01. இடவசதியற்ற இராணுவ வீரர்களுக்கு அரசாங்கத்தின் இடங்களை வழங்குதல் (விடய இல. 08)
நாட்டின் இறைமையை பாதுகாப்பதற்காக தனது உயிரையே பணயம் வைத்து போர் தொடுத்த இராணுவ வீரர்களின் குடியேற்றத்துக்கு அரசாங்கத்தினால் செயற்படுத்தப்பட்டு வரும் காணி வழங்கும் முறையில் காணப்படும் குறைபாடுகளை நிவர்த்தி செய்து, அவர்களுக்கு மேலும் நன்மைகளை பெற்றுக் கொடுப்பதற்காக அரச காணிகளை வழங்கும் சட்டத்தை திருத்தியமைப்பது தொடர்பில் நாட்டின் பாதுகாப்பு அமைச்சர் எனும் ரீதியில் அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
02. கண்டி, பதுளை மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்களில் காணப்படும் விவசாய பூமியில் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கும் விவசாய பூமிகளை பாதுகாப்பதற்கான வேலைத்திட்டம் (விடய இல. 11)
கண்டி, பதுளை மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்களில் காணப்படும் விவசாய பூமியில் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கும் விவசாய பூமிகளை பாதுகாப்பதற்காக இலங்கை அரசாங்கத்தினால் வழங்கப்படும் 9,740,000 அமெரிக்க டொலர்களுடன் சர்வதேச சூழல் வசதிகள் (Global Environmental Facility – GEF) மூலம் உணவு மற்றும் விவசாய அமைப்பினால் இலங்கைக்கு வழங்கப்படும் 1,344,657 அமெரிக்க டொலர்களையும் உபயோகித்து 2016-2020 காலப்பிரிவினுள் வேலைத்திட்டமொன்றை முன்னெடுக்க மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சர் எனும் ரீதியில் அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
03. ஓசோன் படையை தாக்கும் இரசாயன பதார்த்தங்களை பாவிப்பதால் எழும் பிரச்சினைகளுக்கு தீர்வு காணல்
(விடய இல. 12) ஓசோன் படையை தாக்கும் இரசாயண பதார்த்தங்களை பாவிப்பதால் எழும் பிரச்சினைகளை தடுப்பதற்காக குறுகிய கால மற்றும் நீண்ட கால தீர்வுகளாக முன்மொழியப்பட்டுள்ள யோசனைகளை சாராம்சம் செய்து அமைச்சரவைக்கு சிபார்சுகளை முன்வைப்பதற்காக குறித்த அமைச்சு, திணைக்களம் மற்றும் அதனுடன் தொடர்பான நிறுவனங்களின் பிரதிநிதிகளை உள்ளடக்கிய குழுவொன்றை அமைப்பது தொடர்பில் மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சர் எனும் ரீதியில் அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
04. மின் வழங்கலுக்கு பயன்படுத்தப்படும் பிளக்ஸ் மற்றும் சொக்கட்களுக்காக (Plugs and Socket Outlets) சர்வதேச தரத்தினை செயற்படுத்தல் (விடய இல. 15)
தரமற்ற மின் வழங்கலுக்கு பயன்படுத்தப்படும் பிளக்ஸ் மற்றும் சொக்கட் பாவனையினால் பல்வேறு மரணங்கள் சம்பவித்துள்ளன. அதனால் அதிகளவிலான பாதிப்புக்கள் ஏற்பட்டுள்ளன. இவற்றினை தவிர்க்கும் நோக்கில் இலங்கையினுள் பாவிக்கப்படும் பிளக்ஸ் மற்றும் சொக்கட்களுக்காக சர்வதேசத்தினால் அங்கீகரிக்கப்பட்ட G வகை தரத்தினை இதன் பிறகு பயன்படுத்துவதற்கும், தற்போது இலங்கையினுள் பயன்படுத்தப்படுகின்ற மற்றும் அடுத்த இரு ஆண்டுகளில் விற்பனை செய்யப்படுகின்ற இவ் அங்கீகரிக்கப்பட்ட தரத்தில் அல்லாத பிளக்ஸ் மற்றும் சொக்கட்களை அதன் ஆயுட் காலம் முடியும் வரை பயன்படுத்துவதற்கு வழிசமைத்து கொடுப்பதற்கும் தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார விவகாரங்கள் அமைச்சர் எனும் ரீதியில் கௌரவ பிரதமர் ரணில் விக்ரமசிங்க அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
05. தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார விவகாரங்கள் அமைச்சின் கீழ் செயற்படுத்தப்படுகின்ற அபிவிருத்தி வேலைத்திட்டங்களுக்காக இராணுவத்திலிருந்து ஓய்வு பெற்ற தொழிநுட்ப அதிகாரிகளின் சேவையினை பெற்றுக் கொள்ளல் (விடய இல. 16)
தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார விவகாரங்கள் அமைச்சின் கீழ் நாடு தழுவிய ரீதியில் செயற்படுத்தப்படுகின்ற கிராமிய அபிவிருத்தி வேலைத்திட்டங்களை குறித்த காலப்பகுதிக்குள் செய்து முடிக்கும் நோக்கில் இராணுவத்திலிருந்து ஓய்வு பெற்ற தொழிநுட்ப அதிகாரிகளின் சேவையினை பெற்றுக் கொள்வது தொடர்பில் தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார விவகாரங்கள் அமைச்சர் எனும் ரீதியில் கௌரவ பிரதமர் ரணில் விக்ரமசிங்க அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
06. ஒன்றிணைந்த கிராமிய அபிவிருத்தி செயன்முறையொன்றை தயாரித்தல் (விடய இல. 17)
பல்வேறு அமைச்சுக்களினால் கிராமிய அடிப்படை வசதிகள் அபிவிருத்தி செய்யும் வேலைத்திட்டங்களை முன்னெடுக்கும் போது ஏற்படுகின்ற ஒருங்கிணைப்பு பிரச்சினைகள் மற்றும் இதர பிரச்சினைகளில் இருந்து மீட்டெடுக்கும் நோக்கில் ஒன்றிணைந்த கிராமிய அபிவிருத்தி செயன்முறையொன்றை செயற்படுத்துவதற்கு தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார விவகாரங்கள், நிதி, உள்நாட்டு விவகார, கிராமிய அபிவிருத்தி தொடர்பான, மற்றும் மாகாண சபை மற்றும் உள்ளுராட்சி ஆகிய அமைச்சுக்களின் செயலாளர்கள் அல்லது அவர்களின் பிரதிநிதிகளை உள்ளடக்கிய குழுவொன்றை தாபிப்பதற்கு தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார விவகாரங்கள் அமைச்சர் எனும் ரீதியில் கௌரவ பிரதமர் ரணில் விக்ரமசிங்க அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
07. வெளிநாட்டவர்களின் ஆரோக்கியம் தொடர்பான இரண்டாவது சர்வதேச கூட்டத்தொடர் 2016 ஒக்டோபர் மாதம் 25 தொடக்கம் 28 வரை இலங்கையில் நடாத்துதல் (விடய இல. 27)
ஜனாதிபதி அவர்களின் யோசனைக்கு அமைய 40 நாடுகளின் பங்குபற்றலுடன் வெளிநாட்டவர்களின் ஆரோக்கியம் தொடர்பான இரண்டாவது சர்வதேச கூட்டத்தொடர் 2016 ஒக்டோபர் மாதம் 25 தொடக்கம் 28 வரை இலங்கையில் நடாத்துவது தொடர்பில் சுகாதார போசணை மற்றும் சுதேச வைத்திய அமைச்சர் கௌரவ ராஜித சேனாரத்ன அவர்களினால் முன்வைக்கப்பட்ட அமைச்சரவை பத்திரத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
