• #163, கிருலபன எவனியூ, கொழும்பு 05, இ லங்கை​
  • +94 112 51 5759

engsin

அமைச்சரவைத் தீர்மானங்கள் 25.10.2016

01. அபிவிருத்தி (விசேட ஏற்பாடுகள்) சட்ட மூலம் (விடய இல. 08)
இலங்கையில் துரித பொருளாதார அபிவிருத்தியினை ஏற்படுத்தும் நோக்கில் அதனுடன் தொடர்புடைய அனைத்து விடயங்களும் தொடர்புடைய தேசிய கொள்கையொன்றினை தயாரிப்பதற்கு ஒத்துழைப்பு வழங்கும் அனைத்து காரணங்களையும் தயாரிப்பது தொடர்பில் தயாரிக்கப்பட்டுள்ள அபிவிருத்தி (விசேட ஏற்பாடுகள்) சட்ட மூலத்தினை அரசாங்க வர்த்தமானி அறிவித்தலில் பிரசுரிப்பதற்கும், அதன் பின்னர் பாராளுமன்றத்தின் அங்கீகாரத்தை பெற்றுக் கொள்வதற்காக பாராளுமன்றத்தில் முன்வைப்பதற்கும் தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அபிவிருத்தி விவகாரங்கள் அமைச்சர் எனும் ரீதியில் கௌரவ பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
 
02. இந்து சமூத்திர வலயத்தினுள் ஆபத்துக்கு உள்ளாகும் நபர்கள் தொடர்பில் தேடியறிந்து கொள்ளல் மற்றும் அவர்களை காப்பாற்றுதல் தொடர்பான செயற்பாடுகளை ஒருங்கிணைத்தல் மற்றும் ஒத்துழைப்பை வழங்குதல் தொடர்பில் இந்து சமூத்திர ஒத்துழைப்புச் சங்கம் (IORA) உறுப்பு நாடுகளுக்கு இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் (விடய இல. 12)
 
இந்து சமூத்திர வலயத்தினுள் ஆபத்துக்கு உள்ளாகும் நபர்கள் தொடர்பில் தேடியறிந்து கொள்ளல் மற்றும் அவர்களை காப்பாற்றுதல் தொடர்பான செயற்பாடுகளை ஒருங்கிணைத்தல் மற்றும் ஒத்துழைப்பை வழங்குதல் தொடர்பில் இந்து சமூத்திர ஒத்துழைப்புச் சங்கம் (IORA) உறுப்பு நாடுகளுக்கு இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில் கைச்சாத்திடுவதற்கு பாதுகாப்பு அமைச்சர் எனும் ரீதியில் அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
 
03. மூலதனச்சந்தை உபாய முறைகள் 2016 - 2020 (விடய இல. 13)
 
மூலதனச்சந்தையின் முக்கியத்துவத்தை உணர்ந்து, இலங்கையில் மூலதனச்சந்தையினை பலப்படுத்துவதற்கும், அதனை பயனுள்ள மற்றும் உத்வேகமான சந்தையாக அபிவிருத்தி செய்வதற்கான தேவை எழுந்துள்ளது. அதனடிப்படையில் அதற்கு தேவையான பின்னணியினை தயாரிக்கும் நோக்கில் மற்றும் இலங்கை அரசாங்கத்தின் மூலம் பின்பற்றப்பட வேண்டும் என எதிர்பார்க்கப்படுகின்ற விதிகள் மற்றும் அபிவிருத்தி செயன்முறைகளை முன்மொழிகின்ற மூலதனச் உபாய முறைகள் 2016 – 2020 இனை பின்பற்றுவதற்கு தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அபிவிருத்தி விவகாரங்கள் அமைச்சர் எனும் ரீதியில் கௌரவ பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
 
04. வரட்சியினால் பாதிப்புக்கு உள்ளான குடிநீர் பாவனையாளர்களுக்கு சலுகை அளித்தல் (விடய இல. 20)
 
கடந்த 02 மாத காலமாக ஏற்பட்ட வரட்சியினால் அனைத்து குடிநீர் பாவனையாளர்களுக்கும் பூரணமான முறையில் குடிநீரினை பெற்றுக் கொடுப்பதில் நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை பாரிய நெருக்கடியினை எதிர்நோக்கியது. எனினும் குறித்த பாதிப்புக்கு உள்ளான மக்களை இனங்கண்டு அவர்களுக்கு நீரினை பெற்றுக் கொள்வதற்கு 70 பவுசர்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும், அனைவருக்கும் 24 மணித்தியாலங்கள் நீரினை பெற்றுக் கொடுப்பதற்காக நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையின் அனைத்து வலய காரியாலயங்களுக்கும் விசேட குழுவொன்று வீதம் நியமிக்கப்பட்டுள்ளதாகவும், நீரினை வீண்விரயம் செய்யாது பயன்படுத்துமாறு பொதுமக்களுக்கு ஊடகங்கள் வாயிலாக அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் நகர திட்டமிடல் மற்றம் நீர் வழங்கல் அமைச்சர் கௌரவ ரவூப் ஹக்கீம் அவர்களினால் முன்வைக்கப்பட்ட தகவல்கள் அமைச்சரவையின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது.
 
