01. சீனா மக்கள் குடியரசின் அரச வனவியல் முகாமைத்துவ கல்லூரி மற்றும் இலங்கை ஜனநாயக சோஷலிச குடியரசின் நிலையான அபிவிருத்தி மற்றும் வன ஜீவராசிகள் அமைச்சுக்கும் இடையில் மேற்கொள்ளப்படவுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தம் (விடய இல. 06)
இலங்கை வன ஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகளுக்கு பயிற்சி மற்றும் உயர் கல்வி வாய்ப்புக்களை பெற்றுக் கொடுக்கும் வகையில் சீனா மற்றும் இலங்கை ஆகிய நாடுகளுக்கு இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில் கைச்சாத்திடுவதற்கு முன்மொழியப்பட்டுள்ளது. குறித்த இவ்வொப்பந்தத்தில் சீனாவுக்கு தான் மேற்கொள்ளவுள்ள உத்தியோகபூர்வ விஜயத்தின் போது கைச்சாத்திடுவது தொடர்பில் நிலையான அபிவிருத்தி மற்றும் வனஜீவராசிகள் அமைச்சர் கௌரவ காமினி ஜயவிக்ரம பெரேரா அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
02. மீள வடிவமைக்கப்பட்ட 'துப்பரவேற்பாடு மீதான தேசிய கொள்கை (விடய இல. 07)
'மீள வடிவமைக்கப்பட்ட 'துப்பரவேற்பாடு மீதான தேசிய கொள்கை' என்ற அம்சம் இதற்கு முன்னர் அமைச்சரவைக்கு முன்வைக்கப்பட்டுள்ளதுடன், அதனை மேலும் பயனுள்ள விதத்தில் செயற்படுத்துவதற்காக வேண்டி பொறுப்பான குழுவினரால் சேர்க்கப்பட்டுள்ள சிபார்சுகளையும் உள்ளடக்கி குறித்த கொள்கை புதிதாக தயாரிக்கப்பட்டுள்ளது. நகர திட்டமிடல் மற்றம் நீர் வழங்கல் அமைச்சர் கௌரவ ரவூப் ஹக்கீம் அவர்களினால் முன்வைக்கப்பட்ட குறித்த கொள்கைக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
03. மத்தியில் மிதமிஞ்சிய உடன் பருமனை மட்டுப்படுத்துதல் (விடய இல. 08)
தற்போது இலங்கையில் முகங்கொடுக்கப்படுகின்ற பிரதான சுகாதார பிரச்சினையாக இருதய நோய், அதிக குருதி வெளியேற்றம், நீரிழிவு மற்றும் புற்றுநோய் போன்ற தொற்றா நோய்கள் இனங்காணப்பட்டுள்ளன. இலங்கையில் ஏற்படும் மரணங்களில் 59மூ ஆனவை தொற்றா நோய்களினால் ஏற்படுகின்றது. அவற்றுக்கு இறையாகும் நபர்கள் பெரும்பாலும் 60 வயதுக்கு குறைவான நபர்களே என்பது தெரிய வந்துள்ளது. போதுமான அளவு உடற்பயிற்சி மேற்கொள்ளாமையினால் இளைஞர்களுக்கு மத்தியில் மிதமிஞ்சிய உடன் பருமன் காணப்படும்; நிலை காணப்படுகின்றது. இதனால் பாடசாலை நேரங்களில் உடற்பயிற்சிகளில் மாணவர்களை அதிகம் ஈடுபடுத்துவதற்கும், பாடசாலை மாணவர்களுக்கு மிகவும் ஆரோக்கியமான உணவுகள் கிடைக்கும் வகையில் புதிய வேலைத்திட்டமொன்றை கல்வி அமைச்சின் சிபார்சின் அடிப்படையில் செயற்படுத்துவதற்கும் சுகாதார, போசணை மற்றும் சுதேச வைத்திய அமைச்சர் (டாக்டர்) ராஜித சேனாரத்ன அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
