ளப்படும் பணிக்காக Nஏஞ 3 மட்டத்திலான க.பொ.த. சாதாரண தர பரிட்சையில் சித்தி அடைவதற்கும்இ Nஏஞ 4 மட்டத்தில் க.பொ.த. உயர் தர பரீட்சைக்கும் சித்தி அடைவதற்கும் சமனாகும் என பொது நிர்வாக மற்றும் முகாமைத்துவ அமைச்சினால் சுற்றிக்கை ஒன்றை வெளியிட திறன் அபிவிருத்தி மற்றும் வாழ்க்கைத் தொழிற் பயிற்சி அமைச்சர் கௌரவ மஹிந்த சமரசிங்க அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகள் அமைச்சரவையின் மூலம் கவனத்திற் கொள்ளப்பட்டது.

09. வர்த்தகம் மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு தொடர்பில் இலங்கை மற்றும் உக்ரைன் நாடுகளுக்கிடையில் ஏற்படுத்திக் கொள்ளவுள்ள உடன்படிக்கை (விடய இல. 29)
இரண்டு நாடுகளுக்குமிடையிலான பல்தரப்பு வர்த்தக மற்றும் பொருளாதார ஒத்துழைப்பினை விரிவாக்குவதற்கும் இரு நாடுகளுக்குமிடையில் வர்த்தகஇ பொருளாதார மற்றும் தொழில்நுட்ப உறவுகளினை ஊக்குவிக்கும் நோக்குடன் ஒத்துழைப்புக்கான புதிய வழிமுறைகளினைக் கண்டறிவதற்காக வர்த்தக மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு மீதான அரசாங்கங்களுக்கிடையிலான ஆணைக்குழுவொன்றினை ஸ்தாபிப்பதற்கும் ஏற்றாற் போல் இரு நாடுகளுக்குமிடையில் ஒப்பந்தமொன்றில் கைச்சாத்திட கைத்தொழில் மற்றும் வணிக அமைச்சர் கௌரவ ரிசாட் பதியூதீன் அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

10. இலங்கையில் சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சிக்கான தேசிய கொள்கை வேலைத்திட்ட செயற்றிட்டத்தினை நடைமுறைப்படுத்தல் (விடய இல. 30)
இலங்கையில் சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சிக்கான தேசிய கொள்கை வேலைத்திட்ட செயற்றிட்டத்தினை நடைமுறைப்படுத்துவதற்கும்இ குறித்த செயற்றிட்டத்தினை தொடர்ச்சியாக நடைமுறைப்படுத்த சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சி ஆலோசனை சபையொன்றினை அமைப்பதற்கும்இ உள்ளக அமைச்சு மட்ட ஒருங்கிணைப்பு அமைப்பொன்றினை ஏற்படுத்துவதற்கும்இ சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சி அதிகார சபையினை மறுசீரமைப்பு செய்வதற்கும்இ இச்செயற்றிட்டத்தினை நடைமுறைப்படுத்த தொடர்பான பிற அமைச்சுக்கள் மற்றும் அதனுடன் தொடர்பான நிறுவனங்கள் ஆகியவற்றுக்கு வழிகாட்டவும் கைத்தொழில் மற்றும் வணிக அமைச்சர் கௌரவ ரிசாட் பதியூதீன் அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

11. மேல் மாகாண பிராந்திய மாநகர அபிவிருத்தி நடவடிக்கைகளுக்காக கொரிய குடியரசின் காணிகள்இ உட்கட்டமைப்பு வசதிகள்இ மற்றும் போக்குவரத்து அமைச்சுடன் இணைவாக்கம் தொடர்பான நல்லுறவு உடன்படிக்கை (விடய இல. 39)
இலங்கை பொருளாதார ஓட்டத்தை முன்னோக்கிச் செலுத்துவதற்கான பெரும் மூலோபாயமாக மேல் மாகாண பிராந்திய மாநகரம் திட்டமிடப்பட்டுள்ளதுடன் இந்த நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் மேற்கொள்வதற்குள்ள அபிவிருத்தி கருத்திட்டங்களில் அதிகளவினை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற 10 துறைகளை மையமாகக் கொண்டு மேல் மாகாண பிராந்திய மாநகர அபிவிருத்தி நடவடிக்கைகளுக்காக கொரிய குடியரசின் காணிகள்இ உட்கட்டமைப்பு வசதிகள்இ மற்றும் போக்குவரத்து அமைச்சுடன் இணைவாக்கம் தொடர்பான நல்லுறவு உடன்படிக்கையொன்றில் கைச்சாத்திடுவது தொடர்பில் மாநகர மற்றும் வடமேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் கௌரவ பாடலி சம்பிக்க ரணவக்க அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