05. ஹாலிஹெல மற்றும் பதுளை பிரதேச செயலக பிரிவுகளில் ஏற்பட்ட மண்சரிவு காரணமாக முழுமையாக பாதிப்புக்கு உள்ளான வீடுகளுக்கு பதிலாக புதிய வீடுகளை அமைப்பதற்கு சலுகை வழங்கல் (விடய இல. 21)
 
2014ம் ஆண்டு ஹாலிஹெல மற்றும் பதுளை பிரதேச செயலக பிரிவுகளில் ஏற்பட்ட மண்சரிவு காரணமாக முழுமையாக பாதிப்புக்கு உள்ளான 24 வீடுகளுக்கு பதிலாக புதிய வீடுகளை அமைப்பதற்கு ஒரு குடும்பத்துக்கு 1,250,000 ரூபா வீதம் சலுகை வழங்குவதற்கும், அதற்கு தேவையான 30 மில்லியன் ரூபாய்களினை ஒதுக்கிக் கொள்வதற்கும் அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் கௌரவ அநுர பிரியதர்ஷன யாப்பா அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
 
06. அவசர அனர்த்த நிலைமை தொடர்பில் பாதிப்புக்கு உள்ளான வீடுகள் மற்றும் சொத்துக்களின் அனர்த்தத்தினை அளவீடு செய்தல் (விடய இல. 22)
 
சரியான கணக்கெடுப்பு இன்மையினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணங்களை மேற்கொள்வதில் காலதாமதம் ஏற்படுகின்றது. இவற்றினை உடனடியாக தீர்த்துக் கொள்வதற்கு தற்போது ஓய்வு பெற்ற பயிற்சிபெற்ற தொழில் அதிகாரிகள் 30 பேரை 03 மாத காலத்துக்கு பிரதேச செயலாளர் பிரிவு மட்டத்தில் சேர்த்துக் கொள்வதற்கும், அதன் மூலம் சாலாவ இராணுவ முகாமில் ஏற்பட்ட வெடிப்பு, 2016ம் ஆண்டு மே மாதம் கேகாளை மாவட்டத்தில் ஏற்பட்ட மண்சரிவு மற்றும் 2016ம் ஆண்டு மே மாதம் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு ஆகிய அனர்த்த நிலைமைகளின் போது பாதிப்புக்கு உள்ளான நபர்களின் வீடுகள் மற்றும் சொத்துக்கள் தொடர்பில் துரித கெதியில் நட்ட ஈட்டை பெற்றுக் கொடுத்து முடிப்பதற்கு அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் கௌரவ அநுர பிரியதர்ஷன யாப்பா அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
 
07. இலங்கை நியமங்கள் நிறுவனத்துக்காக (SLSI) நவீன விஞ்ஞான ஆய்வு கூட கட்டிடம் ஒன்றை மாலபே பிரதேசத்தில் நிர்மாணித்தல் (விடய இல. 23)
 
இலங்கை நியமங்கள் நிறுவனத்துக்காக (SLSI) நவீன விஞ்ஞான ஆய்வு கூட கட்டிடம் ஒன்றை மாலபே தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தின் 03 ஏக்கர் நிலப்பரப்பை 168 மில்லியன் ரூபா செலவில் கொள்வனவு செய்வதற்கும், குறித்த கட்டுமான பணிகளை 550 மில்லியன் ரூபா செலவில் மேற் கொள்வதற்கும் விஞ்ஞான, தொழில்நுட்ப மற்றும் ஆராய்ச்சி அமைச்சர் கௌரவ சுசில் பிரேமஜயந்த அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
 
08. அநுராபுரம் மாவட்ட ஆயர்வேத வைத்தியசாலையின் மூன்றாம் மாடியின் வேலைகளை பூர்த்தி செய்தல் (விடய இல. 26)
 
அநுராதபுரம் ஆயர்வேத வைத்தியசாலையின் இரண்டு மாடிகளின் வேலைகள் தற்போது நிறைவு பெற்றுள்ளன. மேலும் 10 அறைகளைக் கொண்டதாக திட்டமிடப்பட்டுள்ள அநுராதபுரம் மாவட்ட ஆயர்வேத வைத்தியசாலையின் மூன்றாம் மாடியின் வேலைகளை 30 மில்லியன் ரூபா செலவில் பூர்த்தி செய்வதற்கு சுகாதார, போசணை மற்றும் தேசிய வைத்திய அமைச்சர் கௌரவ வைத்திய ராஜித சேனாரத்ன அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
 
09. மெதிரிகிரிய ஆயுர்வேத வைத்தியசாலை கட்டிடங்களை நிர்மாணித்தல் (விடய இல. 27)
 
