டெங்கு நோய் பரவும் அபாயம் உள்ள பிரதேசங்களில் எதிர்வரும் 24ம் திகதி தொடக்கம் 27ம் திகதி வரை டெங்கு ஒழிப்பு நடவடிக்கை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்குமாறு சுகாதார அமைச்சர்
டொக்டர் ராஜித்த சேனாரத்ன அனைத்து அமைச்சரவை அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள் மற்றும் மாகாண முதலமைச்சர்களுக்கு விசேட கடிதம் அனுப்பியுள்ளார்.
டெங்கு பரவும் அபாயம் உள்ள பிரதேசங்களையும் இடங்களையும் நேரடியாக கடிதம் பெற்ற அமைச்சர்கள் மற்றும் பொது சுகாதார அதிகாரிகள் பார்வையிட வேண்டும் என்றும் அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த வருடம் 54,727 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதுடன் அவர்களில் 78 பேர் இறந்துள்ளனர். வணக்கஸ்தளங்களினூடாக 70 வீதமும் பாடசாலைகளில் 60 வீதமும் நிர்மாணத்துறை பணிகள் இடம்பெற்றுவரும் பகுதிகளில் 58 வீதமும் டெங்கு நோய் பரவியுள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
இவ்வாண்டு ஆரம்பம் தொடக்கம் இன்று வரையான இரு வாரக்காலப்பகுதியில் மட்டும் 1,311 டெங்கு நோயாளர் பரவியுள்ளதாக சுகாதார அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.