01. சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் தலைமையகத்தை ஸ்தாபித்தல் (நிகழ்ச்சி நிரலின் விடய இல. 09)
தற்போது பம்பலப்பிட்டிய பிரதேசத்தில் வாடகைக்கு எடுக்கப்பட்ட கட்டிடத்தில் கொண்டு நடாத்தப்படுகின்ற சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் தலைமையகத்துக்காக பொருத்தமான கட்டிடம் ஒன்றை நிர்மாணிக்க வேண்டிய அவசியம் உணரப்பட்டுள்ளது. மொரடுவ பிரதேசத்தில் அமைந்துள்ள 01 ஏக்கர் காணி இதற்காக பெறப்பட்டுள்ளதோடு, சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் ஊழியர்களின் உழைப்பில் குறித்த கட்டிடத்தை நிர்மாணிப்பதற்காக 42 மில்லியன் ரூபாவினை திறைசேரியில் இருந்து பெற்றுக் கொள்வது தொடர்பில் பாதுகாப்பு அமைச்சர் எனும் ரீதியில் அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களினால் அமைச்சரவைக்கு முன்வைக்கப்பட்டதுடன், குறித்த யோசனைகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
02. அவசரகால நிலைமைகளின் போது அனர்த்தத்திற்கு உள்ளான பொதுமக்களை தங்கவைப்பதற்காக வேண்டி 25 மாவட்டங்களிலும் வதிவிட நிலையங்களை நிர்மாணித்தல் (விடய இல. 13)
அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாப்பா அவர்களினால் முன்வைக்கப்பட்ட முன்மொழிவுகளை கருத்திற் கொண்டு, 25 மாவட்டங்களும் உள்ளடங்கும் வகையில், ஒரே நேரத்தில் 100க்கும் 200க்கும் இடைப்பட்ட தொகையினரை தங்கவைப்பதற்கு முடியுமான வதிவிட நிலையங்கள் 10 இனை, 2018 – 2020 காலப்பகுதியினுள் நாடு பூராகவும் நிர்மாணிப்பதற்கும், அனர்த்த நிவாரண நிலையங்களாக குறித்த நிலையம் பயன்படுத்தப்படாத சந்தர்ப்பங்களில், அக்கட்டிடம் மற்றும் வளங்களை பயனுள்ள விதத்தில் பயன்படுத்துவதற்கு உகந்த செயற்றிட்டமொன்றை தயாரிப்பதற்கும் அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
03. 2018ம் ஆண்டு வரவு செலவு திட்டத்தை தயாரிப்பதற்கான மெக்ரோ நிதிக்கட்டமைப்பு (விடய இல. 14)
2016 மற்றும் 2017ம் ஆண்டுகளில் ணுநசழ டீயளநன டீரனபநவiபெ முறையினை அடிப்படையாகக் கொண்டு 2016 மற்றும் 2017க்கான வரவு செலவு திட்டம் தயாரிக்கப்பட்டது. நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சினால் தயாரிக்கப்படுகின்ற '2018-2020 மத்திய கால மெக்ரோ நிதிக்கட்டமைப்பானது' பல்வேறு முக்கிய அம்சங்களை கொண்டமைகின்றது. இதன் அடிப்படையில் 2020ம் ஆண்டளவில் பின்வரும் இலக்குகளை அடைவதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது.
