அரசாங்க தகவல் திணைக்கள பதில் பணிப்பாளர் சட்டத்தரணி சுதர்ஷன குணவர்தன நியமிக்கப்பட்டுள்ளார்.
இன்று (11) அரசாங்க திணைக்களத்தில் நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்விடயம் அறிவிக்கப்பட்டது.
இதற்கு முன்னர் பணிப்பாளர் நாயகமாக பணியாற்றிய கலாநிதி ரங்க கலன்சூரிய கடந்த 29ம் திகதி தனது பதவியை ராஜினாமா செய்ததையடுத்து அவ்வெற்றிடத்திற்கு பதில் பணிப்பாளர் நாயகமாக சுதர்ஷன குணவர்தன நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.