08. ஏற்றுமதி மூலம் பெறப்படுகின்ற வருமானத்திற்காக செலாவணி கட்டுப்பாட்டு சட்டத்தின் 22 (4) பிரிவின் கீழ் அனுமதியினை பெற்றுக் கொள்ளல் (விடய இல. 31)
ஏற்றுமதி மூலம் பெறப்படுகின்ற வருமானத்தினை குறித்த பொருள் ஏற்றுமதி செய்யப்பட்டு 90 தினங்களுக்குள் ஏற்றுமதி வருவாயாக்கப்பட வேண்டும். எனவே குறித்த தொகுதியினரின் வேண்டுகோளின் பெயரில் குறித்த காலப்பிரிவை 120 நாட்களாக நீடிக்கவும், அதனை 2016 ஆம் ஆண்டு ஆகஸ்ட் முதலாம் திகதியில் இருந்து நடைமுறைப்படுத்துவதற்கும், காலத்தாமதம் ஏற்படும் பட்சத்தில் சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு முன்னர் 30 நாள் கால அவகாசம் வழங்குவதற்கும் நிதியமைச்சர் கௌரவ ரவி கருணாநாயக்க அவர்களினால் முன்வைக்கப்பட்ட அமைச்சரவை பத்திரத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
09. மோதலினால் ஏற்பட்ட இடம்பெயர்வுக்காக நீடிக்கக்கூடிய தீர்வொன்று தொடர்பான தேசிய கொள்கை (விடய இல. 32)
மோதலினால் ஏற்பட்ட இடம்பெயர்வுக்காக நீடிக்கக்கூடிய தீர்வொன்றினை பெற்றுக் கொடுப்பது தொடர்பான தேசிய கொள்கையொன்று காணப்படுவதன் அவசியத்தை உணர்ந்து பல்வேறு அம்சங்களை உள்ளடக்கிய தேசிய கொள்கையொன்றை தயாரிப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு தொடர்பில் சிறைச்சாலை மறுசீரமைப்பு, புனரமைப்பு, மீள் குடியேற்ற மற்றும் இந்து மத விவகார அமைச்சர் கௌரவ டி.எம்.சுவாமிநாதன் அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
10. ஆணமடுவ பேரூந்து நிலையத்தின் இரண்டாம் கட்ட அபிவிருத்தி வேலைத்திட்டம் (விடய இல. 42)
ஆணமடுவ பேரூந்து நிலைய அபிவிருத்தி வேலைத்திட்டமானது, ஆணமடுவ அபிவிருத்தி திட்டத்தின் கீழ் முக்கியத்துவம் அளிக்கப்படும் வேலைத்திட்டம் என இனங்காணப்பட்டுள்ளதுடன், 2012 ஆம் ஆண்டு மாகாண சபை நிதியின் கீழ் அதன் புனரமைப்பு வேலைத்திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டதுடன், அதன் ஒரு தொகுதி வேலைகள் முடிவுக்கு வந்துள்ளன. அதனடிப்படையில் நகர அபிவிருத்தி அதிகார சபையின் மூலம் மிகுதி வேலைத்திட்டங்களை மேற்கொள்வதற்கும், அதற்காக 25 மில்லியன் நிதியினை ஒதுக்கிக் கொள்வதற்கும் பாரிய நகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் கௌரவ பாடலி சம்பிக்க ரணவக்க அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
11. சிலாபம் மீன்பிடி துறைமுகத்தை மீண்டும் அபிவிருத்தி செய்தல் (விடய இல. 43)
மீனவர்களின் கோரிக்கையின் படி தெதுறு ஓயா களப்பு அமைந்துள்ள சிலாபம் மீன் பிடி துறைமுகத்தை மீள அபிவிருத்தி செய்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி குறித்த அபிவிருத்தி பணியினை முன்னெடுப்பதற்கு தேவையான 550 மில்லியன் நிதியினை ஒதுக்கிக் கொள்வதற்கு மீன் பிடி மற்றும் நீர்வளங்கள் அமைச்சர் கௌரவ மஹிந்த அமரவீர அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
12. பிரதேச ரீதியில் அமைக்கப்பட்டுள்ள நீதிமன்றங்களுக்கு நவீன அடிப்படை வசதிகளை செய்து கொடுத்தல் (விடய இல. 39)
