• #163, கிருலபன எவனியூ, கொழும்பு 05, இ லங்கை​
  • +94 112 51 5759

engsin

அமைச்சரவை தீர்மானங்கள் 21.02.2017

01.மொரகஹகந்தை/ களுகங்கை அபிவிருத்திக் கருத்திட்டம் காரணமாகப் பாதிப்புக்குள்ளாகும்
காணி உரிமையாளர்களுக்கு செலுத்தப்படவுள்ள மேலதிக நஷ்ட ஈட்டுக் கொடுப்பனவுகளை துரிதப்படுத்தல் (விடய இல. 09)
 
மொரகஹகந்தை/ களுகங்கை அபிவிருத்திக் கருத்திட்டம் காரணமாகப் பாதிப்புக்குள்ளாகும் காணி உரிமையாளர்களுக்கு செலுத்தப்படவுள்ள மேலதிக நஷ்ட ஈட்டுக் கொடுப்பனவுகளை 2017-2018 காலப்பகுதியில் முழுமையாக செலுத்தி முடிப்பது தொடர்பில் மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் அமைச்சர் எனும் ரீதியில் அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
 
02. பொது மக்கள் பாதுகாப்பை மேம்படுத்துதல் மற்றும் பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கைகளை வலுவூட்டுதல் ஆகியவற்றுக்காக ஜப்பான் நாட்டிலிருந்து நிதியுதவியினை பெற்றுக் கொள்ளல் (விடய இல. 11)
 
பொது மக்கள் பாதுகாப்பை மேம்படுத்துதல் மற்றும் பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கைகளை வலுவூட்டுதல் ஆகிய செயற்றிட்டங்களை செயற்படுத்துவதற்காக ஜப்பான் நாட்டிடமிருந்து 250 மில்லியன் ஜப்பானிய யென் நிதியுதவியினை பெற்றுக் கொள்வதற்கான பரிமாற்றக் குறிப்புக்களில் கைச்சாத்திடுவது தொடர்பில் தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார விவகாரங்கள் தொடர்பான அமைச்சர் எனும் ரீதியில் கௌரவ பிரதமர் ரணில் விக்ரமசிங்க அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
 
03. இலங்கை நிதித்துறையை நவீனமயப்படுத்தும் நோக்கில் நிதித்துறையினை விருத்தி செய்யும் வேலைத்திட்டத்தினை செயற்படுத்தல் (விடய இல. 13)
 
இலங்கை நிதித்துறையை நவீனமயப்படுத்தும் நோக்கில் நிதித்துறையினை விருத்தி செய்யும் வேலைத்திட்டங்கள் மூன்றினை செயற்படுத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. அதனடிப்படையில், நிதி அமைச்சு, இலங்கை மத்திய வங்கி, பிணையங்கள் மற்றும் செலாவணி ஆணைக்குழு, தேசிய காப்புறுதிச் சபை, வெளிநாட்டு வளங்கள் திணைக்களம் ஆகியவற்றின் மூலம் 2017-2022 கால எல்லைக்குள் நிதித் துறையை மேம்படுத்தும் கருத்திட்டங்களை செயற்படுத்துவதற்கும், அதற்காக உலக வங்கியின் சர்வதேச அபிவிருத்தி நிறுவனத்தினால் 75 மில்லியன் அமெரிக்க டொலர்களை மிகை அளவிலான வசதிகளின் கீழ் பெற்றுக் கொள்வதற்கும் தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார விவகாரங்கள் தொடர்பான அமைச்சர் எனும் ரீதியில் கௌரவ பிரதமர் ரணில் விக்ரமசிங்க அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
 
04. காட்டுயானைகளால் ஏற்படும் சேதங்களுக்கான இழப்பீட்டுத் திட்டத்தின் கீழ் தனிமனித உயிர் சேதங்களுக்காக செலுத்தப்படும் இழப்பீட்டுத் தொகை திருத்தம் செய்தல் (விடய இல. 15)
 
