பாடசாலை விடுமுறை காலத்தில் கொழும்பின் அழகை ரசிப்பதற்கான விசேட பஸ் சேவையொன்றை நடைமுறைப்படுத்த இலங்கை போக்குவரத்து சபை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
இதற்காக இரட்டை தட்டு பஸ்ஸொன்றை இலங்கை போக்குவரத்து சபை ஏற்பாடு செய்துள்ளது.
வழமையான கட்டணத்தைப் பயன்படுத்தி இப்பஸ்ஸில் பிரயாணம் செய்ய முடியும் என்றும் மேலதிக விபரங்களை 0117 706 440 என்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்புகொண்டு பெற்றுக்கொளளலாம் என்றும் போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.