12. சிறியளவிலான தேயிலை மற்றும் இறப்பர் தோட்டங்களை எழுப்பும் கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்தல் (விடய இல. 40)
சிறியளவிலான தேயிலை மற்றும் இறப்பர் தோட்டங்களை எழுப்பும் கருத்திட்டத்தை 2016 ஆண்டிலிருந்து ஆரம்பிக்கும் படி அமுல்படுத்துவதற்கும்இ இதற்காக சர்வதேச விவசாய அபிவிருத்தி நிதியத்தின்இ இலங்கை அரசின் பங்களிப்பின் அரச வங்கிகள்இ தனியார் பிரிவு மற்றும் பயனாளிகளின் பங்களிப்பினும் கிடைத்த 65.4 மில்லியன் அமெரிக்க டொலர் மொத்த பணத்தொகையை 2016 – 2021 வரையான 06 வருட காலத்தினுள் கருத்திட்டத்தை அமுல்படுத்துவது தொடர்பில் பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சர் கௌரவ நவீன் திசாநாயக்க அவர்களினால் முன்வைக்கப்பட்ட அமைச்சரவை பத்திரத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

13. பனை அபிவிருத்தி கூட்டுறவுச் சங்கத்தினால் முகாமை செய்யப்படும் பனை அபிவிருத்திச் சபையின் கீழுள்ள திக்கம் வடிசாலையினை மீளச் செயற்படுத்தல் (விடய இல. 44)
பனை மரமானது இலங்கையின் பயன்மிக்க இயற்கை வளங்களில் ஒன்றாகும். இது வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் மிக அதிகமாக் காணப்படுகின்றது. பனஞ்சாறிலிருந்து கள்ளு தயாரிக்கும் தொழிலில் ஈடுபடுகின்ற ஏறக்குறைய 7இ500 உறுப்பினர்கள் வட மாகாணத்தில் உள்ள பனை அபிவிருத்தி கூட்டுறவுச் சங்கங்களில் உள்ளனர். பொருளாதார அபிவிருத்திஇ வறுமைத் தணிப்புஇ சமூக அபிவிருத்தி மற்றும் கள்ளு இறக்குகின்ற சமுதாயத்தினை நிறுவன ரீதியாக ஸ்திரப்படுத்துதல் அத்துடன் மதுவரியின் மூலம் இலங்கை அரசாங்கத்திற்கு வருமானத்தினை உருவாக்குதல் ஆகிய இலக்குகளுடன் திக்கம் வடிசாலையானது 1984 ஆம் ஆண்டு மாவட்ட அபிவிருத்தி வரவு செலவு திட்டத்தின் கீழ் தாபிக்கப்பட்டது. பனைத்துறையில் திக்கம் வடிசாலையானது உயர்ந்த ஆற்றலினைக் கொண்டது என்ற வகையில்இ யாழ்ப்பாணத்திலுள்ள திக்கம் வடிசாலையினை புனரமைத்தல்இ மீள்கட்டமைத்தல் மற்றும் மீளச்செயற்படுத்தல் என்பவற்றுக்காகஇ 112.5 மில்லியன் ரூபா மதிப்பீட்டில் அனைத்து வசதிகளையும் கொண்ட நவீன இயந்திரங்கள் பொருத்தி குறித்த வடிசாலையினை புனரமைப்பதற்கு சிறைச்சாலைகள் மறுசீரமைப்புஇ புனர்வாழ்வளிப்புஇ மீள்குடியேற்றம் மற்றும் இந்துமத அலுவல்கள் அமைச்சர் கௌரவ டி.எம்.சுவாமிநாதன் அவர்களினால் முன்வைக்கப்பட்ட அமைச்சரவை பத்திரத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