மெதிகிரிய மற்றும் அதனை சூழ அமைந்துள்ள பகுதிகளில் வாழும் மக்களுக்கு தங்கி ஆயர் வேத வைத்திய வசதிகளை பெற்றுக் கொள்வதற்கு ஏதுவான முறையில், மெதிகிரியவில் அமைந்துள்ள மத்திய ஆயர்வேத மருந்தகத்தை ஆயர்வேத வைத்தியசாலையாக தரமுயர்த்துவதற்காக தேவையான கட்டடிட வசதிகளை 37 மில்லியன் ரூபா மதிப்பீட்டு செலவில் நிர்மாணிப்பதற்கு சுகாதார, போசணை மற்றும் தேசிய வைத்திய அமைச்சர் கௌரவ வைத்திய ராஜித சேனாரத்ன அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
 
10. கோல்டன் கீ கடன் அட்டை நிறுவனத்தில் பாதுகாப்பு வைப்பாளர்களின் வைப்பினை மீள செலுத்தல் (விடய இல. 31)
 
அமைச்சரவையின் தீர்மானத்திற்கு இணங்க முதற்கட்டமாக ரூபா 544.3 மில்லியனையும், உயர் நீதிமன்றத்தினால் அங்கீகரிக்கப்பட்ட திருத்தங்களுக்கமைவாக 3,945.6 மில்லியனை இரண்டாவது கட்டமாகவும் திறைசேரி ஒதுக்கீடுகளை மேற் கொண்டுள்ளது. அந்த வகையில் அதன் மூன்றாவது கட்டமாக 4,055.1 மில்லியன் ரூபாவினை இலங்கை மத்திய வங்கிக்கு குறித்த கொடுப்பனவுகளை மேற்கொள்ள முற்பணமாக விடுவிக்கவும், கோல்டன் கீ கடன் அட்டை நிறுவனத்தினதும் அதன் துணைக் கம்பனிகளினதும் சொத்துக்களை முடக்குகின்ற செயன்முறையினை சட்ட திட்டங்களுக்கமைவாக விரைவாக மேற்கொள்வதற்கும், அவ்வாறு முடக்கப்பட்ட சொத்துக்களின் வருமானங்களை இலங்கை மத்திய வங்கியினால் பொதுத் திறைசேரிக்கு செலுத்துவதற்கும் நிதியமைச்சர் கௌரவ ரவி கருணாநாயக்க அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
 
11. பத்தரமுல்லை, பொல்தூவ முச்சந்தியில் இருந்து 'சுஹுருபாய' ஊடாக உடுமுல்லை முச்சந்தி வரையான குறுக்கு வீதியினை நிர்மாணித்தல் (விடய இல. 38)
 
பத்தரமுல்லை முச்சந்தியில் காணப்படும் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த நிர்மாணிக்கப்பட்டுள்ள பத்தரமுல்லையில் இருந்து சுஹுருபாய வரையிலான குறுக்கு வீதியை உடுமுல்லை வரை விஸ்தரிப்பதற்கும், அப்பகுதியை 250 மில்லியன் ரூபா மதிப்பீட்டு செலவில் நிர்மாணிப்பதற்கும் பாரிய நகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் கௌரவ பாட்டலி சம்பிக்க ரணவக்க அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
 
12. மின்னுற்பத்தியிலும் மற்றும் மின்சாரப் பாவனையிலும் நிகழுகின்ற ஏரி தகனத்தினால் எழும் பச்சை வீட்டு வாயுட்களைக் குறைப்பதற்கு தேசிய ரீதியில் பொருத்தமான ஒரு நடவடிக்கை தொடர்பான கருத்திட்டம் (விடய இல. 44)
 
பச்சை வீட்டு வாயுட்களை அதிகளவில் ஏரி தகனம் செய்கின்ற நாடுகள் என்ற ரீதியில் சீனா 20.08  வீதத்தையும், ஐக்கிய அமெரிக்கா 17.89 வீதத்தையும், ரஷ்யா மற்றும் இந்தியா, ஜப்பான் மற்றும் கனடா முதலிய நாடுகள் சராசரியாக 17.34  வீதத்தையும் வெளியிடுகின்றன. இலங்கை வெளியிடும் அளவு 0.05 ஆகும். இது 2010ம் ஆண்டின் பச்சைவீட்டு வெளியீட்டு அளவுடன் ஒப்பீடும் போது, அதனை 2030 ஆம் ஆண்டில் 20 வீதம் என்ற அளவுக்கு குறைக்கும் நிமித்தம் நாடுகள் ரீதியில் தீர்மானிக்கப்பட்ட பங்களிப்புகளின் அடிப்படையில் பங்களிப்புச் செய்வதற்கு உறுதிமொழி அளிக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில் பூகோள சுற்றாடல் வசதிகளுக்கான நிலையம், ஐக்கிய நாடுகளினது அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டம், தனியார் துறையினது மற்றும் அரசாங்கத்தினது நிதி உதவிகளைப் பெற்று பச்சை வீட்டு வாயுவைக் குறைப்பதற்கும் தேசிய ரீதியில் தீர்மானித்த, பங்களிப்பை நடைமுறைப்படுத்தல் தொடர்பான கண்காணிப்பு, அறிக்கையிடல் ஆகிய அம்சங்கள் அடங்கிய ஒரு வேலைச்சட்டகத்தை தயாரிக்கும் கருத்திட்டத்தை செயற்படுத்துவது தொடர்பில் மின்வலு மற்றும் மீளப்புதுப்பிக்கத்தகு சக்தி வளங்கள் அமைச்சர் கௌரவ ரன்ஜித் சியபலாப்பிட்டிய அவர்களினால் முன்வைக்கப்பட்ட அமைச்சரவை பத்திரத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
 