1. மொத்த உள்நாட்டு உற்பத்தியில் நாட்டின் வருவாயினை 16.5% ஆக உயர்த்துதல்
2. மொத்த உள்நாட்டு உற்பத்தியில் நாட்டின் மீள் செலவினை (Recurrent expenditure) 14.8ம% க்கு கொண்டுவரல்
3. மொத்த உள்நாட்டு உற்பத்தியில் பொது மக்கள் முதலீடு 5.3 % ஆக இருக்கும்
4. வரவு செலவு திட்ட பற்றாக்குறையினை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3.5 % ஆக குறைத்தல்
5. நாட்டின் கடனினை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 70 %க்கு குறைத்தல்
அதனடிப்படையில் 2018-2020 மத்திய கால மெக்ரோ நிதிக்கட்டமைப்பினை அடிப்படையாகக் கொண்டு 2018ம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தினை தயாரிப்பதற்கும், அரசாங்கத்தின் முக்கியத்துவமான வேலைத்திட்டங்களை கவனத்திற் கொண்டு 2018ம் ஆண்டில் நேர்முக அமைச்சுக்களுக்கு வரவு செலவு திட்ட ஒதுக்கீட்டினை மட்டுப்படுத்துவதற்கும் நிதி மற்றும் வெகுசன ஊடகத்துறை அமைச்சர் கௌரவ மங்கள சமரவீர அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
04. தேசிய உயர் உயரடுக்கு விளையாட்டு பயிற்சி மையத்தில் விளையாட்டு ஹோட்டல் ஒன்றினை நிர்மாணித்தல் (விடய இல. 19)
நுவரெலிய ரேஸ் கோஸ் மைதானத்தில் அமைக்கப்பட்டு வருகின்ற தேசிய உயர் உயரடுக்கு விளையாட்டு பயிற்சி மையத்துடன், இணைந்ததாக விளையாட்டு ஹோட்டல் ஒன்றினை நிர்மாணிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. அதனடிப்படையில் குறித்த ஹோட்டலினை நிர்மாணிப்பதற்காக நகர அபிவிருத்தி அதிகார சபைக்கு உரித்தான நுவரெலியா - பதுளை வீதியில் அமைந்துள்ள 01 ஏக்கர், 01 ரூட், 23.69 பேர்ச்சஸ் காணியினை விளையாட்டு அமைச்சுக்கு ஒதுக்கிக் கொடுப்பது தொடர்பில் பாரிய நகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் கௌரவ பாட்டலி சம்பிக்க ரணவக்க அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
05. இரத்தினபுரி, புதிய நகரத்தில் அமைந்துள்ள 'ருவன்புர' நகர குழந்தைகள் பூங்காவினை இலவசமாக (கொடுப்பனவின்றி) இரத்தினபுரி மாநகர சபைக்கு ஒதுக்கிக் கொள்ளல் (விடய இல. 20)
இரத்தினபுரி, புதிய நகரத்தில் அமைந்துள்ள 'ருவன்புர' நகர குழந்தைகள் பூங்காவினை பராமரிப்பு நடவடிக்கைகளுக்காக, இலவசமாக (கொடுப்பனவின்றி) இரத்தினபுரி மாநகர சபைக்கு ஒதுக்கிக் கொடுப்பது தொடர்பில் பாரிய நகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் கௌரவ பாட்டலி சம்பிக்க ரணவக்க அவர்களினால் முன்வைக்கப்பட்ட தகவல்கள் அமைச்சரவையின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது.
06. மன்னார் மாவட்டத்தில் நீர்வாழ் பயிர்செய்கை தொழிற்பேட்டை ஒன்றை நிர்மாணிப்பதற்காக சூழலியல் சாத்தியவள அறிக்கையினை மேற்கொள்ளல் (விடய இல.21)
மன்னார் மாவட்டத்தின், வெடிதலதீவு பாதுகாப்பு பூமியினை அண்டிய பிரதேசத்தில் நீர்வாழ் பயிர்செய்கை தொழிற்பேட்டை ஒன்றை நிர்மாணிப்பது தொடர்பில் மீன்பிடி மற்றும் நீர் வளங்கள் அபிவிருத்தி அமைச்சர் கௌரவ மஹிந்த அமரவீர அவர்கள் முன்வைத்த யோசனை மற்றும் பொருளாதார முகாமைத்துவம் தொடர்பான அமைச்சரவை செயற்குழுவின் சிபார்சினை கவனத்திற் கொண்ட அமைச்சரவை, முதலில் முன்மொழியப்பட்டுள்ள வேலைத்திட்டத்தினை முன்னெடுப்பதற்கு பிரேரிக்கப்பட்டுள்ள நிலப்பகுதி தொடர்பில் சூழலியல் தாக்கங்கள் தொடர்பில் சாத்தியவள அறிக்கையினை மேற்கொள்வதற்கு உரிய அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்குவதற்கு தீர்மானித்தது.