04. இலங்கையில் திடீர் விபத்துக்கள் காரணமாக ஏற்படும் அபாயங்களை முகாமைத்துவம் செய்வதற்கான தேசிய கொள்கை மற்றும் மூலோபாய சட்டகம் (விடய இல. 09)
இலங்கையில் ஏற்படும் திடீர் விபத்துக்களினால் வருடாந்தம் பல மில்லியன் கணக்கானோர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுவதுடன், சுகாதார துறைக்கு வருடாந்தம் ஒதுக்கப்படும் நிதியில் பெரும்பாலான தொகை அவற்றுக்கே செலவிடப்படுகின்றன. திடீர் விபத்துக்களுக்கு பிரதான காரணமாக வீதி விபத்துக்கள் கருதப்படுகின்றன. விபத்துக்கு உள்ளாகுபவர்களில் அதிகமானோர் 15 வயதுக்கும் 44 வயதுக்கும் இடைப்பட்டவர்கள் என்பது தெரிய வந்துள்ளது. இந்நிலைமையினை தடுத்து கொள்ளும் நோக்கில் தயாரிக்கப்பட்டுள்ள 'இலங்கையில் திடீர் விபத்துக்கள் காரணமாக ஏற்படும் அபாயங்களை முகாமைத்துவம் செய்வதற்கான தேசிய கொள்கை மற்றும் மூலோபாய சட்டகத்தை' ஏற்றுக் கொள்வதற்கும், அக்கொள்கையையும் மூலோபாயங்களையும் செயற்படுத்துவதற்கு தேவையான அரசியல் மற்றும் நிர்வாக ஒத்துழைப்பினை பெற்றுக் கொள்வதற்கும் சுகாதார, போசணை மற்றும் சுதேச வைத்திய அமைச்சர் (டாக்டர்) ராஜித சேனாரத்ன அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
05. குறைபாடுகளுடன் கூடிய கலைஞர்களுக்கான உதவித் தொகை ரூ. 5,000.00 இல் இருந்து ரூ. 10,000.00 வரை அதிகப்படுத்தி பெற்றுக் கொடுத்தல் தொடர்பில் தேவையான மேலதிக நிதி ஏற்பாடுகளை பெற்றுக் கொள்ளல் (விடய இல. 12)
குறைபாடுகளுடன் கூடிய கலைஞர்களுக்கான உதவித் தொகை ரூ. 5,000.00 இல் இருந்து ரூ. 10,000.00 வரை அதிகப்படுத்தி பெற்றுக் கொடுப்பதற்கும், குறித்த பலனை அடையும் கலைஞர்களின் எண்ணிக்கையினை 5,000 வரை அதிகரிப்பதற்கும், குறித்த வேலைத்திட்டத்தினை 2017ம் ஆண்டிலிருந்தே செயற்படுத்துவதற்குமாக உள்ளக அலுவல்கள், வடமேல் அபிவிருத்தி மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் கௌரவ எஸ்.பி. நாவின்ன அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
06. கடற்றொழில், நீரியல் வளங்கள் திணைக்களத்துக்கு மேலதிக இடவசதியினை பெற்றுக் கொடுத்தல் (விடய இல.16)
கடற்றொழில், நீரியல் வளங்கள் திணைக்களத்துக்கு மேலதிக இடவசதியினை பெற்றுக் கொள்வதற்கு கடற்றொழில், நீரியல் வளங்கள் அபிவிருத்தி அமைச்சின் வளாகத்தில் தற்போது செயற்பட்டுவரும் கலக் கண்காணிப்புத் தொகுதி (VMS) கட்டிடத்தை விஸ்தரிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதற்கிணங்க குறித்த கட்டிடத்தை 432 மீட்டர் வர்க்கம் இட வசதியுடன் கூடிய 04 மாடிகளைக் கொண்ட கட்டிடமாக நிர்மாணிப்பதற்கும், அதற்கு தேவையான நிதியினை 2018ம் ஆண்டு வரவு செலவு திட்டத்தின் ஊடாக பெற்றுக் கொள்வதற்கும் கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் அமைச்சர் கௌரவ மஹிந்த அமரவீர அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