13. முஸ்லிம் விவாக மற்றும் விவாகரத்து சட்டத்தில் திருத்தம் செய்வது தொடர்பில் ஆராய்வதற்கென குழுவொன்றை நியமித்தல் (விடய இல. 46)
 
முஸ்லிம் சட்டத்தின் கீழ் திருமணம் முடிப்பதற்கான குறைந்த வயது எல்லை மற்றும் அச்சட்டத்தின் கீழ் காணப்படும் வேறு காரணங்கள் தொடர்பில் காணப்படும் சட்ட விதப்புரைகள், இலங்கை அங்கம் வகிக்கும் சில சர்வதேச சமவாயங்களில் குறிப்பிடப்பட்டுள்ள நியம ஒழுக்கங்களுடன் ஒத்திசையாத காரணத்தினால், குறித்த சட்டத்தில் திருத்தம் செய்வதற்கு தேவை ஏற்பட்டுள்ளது என்பது இனங்காணப்பட்டுள்ளது. அதனடிப்படையில் பரிசீலனை மேற்கொண்டு, முஸ்லிம் விவாக மற்றும் விவாகரத்து சட்டத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய முறையான திருத்தங்கள் தொடர்பில் அமைச்சரவைக்கு யோசனைகளை முன்வைப்பதற்கு அமைச்சரவை உப குழுவொன்றை நியமிக்க நீதி அமைச்சர் கௌரவ கலாநிதி விஜயதாச ராஜபக்ஷ அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. 
 
14. இலங்கை சிறுவர்களுக்கான தேசிய செயற்றிட்டம் - 2016 - 2020 (விடய இல. 48)
 
இலங்கை சிறுவர்களின் பூரண அபிவிருத்தியை உறுதி செய்யும் வகையில் மற்றும் அவர்களுக்கு உரித்தான விசேட திறமைகள் மற்றும் ஆற்றல்களை அபிவிருத்தி செய்து கொள்வதற்கு வசதிகளைச் செய்து கொடுக்கும் வகையில் சகல சிறுவர்களினதும் உரிமைகளையும் பாதுகாத்து அவர்கள் மேம்பாட்டிற்கும் மற்றும் அபிவிருத்திக்கும் உகந்த, பாதுகாப்பான மற்றும் உதவும் சூழலை உருவாக்கும் நோக்கத்துடன் இலங்கை சிறுவர்களுக்கான தேசிய செயற்றிட்டம் - 2016 – 2020 தயார் செய்யப்பட்டுள்ளது. இத்திட்டம் தொடர்பில் நேரடியாக பங்களிப்பு செய்கின்ற கல்வியமைச்சு, சுகாதாரம், போசாக்கு மற்றும் சுதேச மருத்துவ அமைச்சு, நீதிமன்றம், தொழிற் சங்க மற்றும் தொழிற் சங்க உறவு, பாராளுமன்ற மறுசீரமைப்பு மற்றும் ஊடகத்துறை, நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் ஆகிய பிரதான அமைச்சுக்கள் மற்றும் இணை நிறுவனங்கள் ஒன்றிணைந்து ஆரம்பத்தில் வரைவு செய்துள்ளன. குறித்த திட்டத்தை செயற்படுத்துவதற்கும், அதற்காக அனைத்து தரப்பினரையும் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் தேசிய செயற்றிட்ட குழுவொன்றை ஸ்தாபிப்பதற்கும் பெண்கள் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் கௌரவ சந்திராணி பண்டார அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
 
15. பாடநூல்களில் சிலவற்றை முன்னோடி செயற்திட்டமொன்றாக நீண்ட காலப் பயன்பாடு கொண்ட செயற்கைத் தாளில் அச்சிடுவதற்கான கருத்திட்டம் (விடய இல. 49)
 