07. வறண்ட தேங்காய் உற்பத்தியாளர்களுக்கு ஊக்கத்தொகையினை வழங்குதல் (விடய இல. 22)
பல்வேறு காரணங்களினால் நாட்டிற்கு வருவாயினை ஈட்டித் தந்த வறண்ட தேங்காய் உற்பத்தியானது இன்று பாதிக்கப்பட்டுள்ளது. அதனால் தேங்காய் அபிவிருத்தி அதிகார சபையின் தேங்காய் ஆலை மேம்பாட்டு நிதியத்திலிருந்து 50 மில்லியன் தொகையினை பயன்படுத்தி அதன் உற்பத்தியாளர்களுக்கு சலுகை வழங்குவது தொடர்பில் பெருந்தோட்ட கைத்தொழில் துறை அமைச்சர் கௌரவ நவீன் திசாநாயக்க அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
08. இலங்கையில் தேயிலை வளர்ப்பு மற்றும் அது தொடர்பான கிருமிகள் மற்றும் நோய் முகாமைத்துவம் செய்வதற்கான பயனுள்ள உயிரியல் கட்டுப்பாட்டு முறைகளை இனங்காண்பதற்காக வேண்டி ஆராய்ச்சிகளை மேற்கொள்ளல் (விடய இல. 23)
இலங்கையில் தேயிலை வளர்ப்பு மற்றும் அது தொடர்பான கிருமிகள் மற்றும் நோய் முகாமைத்துவம் செய்வதற்கான பயனுள்ள உயிரியல் கட்டுப்பாட்டு முறைகளை இனங்காண்பதற்காக வேண்டி ஆராய்ச்சிகளை மேற்கொள்வதற்காக இந்தியாவின் வரையறுக்கப்பட்ட ளுலமெசழஅயஒ டீழைவநஉh (Pஎவ) டுவன. நிர்வனத்துக்கும் இலங்கை தேயிலை ஆராய்ச்சி நிர்வனத்துக்கும் இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில் கைச்சாத்திடுவது தொடர்பில் பெருந்தோட்ட கைத்தொழில் துறை அமைச்சர் கௌரவ நவீன் திசாநாயக்க அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
09. இலங்கையில் செம்மறி ஆடுகளை உற்பத்தி செய்யும் தொழிற் துறையினை விருத்தி செய்வதற்காக வேண்டி தேசிய மிருக வளங்கள் அபிவிருத்தி சபைக்கு செம்மறி ஆடுகளை இறக்குமதி செய்தல் (விடய இல. 26)
இலங்கையில் செம்மறி ஆடுகளை (Sheep) உற்பத்தி செய்யும் தொழிற் துறையினை விருத்தி செய்வதற்காக வேண்டி தேசிய மிருக வளங்கள் அபிவிருத்தி சபைக்கு, முறையான கொள்முதல் செயன்முறையின் கீழ் 25 ஆண் செம்மறி ஆடுகளையும், 100 பெண் செம்மறி ஆடுகளையும் இறக்குமதி செய்வதற்கும், அதற்காக 2017ம் ஆண்டு ஒதுக்கப்பட்ட 10 மில்லியன் ரூபாவினை பயன்படுத்துவதற்கும் கிராமிய பொருளாதாரம் தொடர்பான அமைச்சர் கௌரவ பீ.ஹெரிசன் அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
10. வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவு ஆகியவற்றினால் பாதிப்புக்கு உள்ளான பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கு அத்தியவசியமான நலன்புரி மற்றும் வாழ்வாதார அபிவிருத்தி நடவடிக்கைகளை மேற்கொள்ளல் (விடய இல. 30)
மகளீர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் கௌரவ சந்திராணி பண்டார அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளை கவனத்திற் கொண்டு, வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவு ஆகியவற்றினால் பாதிப்புக்கு உள்ளான பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கு அத்தியவசியமான நலன்புரி மற்றும் வாழ்வாதார அபிவிருத்தி நடவடிக்கைகளை தொடர்ச்சியாக முன்னெடுத்துச் செல்வதற்காக நிதி வசதியளிப்பதற்கான நிலையான இயந்திரம் மற்றும் செயன்முறையொன்றையும் தயாரிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியது.
