• #163, கிருலபன எவனியூ, கொழும்பு 05, இ லங்கை​
  • +94 112 51 5759

engsin

ஜனாதிபதியின் கிழக்கு விஜயத்தினையொட்டி ஓவியம் வரைதல் போட்டி வெற்றியாளர் தெரிவு

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன  எதிர்வரும் மாசிமாதம் (பெப்ரவரி) கிழக்கு மாகாணத்துக்கான
விஜயத்தினை முன்னிட்டு மாவட்ட செயலகத்தினால்  நடாத்தப்பட்ட "ஓவியம் வரைதல் போட்டி"யின் வெற்றியாளர்களைத் தெரிவு மாவட்ட செயலகத்தில் நேற்று (27) நடைபெற்றது. 
 
இதில், பாடசாலைகள் ரீதியாக நடத்தப்பட்ட போட்டிகளில் வலய ரீதியாக நான்கு வலயங்களில் தெரிவு செய்யப்பட்ட பாடசாலைசார் வெற்றியாளர்கள் மூவரும் உயர் கல்வி நிறுவனங்கள் ரீதியாக மூவரும் தெரிவு செய்யப்பட:டுள்ளனர். தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு ஜனாதிபதியின் மட்டக்களப்பு விஜயத்தின் போது பரிசில்கள் மற்றும் சான்றிதழ்கள் ஜனாதிபதியினால் வழங்கப்படவுள்ளன.
 
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கிழக்கு மாகாணத்துக்கான விஜயத்தினை முன்னிட்டு நடாத்தப்பட்ட "ஓவியம் வரைதல் போட்டி தொடர்பில், மாவட்டத்தில் உள்ள சகல வலயக்கல்வி பணிப்பாளர்களுக்கும்,திவிநெகும பணிப்பாளர்,மத்திய சுற்றாடல் அதிகாரசபையின் நிலையப்பொறுப்பதிகாரி ஆகியோர்களுக்கும் எழுத்து மூலமான அறிவித்தல் கடந்த வாரம் வழங்கப்பட்டன. 
 
LDA_dmu_batti
 
எமது மாவட்டத்தின் சகல கல்வி வலயங்களிடையேயும், ஓவியம் வரைதல், போட்டியினை நடாத்தி ஒவ்வொரு வலயங்களிலிருந்தும் முதல் மூன்று இடங்களைப் பெறும் ஓவியம், மாவட்ட செயலகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டு அவற்றிலிருந்ந்தே மாவட்ட ரீதியான தெரிவு நடைபெற்றது. 
 
இதற்கான நிதி அனுசரணை ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித்திட்டத்தின் இளைஞர் அபிவிருத்தி நல்லாட்சித்திட்டத்தின் ஊடாக வழங்கியிருந்தது. 
 
ஓவியமானது  "மதுபோதையிலிருந்து விடுதலை பெற்ற சக வாழ்வுடன் கூடிய நாடு"   "பேண்தகு அபிவிருத்தியை நோக்கிய நாடு" ,  "பெண்களும் அரசியல் தலைமைத்துவமும்" எனும் கருப்பொருளில் ஓவிய போட்டி நடத்தப்பட்டது. 
 
இந்தப்போட்டியில் முதல் மூன்று இடங்களைப் பெறும் ஓவியங்களுக்கு முறையே 20000 ரூபா, 10000ரூபா, 5000ரூபா எனப் பணப்பரிசில்களும், நன்சான்றீதழ்களும் வழங்கப்படவுள்ளதாகவும், இது சம்பந்தமாக  தெளிவான அறிவுறுத்தல்கள் வலயக்கல்வி பணிப்பாளர்  ஊடாக பாடசாலைகளுக்கு  வழங்கப்பட்டிருந்தன என  மாவட்ட அரசாங்க அதிபர் பீ.எஸ்.எம்.சார்ள்ஸ் மேலும் தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகள்

அமைச்சரவை தீர்மானங்கள் - ஒக்டோபர் மாதம்

04 October 2023

அமைச்சரவை தீர்மானங்கள் - 02.10.2023

அமைச்சரவை தீர்மானங்கள் - செப்டெம்பர் மாதம்

04 October 2023

அமைச்சரவை தீர்மானங்கள் - 25.09.2023

அமைச்சரவை தீர்மானங்கள் - ஒகஸ்ட் மாதம்

16 August 2023

அமைச்சரவை தீர்மானங்கள் - 28.08.2023, 14.08.2023, 07.08.2023

அமைச்சரவை தீர்மானங்கள் - ஜூலை மாதம்

05 July 2023

அமைச்சரவை தீர்மானங்கள் - 17.07.2023, 11.07.2023, 04.07.2023

அமைச்சரவை தீர்மானங்கள் - 26.06.2023

28 June 2023

அமைச்சரவை தீர்மானங்கள் - 26.06.2023

அமைச்சரவை தீர்மானங்கள் - ஜூன் மாதம்

07 June 2023

அமைச்சரவை தீர்மானங்கள்

அமைச்சரவை தீர்மானங்கள் - மே மாதம்

09 May 2023

அமைச்சரவை தீர்மானங்கள் - மே மாதம்

அமைச்சரவை தீர்மானங்கள் - ஏப்ரல் மாதம்

09 May 2023

அமைச்சரவை தீர்மானங்கள் - ஏப்ரல் மாதம்

அமைச்சரவை தீர்மானங்கள் - மார்ச் மாதம்

23 March 2023

அமைச்சரவை தீர்மானங்கள் 

அத்துடன் இலங்கையிலுள்ள ஊடகத்துறையின் கொள்கை திட்டமிடல் , பயிற்சி நெறிகளை வழங்குதல் , மற்றும் ஊடகத்துறைக்கான அங்கீகாரங்களை வழங்குவதிலும் இந்நிறுவனம் முன்னின்று உதவுகின்றது.