காட்டுயானைகளால் ஏற்படும் சேதங்களுக்கான இழப்பீட்டுத் திட்டத்தின் கீழ் தனி மனித உயிர் சேதங்களுக்காக செலுத்தப்படும் இழப்பீட்டுத் தொகையினை 200,000 ரூபாவிலிருந்து 500,000 ரூபா வரை அதிகரிப்பது தொடர்பில் வலுவாதார அபிவிருத்தி மற்றும் வனசீவராசிகள் அமைச்சர் கௌரவ காமினி ஜயவிக்ரம பெரேரா அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
 
05. இயற்கை வளப் பேணுகை மற்றும் வனசீவராசிகள் - மனிதர்களுக்கு இடையில் அமைதி நிலையைக் கட்டியெழுப்புதற்கான ஒரு நிலைபேறான தீர்வை ஏற்படுத்துவதற்கு இலங்கை சாரணர் இயக்கத்தின் உதவியைப் பெற்றுக் கொள்ளல் (விடய இல. 16)
 
இயற்கை வளப் பேணுகை மற்றும் வனசீவராசிகள் - மனிதர்களுக்கு இடையில் அமைதி நிலையைக் கட்டியெழுப்புதற்கான ஒரு நிலைபேறான தீர்வை ஏற்படுத்துவதற்கு இலங்கை சாரணர் இயக்கத்தின் உதவியைப் பெற்றுக் கொள்வது தொடர்பில் பயிற்சி நெறியொன்றினை கல்வித் திணைக்களத்துடன் இணைந்து தொடர்ச்சியாக 03 வருடகாலம் இலங்கை வனசீவராசிகள் நம்பிக்கைப் பொறுப்பின் ரந்தெனிகல பயிற்சி நிலையத்தில் நடாத்துவது தொடர்பில் வலுவாதார அபிவிருத்தி மற்றும் வனசீவராசிகள் அமைச்சர் கௌரவ காமினி ஜயவிக்ரம பெரேரா அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
 
06. கைத்தொழில் பிணக்குகள் சட்டத்தைத் திருத்தம் செய்தல் (விடய இல.18)
 
தொழில் நியாய மன்றுகளின் முன்னிலையில் சம்பந்தப்பட்ட தரப்பினர்களை பிரதிநிதித்துவம் செய்தல் மற்றும் ஆஜராதல் என்பவற்றை உள்ளடக்கும் வகையில் கைத்தொழில் பிணக்குகள் சட்டத்தை திருத்தம் செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில் சட்டத்தரணிகள் அல்லாதோர், தொழில் நியாய மன்றுகளின் முன்னிலையில் சம்பந்தப்பட்ட தரப்பினர்களின் சார்பாக பிரதிநிதித்துவம் செய்தல் மற்றும் ஆஜராதல், சட்டத்தரணிகள், தொழில் ஆணையாளர் அல்லது தத்துவமளிக்கப்பட்ட அலுவலரின் முன்னிலையில் நடாத்தப்படுகின்ற விசாரணை நடவடிக்கைகளில் ஆஜராதல் மற்றும், தொழில் நியாய மன்றுகளின் தவிசாளர்களுக்கு தமது உத்தரவுகளை அமுல்படுத்துவதற்கு அதிகாரமளித்தல் ஆகிய விடயங்கள் தொடர்பாக சட்டவரைவைத் தயார் செய்வதற்கு சட்டவரைஞருக்கு அறிவுரை வழங்குவது தொடர்பில் தொழில் மற்றும் தொழிற்சங்க உறவுகள் அமைச்சர் கௌரவ டபிள்யு.டி.ஜே. செனவிரத்ன அவர்கள் மற்றும் நீதியமைச்சர் கலாநிதி விஜயதாச ராஜபக்ஷ அவர்கள் ஆகியோர் இணைந்து முன்வைத்த யோசனைகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
 
07. இலங்கை தேசிய வைத்தியசாலையை நவீன தொழில் நுட்பமிக்க வைத்தியசாலை ஒன்றாக அபிவிருத்தி செய்தல் (விடய இல. 20)
 
இலங்கை தேசிய வைத்தியசாலையை நவீன தொழில் நுட்பமிக்க வைத்தியசாலை ஒன்றாக அபிவிருத்தி செய்வதற்காக துரிதமாக முன்னெடுக்கப்பட வேண்டிய கீழ்க்காணும் தேவைகளை மேற்கொள்வது தொடர்பில் சுகாதார போஷhக்கு மற்றும் சுதேஷ வைத்திய அமைச்சர் கௌரவ ராஜித சேனாரத்ன அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
 