07. இலங்கையில் மேம்படுத்தப்பட்ட மரக்கறி விதைகளின் உற்பத்தியை அதிகரிப்பதற்காக இலங்கையின் விவசாய திணைக்களம் மற்றும் பங்களாதேஷpன் வரையறுக்கப்பட்ட லால்டியர் விதைகள் உற்பத்திக் கம்பனி ஆகியன ஒன்றிணைந்த கருத்திட்டத்தை செயற்படுத்துதல் (விடய இல. 18)
இலங்கையில் மேம்படுத்தப்பட்ட மரக்கறி விதைகளின் உற்பத்தியை அதிகரித்தல் மற்றும் பங்களாதேசத்தின் மேம்படுத்தப்பட்ட மரக்கறி விதை உற்பத்திக் தொழில் நுட்பத்தை இலங்கைக்குப் பெற்றுக் கொள்ளல் ஆகிய நோக்கத்தில் இலங்கையின் விவசாய திணைக்களம் மற்றும் பங்களாதேஷpன் வரையறுக்கப்பட்ட லால்டியர் விதைகள் உற்பத்திக் கம்பனி ஆகியன ஒன்றிணைந்த கருத்திட்டத்தை செயற்படுத்துவதற்கு தீர்மானித்துள்ளது. அவ்வேலைத்திட்டத்துக்கு தேவையான நிதியினை வழங்குவதற்கு அக்கம்பனி இணங்கியுள்ளதுடன், விவசாய திணைக்களத்தின் மூலம் அதற்கு தேவையான நிலம் பெற்றுக் கொடுக்கப்பட வேண்டியுள்ளது. வேலைத்திட்டத்துக்காக இரு சாராரும் தமது தொழில்நுட்பத்தையும், அறிவையும் முதலிடவுள்ளனர். அதனடிப்படையில் குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடவும், முன்மொழியப்பட்டுள்ள வேலைத்திட்டத்தினை செயற்படுத்தவும், விவசாய பணிப்பாளர் நாயகத்துக்கு குறித்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுவதற்கான அதிகாரத்தை வழங்குவதற்கும் கமத்தொழில் அமைச்சர் கௌரவ துமிந்த திசாநாயக்க அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
08. தாவர மரபணு வளங்கள் நிலையத்தின் விதைகள் பாதுகாப்புப் பிரிவை விருத்தி செய்தல் (விடய இல. 19)
இலங்கை பல்லினத்துவத்தில் மிகவும் பின்தங்கிய ஒரு நாடாகும். சனத்தொகை அதிகரிப்பு, நகரமயமாக்கல், அபிவிருத்தித் திட்டங்கள் என்பவற்றின் காரணமாக எழுகின்ற பல்லினத்துவ அழிவில் பாதுகாப்பு முக்கியமான ஒரு விடயமாகும். இங்கு விவசாயத்தின் பல்லினத்துவத்தைப் பாதுகாப்பதன் முக்கியத்துவத்தை இனங்கண்டு விவசாயத் திணைக்களம் இதற்காக ஜப்பான் நிதி உதவியைப் பெற்று 1989 ஆம் ஆண்டு தாவர மரபணு வளங்கள் நிலையத்தைத் தாபித்தது. தற்பொழுது தாவர மரபணுக்கள் களஞ்சியத்தினுள் 14,500 தாவர மாதிரிகள் பாதுகாக்கப்பட்டுள்ளன. காலநிலை மாற்றங்களுக்கும் நோய் பீடைகளுக்கும் ஈடுகொடுக்கக்கூடிய, அதிக விளைச்சலைத் தருகின்ற புதிய இனங்களை இனப்பெருக்கம் செய்யம் பொருட்டு ஆராய்ச்சி உத்தியோகத்தர்களுக்கும் பாரம்பரிய