பாடநூல்களை இலவசமாக பெற்றுக் கொடுப்பது தொடர்பில் அரசாங்கத்தின் மூலம் வருடாந்தம் 3,500 மில்லியன் ரூபா செலவிடப்படுகின்றது. இச்செலவினை மீள்நிரப்பிக் கொள்ளும் நோக்கில் குறித்த பாடநூல்களை மீள பாவிப்பதை விருத்தி செய்யும் வேலைத்திட்டத்தை கல்வி வெளியீட்டு திணைக்களத்தின் மூலம் செயற்படுத்தப்பட்ட போதும் பாடநூல்களை 03 வருடத்துக்கு மேல் பாவிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் வருடாந்தம் 70மூ ஆன புத்தகங்கள் அச்சிடப்பட வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. அதற்கு பாரியளவு நிதி விரயமாகின்றது. இதனை கருத்திற் கொண்டு பல நன்மைகளைக் கொண்ட செயற்கைத் தாளில் அச்சிடுவதற்கான கருத்திட்டத்தினை 2017ம் ஆண்டில் செயற்படுத்துவது தொடர்பில் கல்வி அமைச்சர் கௌரவ அகில விராஜ் காரியவசம் அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
 
16. காணி கையளிப்பின் பேரில் அறவிடப்படும் முத்திரை கட்டணங்கள் மற்றும் நீதிமன்ற அபராதப் பணம் என்பன உள்ளூராட்சி நிறுவனங்களிடம் கிடைக்கப்பெறுவதனை முறைசார்படுத்தலும் துரிதப்படுத்தலும் (விடய இல. 51)
 
காணி கையளிப்பின் பேரில் அறவிடப்படும் முத்திரை கட்டணங்கள் மற்றும் நீதிமன்ற அபராதப் பணம் என்பன உள்ளூராட்சி நிறுவனங்களிடம் கிடைக்கப்பெறுவதனை முறைசார்படுத்தலும் துரிதப்படுத்தலும் தொடர்பில் 1987ம் ஆண்டு 42ம் இலக்க மாகாண சபைகள் சட்டத்தின் 19ஆவது பிரிவை திருத்தம் செய்வது தொடர்பில் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் கௌரவ பைசல் முஸ்தபா அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
 
17. சர்வதேச விளையாட்டு செயலமர்வு, கண்காட்சி மற்றும் களியாட்ட நிகழ்வினை ஒழுங்கு செய்தல் (விடய இல. 54)
 
இலங்கையில் தேர்ந்தெடுக்கப்பட்ட 07 விளையாட்டுகளை தொடர்ந்தும் சர்வதேச மட்டத்தில் ஊக்குவிக்கும் நோக்குடன் அதற்காக வெளிநாட்டு பயிற்றுவிப்பாளர்களின் வழிகாட்டலை பெற்றுக் கொள்வதற்காகவும், சர்வதேச விளையாட்டு வீரர்களுடன் இலங்கை விளையாட்டு வீரர்கள் பங்கேற்கும் போட்டிகளை நடாத்துவதன் மூலம் இலங்கை விளையாட்டு வீரர்களுக்கு திறமை விருத்தியினை வழங்குவதற்காகவும் விளையாட்டு தொடர்பில் சர்வதேச நிறுவனங்களின் பங்கேற்புடன் கண்காட்சி மற்றும் விளையாட்டு களியாட்ட நிகழ்வினை 2017ம் ஆண்டின் முதலாவது காலாண்டில் இலங்கையில் நடாத்த விளையாட்டுத் துறை அமைச்சு திட்டமிட்டுள்ளது. அதனடிப்படையில் சர்வதேச விளையாட்டு செயலமர்வு, கண்காட்சி மற்றும் களியாட்ட நிகழ்வினை ஒழுங்கு செய்வதற்கு விளையாட்டு அமைச்சின் செயலாளர் அவர்களின் தலைமையில் குழுவொன்றை நியமிப்பதற்கும், அவ்வேலைத்திட்டத்தினை செயற்படுத்துவது தொடர்பில் மலேசிய நிறுவனம் ஒன்றுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில் கைச்சாத்திடுவதற்கும், அத்திட்டத்தை வெற்றிகரமாக செய்து முடிப்பதற்கு அரச மற்றும் தனியார் நிறுவனங்களின் அனுசரணையினை பெற்றுக் கொள்வதற்கும் விளையாட்டுத் துறை அமைச்சர் கௌரவ தயாசிறி ஜயசேகர அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
 
18. கொள்ளுபிட்டிய பொலிஸ் நிலைய கட்டிடத்தின் மிகுதி வேலைகளை பூர்த்தி செய்தல் (விடய இல. 55)
 
கொள்ளுபிட்டிய பொலிஸ் நிலைய கட்டிடத்தின் மிகுதி வேலைகளை 2017 – 2019 காலப்பகுதியில் 153.3 மில்லியன் ரூபா மதிப்பீட்டு செலவில் பூர்த்தி செய்வது தொடர்பில் சட்டமும் ஒழுங்கும் மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சர் கௌரவ சாகல ரத்னாயக அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
 