• நோயாளர்களுக்கு மற்றும் செயற்குழுவினருக்கு பூரண வசதிகளை பெற்றுக் கொடுக்கும் நோக்கில் விக்டோரியா மற்றும் பண்டாரநாயக்க ஆகிய கட்டிடங்களை நவீனமயப்படுத்தல்
 
• பான்ஸ் பிரதேசத்திலுள்ள மருத்துவர்களின் தங்குமிட விடுதிகளை புதுப்பித்தல்
 
08. கொழும்பு டி சொய்சா மகளீர் வைத்தியசாலையில் சிசுக்களுக்கான நிலையமொன்றை நிறுவுவதற்கான திட்டம் (விடய இல. 25)
 
கொழும்பு டி சொய்சா மகளீர் வைத்தியசாலையில் சிசுக்களுக்கான நவீன சிகிச்சை முறைகள் மற்றும் விசேட சிகிச்சை சேவையினை தரமான முறையில் வழங்குவதற்கு ஏதுவான முறையில் சிசுக்களுக்கான நிலையமொன்றை பிரான்ஸ் நாட்டின் நிதியுதவியுடன் குறித்த வைத்தியசாலையில் நிறுவுவது தொடர்பில் சுகாதார போஷhக்கு மற்றும் சுதேஷ வைத்திய அமைச்சர் கௌரவ ராஜித சேனாரத்ன அவர்களினால் அமைச்சரவையில் முன்வைக்கப்பட்டது. குறித்த செயன்முறை தொடர்பில் அமைச்சரவையின் கவனத்திற் கொள்ளப்பட்டது.
 
09. கடன் தகவல் சேவை வழங்குநர்கள் தொடர்பான வரைவு சட்டமூலம் (விடய இல. 25)
 
கடன் தகவல் சேவை வழங்குநர்கள் தொடர்பான வரைவு சட்டமூலத்தினை வர்த்தமானியில் பிரசுரித்து பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பது தொடர்பில் நிதியமைச்சர் கௌரவ ரவி கருணாநாயக்க அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
 
10.அரசுடமை விசேட உட்கட்டமைப்பு வசதிகள் கம்பனி (SIFCO) ஒன்றின் மூலம் அத்தியவசியமான உட்கட்டமைப்பு வசதிகள் கருத்திட்டத்திற்கான நிதியை வழங்குதல் (விடய இல. 26)
 
இலங்கை அரசாங்கத்தினால் வீதி அபிவிருத்தி அதிகார சபைக்கும் சொந்தமான கம்பனி சட்டத்தின் கீழ் பொது வரையறுக்கப்பட்ட கம்பனியொன்றாக அரசுடமை விசேட உட்கட்டமைப்பு வசதிகள் கம்பனியினை ஸ்தாபிப்பதற்கும், சகல அதிவேக நெடுஞ்சாலைகளின் சொத்துக்களையும், எதிர்காலத்தில் ஸ்தாபிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ள அதிவேக நெடுஞ்சாலைகளின் சொத்துக்களையும் குறித்த கம்பனிக்கு உரித்துடைமையாக்குவதற்கும் குறித்த சொத்துக்களை காட்டி எதிர்காலத்தில் மேற்கொள்வதற்கு எதிர்பார்க்கப்பட்டுள்ள அதிவேக நெடுஞ்சாலைகளுக்கான நிதியினை பெற்றுக் கொள்வதற்காக பிணையாக பயன்படுத்துவதற்குமாக நிதியமைச்சர் கௌரவ ரவி கருணாநாயக்க அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
 
11.இலங்கை அரசாங்கத்தினால் வெளியிடப்பட்ட பிணையங்களின் யூரோ தீர்ப்பனவுகள் (விடய இல. 27)
 
