வீர கெப்படிபொல உட்பட இலங்கையின் சுதந்திரத்திற்காய் தம் இன்னுயிரை தியாகம் செய்த ஊவா வெல்லஸ்ஸ வீரர்களை நினைவுகூறும் தினம் இன்று (10) கண்டி ஆளுநர் நிலுகா ஏக்கநாயக்க தலைமையில் நடைபெற்றது.
பிரித்தானியர் ஆட்சி காலத்தில் நாட்டின் சுதந்திரத்திற்காக போராடிய கெப்படிபொல உட்பட வீர்களை தேசத்துரோகிகளாக அறிவித்து மரணதண்டனை விதிக்கப்பட்டு 198 ஆண்டுகள் பூர்த்தியாகியுள்ள நிலையில் இந்நினைவு கூறல் இடம்பெற்றது.
இந்நிகழ்வை முன்னிட்டு கண்டி தலதா மாளிகாவை முன்பாக வைக்கப்பட்டுள்ள கெப்படிபொலவின் உருவச்சிலைக்கு மலர்மாலை அணிவித்து அஞ்சலி செலுத்திய ஆளுநர் இதுவரை எந்த அரசாங்கமும் ஜனாதிபதியில் செய்ய மறந்த விடத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேற்கொண்டுள்ளார் என்றும் தெரிவித்தார்.
அரசாங்க தகவல் திணைக்களம் ஏற்பாடு செய்துள்ள 'உத்தமாபி வந்தனா' கெப்படிபொல நினைவு தேசிய நிகழ்வு இன்று (10) மாலை 5.00 மணிக்கு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் ஜனாதிபதி தலைமையில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.