01.வரையறுக்கப்பட்ட ரக்னா பாதுகாப்பு லங்கா நிறுவனத்தினை அகற்றுவது தொடர்பான யோசனை (விடய இல. 10)
நாட்டின் தற்போதைய சமாதான சூழ்நிலையினால் அரசுடன் இணைந்த தனியார் பாதுகாப்பு சேவையொன்றினை பெற்றுக் கொள்வதன் அவசியமின்மையினை உணர்ந்து வரையறுக்கப்பட்ட ரக்னா பாதுகாப்பு லங்கா நிறுவனத்திடமிருந்து தற்போது பெறப்படுகின்ற நிலப்பாதுகாப்பு தொடர்பான விடயங்களை சிவில் பாதுகாப்பு திணைக்களத்திடமும், கடல் பாதுகாப்பு தொடர்பான விடயங்களை இலங்கை கடற்படையிடமும் ஒப்படைப்பதற்கும், சட்டமா அதிபரின் ஆலோசனைகளின் அடிப்படையில் இந்நிறுவனத்தை அகற்றுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கும் பாதுகாப்பு அமைச்சர் எனும் ரீதியில் அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்கள் முன்வைத்த யோசனைகளை அமைச்சரவை கொள்கை அடிப்படையில் ஏற்றுக் கொண்டது.
02. சூழலுக்கு சேதத்தினை ஏற்படுத்தும் விசேட ஆக்கிரமிப்பு தாவரங்கள் மற்றும் விலங்கு வகைகளை இந்நாட்டினுள் பிரவேசிப்பதை மற்றும் அவற்றை அழிப்பதற்காக புதிய சட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தல் (விடய இல. 12)
சூழலுக்கு சேதத்தினை ஏற்படுத்தும் ஆக்கிரமிப்பு தாவரங்கள் மற்றும் மிருக விசேட வகைகளை இந்நாட்டினுள் பிரவேசிப்பதை மற்றும் அவற்றை அழிப்பதற்காக புதிய சட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தும் நோக்கில் சட்ட மூலம் ஒன்றை தயாரிப்பதற்காக சட்ட வரைஞர் திணைக்களத்துக்கு ஆலோசனை வழங்குவது தொடர்பில் மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றுச் சூழல் அமைச்சர் எனும் ரீதியில் அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
03. மகாவலி நீர் பாதுகாப்பு முதலீட்டு வேலைத்திட்டத்தின் கீழ் செயற்படுத்தப்படும் மேல் எலஹெர வேலைத்திட்டத்தின் நிலக்கீழ் நீர் மார்க்கத்தினை நிர்மாணித்தல் (விடய இல. 13)
மகாவலி நீர் பாதுகாப்பு முதலீட்டு வேலைத்திட்டத்தின் முதற் கட்டத்தின் கீழ் பிரேரிக்கப்பட்டுள்ள மேல் எலஹெர வேலைத்திட்டத்தின் கீழ் மொரகஹகந்தை நீர்த்தேக்கத்தில் இருந்து ஹுருளு வாவி வரை 65.5 கிலோ மீற்றர் நீரினை கொண்டு செல்வதற்கான கால்வாயினை நிர்மாணிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. குறித்த நீர் மார்க்கத்தில் 26 கீலோ மீற்றர் வரையான பகுதியானது கிரிதலை மற்றும் மின்னேரிய ஆகிய பாதுகாக்கப்பட்ட வனப்பிரதேசத்தின் ஊடாக நீரினை கொண்டு செல்வ வேண்டிய தேவை உள்ளது. அதனால் குறித்த பிரதேசத்தில் உள்ள சூழலுக்கும் மற்றும் விலங்குகளுக்கும் பாதிப்பினை குறைக்கும் வகையில் குறித்த நிலக்கீழ் நீர் மார்க்கத்தினை அமைப்பதற்கு மாகவலி அபிவிருத்தி மற்றும் சுற்றுச் சூழல் அமைச்சர் எனும் ரீதியில் அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
04. கடலாமை பாதுகாப்பு ஆய்வு நிலையத்தினை முன்னெடுத்துச் செல்வதனை ஒழுங்குமுறைப்படுத்தும் பொருட்டான கட்டளைகள் (விடய இல. 14)
வனசீவராசி காப்பு ஒதுக்கங்களிலிருந்து புளம்பாகவுள்ள பிரதேசங்களின் தனியார் காணிகளில் நடாத்தப்பட்டு வருகின்ற கடலாமை பாதுகாப்பு கிலைய நடவடிக்கைகள் முறைப்படுத்தி வன சீவராசிகள் பாதுகாப்பு திணைக்களத்தில் பதிவு செய்து, ஆண்டு உரிமத்தின் கீழ் கொண்டு நடாத்துவதற்காக வனவிலங்குகள் மற்றும் தாவரங்கள் பாதுகாப்புக் கட்டளைகள் சட்டத்தின் கீழ் தயாரிக்கப்பட்டுள்ள கட்டளைகளை வர்த்தமானியின் மூலம் பிரகடனப்படுத்துவதற்கு நிலையான அபிவிருத்தி மற்றும் வன சீவராசிகள் அமைச்சர் கௌரவ காமினி ஜயவிக்ரம பெரேரா அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
