• #163, கிருலபன எவனியூ, கொழும்பு 05, இ லங்கை​
  • +94 112 51 5759

engsin

அமைச்சரவை தீர்மானங்கள் - 25.07.2017

01. இலங்கை புகையிரத திணைக்களத்துக்கு டீசல் தொகுதிகள் 09 இனை கொள்வனவு செய்வதற்காக நிதி ஓதுக்கீடு செய்தல் (நிகழ்ச்சி நிரலின் விடய இல. 07)
 
இலங்கை புகையிரத திணைக்களத்துக்கு டீசல் தொகுதிகள் 09 இனை கொள்வனவு செய்வதற்காக மதிப்பீட்டு செலவு 93.86 மில்லியன் அமெரிக்க டொலர்களாகும். அதற்கு தேவையான நிதியினை பெற்றுக் கொள்வதற்காக வேண்டி ஹொங்கொங் மற்றும் சென்ஹய் பேங்கிங் கோபரேஷன் கம்பனி மற்றும் ஹட்டன் நெஷனல் வங்கி ஆகியவற்றுடன் கடன் ஒப்பந்தம் ஒன்றில் கைச்சாத்திடுவது தொடர்பில் தேசிய கொள்கை மற்றும் பொருளாதார விவகாரங்கள் அமைச்சர் எனும் ரீதியில் கௌரவ ரணில் விக்ரமசிங்க அவர்களினால் அமைச்சரவைக்கு முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
 
02. பின்னவல யானை சரணாலயம் அமைந்துள்ள காணியினை தேசிய மிருகக்காட்சி சாலை திணைக்களத்துக்கு ஒதுக்கிக் கொள்ளல் (விடய இல. 08)
 
காணி மறுசீரமைப்பு ஆணைக்குழுவிற்கு உரித்தான, பின்னவல யானை சரணாலயம் அமைந்துள்ள 26 ஏக்கர், 5.8 பேர்ச்சஸ் அளவான காணியினை தேசிய மிருகக்காட்சி சாலை திணைக்களத்துக்கு நிலையாக ஒதுக்கிக் கொள்வது தொடர்பில் நிலையான அபிவிருத்தி மற்றும் வன ஜீவராசிகள் அமைச்சர் கௌரவ காமினி ஜயவிக்ரம பெரேரா அவர்களினால் அமைச்சரவைக்கு முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
 
03. வறட்சி காரணமாக வனப்பகுதிகளுக்கு அருகில் ஏற்பட்டுள்ள பாதகமான நிலைமையினை கட்டுப்படுத்தல் (விடய இல. 09)
 
வறட்சி காரணமாக வனப்பகுதிகளுக்கு அருகில் காட்டுத்தீ பரவல், வன ஜீவராசிகள் மரணமடைதல், நீரினை தேடி உயிரினங்கள் கிராமங்களுக்கு நுழைதல் போன்ற பாதகமான நிலைமை ஏற்பட்டுள்ளது. அதனை கட்டுப்படுத்தும் நோக்கில், குறித்த பிரச்சினைகளை கட்டுப்படுத்துவதற்கான முன்மொழியப்பட்டுள்ள செயன்முறையினை, உரிய அதிகாரிகள் உள்ளடங்கிய பிரதேச குழு மற்றும் மாவட்ட குழுக்கள் மூலம் செயற்படுத்து தொடர்பில் நிலையான அபிவிருத்தி மற்றும் வன ஜீவராசிகள் அமைச்சர் கௌரவ காமினி ஜயவிக்ரம பெரேரா அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
 
04. மேற்கு ஆபிரிக்க நாடுகளின் பொருளாதார சமூகத்தில் (ECOWAS) இலங்கைக்கு அங்கீகாரத்தை அடைந்துக் கொள்ளல் (விடய இல. 13)
 
மேற்கு ஆபிரிக்க நாடுகளின் பொருளாதார சமூகத்தில் (ECOWAS) 15 நாடுகள் அங்கத்துவம் வகிப்பதுடன், அவற்றில் 12 நாடுகளுடன் இலங்கை இராஜதந்திர உறவினை பேணி வருகின்றது. குறித்த நாடுகளுடன் பொருளாதார ஒத்துழைப்பை மேம்படுத்திக் கொள்வதற்காக குறித்த சமூகத்தினுள் இலங்கைக்கு அங்கீகாரத்தை அடைந்துக் கொள்ள வேண்டிய தேவை உள்ளது. அதனால் அது தொடர்பான அடுத்த கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வது தொடர்பில் வெளிவிவகார அமைச்சர் கௌரவ ரவி கருணாநாயக்க அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
 
05. சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சியாளர்களுக்காக தேசிய கடன் பாதுகாப்பு நிறுவனம் ஒன்றை ஸ்தாபித்தல் (விடய இல. 18)
 
சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சியாளர்கள் மூலம் மேற்கொள்ளப்படுகின்ற புதிய முதலீடுகளுக்காக வங்கிகளின் மூலம் கடன் வசதிகளை பெற்றுக் கொடுக்கும் போது தேவையான கடன் பாதுகாப்பு வழங்களுக்காக, கம்பனிகள் சட்டத்தின் விதப்புரைகளின் கீழ் பொது வரையறுக்கப்பட்ட கம்பனியாக, தேசிய கடன் வழங்கும் நிறுவனம் ஒன்றை ஸ்தாபிப்பது தொடர்பில் நிதி மற்றும் வெகுசன ஊடகத்துறை அமைச்சர் கௌரவ மங்கல சமரவீர அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
 
06. ஹம்பாந்தோட்டை துறைமுகத்தின் இரண்டாம் கட்ட நிர்மாணப்பணிகளுக்காக ஒதுக்கிக் கொண்ட காணிகளுக்காக பெற்றுக் கொடுக்கப்படுகின்ற மாற்று காணிகளின் அடிப்படை வசதிகளை விருத்தி செய்தல் (விடய இல.30)
 
ஹம்பாந்தோட்டை துறைமுகத்தின் இரண்டாம் கட்ட நிர்மாணப்பணிகளுக்காக ஒதுக்கிக் கொண்ட காணிகளுக்காக பெற்றுக் கொடுக்கப்படுகின்ற மாற்று காணிகளின் அடிப்படை வசதிகளை விருத்தி செய்வது தொடர்பில் துறைமுகம் மற்றும் கப்பல் துறை அமைச்சர் கௌரவ மஹிந்த சமரசிங்க அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
 
07. இலங்கையின் நாளாந்த சிறுவர் பாதுகாப்பு நிலையத்துக்கான தேசிய வழிகாட்டல்கள் (விடய இல. 32)
 
பணிபுரியும் பெண்களின் தொகை நாளாந்தம் அதிகரித்து வருகின்றமையினால் அவர்களின் பிள்ளைகளை பராமரிப்பதற்காக செயற்படும் நாளாந்தம் சிறுவர்களை பாதுகாக்கும் நிலையத்துக்கான (Day Care Centers) கேள்வியும் அதிகரித்துள்ளது. எனினும் அவ்வாறான நிலையங்களின் தரம் தொடர்பில் தற்போது கேள்வி எழுந்துள்ளது. அதற்கிணங்க உரிய அதிகாரிகள் மற்றும் துறைசார்ந்தோர்களின் பங்களிப்புடன் நாளாந்த சிறுவர் பாதுகாப்பு நிலையத்துக்கான தேசிய வழிகாட்டலொன்று தயாரிக்கப்பட்டுள்ளது.
 
பல்வேறு சேவைகளை முறையாக மேற்கொள்வதற்கு ஏதுவான வகையில் தயாரிக்கப்பட்டுள்ள குறித்த வழிகாட்டல்களுக்கு மேலதிகமாக NVQ Level  4 மட்ட சிறுவர் பாதுகாப்பு பயிற்சிநெறியொன்றும் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. 
அதனடிப்படையில் மகளீர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் கௌரவ சந்திராணி பண்டார அவர்களினால் முன்வைக்கப்பட்ட குறித்த வழிகாட்டல்களை அங்கீகரிப்பதற்கும், அவ்வழிகாட்டல்களை தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சு மற்றும் மகளீர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சு ஆகியவற்றின் மேற்பார்வையின் கீழ் பொருத்தமான திட்டத்திற்கு உட்பட்டு செயற்படுத்துவதற்கும் அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
 
08. உள்ளூராட்சி நிர்வனங்களை புதிதாக உருவாக்குதல் மற்றும் தற்போது நடைமுறையிலுள்ள உள்ளூராட்சி நிர்வனங்களை தரப்படுத்தல் (விடய இல. 34)
 
