இராணுவத்திருக்கான விருசர வரப்பிரசாத அட்டை பகிர்ந்தளிக்கும் வைபம் எதிர்வரும் டிசம்பர் 9ஆம் திகதி கணேமுல்லையில் உள்ள கொமாண்டோ ரெஜிமெண்ட் தலைமையகத்தில் நடைபெறவுள்ளது.
பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜயவர்தன தலைமையில் நடைபெறவுள்ள இந்நிகழ்வில், முப்படையினர், பொலிஸார் மற்றும் சிவில் பாதுகாப்புத் திணைக்களத்தைச் சேர்ந்த 1800 பேருக்கு விருசர வரப்பிரசாத அட்டை வழங்கப்படவுள்ளது.
இதுவரையில் 24,622 விருசர வரப்பிரசாத அட்டை பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது. இவ்வரப்பிரசாத அட்டையானது, யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட படையினரின் மனைவிமார், பிள்ளைகள் மற்றும் பெற்றோருக்கு ஒரு வகையிலும் , 1983ஆம் ஆண்டு தொடக்கம் 2009 மே மாதம் 19ஆம் திகதிக்கு 22 வருட சேவைக்காலத்தைப் பூர்த்தி செய்த அதிகாரிகள் மற்றும் ஏனைய அதிகாரிகளுக்கு ஒரு வகையிலும் பயனளிக்கும் வகையிலும் நடைமுறைப்படுத்தப்படுகிறது.
இந்நிகழ்விற்கு, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி, இராணுவ சேவை அதிகாரசபையின் தலைவி அனோமா பொன்சேக்கா உட்பட பலர் கலந்துகொள்ளவுள்ளனர்.