• #163, கிருலபன எவனியூ, கொழும்பு 05, இ லங்கை​
  • +94 112 51 5759

engsin

நான்கு வருடங்களில் 32 வீத வனப்பிரதேசம்

தற்போது நூற்றுக்கு 27, 28 விகிதமாக உள்ள நாட்டின் வனப்பிரதேசத்தை அடுத்த நான்கு வருடங்களில் 32 விகிதமாக அதிகரிப்பது சுற்றாடல் துறை அமைச்சர் என்றவகையில் தனது
திட்டமாகும் என்று ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்தார்.
 
பசுமை பாடசாலை நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் கொழும்பு ஆனந்தா கல்லூரியில் ஆரம்பிக்கப்பட்டுள்ள உயிர்வாயு, சேதனப் பசளை, பசுமை விவசாயம் மற்றும் சூரிய மின் சக்தி திட்டத்தை நேற்று (27) ஆரம்பித்து வைத்து உரையாற்றும் போதே அமைச்சர் இதனை தெரிவித்தார்.
 
உலகிலுள்ள ஏனைய நாடுகளில் போன்று எமது நாட்டிலும் காலநிலை மாற்றங்களினால் மனிதன் உள்ளிட்ட அனைத்து உயிரினங்களும் சவால்களுக்கு முகம்கொடுத்திருப்பதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
 
பாடசாலையில் கிடைக்கும் பாடத்திட்டக் கல்வியைப் போன்றே அதற்கு வெளியிலிருந்து கிடைக்கும் அறிவு மற்றும் திறன்களை தமது நாளாந்த வாழ்க்கையுடன் தொடர்புபடுத்திக்கொள்ள வேண்டியதன் அவசியத்தை மாணவர்களுக்கு விளக்கிய ஜனாதிபதி, மன உறுதியுடனும் தன்னம்பிக்கையுடனும் செயற்படுவதற்கு மாணவர்கள் சிறுபராயம் முதல் பழகிக்கொள்ள வேண்டும்.
 
சக்திவலுவின் முக்கியத்துவத்தை அனைவரும் இன்று நன்றாக அறிந்துகொண்டுள்ளனர். பொலன்னறுவையில் உள்ள எனது வீடும் கொழும்பில் உள்ள உத்தியோகபூர்வ இல்லமும் சூரிய சக்திக்கு மாற்றப்பட்டு தேசிய மின்கட்டமைப்புக்கு மின்சாரத்தை வழங்கப்படுகிறது.  இத்திட்டத்திற்கு பங்களிக்கக்கூடிய பிள்ளைகள் தமது வீடுகளையும் அதற்குத் தயாராக்குவதன் அவசியம்.
 
பொருளாதார சுதந்திரத்தை அடைவது அரசியல்வாதிகளுக்கும் அரசாங்க அதிகாரிகளுக்கும் மட்டும் உரியதல்ல. பாடசாலை பிள்ளைகள் முதல் அனைத்து பிரஜைகளும் அதற்காக பங்களிப்பு வழங்க முடியும் என்று ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.
 
பசுமை உதயம் நிகழ்ச்சித்திட்டத்திற்கு பங்களித்தவர்களுக்கான விருதுகள் வழங்கி ஜனாதிபதி கௌரவித்தார்.
 
அமைச்சர்களான ரஞ்சித் சியாம்பலாப்பிடிய, மாலைதீவு, ஜேர்மனி ஆகிய நாடுகளின் தூதுவர் இயோன் ரோட் உள்ளிட்ட அதிதிகளும் ஆனந்தா கல்லூரியின் அதிபர் எஸ்.எம் கீர்த்திரத்ன, ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

சமீபத்திய செய்திகள்

அமைச்சரவை தீர்மானங்கள் - ஒக்டோபர் மாதம்

04 October 2023

அமைச்சரவை தீர்மானங்கள் - 02.10.2023

அமைச்சரவை தீர்மானங்கள் - செப்டெம்பர் மாதம்

04 October 2023

அமைச்சரவை தீர்மானங்கள் - 25.09.2023

அமைச்சரவை தீர்மானங்கள் - ஒகஸ்ட் மாதம்

16 August 2023

அமைச்சரவை தீர்மானங்கள் - 28.08.2023, 14.08.2023, 07.08.2023

அமைச்சரவை தீர்மானங்கள் - ஜூலை மாதம்

05 July 2023

அமைச்சரவை தீர்மானங்கள் - 17.07.2023, 11.07.2023, 04.07.2023

அமைச்சரவை தீர்மானங்கள் - 26.06.2023

28 June 2023

அமைச்சரவை தீர்மானங்கள் - 26.06.2023

அமைச்சரவை தீர்மானங்கள் - ஜூன் மாதம்

07 June 2023

அமைச்சரவை தீர்மானங்கள்

அமைச்சரவை தீர்மானங்கள் - மே மாதம்

09 May 2023

அமைச்சரவை தீர்மானங்கள் - மே மாதம்

அமைச்சரவை தீர்மானங்கள் - ஏப்ரல் மாதம்

09 May 2023

அமைச்சரவை தீர்மானங்கள் - ஏப்ரல் மாதம்

அமைச்சரவை தீர்மானங்கள் - மார்ச் மாதம்

23 March 2023

அமைச்சரவை தீர்மானங்கள் 

அத்துடன் இலங்கையிலுள்ள ஊடகத்துறையின் கொள்கை திட்டமிடல் , பயிற்சி நெறிகளை வழங்குதல் , மற்றும் ஊடகத்துறைக்கான அங்கீகாரங்களை வழங்குவதிலும் இந்நிறுவனம் முன்னின்று உதவுகின்றது.