1999 ம் ஆண்டு வெளியிடப்பட்ட உள்ளூராட்சி மன்றங்கள் மறுசீரமைப்பு தொடர்பில் பரிசீலனை ஆணைக்குழு அறிக்கையின் சிபார்சின் அடிப்படையில் உள்ளூராட்சி மன்றங்களை உருவாக்குதல் மற்றும் தரமுயர்த்துதல் தொடர்பான கொள்கையினை அறிமுகம் செய்வது தொடர்பில் சிபார்சுகளை முன்வைப்பதற்கென மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் அமைச்சரினால் 12 பேர் கொண்ட துறைசார்ந்தோர் குழவொன்று நியமிக்கப்பட்டது. குறித்த குழுவின் சிபார்சுகளுக்கு இணங்க மாத்திரமே எதிர்காலத்தில் புதிய உள்ளூராட்சி மன்றங்களை உருவாக்குதல் மற்றும் தரமுயர்த்துதல் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் அமைச்சர் கௌரவ பைசல் முஸ்தபா அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
 
09. மாலி இராஜ்யத்தில் சமாதான செயற்பாடுகளில் கலந்து கொள்ளவுள்ள படை பிரிவிற்கு தேவையான உபகரணங்களை கொள்வனவு செய்தல் (விடய இல. 41)
 
மாலி இராஜ்யத்தில் சமாதான செயற்பாடுகளில் கலந்து கொள்ளவுள்ள படை பிரிவிற்கு தேவையான உபகரணங்களை வரையறுக்கப்பட்ட போட்டித்தன்மைக் கொண்ட கேள்வி மனுக்களின் அடிப்படையாகக் கொண்டு அமைச்சரவையினால் நியமிக்கப்பட்டுள்ள நிலையான கொள்ளல் குழுவின் பரிந்துரை மற்றும் தொழில்நுட்ப மதிப்பீட்டு குழுவின் பரிந்துரை ஆகியவற்றுக்கு அமைய குறைந்த விலை மனுவினை முன்வைத்துள்ள 03 நிர்வனங்களில் இருந்து கொள்வனவு செய்வது தொடர்பில் பாதுகாப்பு அமைச்சர் எனும் ரீதியில் அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
 
10. மத்திய கடுகதிப்பாதை வேலைத்திட்டத்தின் பொதுஹர தொடக்கம் கலகெதர வரையான பகுதியின் நிர்மாணப்பணிகளை மேற்பார்வை செய்வதற்காக ஆலோசனை கம்பனியொன்றை தெரிவு செய்தல் (விடய இல. 43)
 
மத்திய கடுகதிப்பாதை வேலைத்திட்டத்தின் பொதுஹர தொடக்கம் கலகெதர வரையான பகுதியின் (32.5 கி.மி) நிர்மாணப்பணிகளை மேற்பார்வை செய்வதற்காக ஆலோசனை சேவையினை வழங்குவதற்கான ஒப்பந்தத்தினை, அமைச்சரவையினால் நியமிக்கப்பட்டுள்ள நிலையான கொள்ளல் குழுவின் பரிந்துரைக்கு அமைய 2,848 மில்லியன் ரூபா மதிப்பீட்டு செலவில் வழங்குவது தொடர்பில் உயர் கல்வி மற்றும் பெருந்தெருக்கள் அமைச்சர் கௌரவ லக்ஷ;மன் கிரியெல்ல அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
 
11. இலங்கை மின்சார சபைக்காக அநுராதபுர நகரத்தில் கட்டிட தொகுதியொன்றை நிர்மாணித்தல் (விடய இல. 44)
 
அநுராதபுரம், மைத்திரிபால சேனாநாயக்க மாவத்தையிலுள்ள இலங்கை மின்சார சபைக்கு உரித்தான இடத்தில் கட்டிட தொகுதியொன்றை நிர்மாணிப்பதற்கான ஒப்பந்தத்தை, குறைந்த விலைமனுக்களின் அடிப்படையில், அமைச்சரவையினால் நியமிக்கப்பட்டுள்ள நிலையான கொள்ளல் குழுவின் பரிந்துரைக்கு அமைய 213.4 மில்லியன் ரூபா மதிப்பீட்டு செலவில் வழங்குவது தொடர்பில் மின்சக்தி மற்றும் மீளப்புதுப்பிக்கத்துக சக்தி வளங்கள் அமைச்சர் கௌரவ ரன்ஜித் சியபலாப்பிட்டிய அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
 
