• #163, கிருலபன எவனியூ, கொழும்பு 05, இ லங்கை​
  • +94 112 51 5759

engsin

கூத்துக் கலைஞர் கற்பகன் தம்பிராஜா ஞாபகார்த்தமாக "இராவணேசன்" நாடக அரங்கேற்றம்

மட்டக்களப்பு அரங்க ஆய்வுகூடத் தயாரிப்பான கூத்துருவிலமைந்த நவீன நாடகமான இராவணேசன் நாளை ( 04) காலை 9.30  மணிக்கு காலம் சென்ற கூத்துக் கலைஞர் கற்பகன்
தம்பிராஜா அவர்களின் 25 ஆவது சிரார்த்த தினத்தை நினைவுகூரும் முகமாக மட்டக்களப்பு தேவநாயகம் மண்டபத்தில் நடைபெறும் நிகழ்வில் மேடையேறுகிறது
 
இந்நாடகத்தைப் பேராசிரியர் மௌனகுரு நெறியாள்கை செய்துள்ளார். மட்டக்களப்பு அரங்க ஆய்வு கூட மாணவர்கள் இதில் நடிக்கிறார்கள்
 
கற்பகன் தம்பிராஜா ஆசிரியர் 1970 களில்கூத்துக்கலையை மாணவர்கள் மத்தியில் பரப்ப அர்ப்பணிப்போடு பாடுபட்ட ஓர் கூத்துக் கலைஞர் ஆவர்.
 
பேராசிரியர் மௌனகுருவின் தலைமையில் நடைபெறும் இந்நினைவுகூர்நிகழ்வில் மாகாண அமைச்சர் துரைராஜசிங்கம் அவர்கள் பிரதமவிருந்தினராகக் கலந்துகொள்கிறார். நினைவுப்பேருரையை பேராசிரியர் மௌனகுரு நிகழ்த்துகிறார்.
 
LDA_dmu_batti
 
இராவணேசன்இலங்கைத் தமிழ் நாடக மரபில் முக்கியமானதொரு நாடகம் ஆகும். 
 
பேராசிரியர் சந்திராவின் மனமே நாடகத்தின் பாதிப்பிற்குள்ளான பேராசிரியர் வித்தியானந்தன் 1965 இல் இந்நாடகத்தை பேராதனைப் பல்கலைக்கழகத்தில் தயாரித்தார்.
 
அப்போது அங்கு மாணவனாக இருந்த மௌனகுருவை நெறிப்படுத்தி இதனை எழுதவைத்ததோடு அதில் ராவணன் பாத்திரமாகவும் நடிக்கவும் வைத்தார். பேராசிரியர் வித்தியானந்தன் அதனைப் பெரும்பாலும் கூத்து மரபு தழுவியே தயாரித்தார். பேராசிரியரான மௌனகுரு 40 வருடங்களுக்குப் பிறகு  2000ஆம் ஆண்டில் இராவணேசனை நவீன நாடக நெறிமுறைகளுக்கு ஏற்ப தயாரித்தார்.
 
பேராசிரியர் மௌனகுரு அதனைக் கூத்து எனக்குறிபிட்டாரில்லை.  கூத்தின் அடியான புதிய நாடகம் என்றே குறிப்பிட்டார்.
 
இந்நாடகத்தை உருவாக்க கூத்தின் நடனம், இசை என்பவற்றுடன் பரதநடனம்,கர்னாடக இசை என்பனவற்றையும், நவீன நடிப்பு முறைகளையும்,நவீன அரங்க உத்திகளையும் பேராசிரியர் மௌனகுரு  இணைத்துக்கொண்டார்.
 
 மௌனகுருவின் இராவணேசனை இப்போது ஆறாவது தலைமுறை நடித்துக் கொண்டிருக்கிறது. இதில்நான்கு தலைமுறைகளை அவரே நெறியாள்கை செய்துமுள்ளார்.
இதனைவிட நாட்டின் பல பாகங்களிலும் இந் நாடகத்தைப் பலர் மேடையிட்டுமுள்ளனர். இராவணேசன் ஒரு வளர் இதிகாச நாடகம் ஆகும்.
 
இந்நாடகம் எதிர்வரும்  ஆறாம் திகதி கழுதாவளை மகா வித்தியாலயத்தில் காலை 10.00 மணிக்கு மாணவர்களுக்கும் மாலை 2.00 மணிக்குப் பொதுமக்களுக்காகவும் மேடையேற்றப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
 
 

சமீபத்திய செய்திகள்

அமைச்சரவை தீர்மானங்கள் - ஒக்டோபர் மாதம்

04 October 2023

அமைச்சரவை தீர்மானங்கள் - 02.10.2023

அமைச்சரவை தீர்மானங்கள் - செப்டெம்பர் மாதம்

04 October 2023

அமைச்சரவை தீர்மானங்கள் - 25.09.2023

அமைச்சரவை தீர்மானங்கள் - ஒகஸ்ட் மாதம்

16 August 2023

அமைச்சரவை தீர்மானங்கள் - 28.08.2023, 14.08.2023, 07.08.2023

அமைச்சரவை தீர்மானங்கள் - ஜூலை மாதம்

05 July 2023

அமைச்சரவை தீர்மானங்கள் - 17.07.2023, 11.07.2023, 04.07.2023

அமைச்சரவை தீர்மானங்கள் - 26.06.2023

28 June 2023

அமைச்சரவை தீர்மானங்கள் - 26.06.2023

அமைச்சரவை தீர்மானங்கள் - ஜூன் மாதம்

07 June 2023

அமைச்சரவை தீர்மானங்கள்

அமைச்சரவை தீர்மானங்கள் - மே மாதம்

09 May 2023

அமைச்சரவை தீர்மானங்கள் - மே மாதம்

அமைச்சரவை தீர்மானங்கள் - ஏப்ரல் மாதம்

09 May 2023

அமைச்சரவை தீர்மானங்கள் - ஏப்ரல் மாதம்

அமைச்சரவை தீர்மானங்கள் - மார்ச் மாதம்

23 March 2023

அமைச்சரவை தீர்மானங்கள் 

அத்துடன் இலங்கையிலுள்ள ஊடகத்துறையின் கொள்கை திட்டமிடல் , பயிற்சி நெறிகளை வழங்குதல் , மற்றும் ஊடகத்துறைக்கான அங்கீகாரங்களை வழங்குவதிலும் இந்நிறுவனம் முன்னின்று உதவுகின்றது.