விவசாயத்தில் ஈடுபடுகின்ற விவசாயிகளுக்கும் பாதுகாப்பான பயிர் இனங்களைப் பெற்றுக் கொடுப்பதற்கு இந்த தாவர மரபணுக்கள் களஞ்சியம் பாரியளவில் துணைபுரிகின்றது. தாவர மரபணு வளங்களைப் பாதுகாப்பதற்கு 16 குளிர் அளைகள் அடங்கிய ஒரு பாதுகாப்புப் பிரிவு இயங்குகின்றது. குறித்த தாவர மரபணு வளங்கள் நிலையத்தில் தற்பொழுதிருக்கின்ற தாவர மரபணுக் களஞ்சியத்தை பழுதுபார்ப்பதை அவசர தேவையாகக் கருதி நிறைவேற்றிக் கொள்வதற்கும், இதன் முக்கியத்துவத்தை கருத்திற் கொண்டு சர்வதேச ரீதியில் பயன்படுத்தப்படுகின்ற தொழில்நுட்பத்தை பயன்படுத்தி புதுப்பிப்பதற்கும் தேவையான நிதியினை பொதுத் திறைசேரியிலிருந்து பெற்றுக் கொள்வதற்கும் கமத்தொழில் அமைச்சர் கௌரவ துமிந்த திசாநாயக்க அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
09. கிழக்கு மாகாணத்தில் விசேட பொருளாதார மத்திய நிலையம் ஒன்றை நிர்மாணித்தலும் மதியுரை சேவையை பெற்றுக் கொள்ளலும் (விடய இல. 22)
கிழக்கு மாகாணத்தில் விசேட பொருளாதார மத்திய நிலையம் ஒன்றை நிர்மாணிப்பதற்கு 2017 வரவு செலவுதிட்ட முன்மொழிவுகளுக்கு அமைய கிராமிய பொருளாதார அலுவல்கள் அமைச்சுக்கு 300 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதற்காக பொருத்தமான இடமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் களுவாஞ்சிக்குடி மண்முனை தெற்கு பிரதேச செயலாளர் பிரிவில் களுதாவளை 02 கிராம அலுவலர் பிரிவில் அரசிற்கு சொந்தமான நிலப்பகுதி ஒன்று தெரிவு செய்யப்பட்டது. அதனடிப்படையில், களுவாஞ்சிக்குடி மண்முனை தெற்கு பிரதேச செயலாளர் பிரிவில் களுதாவளை பிரிவிற்குட்பட்ட 02 ஏக்கர், 03 ரூட், காணியின் பொருளாதார மத்திய நிலையத்தை நிர்மாணிப்பதற்கும், இவ்விடத்தை கிராமிய பொருளாதார அலுவல்கள் அமைச்சுக்கு கையளிப்பதற்கும், இப்பொருளாதார மத்திய நிலையத்தின் நிர்மாணிப்பணிகளை விரைவாக மேற்கொள்ளும் பொருட்டு, இத்துறையில் அனுபவம் கொண்ட பொறியியல் செயற்பாடுகள் பற்றிய மத்திய மதியுரை பணியகத்தின் ஊடாக மதியுரை சேவையை பெற்றுக் கொள்வதற்கும் கிராமிய பொருளாதார அலுவல்கள் அமைச்சர் கௌரவ பீ. ஹெரிசன் அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
10. மக்கள் வங்கியின் மூலதனத் தொகையை 5 பில்லியன் ரூபாவினால் வலுவூட்டிக் கொள்வதற்கான கோரிக்கை (விடய இல. 23)