05. கொழும்பு, சுதேசிய வைத்திய கல்லூரி மாணவர்களுக்காக தங்குமிட விடுதி ஒன்றினை அமைப்பதற்கான பூமி பிரதேசத்தை கொள்வனவு செய்தல் (விடய இல. 17)
கொழும்பு, சுதேசிய வைத்திய கல்லூரி மாணவர்களுக்காக தங்குமிட விடுதி ஒன்றினை அமைப்பதற்கு உகந்தது என்று இனங்காணப்பட்டுள்ள ஸ்ரீ ஜயவர்தன புறக்கோட்டை மாநகர சபைக்கு உட்பட்ட பிரதேசத்தில் அமைந்துள்ள 62 பேர்ச்சஸ் பூமி பகுதியை, 99.5 மில்லியன் ரூபா மதிப்பீட்டில் கொள்வனவு செய்வது தொடர்பில் உயர் கல்வி மற்றும் பெருந்தெருக்கள் அமைச்சர் கௌரவ லக்ஷ்மன் கிரியெல்ல அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
06. வடமேல் மாகாண 05 வருட ஒன்றினைந்த திட்டம் (விடய இல.18)
பல்வேறு அபிவிருத்தி துறைகளின் கீழ் 2017 – 2021ம் ஆண்டு வரையான ஐந்து வருட கால எல்லையை உள்ளடக்கும் வகையில் அனைத்து தரப்பினரதும் பங்குபற்றலுடன் தயாரிக்கப்பட்ட, 'வடமேல் மாகாண 05 வருட ஒன்றினைந்த திட்டம் - 2017 – 2021' ஐ உள்நாட்டு அலுவல்கள், வடமேல் மாகாண அபிவிருத்தி மற்றும் கலாச்சார விவகார அமைச்சர் கௌரவ எஸ்.பீ. நாவின்ன அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
07. வயது வந்த மற்றும் நோயினால் பாதிக்கப்பட்ட கலைஞர்களுக்கு சலுகை வழங்குதல் (விடய இல. 19)
வயது வந்த மற்றும் நோயினால் பாதிக்கப்பட்ட கலைஞர்களுக்கு சலுகை வழங்கும் செயல்திட்டத்தின் கீழ் தற்போது 1,019 கலைஞர்களுக்கு வருடாந்தம் 5,000 ரூபா வீதம் கொடையளிக்கப்படுகின்றது. தற்கால அபிவிருத்தி சூழ்நிலையினை கருத்திற் கொண்டு குறைந்த வருமானம் பெறும் கலைஞர்களுக்காக வேண்டி வருடாந்தம் பெற்றுக் கொடுக்கப்படும் 5,000 ரூபா நன்கொடை தொகையினை, 2017ம் ஆண்டினுள் 10,000 ரூபா வரை அதிகரிப்பதற்கும், குறித்த நன்கொடையினை பெறும் கலைஞர்களின் எண்ணிக்கையினை 5,000 வரை அதிகரிப்பதற்கும வடமேல் மாகாண அபிவிருத்தி மற்றும் கலாச்சார விவகார அமைச்சர் கௌரவ எஸ்.பீ. நாவின்ன அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
08. பத்தரமுல்லை பல் வகை போக்குவரத்து மத்திய நிலையித்தினை நிர்மாணித்தல் (விடய இல. 20)
மேல் மாகாண வலயத்தில் பாரிய நகர அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் கீழ் பத்தரமுல்லை பல் வகை போக்குவரத்து மத்திய நிலையத்திற்கான வசதிகளை ஏற்படுத்துவதற்கு யோசனை ஒன்று முன்வைக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில், பல் வகை போக்குவரத்து மத்திய நிலையம் மற்றும் 113,000 சதுர அடியினைக் கொண்ட அலுவலக வசதிகள், 33,000 சதுர அடியினை கொண்ட விடுதி கட்டிடம், 60,000 சதுர அடியினை கொண்ட வணிக அவகாசங்களை ஏற்படுத்தி கொடுக்கம் கட்டிடம் ஆகியவற்றுடன் கூடிய கலப்பு அபிவிருத்தி வேலைத்திட்டத்தை, பத்தரமுல்லை 'சுஹுருபாய' கட்டிடத்துடன் இணைந்ததாக, அரச மற்றும் தனியார் துறையினரை இணைத்துக் கொண்டு செயற்படுத்துவதற்கு பாரிய நகரம் மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் கௌரவ பாட்டலி சம்பிக்க ரணவக்க அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
