பண்டிகை காலத்தை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் விசேட நுகர்வோர் பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளது.
இம்மாதம் முதலாம் திகதி தொடக்கம் எதிர்வரும் 25ஆம் திகதி வரை இவ்விசேட நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது.
இது தொடர்பில் கருத்து தெரிவித்த நுகர்வோர் அதிகாரசபையின் மத்திய மாகாண உதவிப் பணிப்பாளர் எம்.எஸ். நஸீர், மத்திய மாகாணத்தின் மூன்று மாவட்டங்களிலும் விசேட பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றும் வார இறுதி நாட்கள் உட்பட 7 நாட்களும் 24 மணித்தியாலங்களும் முறைப்பாடுகள் ஏற்றுக்கொள்ளப்படும் என்றும் சுட்டிக்காட்டினார்.
கடந்த நவம்பர் மாதம் மத்திய மாகாணத்தில் மேற்கொள்ளப்பட்ட 365 சுற்றி வளைப்புக்களினூடாக 135, 0000 ரூபாவுக்கு அதிகமான அபராதம் அறவிடப்பட்டுள்ளது என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.