14. இலங்கையின் அபிவிருத்தி உபாய முறைகள்இ சர்வதேச வர்த்தக அமைச்சு மற்றும் செக் குடியரசின் கைத்தொழில்இ வர்த்தக அமைச்சு என்பவற்றுக்கிடையிலான பரஸ்பர ஒத்துழைப்பு உடன்படிக்கை (விடய இல. 48)
வரலாற்று ரீதியாக இலங்கை செக் குடியரசுடன் இருதரப்பு உறவுகளை மிக நீண்டகாலமாக பேணி வந்துள்ளதுடன்;இ தற்பொழுது இலங்கையிலிருந்து ஆடைகள் மற்றும் தேயிலை உள்ளடங்களாக ஏறக்குறைய 50 பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான பொருட்களை செக் குடியரசு வருடாந்தம் இறக்குமதி செய்வதுடன்இ இலங்கை செக் குடியரசின் ஏறக்குறைய 10 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான பொருட்களை இறக்குமதி செய்கின்றது. இதனடிப்படையில் பல்வேறு நன்மைகளை ஏற்படுத்தும் வகையில் இலங்கையின் அபிவிருத்தி உபாய முறைகள்இ சர்வதேச வர்த்தக அமைச்சு மற்றும் செக் குடியரசின் கைத்தொழில்இ வர்த்தக அமைச்சு என்பவற்றுக்கிடையிலான பரஸ்பர ஒத்துழைப்பு உடன்படிக்கையில் கைச்சாத்திட்டமை தொடர்பில் அமைச்சரவையின் கவனத்திற் கொண்டுவரப்பட்டு அங்கீகாரம் பெறப்பட்டது.

15. நோய் கண்டறிதலுக்கான எக்ஸ் - ரே பிரிவு வழங்குதல்இ நிறுவுதல் மற்றும் செயற்படுத்துவதற்கான விலைமனு கோரல் (விடய இல. 52)
நோய் கண்டறிதலுக்கான எக்ஸ் - ரே பிரிவு வழங்குதல்இ நிறுவுதல் மற்றும் செயற்படுத்துவதற்கான விலை மனுக்கோரலினை அமைச்சரவையினால் நியமிக்கப்பட்ட நிலையான கொள்ளல் குழுவின் சிபார்சின் பெயரில் வழங்குவதற்கு சுகாதாரஇ போசணை மற்றும் சுதேச வைத்திய அமைச்சர் கௌரவ ராஜித சேனாரத்ன அவர்களினால் முன்வைத்த யோசனைகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

16. நேபாளில் ஏற்பட்ட நிலநடுக்கத்தினால் பாதிக்கப்பட்ட சமய வணக்கஸ்தலங்களை மறுசீரமைப்பு செய்தல் (விடய இல. 52)
நிலநடுக்கத்தினால் பாதிக்கப்பட்ட ஆனந்தகுடி பௌத்த விகாரையையும்இ ரதோ மச்சிந்திரநாத் இந்துக் கோயிலையும் புனரமைத்துக் கொடுப்பதற்கு இலங்கையினால் மேற்கொள்ள முடியுமான நடவடிக்கைகளை மேற்கொள்ள அமைச்சரவை ஏற்கனவே அனுமதி வழங்கியது. இதனடிப்படையில் நேபாளம் மற்றும் இலங்கையைச் சேர்ந்த நிர்மாண ஒப்பந்தக்காரர்களுக்கு மட்டுமாக மட்டுப்படுத்தி திறந்த விலைமனுக் கோரலினூடாக தகுதியான ஒப்பந்த நிறுவனம் ஒன்றைத் தெரிவு செய்வதற்கும்இ இலங்கை இராணுவத்தின் பொறியியல் சேவைப் படைப்பிரிவைச் சேர்ந்த தொழில்நுட்ப அதிகாரிகள் குழுவொன்று 06 மாதத்திற்கு ஒரு முறை அல்லது தேவைக்கேற்ப நேபாளத்திற்கு சென்று நிர்மாணம் மற்றும் புனரமைப்பு பணிகளை மேற்பார்வை செய்வதற்கும் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக புத்தசாசன அமைச்சர் கலாநிதி விஜயதாச ராஜபக்‌ஷ அவர்களினால் முன்வைத்த யோசனைகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