11. சர்வதேச தபால் தின கொண்டாட்டம் 2017 – பொலன்னறுவை (விடய இல. 31)
2017 ஆண்டுக்கான சர்வதேச தபால் தின கொண்டாட்டங்களை இம்முறை அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களின் தலைமையில் 2017ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 09ம் திகதி பொலன்னறுவையில் நடாத்துவதற்கும், அதற்கு நிகராக பொலன்னறுவை மற்றும் அநுராதபுரம் ஆகிய மாவட்டங்களிலுள்ள 34 உப தபால் நிலையங்களை அபிவிருத்தி செய்வதற்கும், தபால் திணைக்களத்தின் அனைத்து பணியாளர்களினதும் பங்களிப்புடன் பிரதேச மட்டத்தில் இரத்ததான நிகழ்வுகள் மற்றும் சமூக சேவை நிகழ்வுகளை நடாத்துவதற்கும், 25,000 தபால் அலுவலகர்களின் சேவையினை மதிப்பிடுவதற்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தபால், தபால் சேவைகள் மற்றும் முஸ்லிம் சமய விவகார அமைச்சர் கௌரவ எம்.எச்.ஏ. ஹலீம் அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
12. சிலாபம் நகர சபை, சிலாபம் பிரதேச சபை மற்றும் ஆரச்சிகட்டுவ பிரதேச சபை ஆகியவற்றின் மூலம் செயற்படுத்தப்படுகின்ற ஒன்றிணைந்த திண்மக் கழிவு முகாமைத்துவ வேலைத்திட்டத்திற்காக காணித்துண்டொன்றை விடுவித்துக் கொள்ளல் (விடய இல. 32)
சிலாபம் நகர சபை, சிலாபம் பிரதேச சபை மற்றும் ஆரச்சிகட்டுவ பிரதேச சபை ஆகியவற்றின் மூலம் செயற்படுத்தப்படுகின்ற ஒன்றிணைந்த திண்மக் கழிவு முகாமைத்துவ வேலைத்திட்டத்திற்காக காணி மறுசீரமைப்பு ஆணைக்குழுவுக்கு உரித்தான, ஆரச்சிகட்டுவ பிரதேச சபைக்கு உற்பட்ட, கருக்குழிய கிராம சேவகர் பிரிவிலுள்ள மானாவேரிய தோட்டம் எனும் இடத்திலுள்ள 05 ஏக்கர் காணித்துண்டொன்றை 30 வருட குத்தகையின் அடிப்படையில் சிலாபம் நகர சபைக்கு பெற்றுக் கொடுப்பது தொடர்பில் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் அமைச்சர் கௌரவ பைசல் முஸ்தபா அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
13. புலத்சிங்கள பொலிஸ் நிலையத்தை நிர்மாணிப்பதற்காக காணித்துண்டொன்றை இலங்கை பொலிசுக்கு பெற்றுக் கொள்ளல் (விடய இல. 33)
புலத்சிங்கள பொலிஸ் நிலையத்தை நிர்மாணிப்பதற்காக, புலத்சிங்கள கிராம சேவையாளர் பிரிவின், அதுர கிராமத்தில் அமைந்துள்ள, ஹொரண பெருந்தோட்டக் கம்பனிக்கு உரித்தான 04 ஏக்கர் காணியினை இலங்கை பொலிசுக்கு உரித்தாக்கிக் கொள்வது தொடர்பில் சட்டமும் ஒழுங்கும் மற்றும் தென் மாகாண அபிவிருத்தி அமைச்சர் கௌரவ சாகல ரத்னாயக அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
14. மதுகம நகரத்தில் தமிழ் மொழி மூல இரண்டாம் நிலை கல்லூரியினை ஆரம்பித்தல் (விடய இல. 36)
மதுகமவை அண்டிய பிரதேசங்களில் வாழும் தமிழ் மொழி மூல மாணவர்களின் நலன்கருதி, தேசிய நல்லிணக்கம், கலந்துரையாடல் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சர் கௌரவ மனோ கணேசன் அவர்கள் மற்றும் துறைமுக மற்றும் கப்பல்துறை அமைச்சர் கௌரவ மஹிந்த சமரசிங்க அவர்கள் ஆகியோர் இணைந்து முன்வைத்த யோசனைகளை கவனத்திற் கொண்டு, கல்வி அமைச்சு மற்றும் மேல் மாகாண கல்வி அமைச்சு ஆகியவற்றின் ஒத்துழைப்புடன் மதுகம நகரை அண்டிய பிரதேசத்தில் தமிழ் மொழி மூல இரண்டாம் நிலை பாடசாலையொன்றை ஆரம்பிப்பதற்கும், அதற்காக நமுனுகல பெருந்தோட்ட கம்பனியின் மூலம் நிர்வகிக்கப்படுகின்ற மதுகம தோட்டத்தில் 05 ஏக்கர் காணிப்பகுதியினை ஒதுக்கிக் கொடுப்பதற்கும் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
