01.பூநகரி பிரதேசத்தில் 240 மெகாவொட் கொள்ளவைக் கொண்ட காற்று சக்தி மற்றும் 800 மெகாவொட் கொள்ளவைக் கொண்ட சூரிய சக்தி கலப்பு மின்னுற்பத்தி பேட்டையினை நிலையத்தினை நிர்மாணித்தல் (விடய இல. 12)
புதுப்பிக்கத்தகு சக்தி வளங்களை பயன்படுத்தி குறிப்பிடத்தக்க அளவு மின்சக்தியினை தேசிய மின்சார அமைப்பில் இணைத்துக் கொள்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. காற்று சக்தி மற்றும் சூரிய சக்தி ஆகியவை மூலம் மின்சாரத்தினை பெற்றுக் கொள்வதற்கு உகந்த பிரதேசமாக வட மாகாணத்தில் உள்ள பூநகரி பிரதேசமானது இலங்கை நிலைபேறுதகு சக்தி வள அதிகார சபையினால் இனங்காணப்பட்டுள்ளது. அதனடிப்படையில் 240 மெகாவொட் கொள்ளவைக் கொண்ட காற்று சக்தி மற்றும் 800 மெகாவொட் கொள்ளவைக் கொண்ட சூரிய சக்தி மின் உற்பத்தி நிலையங்களினைக் கொண்ட கலப்பு மின்னுற்பத்தி பேட்டையினை பூநகரி பிரதேசத்தில் நிர்மாணிக்கும் வேலைத்திட்டத்தினை 03 கட்டங்களாக செயற்படுத்துவது தொடர்பில் மின்வலு மற்றும் புதுப்பிக்கத்தகு சக்தி வளங்கள் அமைச்சர் கௌரவ ரன்ஜித் சியபலாப்பிட்டிய அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
02. காணி மறுசீரமைப்பு ஆணைக்குழு வசம் உள்ள இடங்களை பொது பணிகளுக்காக உரிமை மாற்றிக் கொள்ளல் (விடய இல. 16)
காணி மறுசீரமைப்பு ஆணைக்குழு வசம் உள்ள பின்வரும் இடங்களை பொது பணிகளுக்காக உரிமை மாற்றிக் கொள்வது தொடர்பில் காணி அமைச்சர் முன்வைத்த யோசனைகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் கிடைத்துள்ளது.
• பிரஜைகள் சாலையொன்றை நிர்மாணிப்பதற்காக கடுவலை, கொரதொட பிரதேசத்தில் உள்ள 07.31 பேர்ச்சஸ் காணியினை, கடுவலை மாநகர சபைக்கு உரிமை மாற்றிக் கொள்ளல்.
• கூட்டுறவு வங்கி கட்டிடம் ஒன்றை நிர்மாணிப்பதற்காக சிலபாம் பிரதேசத்தில் உள்ள 05 பேர்ச்சஸ் காணிப்பகுதியினை வரையறுக்கப்பட்ட சிலாபம் பல் சேவை கூட்டுறவு சங்கத்துக்கு உரித்தாக்கிக் கொள்ளல்.
