• #163, கிருலபன எவனியூ, கொழும்பு 05, இ லங்கை​
  • +94 112 51 5759

engsin

மட்டக்களப்பில் மாணவ பாராளுமன்றத் தேர்தல்

தேர்தல்கள் திணைக்களமும் கல்வியமைச்சும் இணைந்து பாடசாலைகள் தோறும் மாணவர் பாராளுமன்றங்களை அமைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன.
இதனடிப்படையில் மட்டக்களப்பின் பிரபல பெண்கள் கல்லூரியான புனித சிசிலியா பெண்கள் கல்லூரியில் மாணவர் பாராளுமன்றம் அமைப்பதற்கான வேட்பு மனுக்களை கோரப்பட்டு தெரிவுக்கான தேர்தல் இன்று (07)  காலை பாடசாலை மண்டபத்தில் நடைபெற்றது.
 
தரம் 6 முதல் 13 வரையுள்ள மாணவர்களிலிருந்து தெரிவு செய்யப்படும் மாணவ பிரதிநிதிகளைக் கொண்டு மாணவர் பாராளுமன்றம் தாபிக்கப்படும்.
 
இத் தேர்தல் கடமைகளில் தேர்தல் திணைக்கள அதிகாரிகள் ஈடுபட்டதுடன், வாக்கு எண்ணும் கடமையிலும் தேர்தல் முடிவுகளை அறிவிக்கும் பணிகளிலும் ஈடுபடவுள்ளனர்.
 
தேசிய ரீதியில் பெண்களின் அரசியல் பிரதிநிதித்துவத்தினை அதிகரிக்கும் நோக்கில் இந்த மாணவ பாராளுமன்றச் செயற்திட்டம் முன்னெடுக்கப்படுகிறது.
 
மாணவர் பாராளுமன்றத்தில் சபாநாயகர், பிரதமர், சபை முதல்வர், பிரதி சபாநாயகர், பிரதி செயற்குழுத் தலைவர், 10 அமைச்சர்கள், 10 பிரதி அமைச்சர்கள், 10 ஆலோசனைச் செயற்குழுக்கள் அமையவுள்ளன.
 
மாணவர் நட்புறவு விருத்தி மற்றும் மாணவர் நலன்புரி அமைச்சு, மாணவர் தேர்ச்சி மறறும் புத்தாக்க அலுவல்கள் அமைச்சு, பாடசாலைகளுக்கிடையே நட்புறவை கட்டியெழுப்பும் மற்றும் விருத்தி செய்யும் அமைச்சு, கல்வி, மனிதவள அபிவிருத்தி மற்றும் தகவல் தொடர்பாடல் அமைச்சு, பண்பாட்டு சமய அலுவல்கள் மற்றும் விழுமிய மேம்பாட்டு அமைச்சு, சமூக நல்லிணக்கம் மற்றும் மாணவர் பாதுகாப்பு நடவடிக்கைகள் அமைச்சு, சமுதாயத் தொடர்பு அபிவிருத்தி மற்றும் சமுதாய சேவைகள் அமைச்சு, சுகாதார போசாக்கு மற்றும் விளையாட்டு அலுவல்கள் அமைச்சு, விவசாய மற்றும் சூழல் அபிவிருத்தி அமைச்சு, பௌதீக வள அபிவிருத்தி மற்றும் அனர்த்த முகாமைத்துவ அமைச்சு ஆகியனவே இவ்வாறு அமையவுள்ள 10 அமைச்சுக்களுமாகும்.
 
இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட உதவி தேர்தல்கள் ஆணையாளர் ஆர்.சுசீலன், மற்றும் உத்தியோகத்தர்கள், பாடசாலை அதிபர் அருட் சகோதரி அருள் மரியா, ஆசிரியர்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.
 
DSC 0991
 
DSC 0993
 
LDA_dmu_batti

சமீபத்திய செய்திகள்

அமைச்சரவை தீர்மானங்கள் - ஒக்டோபர் மாதம்

04 October 2023

அமைச்சரவை தீர்மானங்கள் - 02.10.2023

அமைச்சரவை தீர்மானங்கள் - செப்டெம்பர் மாதம்

04 October 2023

அமைச்சரவை தீர்மானங்கள் - 25.09.2023

அமைச்சரவை தீர்மானங்கள் - ஒகஸ்ட் மாதம்

16 August 2023

அமைச்சரவை தீர்மானங்கள் - 28.08.2023, 14.08.2023, 07.08.2023

அமைச்சரவை தீர்மானங்கள் - ஜூலை மாதம்

05 July 2023

அமைச்சரவை தீர்மானங்கள் - 17.07.2023, 11.07.2023, 04.07.2023

அமைச்சரவை தீர்மானங்கள் - 26.06.2023

28 June 2023

அமைச்சரவை தீர்மானங்கள் - 26.06.2023

அமைச்சரவை தீர்மானங்கள் - ஜூன் மாதம்

07 June 2023

அமைச்சரவை தீர்மானங்கள்

அமைச்சரவை தீர்மானங்கள் - மே மாதம்

09 May 2023

அமைச்சரவை தீர்மானங்கள் - மே மாதம்

அமைச்சரவை தீர்மானங்கள் - ஏப்ரல் மாதம்

09 May 2023

அமைச்சரவை தீர்மானங்கள் - ஏப்ரல் மாதம்

அமைச்சரவை தீர்மானங்கள் - மார்ச் மாதம்

23 March 2023

அமைச்சரவை தீர்மானங்கள் 

அத்துடன் இலங்கையிலுள்ள ஊடகத்துறையின் கொள்கை திட்டமிடல் , பயிற்சி நெறிகளை வழங்குதல் , மற்றும் ஊடகத்துறைக்கான அங்கீகாரங்களை வழங்குவதிலும் இந்நிறுவனம் முன்னின்று உதவுகின்றது.