15. ஒருகொடவத்தை – அபதலே வீதி அபிவிருத்தி வேலைத்திட்டத்திற்கு சமாந்தரமாக குழாய் நீர் மார்க்கத்தினை விருத்தி செய்தல் (விடய இல. 40)
ஒருகொடவத்தை – அபதலே வீதி அபிவிருத்தி வேலைத்திட்டத்திற்கு சமாந்தரமாக குழாய் நீர் மார்க்கத்தினை விருத்தி செய்வதற்கான 46.21 யூரோ மில்லியன் ஒப்பந்தத்தை வழங்குவதற்கு 2017ம் ஆண்டு மார்ச் மாதம் 21ம் திகதி அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. குறித்த வேலைத்திட்டத்திற்கான நிதியில் 85 % இனை பெற்றுக் கொடுப்பதற்கு ஒஸ்ட்ரியாவின் யூனி கிரடிட் பேன்க் நிர்வனம் இணக்கம் தெரிவித்துள்ளதுடன், மிகுதி 15மூ நிதியினை பெற்றுக் கொடுப்பதற்கு மக்கள் வங்கி இணக்கம் தெரிவித்துள்ளது. அதனடிப்படையில் குறித்த கடன் ஒப்பந்தங்களில் கைச்சாத்திடுவது தொடர்பில் தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார நடவடிக்கைகள் தொடர்பான அமைச்சர் எனும் ரீதியில் கௌரவ பிரதமர் ரணில் விக்ரமசிங்க அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
16. ஆசிய அபிவிருத்தி வங்கியின் மூலம் நிதியளிக்கப்படுகின்ற துறைமுக பிரவேச பெருந்தெரு வேலைத்திட்டத்தினால் பாதிக்கப்பட்ட இலங்கை துறைமுக அதிகார சபைக்கு உரித்தான கட்டிடங்களுக்காக 17 மாடிகளைக் கொண்ட நவீன அலுவலக கட்டிடம் மற்றும் 04 களஞ்சியசாலைகளை நிர்மாணித்தல் (விடய இல. 43)
ஆசிய அபிவிருத்தி வங்கியின் மூலம் நிதியளிக்கப்படுகின்ற துறைமுக பிரவேச பெருந்தெரு வேலைத்திட்டத்தினால் பாதிக்கப்பட்ட இலங்கை துறைமுக அதிகார சபைக்கு உரித்தான கட்டிடங்களுக்காக 17 மாடிகளைக் கொண்ட நவீன அலுவலக கட்டிடம் மற்றும் 04 களஞ்சியசாலைகளை நிர்மாணிப்பது தொடர்பில் உயர் கல்வி மற்றும் பெருந்தெருக்கள் அமைச்சர் கௌரவ லக்ஷமன் கிரியெல்ல அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
17. பல்கலைக்கழக கட்டிடங்களை நிர்மாணிப்பதற்கு உரிய ஒப்பந்தங்களை வழங்குதல் (விடய இல. 44)
முன்வைக்கப்பட்டுள்ள விலைமனுக்கோரல்களை பரிசீலித்து, அமைச்சரவையினால் நியமிக்கப்பட்டுள்ள நிலையான கொள்ளல் குழுவின் பரிந்துரை மற்றும் தொழில்நுட்ப மதிப்பீட்டு குழுவின் பரிந்துரை ஆகியவற்றுக்கு அமைய பிரதான 06 பல்கலைக்கழகங்களில் 08 கட்டிடங்களை நிர்மாணிப்பதற்கான ஒப்பந்தத்தை வழங்குவது தொடர்பில் உயர் கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் லக்ஷமன் கிரியெல்ல அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
18. பல்கலைக்கழக அடிப்படை வசதிகளை அபிவிருத்தி செய்வதற்கான வேலைத்திட்டங்களை முன்னெடுத்தல் (விடய இல. 45)
பல்கலைக்கழக அடிப்படை வசதிகளை அபிவிருத்தி செய்வதற்கான வேலைத்திட்டங்களின் கீழ் தெரிவு செய்யப்பட்ட பல்கலைக்கழகங்களில் 14 வகையான வேலைத்திட்டங்களை 7,640.23 மில்லியன் ரூபா மதிப்பீட்டு செலவின் கீழ் 2018 – 2020 காலப்பகுதியினுள் செயற்படுத்துவது தொடர்பில் உயர் கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் லக்ஷ;மன் கிரியெல்ல அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
19. கம்பொல போதனா வைத்தியசாலையின் அவசர விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவின் நிர்மாணப்பணிகள் மற்றும் விபத்து வாட்டுகள், சத்திரசிகிச்சை மற்றும் அவசர சிகிச்சை பிரிவினை நிர்மாணித்தல் (விடய இல. 46 மற்றும் 47)