கொழும்பு தவிர்ந்த பிரதேசங்களில் அமைக்கப்பட்டுள்ள நீதிமன்றங்களுக்கு நவீன அடிப்படை வசதிகளை செய்து கொடுக்கும் திட்டத்தின் கீழ் 1,172 மில்லியன் ரூபா செலவில் கம்பளை, ருவன்வெல்லை, முல்லைத்தீவு மற்றும் பஸ்ஸச பிரதேசங்களில் அமைக்கப்பட்டுள்ள நீதிமன்றங்களுக்காக புதிய கட்டிடங்களை அமைப்பதற்கும் மாங்குளம் பிரதேசத்தில் சுற்றுலா நீதவான் நீதிமன்றம் ஒன்றை அமைப்பதற்கும் நீதியமைச்சர் கலாநிதி விஜயதாச ராஜபக்ஷ அவர்களினால் முன்வைக்கப்பட்ட அமைச்சரவை பத்திரத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
13. ஹெலன்கோ ஹோடெல்ஸ் என்ட் ஸ்பா தனியார் கம்பனிக்கு ஒதுக்கப்பட்ட நிதியினை குறைத்தல் (விடய இல. 47)
ஹெலிங்கோ ஹொடெல்ஸ் என்ட் ஸ்பா (தனியார்) கம்பனியில் பயன்படுத்தப்படாதுள்ள நிதியை கென்வில் ஹோல்டின்ஸ் கம்பனியினால் கிரேன்ட் ஹயத் ஹோட்டலில் முதலீடு செய்யக்கூடியவாறு ஹெலிங்கோ ஹொடெல்ஸ் என்ட் ஸ்பா (தனியார்) கம்பனியின் மூலதனத்தை குறைக்கும் பொறிமுறை ஊடாக ஹோல்டின்ஸ் கம்பனிக்கு மீண்டும் பெற்றுக் கொடுப்பதற்கு அரச தொழில்முயற்சிகள் அபிவிருத்தி அமைச்சர் கௌரவ கபீர் ஹசீம் அவர்களினால் முன்வைக்கப்பட்ட அமைச்சரவை பத்திரத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. அதேபோன்று அரச நிறுவனங்களின் நிதியினை தமது அடிப்படை நோக்கங்களுக்கு பகரமாக வணிக வியாபாரங்களுக்கு பயன்படுத்துவது தொடர்பில் ஆராய்வதற்கும் நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டது.
14. பிரான்ஸ் அரசுக்கும் இலங்கை அரசுக்கும் இடையில் கலாச்சார புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில் கைச்சாத்திடல் (விடய இல. 51)
கலாச்சார ரீதியில் பல்வேறு நன்மைகளை பெற்றுக் கொள்ளும் நோக்கில் பிரான்ஸ் அரசாங்கத்தின் கலாச்சார மற்றும் தொடர்பு சாதன அமைச்சுக்கும் இலங்கை அரசாங்கத்தின் உள்நாட்டு விவகார வடமேல் மாகாண அபிவிருத்தி, காலாசார விவகார அமைச்சு மற்றும் கல்வி அமைச்சிற்கும் இடையில் கலாச்சார ஒத்துழைப்பு உடன்படிக்கை ஒன்றில் கைச்சாத்திடுவதற்கு உள்நாட்டு விவகார வடமேல் மாகாண அபிவிருத்தி, காலாசார விவகார அமைச்சர் கௌரவ எஸ்.பி. நாவின்ன மற்றும் கல்வி அமைச்சர் கௌரவ அகில விராஜ் காரியவசம் ஆகியோர் இணைந்து முன்வைத்த அமைச்சரவை பத்திரத்திற்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
15. உள்ளுராட்சி மன்றங்களை அபிவிருத்தி செய்யும் செயற்றிட்டத்தின் கீழ் உத்தேச மேலதிக நிதி ஒதுக்கீடுகளுக்காக நிதி உதவிகளைப் பெற்றுக் கொள்ளல் (விடய இல. 53)
ஆசிய அபிவிருத்தி நிதியம் மற்றும் இலங்கை அரசாங்கம் ஆகியவற்றினால் வழங்கப்படும் 67.84 மில்லியன் அமெரிக்க டொலர்களை கொண்டு உள்ளுராட்சி மன்றங்களை அபிவிருத்தி செய்யும் செயற்றிட்டத்திங்களை நாடு தழுவிய ரீதியில் தெரிவு செய்யப்பட்ட பிரதேசங்களில் முன்னெடுப்பதற்கு மாகாண சபைகள் மற்றும் உள்ளூரட்சி அமைச்சர் கௌரவ பைசல் முஸ்தபா அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