12. மீளப்புதுப்பிக்கத்தகு சக்தி வளங்களை பெற்றுக் கொள்வதற்கான வழிகளை அபிவிருத்தி செய்யும் வேலைத்திட்டம் - நாவலபிட்டிய, ராகல, வௌல்வத்தை மற்றும் மாலிபொட ஆகிய இடங்களில் 04 உப கிறிட் தளங்களை நிர்மாணிப்பதற்காக உபகரணங்களை கௌ;வனவு செய்தல் (விடய இல. 45)
 
மீளப்புதுப்பிக்கத்தகு சக்தி வளங்களை பெற்றுக் கொள்வதற்கான வழிகளை அபிவிருத்தி செய்யும் வேலைத்திட்டத்தின் கீழ் சிறிய அளவிலான மின்னுற்பத்தி நிலையங்களின் ஊடாக தேசிய மின்சார தொகுதியில் இணைத்துக் கொள்வதற்காக வேண்டி நாவலபிட்டிய, ராகல, வௌல்வத்தை மற்றும் மாலிபொட ஆகிய இடங்களில் 04 உப கிறிட் தளங்களை நிர்மாணிப்பதற்காக உபகரணங்களை கௌ;வனவு செய்வதற்கான ஒப்பந்தத்தை, ஒவ்வொரு தொகுதியாக அமைச்சரவையினால் நியமிக்கப்பட்டுள்ள நிலையான கொள்ளல் குழுவின் பரிந்துரை மற்றும் தொழில்நுட்ப மதிப்பீட்டு குழுவின் பரிந்துரை ஆகியவற்றுக்கு அமைய குறைந்த விலை மனுவின் அடிப்படையில் வழங்குவது தொடர்பில் மின்சக்தி மற்றும் மீளப்புதுப்பிக்கத்துக சக்தி வளங்கள் அமைச்சர் கௌரவ ரன்ஜித் சியபலாப்பிட்டிய அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
 
13. ஹம்பாந்தோட்டை துறைமுகத்தின் அணுசரனை ஒப்பந்தம் (விடய இல. 46)
 
திருத்தியமைக்கப்பட்டுள்ள அணுசரனை ஒப்பந்தத்தின் அடிப்படையில் இலங்கை அரசாங்கம் (இலங்கை துறைமுக அதிகார சபை) அரச அணுசரனையாளராகவும், உரிய முதலீட்டு கம்பனிகள் தனியார் அணுசரனையாளர்களாகவும் கருதுவதற்கும், தொடர்பான 02 கம்பனிகளையும் கீழ்க்காணும் அடிப்படையில் ஸ்தாபிப்பதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது.
 
1.
Hambantota International Port Services Co. (Pvt) Ltd : 
- ஹம்பாந்தோட்டை துறைமுக சேவைகள் மற்றும் பொது வசதிகள் முகாமைத்துவத்துக்காக வேண்டி அமைக்கப்பட்டுள்ளது.
- அதன் முதலீடு 606 மில்லியன் அமெரிக்க டொலர்கள்
- இக்கம்பனியின் பங்குகளில் 50.7மூ உரிமை இலங்கை துறைமுக அதிகார சபைக்கும், 49.3மூ உரிமை ஊஆPழசவ கம்பனிக்கும் உரித்தாகின்றது.
 
2.Hambantota International Port Group (Pvt) Ltd : 
- துறைமுகத்தின் செயற்பாட்டு சொத்துக்களின் முகாமைத்துவம், மேலதிக அபிவிருத்தி நடவடிக்கைகள், அதன் அடிப்படை வசதிகள் மற்றும் ஏனைய நடவடிக்கைகளை வணிக மயப்படுத்தல்.
- அதன் முதலீடு 794 மில்லியன் அமெரிக்க டொலர்கள்
- இக்கம்பனியின் பங்குகளில் 15ம% உரிமை இலங்கை துறைமுக அதிகார சபைக்கும், 85%உரிமை CMPort கம்பனிக்கும் உரித்தாகின்றது. அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
 
அதனடிப்படையில் முதல் ஒப்பந்தத்தில் முன்மொழியப்பட்ட நூற்றுக்கு 80:20 எனும் ரீதியில் பகிரப்பட்ட பங்குகளுக்கு பதிலாக CMPort கம்பனிக்கு 69.55 வீதமும், இலங்கை துறைமுக அதிகார சபைக்கு 30.45 வீதமுமாக முழு முதலீட்டில் பங்குகளின் உரிமை திருத்தமடையவுள்ளது.
 
