இலங்கை தேயிலைத் தொழிற்றுறையின் 150 வருட பூர்த்தியை முன்னிட்டு அடுத்த ஆண்டு ஓகஸ்ட் மாதம் 8ஆம் திகதி சர்வதேச தேயிலை மாநாடு கொழும்பில் நடத்தப்படவுள்ளது.
இலங்கை பொருளாதாரத்தில் நூறாண்டுக்கு மேல் பங்களிப்பு வழங்கிய தேயிலை உற்பத்தியின் 150 வருட பூர்த்தியை முன்னிட்டு பல்வேறு சர்வதே மற்றும் தேசிய நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன என்று பெருந்தோட்டத்துறை அபவிருத்தி அமைச்சர் நவீன் திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
இலங்கை தேயிலை சபையானது தேயிலை வர்த்தகர்கள் சங்கத்துடன் இணைந்து இந்நிகழ்வுகளை ஏற்பாடு செய்துள்ளது.
எதிர்வரும் பெப்ரவரி மாதம் கொண்டாடப்பட இந்நிகழ்வுகளை முன்னிட்டு ஞாபகார்த்த முத்திரையும் அதனை தொடர்ந்து மேலும் முத்திரைகளும் வௌியிடப்படவுள்ளதுடன் 10 ரூபா நாணயக்குற்றியும் வௌியிடப்படவுள்ளது.
நாட்டில் தேயிலை உற்பத்தி செய்யப்படும் 7 பிரதேசங்களில் மார்ச் முதல் ஜூலை மாதம் வரையில் கல்விசார் கண்காட்சிகள் நடத்தப்படவுள்ளதுடன் பல்வேறு தௌிவுபடுத்தல் செயற்பாடுகளும் நடத்தப்படவுள்ளன.
அத்துடன் இலங்கை இராஜதந்திர உறவுகள் அமைப்பினால் சர்வதேச இலங்கை தேநீர் விருந்து என்ற விசேட விருந்துபசாரமும் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.