03. யடவத்தை பொலிஸ் நிலையத்தை நிர்மாணிப்பதற்காக இலங்கை பொலிசுக்கு காணியொன்றை பெற்றுக் கொடுத்தல் (விடய இல. 18)
யடவத்தை பொலிஸ் நிலையத்தை நிர்மாணிப்பதற்காக உட புஸ்ஸெல்லாவ பெருந்தோட்ட கம்பனிக்கு உரித்தான யடவத்தை தோட்டத்தின் 02 ஏக்கர், 01 ரூட், 35 பேர்ச்சஸ் காணிப்பகுதியினை இலங்கை பொலிசுக்கு பெற்றுக் கொடுப்பது தொடர்பில் சட்டமும் ஒழுங்கும் மற்றும் தென் மாகாண அபிவிருத்தி அமைச்சர் கௌரவ சாகல ரத்னாயக அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
04. இலங்கைக்கான முதலீடுகளை அதிகரித்துக் கொள்வதற்காக மறுசீரமைப்புகளை செயற்படுத்தல் (விடய இல. 19)
இலங்கைக்கான முதலீடுகளை அதிகரித்துக் கொள்வதற்காக பல்வேறு மறுசீரமைப்புகளை செயற்படுத்த வேண்டியுள்ளது. அதற்காக பல்வேறு தொடர்புபட்ட அமைச்சுக்கள் மற்றும் நிர்வனங்களுக்கு இடையில் தொடர்பு மற்றும் ஒத்துழைப்பு தொடர்பில் காணப்படும் பிரச்சினைகளை தீர்ப்பதற்கும், விரிவான செயற்றிட்டங்களுடன் குறித்த பணிகளுக்காக பொறுப்புக்கள் மற்றும் தலைமைத்துவம் கிடைக்கும் வகையில் முறையான செயற்றிட்டம் ஒன்றை உருவாக்குவதற்கு ஏதுவான வகையிலும் பொருத்தமான செயன்முறையொன்றை அறிமுகப்படுத்துவதற்கான தேவை எழுந்துள்ளது. அதனடிப்படையில் இது தொடர்பில் அர்ப்பணிக்கின்ற குழுவொன்றுடன் செயலகமொன்றை அபிவிருத்தி உபாயமுறைகள் சர்வதேச வர்த்தக அமைச்சில் உருவாக்குவதற்கும், குறித்த நிர்வனங்களுக்கு இடையில் தொடர்பினை ஏற்படுத்துவதற்காக 10 தொழில்நுட்ப செயலணிகளை அமைப்பதற்கும், பிரேரிக்கப்பட்டுள்ள சட்டரீதியான மறுசீரமைப்பிற்கு தேவையான சட்ட வரைபொன்றை தயாரிக்குமாறு சட்டமாதிபர் திணைக்களத்துக்கு ஆலோசனை வழங்குவதற்கும் அபிவிருத்தி உபாயமுறைகள் சர்வதேச வர்த்தக அமைச்சரினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
05. இந்து சமுத்திரம் தொடர்பான இரண்டாவது மாநாடு - 2017 (விடய இல. 23)
பல்வேறு சர்வதேச நிறுவனங்கள் இணைந்து நடாத்தும் 'இந்து சமுத்திர மாநாடு – 2017' இனை ஆகஸ்ட் மாதம் 31ம் திகதியிலிருந்து செப்டெம்பர் மாதம் 02ம் திகதி வரை கொழும்பில் நடாத்துவதற்கு இந்திய மன்றத்தின் மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இம்மாநாட்டில் வலயத்தனி பாதுகாப்பு, பொருளாதாரம், கலாச்சாரம் மற்றும் சூழல் காரணிகள் தொடர்பில் அவதானம் செலுத்தப்படவுள்ளது. 30 நாடுகளுக்கும் அதிகமான நாடுகளின் உயர் மட்ட தலைவர்கள் மற்றும் சிறப்பதிதிகள் அம்மாநாட்டில் கலந்து கொள்ளவுள்ளனர். அதனடிப்படையில் இந்திய மன்றத்தின் ஏற்பாட்டில் அம்மாநாட்டினை கொழும்பில் நடாத்துவது தொடர்பில் கௌரவ பிரதமர் முன்வைத்த யோசனைகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
06. சர்வதேச ஒத்துழைப்புக்கான ஒரே பாதை, ஒரே இலக்கு தொடர்பான மன்றத்தின் (Belt and Road Forum for International Cooperation) தலைவர்களின் வட்டமேசை கலந்துரையாடல் தொடர்பான உத்தியோகபூர்வ அறிவித்தல் (விடய இல.24)