முன்மொழியப்பட்டுள்ள ஒப்பந்தத்தின் கீழ் ஹம்பாந்தோட்டை துறைமுகம் மற்றும் அதனை அண்டிய பிரதேசங்களின் சொத்துரிமை ஒருபோதும் அம்முதலீட்டு நிர்வனங்களுக்கு வழங்கப்படாது என்பதுடன், இலங்கை அரசாங்கத்துடன் இணைந்து ஆரம்பிக்கப்படவுள்ள மேற்படி இரு நிர்வனங்களுக்கும் குத்தகை அடிப்படையில் குறித்த நிலங்கள் வழங்கப்படவுள்ளன. அந்நிர்வனங்களின் பங்குகளை கொள்வனவு செய்வதற்கு இலங்கை துறைமுக அதிகார சபைக்கு பின்வரும் அடிப்படையில் வாய்ப்பு கிடைக்கின்றது.
 
 ஓப்பந்தம் அமுலுக்கு வரும் திகதியிலிருந்து 70 வருடங்களுக்கு பின்னர் அரசாங்க மதிப்பீட்டாளர்கள் மற்றும் சுதந்திர மதிப்பீட்டாளர்கள் மூலம் தீர்மானிக்கப்படுகின்ற சாதாரண பெறுமதிக்கு கொள்வனவு செய்வதற்கு இலங்கை துறைமுக அதிகார சபைக்கு உரிமை உள்ளது.
 
 ஓப்பந்தம் அமுலுக்கு வரும் திகதியிலிருந்து 80 வருடங்களுக்கு பின்னர் HIPG, HIPS ஆகிய கம்பனிகளின் பங்குகளில் முறையே 60%, 76.8% இனை 01 அமெரிக்க டொலர்களுக்கு கொள்வனவு செய்வதற்கு இலங்கை துறைமுக அதிகார சபைக்கு உரிமை உள்ளது.
 
 ஓப்பந்தம் அமுலுக்கு வரும் திகதியிலிருந்து 99 வருடங்களுக்கு பின்னர் HIPG, HIPS ஆகிய கம்பனிகளின் முழுமையான பங்குகளை 01 அமெரிக்க டொலர்களுக்கு கொள்வனவு செய்வதற்கு இலங்கை துறைமுக அதிகார சபைக்கு உரிமை உள்ளது.
 
மேலும், யுத்த காரணங்களுக்காக இத்துறைமுகத்தை பயன்படுத்த முடியாது என்பதுடன், துறைமுகத்தின் பாதுகாப்பு தொடர்பில் முழு பொருப்பும் துறைமுக அதிகார சபையினையே சாரும்.
 
அதனடிப்படையில் துறைமுக மற்றும் கப்பல்துறை அமைச்சர் கௌரவ மஹிந்த சமரசிங்க அவர்களினால் முன்வைக்கப்பட்ட முன்மொழிவுகளை கவனத்திற் கொண்டு, குறித்த அணுசரனை ஒப்பந்தம் தொடர்பில் அக்கறை காட்டுகின்ற பிரிவினரிடத்தில் இருந்து கருத்துக்களை மேலும் பெற்றுக் கொள்வதற்கும், அதனை பாராளுமன்றத்தில் முன்வைத்து அதன் மீது முன்வைக்கப்படுகின்ற யோசனைகளை கவனத்திற் கொண்டு உரிய திருத்தங்களை மேற்கொள்வதற்கும், பின்னர் அதனை ஏற்றுக் கொள்வதற்கும், அதற்கு கைச்சாத்திடுவதற்கும் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
 
14. டெங்கு நோய்க்கு சிகிச்சை அளிப்பதற்காக தேவையான வைத்திய உபகரணங்களை கொள்வனவு செய்தல் மற்றும் டெங்கு நோய் பரவுவதை கட்டுப்படுத்துவதற்காக துரித நடவடிக்கைகளை மேற்கொள்ளல் (விடய இல. 49,56)
 