பல்வகைமை பொருந்திய முதலீடுகளை அடிப்படையினை உருவாக்கி வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு அரசாங்கத்தினால் வெளியிடப்படுகின்ற பிணைகளை நேரடியாக எவ்வித தடைகளுமின்றி பெற்றுக் கொள்வதற்கான வாய்ப்புக்களை ஏற்படுத்திக் கொடுக்கும் நோக்கில், இலங்கை அரசாங்கத்தினால் வெளியிடப்பட்ட பிணையங்களின் யூரோ தீர்ப்பனவுகள் வசதிகளை பெற்றுக் கொடுப்பதற்கு தேவையான உள்நாட்டுச் சட்டம் மற்றும் ஒழுங்குமுறைப்படுத்தல் கட்டமைப்பினை உருவாக்குவது தொடர்பில் நிதியமைச்சர் கௌரவ ரவி கருணாநாயக்க அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
 
12. 2007ம் ஆண்டின் 07ம் இலக்க கம்பனிகள் சட்டத்தின் கீழ் அட்டவணைப்படுத்தப்பட்டுள்ள பிரமாணங்கள் (விடய இல. 28)
 
2007ம் ஆண்டின் 07ம் இலக்க கம்பனிகள் சட்டத்தின் கீழ் அட்டவணைப்படுத்தப்பட்டுள்ள பிரமாணங்களை அங்கீகாரத்தினை பெற்றுக் கொள்ளும் நோக்கில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கு கைத்தொழில் மற்றும் வணிக அமைச்சர் கௌரவ ரிஷாத்; பதியூதீன் அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
 
13. நகர திண்ம கழிவுப்பொருட்களினை தகனம் செய்வதன் மூலம் பெறப்படுகின்ற மின்சாரத்தினை கொள்வனவு செய்வதற்காக செயன்முறையொன்றை அறிமுகம் செய்தல் (விடய இல. 29)
 
நகர திண்ம கழிவுப்பொருட்களினை தகனம் செய்வதன் மூலம் பெறப்படுகின்ற மின்சாரத்தினை கொள்வனவு செய்வதற்காக சாதாரண பெறுமானம் செலுத்துகை முறையினை செயற்படுத்துவதற்காக மாநகரம் மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் கௌரவ பாட்டலி சம்பிக்க ரணவக்க அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
 
14. இரத்தினபுரி புதிய நகரில் அமைந்துள்ள காணித்துண்டொன்றில் கலாச்சார மத்திய நிலையமொன்றை அமைப்பதற்காக பெற்றுக் கொள்ளல் (விடய இல. 31)
 
இரத்தினபுரி புதிய நகரில் அமைந்துள்ள ஒரு ஏக்கர் காணித்துண்டொன்றில் கலாச்சார மத்திய நிலையமொன்றை அமைப்பதற்காக இரத்தினபுரி மாவட்ட செயலாளருக்கு ஒதுக்கீடு செய்வது தொடர்பில் மாநகரம் மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் கௌரவ பாட்டலி சம்பிக்க ரணவக்க அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
 
15. பொதுசன சார்பான சீர்த்திருத்தத் திணைக்களமொன்றை அமைப்பதற்காக இரத்தினபுரி புதிய நகரில் அமைந்துள்ள அபிவிருத்தி அதிகாரசபைக்குச் சொந்தமான காணித்துண்டொன்றினை பெற்றுக் கொள்ளல் (விடய இல. 33)
 
பொதுசன சார்பான சீர்த்திருத்தத் திணைக்களமொன்றை அமைப்பதற்காக இரத்தினபுரி புதிய நகரில் அமைந்துள்ள அபிவிருத்தி அதிகாரசபைக்குச் சொந்தமான 20 பேர்ச்சஸ் காணித்துண்டொன்றினை இரத்தினபுரி பிரதேச செயலாளரினால் பொதுசன சார்பான சீர்த்திருத்தத் திணைக்களத்திற்கு ஒதுக்கீடு செய்வது தொடர்பில் மாநகரம் மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் கௌரவ பாட்டலி சம்பிக்க ரணவக்க அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
 
16.தேசிய சனசமூக நீர்வளங்கள் திணைக்களத்தினை அமைப்பதற்காக இரத்தினபுரி புதிய நகரில் அமைந்துள்ள அபிவிருத்தி அதிகாரசபைக்குச் சொந்தமான காணித்துண்டொன்றினை பெற்றுக் கொள்ளல் (விடய இல. 34)
 