19. தகவல் தொழில்நுட்ப கல்வியறிவை மேம்படுத்தும் நோக்கத்துடன் அமுல்படுத்தப்படும் கருத்திட்டங்கள் - 2016 – 2018 (விடய இல. 56)
 
தகவல் தொழில்நுட்ப கல்வியறிவை மேம்படுத்தும் நோக்கத்துடன் தொலைத்தொடர்புகள் மற்றும் டிஜிட்டல் உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சு, உள்நாட்டு அலுவல்கள் அமைச்சுடன் இணைந்து செயற்படுத்தும் இ - கிராம அலுவலர் கருத்திட்டம் மற்றும் இணையப் பொருட்களின் பாவனையை முன்னேற்றம் செயதல் மற்றும் புதிய உருவாக்கங்களை உருவாக்குதல் ஆகிய திட்டங்களை பாடசாலை மாணவர்கள், இளம் தலைமுறையினர் மற்றும் இளம் தொழில் முயற்சியாளர்கள் அறவூட்டல் பிரகாரம் இணையப்பாகங்களின் கருத்திட்டம் ஆகிய இரு கருத்திட்டங்களை முறையாக 662 மில்லியன் ரூபா மற்றும் 133 மில்லியன் ரூபா ஆகிய மதிப்பீட்டு செலவில் 2016 – 2018 என்ற காலப்பகுதிக்குள் செய்து முடிப்பதற்கு தொலைத்தொடர்புகள் மற்றும் டிஜிட்டல் உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சர் கௌரவ ஹரீன் பிரனாந்து அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
 
20. பாராளுமன்ற சபைக் கூடத்தில் தற்போது பொருத்தப்பட்டிருக்கும் மூடிய சுற்று தொலைக்காட்சி (CCTV) அமைப்புக்குப் பதிலாக புதிய அமைப்பொன்றைப் பொருத்துதல் (விடய இல. 60)
 
பாராளுமன்ற சபைக் கூடத்தில் தற்போது பொருத்தப்பட்டிருக்கும் மூடிய சுற்று தொலைக்காட்சி (CCTV) அமைப்புக்குப் பதிலாக புதிய அமைப்பொன்றைப் பொருத்துவதற்கு தேவையான ஒப்பந்தத்தை அமைச்சரவையினால் நியமிக்கப்பட்டுள்ள கொள்முதல் குழுவின் சிபார்சின் பெயரில் ஒப்படைப்பதற்கு கௌரவ பிரதமர் ரணில் விக்ரமசிங்க அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
 
21. காட்டு யானை அச்சுறுத்தல் காணப்படும் கிராமங்களைச் சுற்றி 800 கி.மீற்றருக்கான மின்வேலியினை அமைத்தல் (விடய இல. 61)
 
'காட்டு யானை – மனிதன் மோதல் முகாமைத்துவ தேசிய திட்டத்தின்' கீழ் 2017ம் ஆண்டுக்குள் காட்டு யானை அச்சுறுத்தல் காணப்படும் 07 வனஜீவராசிகள் வலயத்தில் காணப்படும் கிராமங்களைச் சுற்றி 800 கி.மீற்றருக்கான மின்வேலியினை அமைப்பதற்கும், அதற்கு தேவையான உபகரணங்களை கொள்வனவு செய்வதற்கும் வலுவாதார அபிவிருத்தி மற்றும் வனசீவராசிகள் அமைச்சர் கௌரவ காமினி ஜயவிக்ரம பெரேரா அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
 
22. அத்திடியவில் அமைந்துள்ள உயர் அதிர்வெண் கடத்தி நிலையத்தினை விருத்தி செய்தல் (விடய இல. 62)
 
அத்திடியவில் உயர் அதிர்வெண் கடத்தி நிலையம் தொடர்பில் அன்ரனாவுடனான உயர் அதிர்வெண் கடத்தி வானூர்திகள் மூன்றினை பொருத்துவதற்கு தேவையான ஒப்பந்தத்தினை அமைச்சரவையினால் நியமிக்கப்பட்டுள்ள நிலையியல் கொள்முதல் குழுவின் சிபார்சின் அடிப்படையில் வழங்குவதற்கு போக்குவரத்து மற்றும் சிவில் விமானசேவைகள் அமைச்சர் கௌரவ நிமல் சிறிபால டி சில்வா அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
 
23. பன்னல – மாகந்துர – குளியாப்பிட்டிய ஆகிய பிரதேசங ;களை ஒன்றிணைத்து நீர் வழங்கல் செயற்றிட்டத்தை நடைமுறைப்படுத்தல் (விடய இல. 63)
 
பன்னல – மாகந்துர – குளியாப்பிட்டிய ஆகிய பிரதேசங்களை ஒன்றிணைத்து மேற்கொள்ளப்பட உள்ள பயன்மிக்க நீர் வழங்கல் செயற்றிட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான ஒப்பந்தத்தை அமைச்சரவையினால் நியமிக்கப்பட்டுள்ள நிலையியல் கொள்முதல் குழுவின் சிபார்சின் அடிப்படையில் வழங்குவதற்கு நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் கௌரவ ரவூப் ஹக்கீம் அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
 