17. மீன் உற்பத்திணை அதிகரிப்பதற்கும் மற்றும் தரையிறக்கப்படும் மீன்களின் குணப் பண்புகளை விருத்தி செய்வதற்கும் கடற்றொழில் படகுத் தொகுதியை மேம்படுத்தல் (விடய இல. 55)
பொருளாதார வலயத்தினுள் மீன் பிடி வளங்களினால் உச்ச பயனை பெறுவதற்கு இலங்கைக்கு இதுவரை அவகாசம் கிடைக்கவில்லை. தற்போது இலங்கையில் 4000 மீன்பிடி படகுகள் இருந்தபோதும் அவை 30 – 40 அடி நீளமானவைகளாகவே காணப்படுகின்றன. இதனால் அதன் மூலம் பயணிக்க முடியுமான தூரம்இ அதன் பயன்பாட்டுக் காலம் மற்றும் களஞ்சியசாலைகள் வசதியின்மை என்பனவே அவ்வாறு ஏற்பட காரணமாக அமைகின்றது. அதனடிப்படையில் சர்வதேச கடற்பகுதியில் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு உகந்த வகையில் தம் படகுகளை புனரமைக்கும் நோக்கில் 55 அடி நீளம் கொண்ட படகுகள் 10 இன் 50 சதவீத அரச அனுசரனையுடன் மீனவர்களுக்கு வழங்கவும்இ பொருளாதார வலயத்தில் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடும் 50 இயந்திரங்கள் மற்றும் சர்வதேச கடலில் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடும் வகையில் 50 இயந்திரங்களையும் சீனோர் நிறுவனத்தின் உதவியுடன் தேவையான நவீன உபகரணங்களுடன் புனர்நிர்மாணம் செய்வதற்கு கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் அபிவிருத்தி அமைச்சர் மஹிந்த அமரவீர அவர்களினால் முன்வைக்கப்பட்ட அமைச்சரவை பத்திரத்திற்கு அமைச்சரவையின் அனுமதி வழங்கப்பட்டது.

18. சீநோர் நிறுவனத்தின் மூலம் உற்பத்தி செய்யப்படும் மீன்பிடிப் படகு மீன் பெட்டி மற்றும் மீன் தரையிறக்கும் உபகரணம் உட்பட பயிபர் க்ளாஸ் மீன்பிடி உபகரணங்கள் கொள்முதல் செய்தல் (விடய இல. 56)
அரசாங்கத்துக்கு சொந்தமான சீநோர் நிறுவனத்தினால் மீன்பிடி தொடர்பான பல உற்பத்திகள் மேற்கொள்ளப்படுகின்றன. அதற்காக அரசாங்கம் அதிகமாக செலவிடுகின்றது. கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் அபிவிருத்தி அமைச்சின் மூலம் மற்றும் ஜீவனோபாய அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் கீழ் பகிர்ந்தளிப்பதற்காக பிற அரச நிறுவனங்களினால் கொள்முதல் செய்யப்படும் மீன்பிடிப் படகு மீன் பெட்டி மற்றும் மீன் தரையிறக்கும் உபகரணம் உட்பட பயிபர் க்ளாஸ் மீன்பிடி உபகரணங்களை சீநோர் நிறுவனத்தின் மூலம் நேரடியாக கொள்முதல் செய்வதற்கு கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் அபிவிருத்தி அமைச்சர் மஹிந்த அமரவீர அவர்களினால் முன்வைத்த யோசனைகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

19. மாவட்டஇ பிரதேச மற்றும் கிராமிய வீடமைப்புக் குழுக்களை தாபித்தல் (விடய இல. 57)
“செமட்ட செவண” தேசிய வீடமைப்பு நிகழ்ச்சித்திட்டம் உள்ளடங்களாக நாடளாவிய ரீதியில் அமுல்படுத்தப்படுகின்ற சகல வீடமைப்பு அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டங்களும் கிராமியஇ பிரதேச மற்றும் மாவட்ட மட்டத்தில் திட்டமிடப்பட்டு அமுல்படுத்தப்படுகின்றன. இந்த நடவடிக்கையை வெற்றிகரமாக்கிக் கொள்வதற்காக கிராமிய மட்ட்த்தில் கிராமிய வீடமைப்புக் குழுக்களையும்இ பிரதேச செயலாளர் பிரிவு மட்டத்தில் பிரதேச வீடமைப்புக் குழுக்களையும் மற்றும் நாட்டின் சகல மாவட்டங்களையும் அடிப்படையாகக் கொண்டு மாவட்ட வீடமைப்புக் குழுக்களையும் அமைத்து அவள்றை தேசிய வீடமைப்புக் கொள்கை மற்றும் அதன் செயற்றிட்டத்தின் கீழ் தொடர்புடைய ஏனைய அமைச்சுக்கள் மற்றும் நிறுவனங்களின் ஒத்துழைப்புடன் செயற்படுத்தப் போவதாக வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சர் கௌரவ சஜித் பிரேமதாச அவர்களினால் முன்வைக்கப்பட்ட அமைச்சரவைக்கு தகவல்கள் வழங்கப்பட்டன.