தேசிய சனசமூக நீர்வளங்கள் திணைக்களத்தினை அமைப்பதற்காக இரத்தினபுரி புதிய நகரில் அமைந்துள்ள அபிவிருத்தி அதிகாரசபைக்குச் சொந்தமான ரூட் 01 பேர்ச்சஸ் 29 இனை காணித்துண்டொன்றினை இரத்தினபுரி பிரதேச செயலாளரினால் தேசிய சனசமூக நீர்வளங்கள் திணைக்களத்திற்கு ஒதுக்கீடு செய்வது தொடர்பில மாநகரம் மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் கௌரவ பாட்டலி சம்பிக்க ரணவக்க அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
 
17. ஹோமாகம, பிற்றபன, மாஹேனவத்த காணியில் காணித்துண்டுப் பகுதிகளை விஞ்ஞான மற்றும் ஆய்வு அமைச்சுக்கும், ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்திற்கும் மற்றும் மொரட்டுவை பல்கலைக்கழகத்திற்கும் ஒதுக்கீடு செய்தல் (விடய இல. 35)
 
விஞ்ஞான மற்றும் தொழில்நுட்பம் தொடர்புடைய அபிவிருத்தி நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்வதற்காக வேண்டி ஹோமாகம, பிற்றபன, மாஹேனவத்த பகுதியில் உள்ள 34 ஹெக்டேயார் காணித்துண்டொன்றை பெற்றுக் கொள்வதற்கு நகர அபிவிருத்தி அதிகாரசபையினால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. அக்காணித்தொகுதியில் 46 ஏக்கர் துண்டினை அரச தலைமை மதிப்பீட்டாளரின் மதிப்பீட்டுக்கு இணங்க விஞ்ஞான மற்றும் ஆய்வு அமைச்சுக்கும், ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்திற்கும் மற்றும் மொரட்டுவை பல்கலைக்கழகத்திற்கும் ஒதுக்கீடு செய்வது தொடர்பில் மாநகரம் மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் கௌரவ பாட்டலி சம்பிக்க ரணவக்க அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
 
18. மீனவ பிரஜைகளின் வாழ்வாதாரத்தை விருத்தி செய்தல் மற்றும் வறுமையினை ஒழித்தல் வேலைத்திட்டத்தை செயற்படுத்தல் (விடய இல. 36)
 
மீனவ பிரஜைகளின் வாழ்வாதாரத்தை விருத்தி செய்தல் மற்றும் வறுமையினை ஒழித்தல் ஆகியவற்றினை அடிப்படையாகக் கொண்ட 30 வேலைத்திட்டங்களை, 2017ம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் ஒதுக்கப்பட்ட 1,200 மில்லியன் ரூபாய் நிதியினை பயன்படுத்தி செயற்படுத்துவது தொடர்பில் கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் அபிவிருத்தி அமைச்சர் கௌரவ மஹிந்த அமரவீர அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
 
19. 2013ம் ஆண்டின் 02ம் இலக்க குற்றவியல் நடவடிக்கை முறைக் சட்டக் கோவைச் (விசேட ஏற்பாடுகள்) சட்டத்திற்கு திருத்தங்கள் (தடுத்து வைப்பவர்களின் உரிமைகள் - சட்டத்தரணி ஒருவரை அணுகுதல்) (விடய இல. 38)
 
பொலிஸ் கட்டுப்பாட்டில் உள்ள சந்தேக நபர்களுக்கு சட்டத்தரணி ஒருவரை அணுகுவது தொடர்பில் திருத்தப்பட்ட 2013ம் ஆண்டின் 02ம் இலக்க குற்றவியல் நடவடிக்கை முறைக் சட்டக் கோவைச் (விசேட ஏற்பாடுகள்) சட்டத்தினை வர்த்தமானியில் வெளியிடுவதற்கும் பின்னர் பாராளுமன்றத்தின் அங்கீகாரத்துக்கான சமர்ப்பிப்பதற்கும் நீதியமைச்சர் கௌரவ கலாநிதி விஜயதாச ராஜபக்ஷ அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
 