09. கொழும்பு கோட்டையில் அமைந்துள்ள மெனிங் சந்தைத் தொகுதியினை பெலியகொடை பிரதேசத்தில் மீள் நிர்மாணம் செய்தல் (விடய இல. 21)
கொழும்பு நகர மீள் அபிவிருத்தி செய்யும் வேலைத்திட்டத்தின் கீழ் கொழும்பு கோட்டையில் அமைந்துள்ள மெனிங் சந்தைத் தொகுதியினை பெலியகொடை பிரதேசத்தில் மீள் நிர்மாணம் செய்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. குறித்த திட்டத்தினை துரித கதியில் மேற்கொள்ள வேண்டிய அவசியத்தினை உணர்ந்து பெலியகொடை பிரதேசத்தில் அமைந்துள்ள, அரச பொறியியலாளர் கூட்டுத்தாபனத்துக்கு உரித்தான சுமார் 06 ஏக்கர் காணியினை 03 வருட காலத்துக்கு குத்தகை அடிப்படையில் பெற்றுக் கொள்வது தொடர்பில் பாரிய நகரம் மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் கௌரவ பாட்டலி சம்பிக்க அவர்கள் மற்றும் வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சர் கௌரவ சஜித் பிரேமதாச ஆகியோர் இணைந்து முன்வைத்த யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
10. நீரியல் வள வளர்ப்பினை வணிக மட்டத்தில் விருத்தி செய்தல் (விடய இல. 25)
அதிக வருமானம் ஈட்டும் நோக்கில் நவீன தொழிற்நுட்பத்தினை பயன்படுத்தி நீரியல் வள வளர்ப்பினை வணிக மட்டத்தில் மேற்கொள்ளும் முதலீட்டாளர்களை இலங்கைக்கு ஈர்க்கும் செயற்றிட்டத்தினை இலங்கை நீரியல் வள அபிவிருத்தி அதிகார சபை மேற்கொண்டு வருகின்றது. இது தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட அமைச்சரவை உபகுழுவின் சிபார்சுகளினை நடைமுறைப்படுத்துவதற்காக வரி அடிப்படையில் பொருத்தமான முதலீட்டாளர்களுக்கு பெற்றுக் கொடுப்பதற்கு மீன்பிடி மற்றும் நீரியல் வளங்கள் அபிவிருத்தி அமைச்சர் கௌரவ மஹிந்த சமரசிங்க அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
11. மடுல்ல, பிங்கொடை, கொலெல்லேவத்தை நீர்த்தேக்கத்தை மீள்கட்டுமாணம் செய்தல் (விடய இல. 31)
மடுல்ல, பிங்கொடை, கொலெல்லேவத்தை நீர்த்தேக்கத்தை மீள்கட்டுமாணம் செய்வதற்காக குறித்த நீர்தேக்கம் தொடர்பிலான சுற்றுச்சூழல் பாதிப்பு மதிப்பீட்டறிக்கையினை பெற்றுக் கொண்டதன் பின்னர், 320 மில்லியன் ரூபா மதிப்பீட்டு செலவில் குறித்த மீள் அபிவிருத்தி பணியினை முன்னெடுப்பது தொடர்பில் நீர்ப்பாசன மற்றும் நீர்வளங்கள் முகாமைத்துவ அமைச்சர் கௌரவ விஜித் விஜயமுனி சொய்சா அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
12. மலையக பொதுமக்களுக்கு நில உரிமை மற்றும் பொருத்தமான வீடொன்றினை பெற்றுக் கொடுத்தல் (விடய இல. 36)
மலையக வாழ்மக்களின் பிரதான பிரச்சினையாக திகழும் சொந்த வீடு இன்மை எனும் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வாக மலையகத்தின் சட்ட ரீதியாக வசிக்கும் குடியிருப்பாளர்களுக்கு 07 பேர்ச்சஸ் அளவிலான வங்கியில் வைத்து பணம் பெறத்தக்க காணி உரித்துகளை வழங்குவதற்கும், அதற்காக மண்சரிவு அற்ற பிரதேசங்களை இனங்கண்டு, அவ்விடங்களை பிராந்திய பெருந்தோட்டக் கம்பனிகள் மற்றும் அரச நிர்வனங்களில் இருந்து விடுவித்துக் கொள்வதற்கும் மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சர் கௌரவ பழனி திகாம்பரம் அவர்கள், பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சர் கௌரவ நவீன் திசாநாயக்க அவர்கள், காணி அமைச்சர் கௌரவ ஜோன் அமரதுங்க அவர்கள் ஆகியோர் இணைந்து முன்வைத்த அமைச்சரவை பத்திரத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