மக்கள் சீனக்குடியரசின் ஜனாதிபதியவர்களின் தலைமையில் 2017ம் ஆண்டு மே மாதம் 15ம் திகதி சீனாவில் இடம்பெற்ற மேற்கூறப்பட்ட அமைப்பின் தலைவர்களின் வட்டமேசை கலந்துரையாடலில் கௌரவ பிரதமர் அவர்கள் கலந்து கொண்டார் எனவும், அவ்வட்டமேசை கலந்துரையாடலில் ரஷ்யா, ஸ்பெய்ன், சுவிட்சர்லாந்து, ஆர்ஜன்டினா, பெலோரஷ;யா, சீலி, இந்துனேஷpயா, லாவோஸ், பிலிப்பைன், இத்தாலி, துர்கி, வியட்நாம், கம்போச்சியா, பீஜி, ஹங்கேரி, மலேசியா, மியன்மார், பாகிஸ்தான் மற்றும் போலந்து ஆகிய நாடுகளின் அரச தலைவர்கள் கலந்துகொண்டதாகவும் அமைச்சரவையின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது. மேலும் குறித்த கலந்துரையாடலின் இறுதியில் ஒரே பாதை, ஒரே இலக்கு தொடர்பான ஆரம்ப முயற்சி உட்பட அபிவிருத்தி உபாய முறைகள், பொருளாதார அபிவிருத்தியினை விருத்தி செய்தல், பொருளாதார ஒத்துழைப்பு விருத்தி, விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப புதிய உற்பத்திகள் மற்றும் வலய பொருளாதார ஒத்துழைப்புக்கள் ஆகிய துறைகளில் சர்வதேச ஒத்துழைப்பினை விருத்தி செய்யும் நோக்கில் அரச தலைவர்கள் மூலம் வெளியிடப்பட்ட ஒன்றிணைந்த உத்தியோகபூர்வ அறிக்கை உள்ளிட்ட அம்சங்களை அமைச்சரவையின் மூலம் மேலும் கவனத்திற் கொள்ளப்பட்டது.
07. பின்லாந்து அரசாங்கத்தின் மூலம் பெற்றுக் கொடுக்கப்படுகின்ற சலுகை அடிப்படையிலான நிதியுதவிகளை பெற்றுக் கொள்ளல் (விடய இல. 25)
'அரச துறைகளில் முதலீட்டு வசதிகள் வேலைத்திட்டம்' எனும் பின்லாந்து அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் திட்டத்தின் கீழ் இலங்கைக்கு சலுகை அடிப்படையிலான நிதியுதவிகளை வழங்க பின்லாந்து அரசாங்கத்தின் மூலம் விருப்பம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில் இலங்கையின் அபிவிருத்தி வேலைத்திட்டங்களுக்கு தேவையான நிதியினை பயன்படுத்திக் கொள்ளும் நோக்கில் 30 மில்லியன் யூரோ நிதியினை பின்லாந்து அரசாங்கத்திடம் இருந்து பெற்றுக் கொள்வதற்கான ஒப்பந்தம் ஒன்றில் கைச்சாத்திடுவது தொடர்பில் தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார விவகாரங்கள் அமைச்சர் எனும் ரீதியில் கௌரவ பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
08. நுவரெலியாவில் உயரத்திலிருந்து பாயும் விளையாட்டுத் தொகுதியினை நிர்மாணிப்பதற்கான நிதி உதவியினைப் பெற்றுக் கொள்ளல் (விடய இல. 26)
நுவரெலியாவில் உயரத்திலிருந்து பாயும் விளையாட்டுத் தொகுதியினை நிர்மாணிப்பதற்கான ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுவதற்கு 2016ம் ஆண்டு 20ம் திகதி இடம்பெற்ற அமைச்சரவையில் அனுமதி வழங்கப்பட்டது. அவ்வேலைத்திட்டத்தினை செயற்படுத்துவதற்கு தேவையான கடன் வசதியினை பெற்றுக் கொள்வதற்காக குறித்த ஒப்பந்த நிர்வனத்துடன் கடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்வதற்கும், கடன் வசதியினை பெற்றுக்கொள்வதற்காக குறித்த நிர்வனத்துடன் கடன் ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுவதற்கும் தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார விவகாரங்கள் அமைச்சர் எனும் ரீதியில் கௌரவ பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
09. தேசிய சந்தையில் அரிசியின் விலை துரிதமாக அதிகரித்தல் (விடய இல. 31)
தேசிய நெற்பயிர் செய்கை விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் மற்றும் நுகர்வோருக்கு வசிதியான விலையில் அரிசியினை கொள்வனவு செய்வதற்கு ஏதுவான முறையில் அரிசியினை இறக்குமதி செய்வதற்கு தனியார் துறையினருக்கு அனுமதி வழங்குவதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளது. அவ்வாறு இறக்குமதி செய்யப்பட வேண்டிய அரிசியின் அளவானது, வாழ்க்கைச் செலவு தொடர்பான அமைச்சரவை உபகுழுவின் மூலம் தீர்மானிக்கப்பட வேண்டும் எனவும் அமைச்சரவையின் மூலம் மேலும் தீர்மானிக்கப்பட்டது.
