• #163, கிருலபன எவனியூ, கொழும்பு 05, இ லங்கை​
  • +94 112 51 5759

engsin

தேசிய உணவு உற்பத்திப் புரட்சி வார, அரசாங்க ஊழியர் தினம்

காலநிலை மாற்றத்தால் சவாலுக்குட்பட்டுள்ள உணவு உற்பத்தி தேசிய செயற்திட்டத்திற்கு புத்துயிரூட்டி தொடர்ச்சியாக முன்னெடுத்தல் மற்றும் நாட்டில் விவசாய எழுச்சியை ஏற்படுத்தும் நோக்குடன் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் வழிகாட்டலில் அமுல்படுத்தப்படும் தேசிய உணவு உற்பத்திப் புரட்சி வாரத்தின் அரசாங்க ஊழியர் தினம் இன்று (11) இடம்பெறுகிறது.
இது தொடர்பாக ஊடகங்களுக்குத் தெளிவுபடுத்தும் ஊடக சந்திப்பு கொழும்பு ஜனாதிபதி மாவத்தையிலுள்ள செமா கட்டிடத்தில் அமைச்சுக்களின் செயலாளர்கள் மற்றும் சிரேஷ்ட அதிகாரிகள் தலைமையில் நேற்று (10) நடைபெற்றது.
உள்நாட்டலுவல்கள் அமைச்சின் செயலாளர் நீல் த சில்வா, பொதுநிருவாக முகாமைத்துவ அமைச்சின் செயலாளர் ஏ ஜே ரத்னசிறி, மாகாண சபைகள் உள்ளுராட்சி அமைச்சின் மேலதிக செயலாளர் (அபிவிருத்தி) சுஜான் நாணயக்கார ஆகியோர் அரசாங்க ஊழியர் தினத்தில் நடைமுறைப்படுத்தப்படவுள்ள நிகழ்ச்சித் திட்டங்கள் குறித்து விளக்கமளித்தனர்.
உள்நாட்டலுவல்கள் அமைச்சு, பொதுநிருவாக முகாமைத்துவ அமைச்சு மற்றும் மாகாண சபைகள் உள்ளுராட்சி அமைச்சு ஆகிய அமைச்சுக்களின் கீழுள்ள அனைத்து நிறுவனங்களும் இணைந்து இன்று சப்ரகமுவ மாகாணத்தை மையப்படுத்தியவகையில் பல்வேறு நிகழ்ச்சித் திட்டங்கள் நடைமுறைப்படுத்துகின்றன.
அரசாங்க ஊழியர்கள் தின தேசிய நிகழ்ச்சித் திட்டம் சப்ரகமுவ மாகாணசபை கேட்போர் கூடத்தில் தற்போது ஆரம்பமாகியுள்ள நிலையில்,  தேசிய உணவுப் பயிர்களைப் பயிரிடுவதற்காக அரசாங்க ஊழியர்களை நேரடியாகப் பங்குபற்றச் செய்தல், இச்செயற்பாட்டுக்கு பொதுமக்களின் பங்களிப்புகளைப் பெற்றுக்கொள்ளுதல் உள்ளிட்ட அரசாங்க ஊழியர் வீட்டுத்தோட்ட பயிர்ச்செய்கை நிகழ்ச்சித்திட்டம் என்பன அறிமுகப்படுத்தப்பட்டது.
அனைத்து அரசாங்க ஊழியர்களும் ஆயிரம் மரக்கன்றுகளை நடுதல், அனைத்து அரசாங்க நிறுவனங்களிலும் வீட்டுத்தோட்ட பயிர்ச்செய்கையை ஆரம்பித்தல், போதுமான காணிகள் உள்ள அரசாங்க உத்தியோகபூர்வ இல்லங்களில் வீட்டுத்தோட்டங்களை ஆரம்பித்தல், அரசாங்க அலுவலர்கள் வீட்டுத்தோட்டங்களை ஆரம்பித்தல் போன்ற இலக்குகளை அடைவதே இத்திட்டத்தின் நோக்கமாகும்.
சிறந்த உணவுப் பழக்கங்கள் தொடர்பாக அறிவூட்டும் நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் தேசிய உணவுகளைப் பயன்படுத்துதல், உணவு விரயமாவதைக் குறைத்தல், நச்சுத்தன்மையற்ற உணவுப்பொருட்களைப் பயன்படுத்துதல், போசனை உணவு வேளையொன்றை ஏற்படுத்தல் போன்றவை குறித்து அறிமுகப்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகள்

அமைச்சரவை தீர்மானங்கள் - ஒக்டோபர் மாதம்

04 October 2023

அமைச்சரவை தீர்மானங்கள் - 02.10.2023

அமைச்சரவை தீர்மானங்கள் - செப்டெம்பர் மாதம்

04 October 2023

அமைச்சரவை தீர்மானங்கள் - 25.09.2023

அமைச்சரவை தீர்மானங்கள் - ஒகஸ்ட் மாதம்

16 August 2023

அமைச்சரவை தீர்மானங்கள் - 28.08.2023, 14.08.2023, 07.08.2023

அமைச்சரவை தீர்மானங்கள் - ஜூலை மாதம்

05 July 2023

அமைச்சரவை தீர்மானங்கள் - 17.07.2023, 11.07.2023, 04.07.2023

அமைச்சரவை தீர்மானங்கள் - 26.06.2023

28 June 2023

அமைச்சரவை தீர்மானங்கள் - 26.06.2023

அமைச்சரவை தீர்மானங்கள் - ஜூன் மாதம்

07 June 2023

அமைச்சரவை தீர்மானங்கள்

அமைச்சரவை தீர்மானங்கள் - மே மாதம்

09 May 2023

அமைச்சரவை தீர்மானங்கள் - மே மாதம்

அமைச்சரவை தீர்மானங்கள் - ஏப்ரல் மாதம்

09 May 2023

அமைச்சரவை தீர்மானங்கள் - ஏப்ரல் மாதம்

அமைச்சரவை தீர்மானங்கள் - மார்ச் மாதம்

23 March 2023

அமைச்சரவை தீர்மானங்கள் 

அத்துடன் இலங்கையிலுள்ள ஊடகத்துறையின் கொள்கை திட்டமிடல் , பயிற்சி நெறிகளை வழங்குதல் , மற்றும் ஊடகத்துறைக்கான அங்கீகாரங்களை வழங்குவதிலும் இந்நிறுவனம் முன்னின்று உதவுகின்றது.