20. நிர்மாண இயந்திரசாதன இயக்குனர்களை பயிற்றுவிக்கும் நிறுவனத்தின் வசதிகளை அபிவிருத்தி செய்தல் (விடய இல. 40)
 
நிர்மாண இயந்திரசாதன இயக்குனர்களை பயிற்றுவிக்கும் நிறுவனத்தின் அடிப்படை வசதிகளை அபிவிருத்தி செய்வது தொடர்பான முழுமையான அறிக்கையின் கீழ் இணங்காண்பது தொடர்பில் வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சர் கௌரவ சஜித் பிரேமதாச அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
 
21. ஜப்பானின் கோபே நகர அரச துறைமுகம் மற்றும் நகர வேலைத்திட்ட பணியகம் மற்றும் கொழும்பு துறைமுகம் ஆகியவற்றுக்கு இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில் கைச்சாத்திடல் (விடய இல. 41)
 
ஜப்பானின் கோபே நகரில் இடம்பெறவுள்ள 'சர்வதேச துறைமுகங்கள் தொடர்பான மாநாட்டில்' கலந்து கொள்வதற்கான இலங்கைக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஆசிய வலய சமூத்திர விடயங்கள் தொடர்பான விடயங்களை பரிமாறிக் கொள்ளும் நோக்கில் ஜப்பானின் கோபே நகர அரச துறைமுகம் மற்றும் நகர வேலைத்திட்ட பணியகம் மற்றும் கொழும்பு துறைமுகம் ஆகியவற்றுக்கு இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில் கைச்சாத்திடுவது தொடர்பில் துறைமுக மற்றும் கப்பல்துறை அமைச்சர் கௌரவ அர்ஜுன ரணதுங்க அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
 
22. பெருந்தோட்ட சமுதாயத்தினருக்கான வீடுகளை நிர்மாணித்தல் - வீடொன்றிற்கான நிதி ஒதுக்கீட்டை ரூ. 650,000 இலிருந்து ரூ. 1,000,000 வரை அதிகரித்தல் (விடய இல. 42)
 
பெருந்தோட்ட சமுதாயத்தினருக்கான வீடுகளை நிர்மாணித்தல் திட்டத்தின் கீழ் வீடொன்றிற்கான நிதி ஒதுக்கீட்டை ரூ. 650,000 இலிருந்து ரூ. 1,000,000 வரை அதிகரிப்பதற்கும், குறித்த தொகையில் 480,000 ரூபாவை நன்கொடையாகவும் மிகுதி தொகையான 520,000 ரூபாவினை மாதாந்த தவணை அடிப்படையில் 15 ஆண்டுகளில் மீள செலுத்தக் கூடிய விதத்தில் அறவிடுவதற்கும், மண்சரிவினால் பாதிக்கப்பட்டவர்களுக்கும், மண்சரிவு அபாயத்தின் காரணமாக வீடுகளை விட்டு வெளியேறக் கோரப்படும் மக்களுக்கும் வீட்டு நிர்மாணிப்புகளுக்கான செலவினை முழுமையாக வழங்குவதற்குமாக மலைநாட்டு புதிய கிராமங்கள் உட்கட்டமைப்பு மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சர் கௌரவ பழனி திகாம்பரம் அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
 
23. தேசிய மகளீர் ஆணைக்குழுவினை ஸ்தாபித்தல் (விடய இல. 43)
 
மகளீர் தொடர்பில் செயற்படுவதற்கு இலங்கையில் பல அமைப்புக்கள் இருந்த போதிலும் பெண்களுக்கு எதிராக தற்போது பெருகி வரும் வன்முறைகளை தடுப்பதற்காக அவற்றுக்கு சட்ட ரீதியிலான அதிகாரம் இல்லை. எனவே சட்ட அங்கீகாரம் பொருந்திய தேசிய மகளீர் ஆணைக்குழுவினை ஸ்தாபிப்பது தொடர்பில் மகளீர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் கௌரவ சந்திராணி பண்டார அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
 
24. புஸ்ஸெல்லாவ சரஸ்வதி மகா வித்தியாலத்தின் உட்கட்டமைப்பு வசதிகளை விருத்தி செய்தல் (விடய இல. 44)
 