10. நாட்டினுள் வாழும் இனங்களுக்கு இடையில் சமத்துவத்துக்கு பாதிப்பு ஏற்படும் வகையிலான சம்பவங்கள் (விடய இல. 32)
கடந்த காலங்களில் ஏற்பட்ட நாட்டினுள் வாழும் இனங்களுக்கு இடையில் சமத்துவத்துக்கு பாதிப்பு ஏற்படும் வகையிலான சம்பவங்கள் தொடர்பில் அமைச்சரவையின் கவனம் செலுத்தப்பட்டது. அவ்வாறான சம்பவங்கள் மற்றும் நடத்தைகள் எதிர்காலத்தில் ஏற்படாது இருக்கும் வகையில் உரிய நடவடிக்கைகள் எடுப்பதற்கான அவசியம் குறித்தும் அமைச்சரவையின் கவனம் செலுத்தப்பட்டது. அதனடிப்படையில் அமைச்சரவையின் மூலம் பின்வரும் தீர்மானங்கள் எடுக்கப்பட்டன.
• நாட்டினுள் வாழும் இனங்களுக்கு இடையில் சமத்துவத்துக்கு பாதிப்பு ஏற்படும் வகையிலான சம்பவங்கள் தொடர்பில் பொருப்புடைய பிரிவினருக்கு எதிராக, நடைமுறையிலுள்ள சட்டத்தின் கீழ் சட்ட ரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கும், சட்டத்தினை செயற்படுத்தும் குறித்த அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கல்.
• அவ்வாறான சம்பவங்கள் தமது அதிகார பிரதேசங்களில் ஏற்படாதிருக்கும் வகையில் நடவடிக்கைகளை முன்னெடுக்கும் படி அனைத்து பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகளுக்கும் ஆலோசனை வழங்குமாறு பொலிஸ்மாதிபருக்கு அறிவுறுத்தல்
11. வெள்ளவத்தை பிரதேசத்தில் கட்டிடமொன்று இடிந்து விழுந்தமையினால் ஏற்பட்ட பாதிப்புக்கள் (விடய இல. 33)
வெள்ளவத்தை பிரதேசத்தில் கட்டிடமொன்று இடிந்து விழுந்தமையினால் ஏற்பட்ட பாதிப்புக்கள் தொடர்பிலும், அவ்வாறான அனர்த்தங்கள் எதிர்காலத்தில் ஏற்படாதிருக்கும் என உறுதிப்படுத்துவதற்கு உகந்த நடவடிக்கைகளின் தேவை தொடர்பிலும் அமைச்சரவையின் கவனத்திற் கொள்ளப்பட்டது.
குறித்த கட்டிடத்தின் நிர்மாணப்பணிகளுக்கு உரிய அனுமதி பெற்றுக் கொள்ளப்படவில்லை எனவும், சட்ட விரோதமாக அக்கட்டிடத்தை நிர்மாணிப்பதற்கு அனுமதி வழங்கிய பொறுப்பான அதிகாரிகள் தொடர்பிலும் உரிய விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், அவ்விசாரணைகளின் முடிவுகளின் படி குறித்த பொறுப்புள்ள அதிகாரிகளுக்கு எதிராக சட்ட ரீதியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும், எதிர்காலத்தில் அவ்வாறான சம்பவங்கள் ஏற்படாது இருக்கும் வகையில் குறித்த பொறுப்புள்ள அதிகாரிகளுக்கு ஏற்கனவே ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாகவும் பாரிய நகரம் மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் கௌரவ பாட்டலி சம்பிக்க ரணவக்க அவர்களினால் முன்வைக்கப்பட்ட தகவல்கள் தொடர்பில் அமைச்சரவையின் கவனம் செலுத்தப்பட்டது.