இலங்கை மக்களுக்குத் தேவையான அனைத்து வங்கிச் சேவைகளை வழங்குவதோடு, நம் நாட்டுப் பொருளாதாரத்தை மேம்படுத்தும் மேலான நோக்கத்துடன் மக்கள் வங்கி ஸ்தாபிக்கப்பட்டது. 55 வருட களங்கமற்ற வரலாற்று உரிமையினை கொண்ட இவ்வங்கியானது, பொது மக்களின் நலனில் அக்கறை செலுத்தும் ஒரு முக்கியமான வங்கியாகும். 'யுளயைn டீயமெநச' சஞ்சிகையின் 2016 வெளியீட்டுக்கேற்ப ஆசிய வங்கிகளில் 387வது இடத்தை இவ்வங்கி பெற்றுக் கொண்டுள்ளதுடன், 2017 மார்ச் மாத இறுதியில் வங்கிக்குரிய ஒன்று திரட்டிய முழுச்சொத்தின் பெறுமதி 1.4 டிரில்லியனாக கணக்கிடப்பட்டுள்ளது. 2017 மார்ச் இறுதியில் வங்கியின் கிளைகளும், சேவை நிலையங்களினதும் தொகை 737 ஆகும். இவ்வாண்டு மார்ச் மாத இறுதியில் வங்கியின் முழு வாடிக்கையாளர் கணக்குகளினதும் தொகை 18 மில்லியனைக் கிட்டியதாகும். வங்கித்துறையில் நடைமுறையிலிருக்கும் கட்டளைகள், மேற்பார்வை மற்றும் இழப்பீட்டு அபாயம் தடுப்பு முறைகள் போன்வற்றை வலுப்படுத்துவதற்காக, இலங்கை மத்திய வங்கியின் மேற்பார்வையின் கீழ் பாசல் iii நடைமுறைப்படுத்தப்படும். பாசல் iii இணக்கப்பாட்டின் பிரகாரம் மக்கள் வங்கியின் மூலதனத்தை ரூ. 5 பில்லியனாக அதிகரித்துக் கொள்வது தொடர்பில் அரச தொழில்முயற்சிகள் அபிவிருத்தி அமைச்சர் கௌரவ கபீர் ஹசீம் அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
11. சுகததாச தேசிய விளையாட்டுத் கட்டடத் தொகுதியினை விருத்தி செய்தல் (விடய இல. 31,32,33)
சுகததாச தேசிய விளையாட்டுத் கட்டடத் தொகுதி அதிகார சபை இலங்கை விளையாட்டுத் துறையின் அபிவிருத்திக்காக தாபிக்கப்பட்ட பிரதான நிறுவனமாகும். 25 ஆண்டுகளுக்கு முன்னர் ஸ்தாபிக்கப்பட்ட இக்கட்டிடத் தொகுதியினை நவீனமயப்படுத்த காலத்துக்கு காலம் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. இதனடிப்படையில் குறித்த கட்டிட தொகுதியினை மிகவும் முன்னேற்றகரமான நிலைமைக்கு மாற்றுவதற்கு தேவையான பின்வரும் அபிவிருத்தி வேலைத்திட்டங்களை செயற்படுத்துவது தொடர்பில் விளையாட்டுத்துறை அமைச்சர் கௌரவ தயாசிறி ஜயசேகர அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
• சூரியசக்தி வளத் தொகுதியைத் தாபித்தல்
• சுகததாச திறந்த வெளியரங்கு விளையாட்டு மைதானத்தின் மின்ஒளி கோபுரத்தைப் புனரமைத்தல்
• பிரதான விளையாட்டுத் திடலின் உள்ளே மின் விளக்குத் தொகுதி மற்றும் ஒலிபெருக்கித் தொகுதியினை நவீனமயப்படுத்தல்
12. நாட்பட்ட சிறுசீரக நோய்த்தடுப்பிற்கான இலங்கை ஜனாதிபதி செயலணிக்கும், அவுஸ்திரேலிய அணு விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்திற்குமிடையே இனங்காணப்படாத நாட்பட்ட சிறுநீரக பரவுவியல் தொடர்பான ஒரு ஒத்துழைப்பு நிகழ்ச்சித்திட்டம் தொடர்பான நகல் புரிந்துணர்வு ஒப்பந்தம் (விடய இல. 40)