13. சேவை நிலையங்களில் பெண்களுக்கு ஏற்படும் வன்முறைகளில் இருந்து விடுவித்தல் மற்றும் அவர்களை பலப்படுத்தல் (விடய இல. 37)
அரச நிறுவனங்களில் பணிபுரியும் பெண்களுக்கு ஏற்படும் வன்முறைகளில் இருந்து விடுவிப்பதையும் அவர்களை பலப்படுத்துவதையும் நோக்காகக் கொண்டு செயற்படுகின்ற சிரேஷ;ட அதிகாரிகளின் தலைமையிலான குழுவொன்றை அனைத்து அமைச்சுக்களிலும் நிறுவுவது தொடர்பில் பெண்கள் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் கௌரவ சந்திராணி பண்டார அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
14. பொலிஸ் தகவல் மற்றும் தொடர்பாடல் கட்டமைப்பு (PICS) செயற்றிட்டத்தினை விருத்தி செய்தல் (விடய இல. 40)
பொலிஸ் தகவல் மற்றும் தொடர்பாடல் கட்டமைப்பு தொகுதியினை அமைப்பதற்கு 2013ம் ஆண்டு அமைச்சரவை அனுமதி கிடைத்துள்ளது. எனினும் தற்போது வளர்ந்துள்ள நவீன தொழிநுட்ப விருத்திக்கமைவாக குறித்த கட்டமைப்பில் மாற்றம் ஏற்படுத்த வேண்டிய தேவை எழுந்துள்ளது. அதனடிப்படையில், குறித்த விடயம் தொடர்பில் திருத்தங்களை மேற்கொள்வதற்கு நிதி மற்றும் திட்டமிடல் அமைச்சின் இணக்கப்பாட்டின் பெயரில் செயற் குழுவொன்றை நியமிப்பதற்கும், எனலொக் தொடர்பாடல் உபகரணத்திற்குப் பதிலாக டிஜிட்டல் தொடர்பாடல் உபகரணங்களைப் பயன்படுத்துவதற்காக கட்டாயமாக தேவைப்படும் அலைவரிசை வீச்சினை இலங்கை தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவின் அனுமதியுடன் இலங்கை பொலிஸ் திணைக்களத்துக்கு ஒதுக்கிக் கொள்வது தொடர்பில் சட்டமும் ஒழுங்கும் மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சர் கௌரவ சாகல ரத்னாயக அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
15. யாழ்ப்பாணம் மற்றம் வயம்ப பல்கலைகழகங்களில் நிர்மாணிக்கபடவிருக்கும் கட்டிடங்களின் ஒப்பந்தப் பணிகளை வழங்குதல் (விடய இல. 47)
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் விளையாட்டு மற்றும் உடற்பயிற்சிக்கான மண்டபத்தை நிர்மாணித்தல், வயம்ப பல்கலைக்கழகத்தின் பொறியியல் பட்டப் பாடநெறியை அறிமுகம் செய்வதற்காக ஆய்வுகூடக் கட்டிடமொன்றை நிர்மாணிப்பதற்குமான ஒப்பந்தத்தை அமைச்சரவையின் மூலம் நியமிக்கப்பட்ட நிலையியல் கொள்முதல் குழுவின் சிபார்சின் அடிப்படையில் வழங்குவதற்கு உயர் கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் கௌரவ லக்ஷ;மன் கிரியெல்ல அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
16. தெதுறு ஓயா நீர் வழங்கல் கருத்திட்டத்தின் இயந்திரவியல் மற்றும் திட்டங்களை வடிவமைப்பதற்கான ஒப்பந்தத்தை வழங்குதல் (விடய இல. 48)
குருநாகல் மாவட்டத்தில் அமைந்துள்ள மேற்குறித்த கருத்திட்டத்தின் இயந்திரவியல் மற்றும் திட்டங்களை வடிவமைப்பதற்கான ஒப்பந்தத்தை அமைச்சரவையின் மூலம் நியமிக்கப்பட்ட நிலையியல் கொள்முதல் குழுவின் சிபார்சின் அடிப்படையில் வழங்குவதற்கு நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் கௌரவ ரவூப் ஹக்கிம் அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது
.