புஸ்ஸெல்லாவ சரஸ்வதி மகா வித்தியாலத்தின் உட்கட்டமைப்பு வசதிகளை விருத்தி செய்வதற்கான நிதியுதவியினை வழங்குவதற்கு இந்திய அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளது. அதனடிப்படையில் இந்தியா அரசாங்கத்திற்கும் இலங்கை அரசாங்கத்திற்கும் இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில் கைச்சாத்திடுவதற்கும், அதன் அடிப்படை வசதிகள் விருத்தி செய்வதற்கான நடவடிக்கைகளை மத்திய மாகாண கல்வி அமைச்சின் ஒத்துழைப்புடன் கல்வி அமைச்சு மேற்கொள்வது தொடர்பில் கல்வி அமைச்சர் கௌரவ அகில விராஜ் காரியவசம் அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
 
25. மொறகொட கால்வாய் மற்றும் கோவில் பக்க வழி பாதை ஆகியவற்றினை புனரமைப்பு செய்தல் (விடய இல. 48)
 
மொறகொட கால்வாய் மற்றும் கோவில் பக்க வழி பாதை ஆகியவற்றினை புனரமைப்பு செய்வதற்கான ஒப்பந்தத்தினை அமைச்சரவையினால் நியமிக்கப்பட்ட நிலையியல கொள்முதல் குழுவின் சிபார்சின் அடிப்படையில் 844,907,205.00 ரூபா ஒப்பந்த தொகைக்கு Business Promoters & Partners Engineering (Pvt) Ltd. நிறுவனத்துக்கு வழங்குவது தொடர்பில் மாநகரம் மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் கௌரவ பாட்டலி சம்பிக்க ரணவக்க அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
 
26. 2017-02-19ம் திகதி, களுத்துறை கடுகுருந்த பிரதேசத்துக்கு அருகிலுள்ள கடற்பரப்பில் ஏற்பட்ட படகு விபத்தினால் உயிரிழந்த மற்றும் காயமுற்ற நபர்களுக்கு நஷ்ட ஈடு வழங்கல் (விடய இல. 52)
 
2017-02-19ம் திகதி, களுத்துறை கடுகுருந்த பிரதேசத்துக்கு அருகிலுள்ள கடற்பரப்பில் ஏற்பட்ட படகு விபத்தினால் உயிரிழந்தவர்களுக்கு 100,000 ரூபா வீதமும், காயமுற்றவர்களுக்கு 20,000 ரூபா வீதமும் நஷ்ட ஈட்டுத் தொகையினை பெற்றுக் கொடுப்பது தொடர்பில் அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் கௌரவ அநுர பிரியதர்ஷன யாப்பா அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

சமீபத்திய செய்திகள்

Cabinet Decisions - 2024.10.28

29 October 2024

Cabinet Decisions taken at the Cabinet meeting conducted...

Cabinet Decisions 2024.10.21

22 October 2024

 Cabinet Decisions on 21.10.2024

Cabinet Decisions - 2024.10.07

08 October 2024

Cabinet decisions taken at the Cabinet Meeting conducted...

Cabinet Decisions - 2024.09.30

01 October 2024
Cabinet Decisions - 2024.09.30

Cabinet Decisions taken on 30.09.2024

Cabinet Decisions - 2024.09.13

14 September 2024

Cabinet Decisions taken at the Cabinet Meeting conducted...

Cabinet Decisions - 2024.09.03

03 September 2024

2024.09.03 Cabinet Decisions taken at the Cabinet Meeting...

Cabinet Decisions - 2024.08.26

28 August 2024

Decisions taken by the Cabinet of Ministers on...

Cabinet Decisions - 2024.08.21

22 August 2024

 Cabinet decisions taken at the cabinet meeting conducted...

அத்துடன் இலங்கையிலுள்ள ஊடகத்துறையின் கொள்கை திட்டமிடல் , பயிற்சி நெறிகளை வழங்குதல் , மற்றும் ஊடகத்துறைக்கான அங்கீகாரங்களை வழங்குவதிலும் இந்நிறுவனம் முன்னின்று உதவுகின்றது.