• #163, கிருலபன எவனியூ, கொழும்பு 05, இ லங்கை​
  • +94 112 51 5759

engsin

விளையாட்டு மற்றும் உடற்பயிற்சி தேசிய வாரம் பிரகடனம்

எதிர்வரும் பெப்ரவரி மாதம் 6ஆம் திகதி தொடக்கம் 12ஆம் திகதி வரை  விளையாட்டு மற்றும் உடற்பயிற்சி தேசிய வாரமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
 
ஆரோக்கியம், மகிழ்ச்சி, வினைத்திறன் மற்றும் வெற்றிகரமான இலங்கையர்களை உருவாக்குவாக்கும் நோக்கில் இத்தேசிய வாரம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதுடன் இவ்வாரத்தில் விளையாட்டு மற்றும் உடற்பயிற்சி மேம்படுத்தல் நிகழ்வுகள் நாடு பூராவும் அமுல்படுத்தப்படவுள்ளன.
 
இவ் விடயம் தொடர்பான கலந்துரையாடல் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன  தலைமையில் நேற்று (10)  முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது. 
 
அனைத்து நிறுவனங்களினதும்; பங்களிப்பைப் பெற்று குறித்த செயற்திட்டத்தை அமுல்படுத்துமாறு ஜனாதிபதி ஆலோசனை வழங்கியதுடன் மக்களது உடல் நலம் மற்றும் உளநலத்தை மேம்படுத்துவதற்காக இதுபோன்ற நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்ய வேண்டியதன் முக்கியத்துவத்தையும் சுட்டிக்காட்டினார்.
 
சுகம், மகிழ்ச்சி மற்றும் வெற்றிக்காக விளையாட்டு எனும் தலைப்பில் நடைபெறும்; விளையாட்டு மற்றும் உடற்பயிற்சி மேம்படுத்தல் வாரத்தில் பின்வருமாறு நிகழ்வுகள் அட்டவணைப்படுத்தப்பட்டுள்ளன.
 
பெப்ரவரி 06 அரச மற்றும் கூட்டுத்தாபன அலுவலர்களுக்கான விளையாட்டு மற்றும் உடற்பயிற்சி தினம்.
 
பெப்ரவரி 07 தனியார் துறையினருக்கான விளையாட்டு மற்றும் உடற்பயிற்சி மேம்படுத்தல் தினம்.
 
பெப்ரவரி 08 சிறுவர் மற்றும் தாய்மார்களுக்கான விளையாட்டு மற்றும் உடற்பயிற்சி மேம்படுத்தல் தினம்.
 
பெப்ரவரி 09 பெண்களுக்கான விளையாட்டு மற்றும் உடற்பயிற்சி மேம்படுத்தல் தினம்.
 
பெப்ரவரி 10 முதியோர் மற்றும் விசேட தேவையுடையோர்களுக்கான விளையாட்டு மற்றும் உடற்பயிற்சி மேம்படுத்தல் தினம்.
 
பெப்ரவரி 11 இளைஞர்களுக்கான விளையாட்டு மற்றும் உடற்பயிற்சி மேம்படுத்தல் தினம்.
 
பெப்ரவரி 12 சமூக பங்களிப்புக்கான விளையாட்டு மற்றும் உடற்பயிற்றி மேம்படுத்தல் தினம், என பெயரிடப்பட்டுள்ளது. அதற்குரியதாக பல நிகழ்ச்சிகள் இடம்பெறுகின்றன.
 
விளையாட்டு துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர, அமைச்சர்களான ராஜித சேனாரத்ன, டபிள்யூ.டீ.ஜே.செனவிரத்ன, மகிந்த சமரசிங்க, சந்ராணி பண்டார ஆகியோர் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகளும், அமைச்சுக்களின் செயலாளர்கள், திணைக்கள தலைவர்கள் மற்றும் அரச அலுவலர்களும் இக் கலந்துரையாடலில் பங்குபற்றினார்கள்.

சமீபத்திய செய்திகள்

அமைச்சரவை தீர்மானங்கள் - ஒக்டோபர் மாதம்

04 October 2023

அமைச்சரவை தீர்மானங்கள் - 02.10.2023

அமைச்சரவை தீர்மானங்கள் - செப்டெம்பர் மாதம்

04 October 2023

அமைச்சரவை தீர்மானங்கள் - 25.09.2023

அமைச்சரவை தீர்மானங்கள் - ஒகஸ்ட் மாதம்

16 August 2023

அமைச்சரவை தீர்மானங்கள் - 28.08.2023, 14.08.2023, 07.08.2023

அமைச்சரவை தீர்மானங்கள் - ஜூலை மாதம்

05 July 2023

அமைச்சரவை தீர்மானங்கள் - 17.07.2023, 11.07.2023, 04.07.2023

அமைச்சரவை தீர்மானங்கள் - 26.06.2023

28 June 2023

அமைச்சரவை தீர்மானங்கள் - 26.06.2023

அமைச்சரவை தீர்மானங்கள் - ஜூன் மாதம்

07 June 2023

அமைச்சரவை தீர்மானங்கள்

அமைச்சரவை தீர்மானங்கள் - மே மாதம்

09 May 2023

அமைச்சரவை தீர்மானங்கள் - மே மாதம்

அமைச்சரவை தீர்மானங்கள் - ஏப்ரல் மாதம்

09 May 2023

அமைச்சரவை தீர்மானங்கள் - ஏப்ரல் மாதம்

அமைச்சரவை தீர்மானங்கள் - மார்ச் மாதம்

23 March 2023

அமைச்சரவை தீர்மானங்கள் 

அத்துடன் இலங்கையிலுள்ள ஊடகத்துறையின் கொள்கை திட்டமிடல் , பயிற்சி நெறிகளை வழங்குதல் , மற்றும் ஊடகத்துறைக்கான அங்கீகாரங்களை வழங்குவதிலும் இந்நிறுவனம் முன்னின்று உதவுகின்றது.