17. சூரியபல சங்கிராமய 2ம் கட்டத்தின் கீழ் சிறிய அளவிலான சூரிய சக்தி மூல மின்னுற்பத்தி பொறித் தொகுதிகளைத் தாபித்தல் (விடய இல. 51)
சூரியபல சங்கிராமய 2ம் கட்டத்தின் கீழ் சிறிய அளவிலான சூரிய சக்தி மூல மின்னுற்பத்தி பொறித் தொகுதிகளைத் தாபிப்பதற்காக போட்டிக் கேள்வி நடைமுறை அடிப்படையில் வித்தியாசமான விலைத் தெரிவுகளின் கீழ் ஒரு முதலீட்டாளருக்கு 60 மெகாவொட் வீதம் பிரித்து கொடுப்பதற்கு மின்வலு மற்றும் மீள்புத்தாக்க சக்தி அமைச்சர் கௌரவ ரன்ஜித் சியபலாப்பிட்டிய அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
18. நுவரரெலியாவின் அதிஉயரிய இடத்தில் விளையாட்டுத் கட்டடத் தொகுதியினை நிர்மாணித்தல் (விடய இல. 53)
நுவரரெலியாவின் அதிஉயரிய இடத்தில் விளையாட்டுத் கட்டடத் தொகுதியினை நிர்மாணிப்பதற்கு முன்வைப்பட்டுள்ள யோசனைகளில் மிகப் பொருத்தமானது என கருதப்படும் பிரான்ஸ் நாட்டு நிறுவனம் ஒன்றுக்கும் இலங்கை அரசாங்கத்துக்கும் இடையில் ஒப்பந்தம் ஒன்றில் கைச்சாத்திடுவது தொடர்பில் விளையாட்டுத் துறை அமைச்சர் கௌரவ தயாசிறி ஜயசேகர அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
19. அதிமேதகு ஜனாதிபதி அவர்களின் உத்தியோகபூர்வ மலேசிய விஜயத்தின் போது இலங்கைக்கும் மலேசியாவிற்கும் இடையில் இருதரப்பு உடன்படிக்கைகளில் கைச்சாத்திடுதல் (விடய இல. 63)
அதிமேதகு ஜனாதிபதி அவர்களினால் 2016ம் ஆண்டு டிசம்பர் மாதம் 15 இலிருந்து 17ந் திகதி வரை மேற்கொள்ளப்படவுள்ள உத்தியோகபூர்வ மலேசிய விஜயத்தின் போது இலங்கைக்கும் மலேசியாவிற்கும் இடையில் பின்வரும் இருதரப்பு உடன்படிக்கைகளில் கைச்சாத்திடுவது தொடர்பில் வே.பா. வெளிவிவகார அமைச்சர் கௌரவ கலாநிதி ஹர்ஷ டி சில்வா அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
• உல்லாசப் பிரயாணம் தொடர்பிலான நடவடிக்கைகளில் ஒத்துழைப்பினை ஏற்படுத்திக் கொள்வது தொடர்பிலான ஒப்பந்தம்.
• பயிற்சியளித்தல், ஆராய்ச்சி மற்றும் அரசாங்க நிர்வாகம் என்ற துறையில் ஒத்துழைப்பினை ஏற்படுத்திக் கொள்வது தொடர்பிலான ஒப்பந்தம்.
• இலங்கையின் கமத்தொழில் ஆராய்ச்சிக் கொள்கைக்கான மன்றத்திற்கும் மலேசிய கமத்தொழில் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி நிறுவகத்திற்குமிடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம்.
• இலங்கையின் பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சிற்கும் மலேசியாவின் பெருந்தோட்டக் கைத்தொழில் மற்றும் வியாபாரப் பொருட்கள் அமைச்சிற்குமிடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம்.