16. விசேட செயற் படையணியின் கட்டுகுருந்த பயிற்சி பாடசாலையில் இலக்கம் 54 ஐ கொண்ட கட்டிடத்தை இரண்டு மாடி கட்டிடமாக நிர்மாணித்தல் (விடய இல. 55)
பல்வேறு தேவைகளின் நிமித்தம் விசேட செயற் படையணியின் கட்டுகுருந்த பயிற்சி பாடசாலையில் இலக்கம் 54 ஐ கொண்ட கட்டிடத்தை 101.49 மில்லியன் ரூபா செலவில் இரண்டு மாடி கட்டிடமாக நிர்மாணிப்பதற்கு சட்டமும் ஒழுங்கும் மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சர் கௌரவ சாகல ரத்னாயக அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
17. கட்டுநாயக்க பொறியியல் தொழில்நுட்பவியல் நிறுவகத்தினை மேம்படுத்துதல் மற்றும் தரமுயர்த்துதல் என்பவற்றுக்காக திட்ட முன்மொழிவுகளை கோருதல் (விடய இல. 60)
கட்டுநாயக்க பொறியியல் தொழில்நுட்பவியல் நிறுவகத்தினை மேம்படுத்துதல் மற்றும் தரமுயர்த்துதல் என்பவற்றுக்காக ஒஸ்ரியா அரசாங்கத்தினால் சிபார்சு செய்யப்பட்டுள்ள நிர்வனத்தின் மூலம் அபிவிருத்தி திட்ட முன்மொழிவுகளை கோருவதற்கும், அம்முன்மொழிவுகளை மதிப்பீடுவதற்கு தொழில்நுட்ப மதிப்பீட்டு குழு மற்றும் அமைச்சரவையினால் நியமிக்கப்படுகின்ற கொள்முதல் குழுவொன்றை நியமிப்பதற்கும், இவ்வேலைத்திட்டத்தை 9.5 மில்லியன் யூரோவினால் மேற்கொள்வதற்கும் திறன்கள் அபிவிருத்தி மற்றும் தொழிற்பயிற்சி அமைச்சர் கௌரவ மஹிந்த சமரசிங்க அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது
. 18. ‘சூரிய சக்தி சங்கிராமய’ எனும் பெயரில் ஒரு சன சமூக மைய மின்னுற்பத்தி நிகழ்சித் திட்டத்தை நடைமுறைப்படுத்தல் (விடய இல. 67)
மீளப்புதுப்பிக்கத்தகு சக்தி மூல வளங்களைப் பயன்படுத்தி உற்பத்தி செய்யப்படுகின்ற ஏறக்குறைய 50 சதவீதமான அளவு மின் சக்தியை 2020 ஆண்டளவில் 60% ஆகவும், 2030 ஆண்டளவில் 70% ஆகவும் அதிகரிப்பதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது. இதன் போது மின் பாவனையாளர்களின் பங்களிப்பு அதிகமாக எதிர்பார்க்கப்படுகின்றது. இதன்படி மின் பாவனையாளர்களையும் இச்செயன்முறையில் இணைத்துக் கொள்ளும் நோக்கில் சூரிய சக்தி மூல வளங்களைப் பயன்படுத்தி நுகர்வோர் தத்தமது வீடுகளில் மின் சக்திப் பலகைகளை நிறுவி மின்சாரத்தை உற்பத்தி செய்து கொள்ளும் “சூரிய சக்தி சங்கிராமய” எனும் பெயரில் ஒரு சன சமூக மைய மின்னுற்பத்தி நிகழ்சித் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் மூலம் நுகர்வோரின் மூலம் 20% மின்னுற்பத்திக்கு பங்களிப்பினை பெற்றுக் கொள்வதற்கு எதிர்பார்க்கப்படுவதுடன், மேலதிகமாக செய்யப்படுகின்ற உற்பத்திகளுக்கு கொடுப்பனவுகளும் வழங்கப்பட உள்ளன. இதனடிப்படையில் குறித்த வேலைத்திட்டத்தை அடுத்து வரும் 10 வருடங்களில் தேசிய வேலைத்திட்டமொன்றாக செயற்படுத்துவதற்கு மின்வலு மற்றும் மீள்புத்தாக்க சக்தி அமைச்சர் கௌரவ ரன்ஜித் சியபலாப்பிட்டிய அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.