இனங்காணப்படாத நாட்பட்ட சிறுநீரக நோய் இலங்கையில் காணப்படும் முக்கிய தொற்றா நோய்களுள் ஒன்றாக இருப்பதோடு தற்போது அது 11 மாவட்டங்களிலும் 60 பிரதேச செயலகப்பிரிவுகளிலும் பரவியுள்ளது. இது தொடர்பில் ஆராய்ச்சி செயற்பாடுகளை ஸ்திரப்படுத்துவது அத்தியவசியமானதாகும். அதற்கமைய, அவுஸ்திரேலிய அணுவிஞ்ஞான தொழில்நுட்ப நிறுவனம் இந்நோயின் மூலகாரணத்தை கண்டறிவதை நோக்காகக் கொண்ட ஆராய்ச்சிகளில் இலங்கை அரசாங்கத்திற்கு உதவுவதற்கு முன்வந்துள்ளது. இதனப்படையில், அதிமேதகு ஜனாதிபதி அவர்களின் 2017 மே மாதம் 24 திகதி முதல் 26ம் திகதி வரை அவுஸ்திரேலியாவில் மேற்கொண்ட உத்தியோகபூர்வ விஜயத்தின் போது இலங்கை ஜனாதிபதி செயலணிக்கும், அவுஸ்திரேலிய அணு விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்திற்குமிடையே இனங்காணப்படாத நாட்பட்ட சிறுநீரக பரவுவியல் தொடர்பான ஒரு ஒத்துழைப்பு நிகழ்ச்சித்திட்டம் தொடர்பான நகல் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடப்பட்டுள்ளதாக அமைச்சரவையின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது.
13. கடந்த தினங்களில் ஏற்பட்ட திடீர் அனர்த்தங்களினால் சில பிரதேசங்களில் சேர்ந்து கிடக்கின்ற குப்பைகளை அகற்றுதல் (விடய இல. 41)
கடந்த 2017-05-25 மற்றும் 26ம் திகதிகளில் நாட்டின் பல பிரதேசங்களில் பொழிந்த அதிக மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு, மண்சரிவினால் பல உயிர்கள் மற்றும் சொத்துக்களுக்கு பாதிப்பு ஏற்பட்டது. அதேபோன்று அனர்த்தத்திற்கு உள்ளான பகுதிகளில் கழிவுகள் அதிகமாக அங்காங்கு சேர்ந்துள்ளன. அக்கழிவுகளை துரிதமாக அகற்ற வேண்டிய தேவையினை சுகாதார பிரிவுகள் சுட்டிக்காட்டியுள்ளன. அவ்வாறு நிரம்பி வழிகின்ற கழிவுகளை அகற்றுவதற்கு உள்ளுராட்சி மன்றங்களில் போதியளவு வாகனங்கள் மற்றும் உபகரணங்கள் இன்மையினால், அப்பணியினை நிறைவேற்றுவதற்கு தேவையான வாகனங்கள் மற்றும் உபகரணங்களை கொள்வனவு செய்வதற்கு மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் அமைச்சுக்கு 100 மில்லியன் மேலதிக நிதியினை திரட்டிக் கொள்வது தொடர்பில் அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் கௌரவ அநுர பிரியதர்சன யாப்பா மற்றும் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் அமைச்சர் கௌரவ பைசர் முஸ்தபா ஆகியோர் இணைந்து முன்வைத்த யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
14. ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் சிங்கள மொழி கற்கைகள் பிரிவொன்றை ஸ்தாபித்தல் (விடய இல. 42)