24. எம்பிலிபிட்டிய களஞ்சியசாலைத் தொகுதியை நிர்மாணித்தல் (விடய இல. 65)
 
ஆராய்ச்சி பிரிவுடன் கூடிய அலுவலகக் கட்டடம், தங்குமிட வசதிகளுடன் கூடிய கட்டடம், நீர்த்தாங்கி, மின் பிறப்பாக்கி கட்டடம், மின் மாற்றிக் கட்டடம் ஆகியவற்றுடன் கூடிய 28,500 சதுர அடி பரப்பைக் கொண்ட களஞ்சியசாலை தொகுதி ஒன்றை எம்பிலிபிட்டிய பகுதியில் நிர்மாணிப்பதற்கு தேவையான ஒப்பந்தத்தினை அமைச்சரவையினால் நியமிக்கப்பட்டுள்ள நிலையியல் கொள்முதல் குழுவின் சிபார்சின் அடிப்படையில் வழங்குவதற்கு நிதியமைச்சர் கௌரவ ரவி கருணாநாயக்க அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
 
25. அஹங்கம புதிய வாழ்க்கை தொழிற் பயிற்சி நிலையத்தின் நிர்மாணித்தல் (விடய இல. 66)
 
வாழ்க்கைத்தொழிற் பயிற்சி வலையமைப்பினை ஆராயும் நோக்கிலும், மற்றும் இந் நாட்டின் தொழில்நுட்பத் துறையில் இருக்கும் நடைமுறைத் தேவைகளை நிவர்த்தி செய்யும் நோக்கில் அமைச்சரவையினால் ஏற்கனவே அனுமதி வழங்கப்பட்டுள்ள அஹங்கம புதிய வாழ்க்கை தொழிற் பயிற்சி நிலையத்தின் நிர்மாணிப்பதற்கு தேவையான ஒப்பந்தத்தினை அமைச்சரவையினால் நியமிக்கப்பட்டுள்ள நிலையியல் கொள்முதல் குழுவின் சிபார்சின் அடிப்படையில் வழங்குவதற்கு திறன்கள் அபிவிருத்தி மற்றும் வாழ்க்கைத் தொழிற் பயிற்சி அமைச்சர் கௌரவ மஹிந்த சமரசிங்க அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
 
26. விவசாய அடிப்படையிலான கைத்தொழில் மற்றும் விவசாய உற்பத்தி சந்தைப்படுத்தல் எள்ளக கட்டமைப்பு வசதிகளினை மேம்படுத்தும் கருத்திட்டம் (விடய இல. 66)
 
ரஜரட்ட நவோதய ஜனாதிபதி நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் செயற்படுத்தப்பட உள்ள விவசாய அடிப்படையிலான கைத்தொழில் மற்றும் விவசாய உற்பத்தி சந்தைப்படுத்தல் உள்ளக கட்டமைப்பு வசதிகளினை மேம்படுத்தும் கருத்திட்டத்தினை முன்னெடுப்பதற்கு தேவையான நிதியினை வழங்க சீன அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளது. அதனடிப்படையில் குறித்த கருத்திட்டத்துக்கான ஒப்பந்தத்தை அமைச்சரவையினால் நியமிக்கப்பட்டுள்ள பேச்சு வார்த்தை ஒப்புதல் குழுவின் சிபார்சின் அடிப்படையில் வழங்குவதற்கு கிராமிய பொருளாதார அலுவல்கள் அமைச்சர் கௌரவ பீ.ஹெரிசன் அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
 
27. உணவு உற்பத்திக்கான தேசிய நிகழ்ச்சித்திட்டம் (2016 – 2020) இன் கீழ் பண்புத்தரமிக்க உணவு நுகர்வினை ஊக்குவித்தல் (விடய இல. 68)
 
அரசாங்கத்தின் பிரதானமாக கவனம் செலுத்தியுள்ள உணவுற்பத்திக்கான தேசிய நிகழ்ச்சித் திட்டத்தின் பிரதானமான அம்சமாக நச்சுத்தன்மையற்ற தரமிக்க உணவு நுகர்வினை மேம்படுத்துவதன் மீது கவனம் செலுத்தப்பட்டுள்ளது. தரமிக்க உணவுப் பயிர்செய்கைக்கு தேவையான விதைகள் போதாமை இதன்போது ஏற்பட்டுள்ள பிரதான சிக்கலாகும். இதனை நிவர்த்திக்கும் நோக்கில் 2016/2017 ஆம் பெரும்போகத்தின் போது பாரம்பரிய விதை நெல்லின் குறிப்பிட்ட அளவு அரசினால் இலவசமாக வழங்கும் நோக்கில், கமத்தொழில் திணைக்களத்தின் விதை சான்றுபடுத்தல் சேவை மற்றும் கமநல சேவைகள் திணைக்களத்தின் உதவியினை பெற்று விவசாயிகளின் அறுவடையிலிருந்து விதை நெல்லுக்குப் பொருத்தமான 400,000 கி.கிராம் நெல்லினை பெற்றுக் கொண்டு, அதனை குறித்த அதிகாரிகளின் ஒத்துழைப்புடன் விவசாயிகளிடத்தில் பகிர்ந்தளிப்பதற்கும், அதற்கு தேவையான தொழில்நுட்பத்தினை பெற்றுக் கொடுப்பதற்கும் அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
 