அமைச்சரவையினால் நியமிக்கப்பட்டுள்ள நிலையான கொள்ளல் குழுவின் பரிந்துரை மற்றும் தொழில்நுட்ப மதிப்பீட்டு குழுவின் பரிந்துரை ஆகியவற்றுக்கு அமைய கம்பொல போதனா வைத்தியசாலையின் அவசர விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவின் நிர்மாணப்பணிகள் மற்றும் விபத்து வாட்டுகள், சத்திரசிகிச்சை மற்றும் அவசர சிகிச்சை பிரிவினை நிர்மாணிப்பதற்கான ஒப்பந்தத்தை M/s Electro Metal Pressings (Pvt.) Ltd நிர்வனத்துக்கு வழங்குவது தொடர்பில் சுகாதார, போசணை மற்றும் சுதேச வைத்திய அமைச்சர் கௌரவ டாக்டர் ராஜித சேனாரத்ன அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
20. ஸ்ரீ ஜயவர்தனபுர பெரிய வைத்தியசாலைக்காக நவீன தாதியர் விடுதியொன்றினை நிர்மாணித்தல் (விடய இல. 48)
அமைச்சரவையினால் நியமிக்கப்பட்டுள்ள நிலையான கொள்ளல் குழுவின் பரிந்துரை மற்றும் தொழில்நுட்ப மதிப்பீட்டு குழுவின் பரிந்துரை ஆகியவற்றுக்கு அமைய ஸ்ரீ ஜயவர்தனபுர பெரிய வைத்தியசாலைக்காக நவீன தாதியர் விடுதியொன்றினை நிர்மாணிப்பதற்கான ஒப்பந்தத்தை ஆஃள ளுசipயடநை ஊழவெசயஉவழசள (Pஎவ.) டுவன நிர்வனத்துக்கு வழங்குவது தொடர்பில் சுகாதார, போசணை மற்றும் சுதேச வைத்திய அமைச்சர் கௌரவ டாக்டர் ராஜித சேனாரத்ன அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
21. அநுராதபுரம் போதனா வைத்தியசாலையில் விபத்து மற்றும் தீவிர சிகிச்சை பிரிவினை நிர்மாணித்தல் (விடய இல. 49)
அமைச்சரவையினால் நியமிக்கப்பட்டுள்ள நிலையான கொள்ளல் குழுவின் பரிந்துரை மற்றும் தொழில்நுட்ப மதிப்பீட்டு குழுவின் பரிந்துரை ஆகியவற்றுக்கு அமைய அநுராதபுரம் போதனா வைத்தியசாலையில் விபத்து மற்றும் தீவிர சிகிச்சை பிரிவினை நிர்மாணிப்பதற்கான ஒப்பந்தத்தை M/s Sripalie Contractors (Pvt.) Ltd. நிர்வனத்துக்கு வழங்குவது தொடர்பில் சுகாதார, போசணை மற்றும் சுதேச வைத்திய அமைச்சர் கௌரவ டாக்டர் ராஜித சேனாரத்ன அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
22. கண்டி போதனா வைத்தியசாலையில் விபத்து மற்றும் தீவிர சிகிச்சை பிரிவினை நிர்மாணித்தல் (விடய இல. 50)
அமைச்சரவையினால் நியமிக்கப்பட்டுள்ள நிலையான கொள்ளல் குழுவின் பரிந்துரை மற்றும் தொழில்நுட்ப மதிப்பீட்டு குழுவின் பரிந்துரை ஆகியவற்றுக்கு அமைய கண்டி போதனா வைத்தியசாலையில் விபத்து மற்றும் தீவிர சிகிச்சை பிரிவினை நிர்மாணிப்பதற்கான ஒப்பந்தத்தை M/s Link Engineering (Pvt) Ltd. . நிர்வனத்துக்கு வழங்குவது தொடர்பில் சுகாதார, போசணை மற்றும் சுதேச வைத்திய அமைச்சர் கௌரவ டாக்டர் ராஜித சேனாரத்ன அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
23. சுகாதார, போசணை மற்றும் சுதேச வைத்திய அமைச்சுக்காக நிர்மாணிக்கப்பட்டு வருகின்ற 10 மாடிகளைக் கொண்ட கட்டிடத்தை 16 மாடிகளாக அதிகரித்தல் (விடய இல. 51)
