இலங்கையில் 12 பிரபலமான இயற்கை அழகை சித்திரிக்கும் இடங்களின் முத்திரைகள் மற்றும் 3 நினைவுப் பத்திரங்களும் அச்சிட்டு தபால் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ளது.
பம்பரகந்த நீர்வீழ்ச்சி, பெற்றிக் நோர்த் பங்களா, ஹெமன் ஹில் கோட்டை, ஹும்மானய, புனரீன் மணல் மேடு, நெடுந்தீவு மற்றும் கோவிந்த ஹெல, சிறிய உலக எல்லை, குவின்ஸ் டவர், சேனாநாயக்க குளம், தலைமன்னார் வெளிச்சவீடு மற்றும் பழைய கப்பற்றுறை, கதிரமலைமுனை ஆகிய இடங்களின் முத்திரைகள் அச்சிடப்பட்டுள்ளன.
இம்முத்திரைகளை தபால் மா அதிபர் ரோஹன அபேவிக்கிரமவினால் தபால் மற்றும் முஸ்லிம் சமய அலுவல்கள் அமைச்சர் எம்.எச். ஹலீமிடம் கையளிக்கப்பட்டது.