• #163, கிருலபன எவனியூ, கொழும்பு 05, இ லங்கை​
  • +94 112 51 5759

engsin

மட்டக்களப்பில் ரம்மியமான மகிழ்ச்சி மிக்க ஓய்வுப்பிரதேசம் திறப்பு

மட்டக்களப்பு மாவட்டத்தின் கோரளைப்பற்று வடக்கு (வாகரை ) பிரதேச செயலகப்பிரிவிலுள்ள சல்லித் தீவில் 25 மில்லியன் ரூபா செலவில் அமைக்கப்பட்ட 'இயற்கை பல்வகைப் பாதுகாப்புடனான ரம்மியமான மகிழ்ச்சி மிக்க ஓய்வூப்பிரதேசம்' கடந்தவாரம் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸினால் திறந்து வைக்கப்பட்டது.
 
சுற்றுலாத்துறை அபிவிருத்திக் கருத்திட்டம் 2017இன் கீழ் சுற்றுலா அபிவிருத்தி மற்றும் கிறிஸ்தவ சமய அலுவல்கள் அமைச்சின் நிதி ஒதுக்கீட்டில் மத்திய கட்டடங்கள் திணைக்களத்தின் தொழில்நுட்ப ஆலோசனையுடன், மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தினால் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது.
 
குளியலறை, சமையலறை வசதியுடன் கூடிய இரண்டு தொகுதிகளாக 4 அறைகளையுடைய ஹைப்பிரிற் வீட்டுத் தொகுதிகள் அமைக்கப்பட்டுள்ளன. இங்கு 8 பேர் தங்கி ஓய்வைக் கழிக்கமுடியும். அத்துடன்,  சல்லித்தீவினைச் சுற்றிய பிரதேசத்தில் சூரிய மின்கலம் மூலம் ஒளியூட்டப்பட்டுள்ளதுடன், உல்லாசப்பயணிகளின் வருகையை ஊக்குவிக்கும் வகையில் படகுச்சேவையும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
 
படகுச்சேவையானது உல்லாசப்பிரயாணிகள் தீவினைச் சுற்றிப் பார்க்கக்கூடியதாக இருக்கும். பறவைகள் தங்கிச் செல்லும் இயற்கைச்சரணாலயமாக இத் தீவு விளங்குகிறது. வர்ண மீன்கள், முருகைக்கற்களால் நிறைந்த மிக ரம்மியமான பகுதியாக சல்லித் தீவூ காணப்படுகிறது.
 
சல்லித்தீவின் வனப்பு பாதிக்கப்படாத வகையில் இச் சுற்றுலா செயற்த்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
 
கோரளைப்பற்று பிரதேசசபையுடன் அரசாங்க அதிபரால் புரிந்துணர்வு உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டு பிரதேச சபைச் செயலாளர் எஸ்.இந்திரகுமாரிடம் கையளிக்கப்பட்டது.
 
இந்த திறப்பு விழாவில், மட்டக்களப்பு மாவட்ட பிரதம கணக்காளர் எஸ்.நேசராஜா. மாவட்ட செயலக உதவித்திட்டமிடல் பணிப்பாளர்களன ஏ.சுதர்சன், எஸ்.முரளிதரன், ஏ. சுதாகரன், கோரளைப்பற்று பிரதேச சபைச் செயலாளர் எஸ்.இந்திரகுமார்இ மத்திய கட்டங்கள் திணைக்கள பொறியியலாளர்களான வை.கிலக்சன், எம்.டினேசன் உள்ளிட்டோரும் பொது மக்களும் கலந்து கொண்டனர்.
 
 DSC4233
 
 DSC4227
LDA_dmu_batti
 
 
 

சமீபத்திய செய்திகள்

அமைச்சரவை தீர்மானங்கள் - ஒக்டோபர் மாதம்

04 October 2023

அமைச்சரவை தீர்மானங்கள் - 02.10.2023

அமைச்சரவை தீர்மானங்கள் - செப்டெம்பர் மாதம்

04 October 2023

அமைச்சரவை தீர்மானங்கள் - 25.09.2023

அமைச்சரவை தீர்மானங்கள் - ஒகஸ்ட் மாதம்

16 August 2023

அமைச்சரவை தீர்மானங்கள் - 28.08.2023, 14.08.2023, 07.08.2023

அமைச்சரவை தீர்மானங்கள் - ஜூலை மாதம்

05 July 2023

அமைச்சரவை தீர்மானங்கள் - 17.07.2023, 11.07.2023, 04.07.2023

அமைச்சரவை தீர்மானங்கள் - 26.06.2023

28 June 2023

அமைச்சரவை தீர்மானங்கள் - 26.06.2023

அமைச்சரவை தீர்மானங்கள் - ஜூன் மாதம்

07 June 2023

அமைச்சரவை தீர்மானங்கள்

அமைச்சரவை தீர்மானங்கள் - மே மாதம்

09 May 2023

அமைச்சரவை தீர்மானங்கள் - மே மாதம்

அமைச்சரவை தீர்மானங்கள் - ஏப்ரல் மாதம்

09 May 2023

அமைச்சரவை தீர்மானங்கள் - ஏப்ரல் மாதம்

அமைச்சரவை தீர்மானங்கள் - மார்ச் மாதம்

23 March 2023

அமைச்சரவை தீர்மானங்கள் 

அத்துடன் இலங்கையிலுள்ள ஊடகத்துறையின் கொள்கை திட்டமிடல் , பயிற்சி நெறிகளை வழங்குதல் , மற்றும் ஊடகத்துறைக்கான அங்கீகாரங்களை வழங்குவதிலும் இந்நிறுவனம் முன்னின்று உதவுகின்றது.