• #163, கிருலபன எவனியூ, கொழும்பு 05, இ லங்கை​
  • +94 112 51 5759

engsin

பாடசாலைகளில் உளவளத்துணை ஆசிரியர்கள் அவசியம்

 பாடசாலைகளுக்கு உளவளத்துணை ஆசிரியர்களை நியமிக்க உடனடி நடவடிக்கை எடுக்குமாறு கல்வியமைச்சர் அகில விராஜ் காரியவசம் கோரியுள்ளார்.
 
பாடசாலை மாணவர்கள் பல்வேறு உளத்தாக்கங்களுக்கு உள்ளாகிய தீர்வை பெற்றுக்கொள்ள முடியாமல் தவிக்கும் நிலை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக சுட்டிக்காட்டியுள்ள அவர் இதற்குத் தீர்வாக நற்புணர்வுடன் மாணவருடன் கலந்துரையாடி அவர்களுடைய உளவளத்தை மேம்படுத்தும் வகையில் செயற்படுவதற்கு உளவளம் தொடர்பில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள் நியமிக்கப்படுவது அவசியம் என்று சுட்டிக்காட்டியுள்ளார்.
 
மேலும் பதின்ம வயதையடையும் பிள்ளைகள் பல்வேறு சமூக விரோத செயல்களில் ஈடுபடுகின்றனர். இதற்கு ஆசிரியர்களும் பெற்றோர்களும் பிள்ளைகளின் உணர்வுகளை புரிந்து நடந்துக்கொள்ளாமையே காரணம். இதனால் பிள்ளைகள் ஒரு நிலையான மனநிலையில் வைத்துக்கொள்ள முடியாமல் தடுமாறுகின்றனர். இதனால் பிள்ளைகளுக்கும் சமூகத்திற்கும் இடையில் இடைவெளி தோன்றுகிறது. ஆசிரியர் அவரவர் கற்பிக்கும் பாடங்கள் தொடர்பில் மட்டுமே கவனம் செலுத்துகின்றனர். பெற்றோர் வேலைப்பளு காரணமாக பிள்ளைகளை சரியாக கவனிப்பதில்லை. எனவே பிள்ளைகளுக்கு உளவளத்துணை மிகவும் அவசியமாகிறது என்று கல்வியமைச்சில் நடைபெற்ற கல்வி அதிகாரிகள் கூட்டத்தில் அமைச்சர் தெரிவித்திருந்தார்.
 
300 மாணவர்களுக்கும் அதிகமாக உள்ள பாடசாலைகளுக்கு உளவளத்துணை ஆசிரியர்கள் நியமிக்கப்படவுள்ளனர். அவ்வாறான பாடசாலைகள் இலங்கையில் 3,768 உள்ளன. ஏற்கனவே 1,039 ஆசிரியர்கள் தற்காலிகமாக உளவள சேவையில் ஈடுபட்டுள்ளனர். அவர்களுக்கு தேவையான தகைமைகளை வளர்த்துக்கொள்வதற்கான வாய்ப்புக்கள் ஏற்படுத்திக் கொடுக்கப்படும். உளவளத்துணை வெற்றிடங்களுக்கு இலங்கையில் ஏற்றுக்கொள்ளத்தக்க பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களில் பட்டப்படிப்பை பூர்த்தி செய்த பட்டதாரிகள் நியமிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
 
 
 

சமீபத்திய செய்திகள்

அமைச்சரவை தீர்மானங்கள் - ஒக்டோபர் மாதம்

04 October 2023

அமைச்சரவை தீர்மானங்கள் - 02.10.2023

அமைச்சரவை தீர்மானங்கள் - செப்டெம்பர் மாதம்

04 October 2023

அமைச்சரவை தீர்மானங்கள் - 25.09.2023

அமைச்சரவை தீர்மானங்கள் - ஒகஸ்ட் மாதம்

16 August 2023

அமைச்சரவை தீர்மானங்கள் - 28.08.2023, 14.08.2023, 07.08.2023

அமைச்சரவை தீர்மானங்கள் - ஜூலை மாதம்

05 July 2023

அமைச்சரவை தீர்மானங்கள் - 17.07.2023, 11.07.2023, 04.07.2023

அமைச்சரவை தீர்மானங்கள் - 26.06.2023

28 June 2023

அமைச்சரவை தீர்மானங்கள் - 26.06.2023

அமைச்சரவை தீர்மானங்கள் - ஜூன் மாதம்

07 June 2023

அமைச்சரவை தீர்மானங்கள்

அமைச்சரவை தீர்மானங்கள் - மே மாதம்

09 May 2023

அமைச்சரவை தீர்மானங்கள் - மே மாதம்

அமைச்சரவை தீர்மானங்கள் - ஏப்ரல் மாதம்

09 May 2023

அமைச்சரவை தீர்மானங்கள் - ஏப்ரல் மாதம்

அமைச்சரவை தீர்மானங்கள் - மார்ச் மாதம்

23 March 2023

அமைச்சரவை தீர்மானங்கள் 

அத்துடன் இலங்கையிலுள்ள ஊடகத்துறையின் கொள்கை திட்டமிடல் , பயிற்சி நெறிகளை வழங்குதல் , மற்றும் ஊடகத்துறைக்கான அங்கீகாரங்களை வழங்குவதிலும் இந்நிறுவனம் முன்னின்று உதவுகின்றது.