20. யப்பான் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனத்தின் (துஐஊயூ) நிதியுதவியுடன் இலங்கை மேல் மாகாணத்தில் இலகு புகையிரத போக்குவரத்து அமைப்பினை ஸ்தாபித்தல் (விடய இல. 58)
மேல் மாகாணத்தில் போக்குவரத்து பிரச்சினைகளை தீர்ப்பது தொடர்பில் மேல் மாகாணத்தில் பாரிய நகர வேலைத்திட்டத்தின் கீழ் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. இதன் ஓர் அம்சமாக யப்பான் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனத்தின் (துஐஊயூ) நிதியுதவியுடன் இலங்கை மேல் மாகாணத்தில் இலகு புகையிரத போக்குவரத்து அமைப்பினை ஸ்தாபிப்பதற்கு சிபார்சு செய்யப்பட்டுள்ளது. இதன்படி இலகு புகையிரத போக்குவரத்து அமைப்பினை ஸ்தாபிப்பதற்கு 07 பாதைகள் இனங்காணப்பட்டுள்ளன. குறித்த திட்டத்தினை முன்னெடுப்பதற்கு யப்பான் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனத்திடம் (துஐஊயூ) இருந்து நிதியினை பெற்றுக் கொள்ளவும்இ அந்நிதியினை பயன்படுத்தி இனங்காணப்பட்ட 07 புகையிரத பாதைகளையும் ஸ்தாபிப்பதற்கான பணியினை துரித கதியில் ஆரம்பிக்கவும் பாரிய நகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் கௌரவ பாடலி சம்பிக்க ரணவக்க அவர்களினால் முன்வைத்த யோசனைகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

21. சமூகப் பாதுகாப்பு வலையமைப்புக் கருத்திட்டத்தினைச் செயற்படுத்தல் (விடய இல. 59)
இலங்கை இன்று பல்வேறு சமூக பாதுகாப்பு திட்டங்கள் ஆங்காங்கு முன்னெடுக்கப்படுகின்றன. குறித்த சமூக பாதுகாப்பு முறைமையானது பன்முகப்படுத்தப்பட்டுள்ளது. தரவுகள் பேணுகையானது இன்னும் கடதாசிகளை அடிப்படையாகக் கொண்டதுடன் ஒருங்கிணைப்பற்றதாகக் காணப்படுகின்றது. இதில் வகைக்கூறல் மற்றும் வெளிப்படைத்தன்மை தொடர்பான நெருக்கடிகள் காணப்படுகின்றன. இதன் முக்கியத்துவத்தை உணர்ந்து நாடு தழுவிய ரீதியில் ஆங்காங்கு முன்னெடுக்கப்படும் சமூக பாதுகாப்பு நிகழ்ச்சித்திட்டங்களுக்கிடையில் இணைப்பை கட்டியெழுப்பும் நோக்கில் “சமூகப் பாதுகாப்பு வலையமைப்புக் கருத்திட்டம்” எனும் பெயரில் கருத்திட்டம் ஒன்றை நடைமுறைப்படுத்துவதற்கு தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார விவகாரங்கள் அமைச்சர் எனும் ரீதியில் கௌரவ பிரதமர் ரணில் விக்ரமசிங்க அவர்களினால் முன்வைத்த யோசனைகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

BPK/SMMF

சமீபத்திய செய்திகள்

Cabinet Decisions - 2024.10.28

29 October 2024

Cabinet Decisions taken at the Cabinet meeting conducted...

Cabinet Decisions 2024.10.21

22 October 2024

 Cabinet Decisions on 21.10.2024

Cabinet Decisions - 2024.10.07

08 October 2024

Cabinet decisions taken at the Cabinet Meeting conducted...

Cabinet Decisions - 2024.09.30

01 October 2024
Cabinet Decisions - 2024.09.30

Cabinet Decisions taken on 30.09.2024

Cabinet Decisions - 2024.09.13

14 September 2024

Cabinet Decisions taken at the Cabinet Meeting conducted...

Cabinet Decisions - 2024.09.03

03 September 2024

2024.09.03 Cabinet Decisions taken at the Cabinet Meeting...

Cabinet Decisions - 2024.08.26

28 August 2024

Decisions taken by the Cabinet of Ministers on...

Cabinet Decisions - 2024.08.21

22 August 2024

 Cabinet decisions taken at the cabinet meeting conducted...

அத்துடன் இலங்கையிலுள்ள ஊடகத்துறையின் கொள்கை திட்டமிடல் , பயிற்சி நெறிகளை வழங்குதல் , மற்றும் ஊடகத்துறைக்கான அங்கீகாரங்களை வழங்குவதிலும் இந்நிறுவனம் முன்னின்று உதவுகின்றது.