சிங்கள மொழி, வரலாறு மற்றும் இலங்கையின் கலாசாரம் என்பவற்றை அறிந்து கொள்வதற்கு ஆவலாக இருக்கும் இந்திய மற்றும் சார்க் நாடுகளுடன் உட்பட ஏனைய நாட்டு மாணவர்களுக்கு வாய்ப்புக்களை ஏற்படுத்திக் கொடுக்கும் நோக்கில், ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் சிங்கள மொழி கற்கைகள் பிரிவொன்றை ஸ்தாபிப்பது தொடர்பில் இந்திய அரசாங்கத்துடன் பேச்சு வார்த்தைகளை மேற்கொள்வது தொடர்பில் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் கௌரவ ரவி கருணாநாயக்க அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
15. பௌத்த தூபி ஒன்றை புதுடில்லியில் நிர்மாணித்தல் (விடய இல. 43)
புதுடில்லியில் அமைக்கப்பட்டுள்ள பௌத்த விகாரையினை மஹாபொதி நிறுவனமானது நிர்வகிப்பதுடன், அவ்விகாரையில் குறிப்பிட்டளவு இடப்பரப்பே காணப்படுகின்றது. வெளிநாடுகளில் இருந்து வருகின்ற பக்தர்கள் தரிசிப்பதற்கு ஓர் தூபியும் அங்கு இல்லை. மேலும் அவர்களுக்கான முறையான வசதிகளும் அங்கு குறைவாகவே காணப்படுகின்றது. அதனடிப்படையில் புதுடில்லியில் பௌத்த தூபி ஒன்றை நிர்மாணிப்பதற்கு தேவையான நிலப்பகுதியொன்றை பெற்றுக் கொள்வதற்காக இந்திய அரசாங்கத்தின் உரிய அதிகாரிகளுடன் கலந்துரையாடுவது தொடர்பில் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் கௌரவ ரவி கருணாநாயக்க அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
16. மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள தற்போதைய நிலைமை (விடய இல. 44)
சவூதி அரேபியா, ஐக்கிய அரபு இராச்சியம், எகிப்து, பஹ்ரைன் மற்றும் யெமன் ஆகிய நாடுகள் மூலம் கட்டார் அரசாங்கத்துடன் காணப்படுகின்ற இராஜதந்திர உறவுகளை நிறுத்தி கொண்மையினால் ஏற்பட்டுள்ள நிலைமை தொடர்பில் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் கௌரவ ரவி கருணாநாயக்க அவர்களினால் முன்வைக்கப்பட்ட தகவல்கள் அமைச்சரவையின் கவனத்திற் கொள்ளப்பட்டது.
17. இலங்கை கலாச்சார மத்திய நிலையமொன்றை புதுடில்லியில் ஸ்தாபித்தல் (விடய இல. 45)
இலங்கை தமது நாட்டுக்கே உரிய பல கலாசார முக்கிய அம்சங்களை கொண்ட நாடாகும். இலங்கையின் நடனக் கலை, இலங்கையின் சங்கீதம், இலங்கையின் பாரம்பரிய கலைகள் மற்றும் நுட்ப முறைகள் உட்பட இலங்கைக்கே உரிய பல்வேறு சிறப்பான கலாசாரங்களை விருத்தி செய்யும் இடமாக பயன்படுத்துவதற்கும், பல்வேறு கலாசார உற்சவங்களை நடாத்தும் நோக்கில் 'இலங்கை கலாசார மத்திய நிலையமொன்றை' புதுடில்லி நகரில் ஸ்தாபிப்பது தொடர்பில் முன்வைக்கப்பட்டுள்ள யோசனைகளை செயற்படுத்துவதற்கு தேவையான இட வசதிகளை பெற்றுக் கொள்வதற்காக இந்திய அரசாங்கத்தின் உரிய அதிகாரிகளுடன் கலந்துரையாடுவது தொடர்பில் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் கௌரவ ரவி கருணாநாயக்க அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.