சுகாதார, போசணை மற்றும் சுதேச வைத்திய அமைச்சுக்காக நிர்மாணிக்கப்பட்டு வருகின்ற 10 மாடிகளைக் கொண்ட கட்டிடமானது குறித்த அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்வதற்கு போதுமானவையாக காணப்படாமையினால் குறித்த கட்டிடத்தை மேலும் 06 மாடிகளினால் அதிகரித்து மொத்தம் 16 மாடிகளைக் கொண்ட கட்டிடமாக அமைப்பதற்கும், அதற்காக தற்போது மதிப்பிடப்பட்டுள்ள 3,896.55 மில்லியன் ரூபா தொகையினை 5,979.29 மில்லியன் ரூபாவாக அதிகரிப்பதற்கும், ஆரம்பத்தில் இணங்கியதைப் போன்று குறித்த பணியினை மேற்கொள்வதற்கு பொறியியல் பணிகள் தொடர்பான மத்திய ஆலோசனை பணியகத்துக்கு வழங்குவது தொடர்பில் சுகாதார, போசணை மற்றும் சுதேச வைத்திய அமைச்சர் கௌரவ டாக்டர் ராஜித சேனாரத்ன அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
24. தேசிய பக்கவாத பிரிவினை முல்லேரியாவ, கிழக்கு கொழும்பு ஆதார வைத்தியசாலையில் நிர்மாணித்தல் (விடய இல. 52)
அமைச்சரவையினால் நியமிக்கப்பட்டுள்ள நிலையான கொள்ளல் குழுவின் பரிந்துரை மற்றும் தொழில்நுட்ப மதிப்பீட்டு குழுவின் பரிந்துரை ஆகியவற்றுக்கு அமைய தேசிய பக்கவாத பிரிவினை முல்லேரியாவ, கிழக்கு கொழும்பு ஆதார வைத்தியசாலையில் நிர்மாணிப்பதற்கான ஒப்பந்தத்தை M/s RN Constructions (Pvt) Ltd. . நிர்வனத்துக்கு வழங்குவது தொடர்பில் சுகாதார, போசணை மற்றும் சுதேச வைத்திய அமைச்சர் கௌரவ டாக்டர் ராஜித சேனாரத்ன அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
25. மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் இருதய நோய் சிகிச்சை பிரிவொன்றை நியமித்தல் (விடய இல. 53)
அமைச்சரவையினால் நியமிக்கப்பட்டுள்ள நிலையான கொள்ளல் குழுவின் பரிந்துரை மற்றும் தொழில்நுட்ப மதிப்பீட்டு குழுவின் பரிந்துரை ஆகியவற்றுக்கு அமைய மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் இருதய நோய் சிகிச்சை பிரிவொன்றை நிர்மாணிப்பதற்கான ஒப்பந்தத்தை M/s Ancheneye Constructions (Pvt) Ltd. நிர்வனத்துக்கு வழங்குவது தொடர்பில் சுகாதார, போசணை மற்றும் சுதேச வைத்திய அமைச்சர் கௌரவ டாக்டர் ராஜித சேனாரத்ன அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
26. நிதித்துறை நவீனமயமாக்கல் திட்டத்திற்காக வேண்டி உலக வங்கியின் சர்வதேச அபிவிருத்தி முகவராண்மையின் மூலம் 75 மில்லியன் அமெரிக்க டொலர்கள் கடன் தொகையினை பெற்றுக் கொள்ளல் (விடய இல. 59)
நிதித்துறை நவீனமயமாக்கல் திட்டத்திற்காக வேண்டி உலக வங்கியின் சர்வதேச அபிவிருத்தி முகவராண்மையிடம் இருந்து கடன் வசதிகளை பெற்றுக் கொள்வதற்காக வேண்டி முன்பு பெறப்பட்ட அங்கீகாரத்துக்கு அமைய பேச்சுவார்த்தை மேற்கொள்ளப்பட்டது. அதன் போது குறித்த திட்டத்தினை முன்னெடுப்பதற்காக உலக வங்கியின் சர்வதேச அபிவிருத்தி முகவராண்மையின் மூலம் 75 மில்லியன் அமெரிக்க டொலர்கள் கடன் தொகையினை பெற்றுக் தருவதற்கு இணக்கம் தெரிவிக்கப்பட்டது. எனவே குறித்த கடன் தொகையினை பெற்றுக் கொள்வதற்கு உரிய நிர்வனத்துடன் கடன் உடன்படிக்கையில் கைச்சாத்திடுவது தொடர்பில் தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார நடவடிக்கைகள் தொடர்பான அமைச்சர் எனும் ரீதியில் கௌரவ பிரதமர் ரணில் விக்ரமசிங்க அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
27. சர்வதேச உறவுகள் மற்றும் மூலோபாய ஆய்வுகளுக்காக லக்ஷமன் கதிர்காமர் நிறுவனம் மற்றும் சர்வதேச மூலோபாய ஆய்வுகள் தொடர்பான பங்களாதேஷ்; நிறுவனம் ஆகியவற்றுக்கு இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில் கைச்சாத்திடல் (விடய இல. 62)
