தேசிய வாசிப்பு மாதத்திற்கான விருது வழங்கல் விழா நாளை (14) கல்வியமைச்சர் அகில விராஜ் காரியவசம் தலைமையில் தேசிய சுவடிகள் திணைக்கள கேட்போர்கூடத்தில் நடைபெறவுள்ளது.
இலங்கையில் பொது மக்கள் மத்தியில் வாசிப்பு பழக்கத்தை அதிகரிக்கச் செய்யும் நோக்குடன் கடந்த 2014 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட நிகழ்வில் ஒன்றே இவ்விருது வழங்கும் நிகழ்வாகும்.
2015ஆம் ஆண்டில் பிரதேச ரீதியாக வாசிப்பு பழக்கத்தை மேம்படுத்த பணியாற்றிய வாசிகசாலைகள் மத்தியில் மாவட்ட, மாகாண மட்டத்தில் அகில இலங்கை ரீதியில் வெற்றியீட்டிய 75 நூலகங்களுக்கு இவ்விருதுகள் வழங்கப்படவுள்ளன.
இது தவிர கிராமிய நூலகங்களின் அபிவிருத்தி திட்டத்தின் கீழ் 5 பாடசாலை நூலகங்கள், 5 பொது நூலகங்கள் என்பவற்றை அபிவிருத்தி செய்வதற்காக 15, 00000 ரூபா பெறுமதியான உபகரங்களும் 500,000 ரூபா பெறுமதியான புத்தகங்களும் வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.