28. யாழ்ப்பாண மாவட்டத்தில் இந்திய அரசாங்கத்தினால் 3,000 மழைநீர் சேகரிக்கும் நீர்த்தாங்கிகளை நிர்மாணித்தல் (விடய இல. 69)
 
பாதுகாப்பான குடிநீரின் நிலைபேறான முலமொன்றை வழங்குவதை நோக்காகக் கொண்ட கருத்திட்டத்தை அமுல்படுத்தும் முகவராண்மையான தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்துக்கான அலுவலகத்தினால் இந்திய உயர் ஸ்தானிகராலயத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இதற்கு இணங்க யாழ்ப்பாண மாவட்டத்தில் இந்திய அரசாங்கத்தினால் 3,000 மழைநீர் சேகரிக்கும் நீர்த்தாங்கிகளை நிர்மாணிப்பதற்கு 300 மில்லியன் ரூபா நிதியுதவியினை வழங்க இணக்கம் தெரிவித்துள்ளது. இதனடிப்படையில் இரு நாடுகளுக்குமிடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில் கைச்சாத்திடுவதற்கு தேசிய ஒருங்கிணைப்பு நல்லிணக்க அமைச்சர் எனும் ரீதியில் அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
 
29. சமூக பாதுகாப்பு வலையமைப்பு கருத்திட்டத்திற்காக உலக வங்கியின் சர்வதேச அபிவிருத்தி அமைப்பிடமிருந்து 75 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு சமமான விசேட கடனெடுப்பு உரிமையை புழக்கத்திலுள்ள நிதியில் பெற்றுக் கொள்ளுதல் (விடய இல. 70)
 
சமூகத்திலுள்ள வறிய மற்றும் நிலையற்ற நபர்களுக்கு நன்மைகளைச் செய்யும் வேலைத்திட்டத்தை மிகவும் நியாயமானதாகவும் வினைத்திறனுடனும் வெளிப்படைத்தன்மையுடனும் நடைமுறைப்படுத்தும் பொருட்டு 'சமூக பாதுகாப்பு வலையமைப்பு கருத்திட்டம் 2017- 2022' திட்டத்தை செயற்படுத்துவதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. அதனை செயற்படுத்த தேவையான கடன் உதவியினை வழங்க உலக வங்கியின் சர்வதேச அபிவிருத்தி அமைப்பு இணக்கம் தெரிவித்துள்ளது. அதனடிப்படையில் விசேட கடனெடுப்பு உரிமைக்கும் ஐக்கிய அமெரிக்க டொலருக்கும் இடையில் காணப்படுகின்ற செலாவணி வீதத்திற்கும் அமைவாக 75 மில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலருக்கு சமமான கடன் தொகையினை பெற்றுக் கொள்வது தொடர்பில் உலக வங்கியுடன் நிதி உடன்படிக்கையைச் செய்து கொள்வதற்கு நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

சமீபத்திய செய்திகள்

Cabinet Decisions - 2024.10.28

29 October 2024

Cabinet Decisions taken at the Cabinet meeting conducted...

Cabinet Decisions 2024.10.21

22 October 2024

 Cabinet Decisions on 21.10.2024

Cabinet Decisions - 2024.10.07

08 October 2024

Cabinet decisions taken at the Cabinet Meeting conducted...

Cabinet Decisions - 2024.09.30

01 October 2024
Cabinet Decisions - 2024.09.30

Cabinet Decisions taken on 30.09.2024

Cabinet Decisions - 2024.09.13

14 September 2024

Cabinet Decisions taken at the Cabinet Meeting conducted...

Cabinet Decisions - 2024.09.03

03 September 2024

2024.09.03 Cabinet Decisions taken at the Cabinet Meeting...

Cabinet Decisions - 2024.08.26

28 August 2024

Decisions taken by the Cabinet of Ministers on...

Cabinet Decisions - 2024.08.21

22 August 2024

 Cabinet decisions taken at the cabinet meeting conducted...

அத்துடன் இலங்கையிலுள்ள ஊடகத்துறையின் கொள்கை திட்டமிடல் , பயிற்சி நெறிகளை வழங்குதல் , மற்றும் ஊடகத்துறைக்கான அங்கீகாரங்களை வழங்குவதிலும் இந்நிறுவனம் முன்னின்று உதவுகின்றது.