• கலாசாரம், கலைகள் மற்றும் மரபுரிமைத் துறையில் ஒத்துழைப்பினை ஏற்படுத்திக் கொள்வது தொடர்பிலான ஒப்பந்தம்.
• இளைஞர்களின் அபிவிருத்தி துறையில் ஒத்துழைப்பினை ஏற்படுத்திக் கொள்வது தொடர்பிலான ஒப்பந்தம்.
20. கிங் - நில்வலா திசைத்திருப்பல் கருத்திட்டத்தினை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் ஆராய்வதெற்கென அமைச்சரவை உபகுழுவொன்றினை நியமித்தல் (விடய இல. 65)
கிங் - நில்வலா திசைத்திருப்பல் கருத்திட்டத்தினை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் பின்வருவனவற்றை ஆராய்வதெற்கென அமைச்சரவை உபகுழுவொன்றினை நியமிப்பது தொடர்பில் நிதியமைச்சர் கௌரவ ரவி கருணாநாயக்க அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
• அரசாங்கத்திற்கு ஏதேனும் மேலதிக செலவுச் சுமையொன்று ஏற்படாத விதத்தில் ஒப்பந்த உடன்படிக்கையை நடைமுறைப்படுத்தி முடியுமா என்று ஆராய்தல்.
• யாரேனும் தரப்பினருக்கு உடன்படிக்கையை ஒருதலைப்பட்சமாக இரத்துச் செய்ய வேண்டுமாயின் அதன் பாதகமான விளைவுகள் மற்றும் செலவுகள் எவ்வாறானது என்று ஆராய்தல்.
• தொடர்புடைய அதிகாரிகள் நிதி ஒழுங்குவிதி, அரசாங்கத்தின் நடவடிக்கைமுறை மற்றும் சுற்றறிக்கை அறிவுரைகளை மீறியுள்ளார்களா என்று ஆராய்தல்.
• பாதகமான தாக்கங்களின்றி முற்பணத் தொகையை அறவிட்டுக் கொள்வது எவ்வாறு என்பதை ஆராய்தல்.
21. ஹம்பாந்தோட்டை துறைமுக அபிவிருத்தி தொடர்பில் அமைச்சரவை குழுவின் ஒன்றிணைந்த அறிக்கை (விடய இல. 67)
ஹம்பாந்தோட்டை துறைமுக அபிவிருத்தி தொடர்பில் பொருளாதார முகாமைத்துவம் தொடர்பான அமைச்சரவை செயற்குழுவின் இறுதி தீர்மானங்களின் படி மற்றும் சட்டமாதிபரின் சட்ட வரையறைகளுக்கு உட்பட்ட விதத்தில் ஊhiயெ ஆநசஉhயவெள Pழசவ ர்ழடனiபௌ (ஊஆPழசவ) நிறுவனத்துடன் இணைந்து அரச – தனியார் துறையினரின் இணைப்பின் அடிப்படையில் குறித்த திட்டத்தை மேற்கொள்வதற்கும், குறித்த முதலீட்டு நிறுவனத்தின் செயற்பாட்டு வரையறை ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுவதற்கு குறித்த அதிகாரிகளுக்கு அதிகாரத்தை வழங்குவதற்கும் அபிவிருத்தி உபாய முறைகள் மற்றும் சர்வதேச வர்த்தக அமைச்சர் கௌரவ மலிக் சமரவிக்ரம அவர்கள் மற்றும் விசேட வேலைத்திட்டங்கள் தொடர்பான அமைச்சர் கௌரவ கலாநிதி சரத் அமுணுகம ஆகியோர் இணைந்து முன்வைத்த யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
22. இலங்கையில் 2030ம் ஆண்டில் நிலையான அபிவிருத்தி தொடர்பிலான நோக்கத்தினை அடைந்துக் கொள்ளல் (விடய இல. 68)
இலங்கையில் 2030ம் ஆண்டில் நிலையான அபிவிருத்தி தொடர்பிலான நோக்கத்தினை அடைந்துக் கொள்வது தொடர்பில் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு 05 அமைச்சரவை அந்தஸ்த்துள்ள அமைச்சர்கள் மற்றும் மாகாண முதலமைச்சர்களுடன் கூடிய அமைச்சரவை உபகுழுவினை நியமிப்பதற்கும், அக்குழுவிற்கு ஒத்துழைப்பு வழங்குவதற்கென புத்திஜீவிகள் கொண்ட குழுவொன்றை நியமிப்பதற்கும் அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.