அநுபவங்கள், விசேட அறிவு மற்றும் ஆராய்ச்சி வெளியீடுகள் ஆகியவற்றை புரிந்;துணர்வின் அடிப்படையில் ஒருவருக்கு ஒருவர் பரிமாறிக் கொள்ளுதல், குறுகிய கால மற்றும் நீண்ட கால மட்டத்தில் ஆய்வுகளை பரிமாறிக் கொள்ளுதல் ஆகிய நோக்கங்களை அடைந்துக் கொள்ளும் நோக்கில் சர்வதேச உறவுகள் மற்றும் மூலோபாய ஆய்வுகளுக்காக லக்ஷ்மன் கதிர்காமர் நிறுவனம் மற்றும் சர்வதேச மூலோபாய ஆய்வுகள் தொடர்பான பங்களாதேஷ் நிறுவனம் ஆகியவற்றுக்கு இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில் ஜனாதிபதி அவர்கள் அண்மையில் பங்களாதேசுக்கு மேற்கொள்ளவுள்ள உத்தியோகபூர்வ விஜயத்தின் போது கைச்சாத்திடுவது தொடர்பில் வெளிவிவகார அமைச்சர் கௌரவ ரவி கருணாநாயக்க அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
28. பண்டாரநாயக்க சர்வதேச இராஜதந்திர பயிற்சி நிர்வனம் (BIDTI) மற்றும் பங்களாதேஷ; வெளிநாட்டு சேவை எகடமி (FSA) ஆகியவற்றுக்கு இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில் கைச்சாத்திடல் (விடய இல. 62)
இலங்கை மற்றும் பங்களாதேஷ்ஆகிய நாடுகளுக்கு இடையில் இராஜதந்திர உறவுகளை மேலும் வலுப்படுத்தி கொள்ளும் நோக்கில் இராஜதந்திர உறவுகள் தொடர்பான பல்வேறு செயற்பாடுகள் மற்றும் வேலைத்திட்டங்களில் பங்குபற்றுவதற்காக வேண்டி வசதிகளை வழங்குவது தொடர்பில் பிரேரிக்கப்படுகின்ற முறையொன்றை ஸ்தாபிக்கும் நோக்கில் பண்டாரநாயக்க சர்வதேச இராஜதந்திர பயிற்சி நிர்வனம் (BIDTI) மற்றும் பங்களாதேஷ; வெளிநாட்டு சேவை எகடமி (FSA) ஆகியவற்றுக்கு இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில் ஜனாதிபதி அவர்கள் அண்மையில் பங்களாதேசுக்கு மேற்கொள்ளவுள்ள உத்தியோகபூர்வ விஜயத்தின் போது கைச்சாத்திடுவது தொடர்பில் வெளிவிவகார அமைச்சர் கௌரவ ரவி கருணாநாயக்க அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
29. கொத்மலை மகாவலி மஹாசாய புன்னிய பூமியினை மகாவலி கலாச்சார அறக்கட்டளைகள் நிதியத்துக்கு பறிமாற்றிக் கொள்ளல் (விடய இல. 64)
கொத்மலை விக்டோரியா வலயத்தில் அமைந்துள்ள 40 ஏக்கர், 03 ரூட், 31.6 பேர்ச்சஸ் அரச காணியினை, தொல்பொருளியல் திணைக்களத்தின் சிபார்சின் படி கொடுப்பனவற்ற இலவச அனுமதிப்பத்திரத்துடன் (கொடுப்பனவுகள் இன்றி) மகாவலி கலாச்சார அறக்கட்டளைகள் நிதியத்துக்கு பறிமாற்றிக் கொள்வதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளப்படுவதாக அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களினால் அமைச்சரவைக்கு அறிவுறுத்தப்பட்டது.
30. தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப துறை மற்றும் அத்துடன் சம்பந்தப்பட்ட தொழில்துறை தொடர்பில் பங்களாதேஷ் மற்றும் இலங்கைக்கு இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில் கைச்சாத்திடல் (விடய இல. 66)
தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப துறை மற்றும் அத்துடன் சம்பந்தப்பட்ட தொழில்துறை தொடர்பில் பங்களாதேஷ மற்றும் இலங்கைக்கு இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில் ஜனாதிபதி அவர்கள் அண்மையில் பங்களாதேசுக்கு மேற்கொள்ளவுள்ள உத்தியோகபூர்வ விஜயத்தின் போது கைச்சாத்திடுவது தொடர்பில் தொலைத்தொடர்புகள் மற்றும் டிஜிட்டல் உட்டகட்டமைப்பு வசதிகள் அமைச்சர் கௌரவ ஹரின் பிரனாந்து அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.