இலங்கையில் மூளைக்காய்ச்சல் பரவும் அபாயம் காணப்படவில்லை என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
கடந்த மூன்று வார காலத்தில் இரத்தினபுரி பொது வைத்தியசாலையில் மூளைக்காய்ச்சலுக்கான அறிகுறிகளுடன் பத்து பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த பத்து நோயாளர்களில் நான்கு பேருக்கு மூளைக்காய்ச்சல் ஏற்பட்டுள்ளதாக மருத்துவ பரிசோதனைகளில் கண்டறியப்பட்டுள்ளது.
குறித்த நோயாளர்கள் 24, 30, 42 மற்றும் 80 வயதுடையவர்களாவர். அவர்களுக்குரிய சிகிச்சைகள் வழங்கப்பட்டு தற்போது குணமடைந்துள்ளனர். இரத்தினபுரி மாவட்டத்தின் நான்கு சுகாதார வைத்திய அதிகாரிகள் பிரவுகளைச் சேர்ந்தவர்கள். எனவே இது தொற்று நோயாக கருதப்படாது. சாதாரண நோய் நிலையாகும்.
ஒவ்வொரு வருடமும் நவம்பர் மாதம் தொடக்கம் ஜனவரி வரையான காலப்பகுதியில் அவ்வப்போது இந்நோய் ஏற்படும். எனவே இது குறித்து அச்சப்படத் தேவையில்லை என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.