கௌரவ பிரதமர் அவர்களதும், சுகாதார, போசணை மற்றும் சுதேச வைத்திய அமைச்சரதும் சிபார்சுகளை கவனத்திற் கொண்டு டெங்கு நோய்க்கு சிகிச்சை அளிப்பதற்காக தேவையான வைத்திய உபகரணங்களை அவசர கொள்வனவு முறையாக கொள்வனவு செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. அதனடிப்படையில், அதில் உள்நாட்டில் கொள்வனவு செய்ய முடியுமான உபகரணங்களை உடனடியாக கொள்வனவு செய்வதற்கும், மிகுதியான உபகரணங்களை வெளிநாடுகளில் உள்ள தூதுவராலயங்களின் ஊடாக கொள்வனவு செய்வதற்கு தேவையான நடவடிக்களை மேற்கொள்வதற்கும், அதற்காக 300 மில்லியன் ரூபா நிதியினை சுகாதார, போசணை மற்றும் சுதேச வைத்திய அமைச்சுக்கு ஒதுக்கி கொடுப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டது.
 
மேலும் டெங்கு நோய் பரவுவதை கட்டுப்படுத்துவதற்காக கீழ்க்காணும் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கும் அனுமதி வழங்கியுள்ளது.
1. தமது அலுவலக சூழலில் டெங்கு நோய் பரவுவதற்கு இடமளிக்காமல் அதனை சுத்தமாக வைத்துக் கொள்வதற்காக திணைக்கள தலைவர்களுக்கு பொறுப்பளிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி செயலாளர் அவர்களினால் வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கையினை தொடர்ந்தும் செயற்படுத்தல்.
 
2. பெற்றோர், மாணவர்களை கொண்டு பாடசாலை வளாகத்தில் டெங்கு ஒழிப்பு பணியினை மேற்கொள்வதற்கு கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்தல்.
 
3. டெங்கு நுளம்புகள் பரவும் இடங்களை இனங்காண்பதற்காக வீட்டுக்கு வீடு சென்று பரிசீலிப்பதற்கு மேல் மாகாண சபையினால் கள பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அத்துடன் இச்செயன்முறையினை ஏனைய மாகாண சபைகள் மூலமாகவும் பின்பற்றல்.
 
4. டெங்கு ஒழிப்பு முறையின் முக்கியத்துவத்தை எடுத்துக் காட்டும் வகையில் தகுந்த ஒளிஃ ஒலி பதிவேடுகளை தயாரித்து, பிரச்சாரப்படுத்துவதற்கு நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சின் மூலம் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளல்.
 
5. சுகாதார, போசணை மற்றும் சுதேச வைத்திய அமைச்சின் உதவியுடன் டெங்கு நோயாளர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக இலங்கை இராணுவ வீரர்கள் 2,000 பேருக்கு பயிற்சியளித்தல்.
 
6. சுகாதார வைத்திய அதிகாரிகள், உள்ளூராட்சி மன்றங்கள், பிரதேச செயலகங்கள் மற்றும் பொலிஸ் அதிகாரிகள் இணைந்து அவ்வவ் பிரதேசங்களில் டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டங்களை செயற்படுத்தல்.
 
15. மாலபே வைத்தியர் நெவில் பிரனாந்து போதனா வைத்தியசாலையின் சேவைகளை முன்னெடுத்துச் செல்வதற்காக நிர்வாக சபையொன்றை நியமித்தல் (விடய இல. 50)
 
மாலபே வைத்தியர் நெவில் பிரனாந்து போதனா வைத்தியசாலையின் சேவைகளை முன்னெடுத்துச் செல்வதற்காக அவ்வைத்தியசாலையினை பாராளுமன்ற சட்டம் ஒன்றின் மூலம் இணைக்க வேண்டியுள்ளது. அச்செயற்றிட்டத்தினை முன்னெடுக்கும் வரை குறித்த வைத்தியசாலையினை முன்னெடுத்துச் செல்வதற்காக வேண்டி முன்னாள் சுகாதார சேவை பணிப்பாளர் நாயகம் வைத்தியர் யு.ஏ. அஜித் மெண்டிஸ் அவர்களின் தலைமையில் துறைசார்ந்தோர்கள் உள்ளடங்கிய நிர்வாக குழுவொன்றினை, 2017ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 01ம் திகதியிலிருந்து அமுலுக்கு வரும் வகையில் நியமிப்பதற்கும், அமைச்சுக்கு 2017ம் ஆண்டில் ஒதுக்கப்பட்டுள்ள நிதியிலிருந்து மாதாந்தம் 200 மில்லியன் ரூபா நிதியினை வழங்குவதற்கும் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
 
16. இலங்கையில் அவசர முன் மருத்துவமனை சிகிச்சை அம்பூலன்ஸ் சேவையினை நிறுவுதல் (விடய இல. 51)
 
அவசர முன் மருத்துவமனை சிகிச்சை அம்பூலன்ஸ் சேவையின் முக்கியத்துவத்தையும், வெற்றியினையும் கவனத்திற் கொண்டு, அதனை மேலும் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வதற்கான நிதியினை ஒதுக்கிக் கொள்வது தொடர்பில் தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் எனும் ரீதியில் கௌரவ பிரதமர் ரணில் விக்ரமசிங்க அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
 
17. மாகாண சபைகள் தேர்தலினை நடாத்தும் திகதியில் திருத்தம் செய்தல் (விடய இல. 55)
 
மாகாண சபைகள் தேர்தலினை தனித்தனியாக நடாத்துவதனால் ஏற்படுகின்ற பாதிப்புக்களை உணர்ந்து, அனைத்து மாகாண சபைகளுக்குமான தேர்தலினையும் ஓரே தினத்தில் நடாத்துவதற்கு முடியுமான வகையில் அரசியல் யாப்பு மற்றும் மாகாண சபைகள் சட்டத்தில் அது தொடர்பான விதப்புரைகளை திருத்தம் செய்வதற்கு கௌரவ பிரதமர் ரணில் விக்ரமசிங்க அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

சமீபத்திய செய்திகள்

அமைச்சரவை தீர்மானங்கள் - 25.10.2021

26 October 2021

அமைச்சரவை தீர்மானங்கள் - 25.10.2021

அமைச்சரவை தீர்மானங்கள் - 18.10.2021

19 October 2021
அமைச்சரவை தீர்மானங்கள் - 18.10.2021

அமைச்சரவை தீர்மானங்கள் - 18.10.2021

அமைச்சரவை தீர்மானங்கள் - 11.10.2021

12 October 2021
 அமைச்சரவை தீர்மானங்கள் - 11.10.2021

அமைச்சரவை தீர்மானங்கள் - 11.10.2021

அமைச்சரவை தீர்மானங்கள் - 05.10.2021

06 October 2021
அமைச்சரவை தீர்மானங்கள்  - 05.10.2021

அமைச்சரவை தீர்மானங்கள் - 05.10.2021

அமைச்சரவை தீர்மானங்கள் - 27.09.2021

28 September 2021
அமைச்சரவை தீர்மானங்கள் - 27.09.2021

அமைச்சரவை தீர்மானங்கள் - 27.09.2021

அமைச்சரவை தீர்மானங்கள் - 21.09.2021

22 September 2021
அமைச்சரவை தீர்மானங்கள் - 21.09.2021

அமைச்சரவை தீர்மானங்கள் - 21.09.2021

அமைச்சரவை தீர்மானங்கள் - 13.09.2021

14 September 2021
அமைச்சரவை தீர்மானங்கள்  - 13.09.2021

அமைச்சரவை தீர்மானங்கள் - 13.09.2021

அமைச்சரவை தீர்மானங்கள் - 30.08.2021

31 August 2021

அமைச்சரவை தீர்மானங்கள் - 30.08.2021

அமைச்சரவை தீர்மானங்கள் - 23.08.2021

24 August 2021

அமைச்சரவை தீர்மானங்கள் - 23.08.2021

அமைச்சரவை தீர்மானங்கள் - 17.08.2021

18 August 2021
 அமைச்சரவை தீர்மானங்கள்  - 17.08.2021

அமைச்சரவை தீர்மானங்கள் - 17.08.2021

அத்துடன் இலங்கையிலுள்ள ஊடகத்துறையின் கொள்கை திட்டமிடல் , பயிற்சி நெறிகளை வழங்குதல் , மற்றும் ஊடகத்துறைக்கான அங்கீகாரங்களை வழங்குவதிலும் இந்நிறுவனம் முன்னின்று உதவுகின்றது.