01. இலங்கை மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகளுக்கு இடையில் கல்விசார் ஒத்துழைப்பு சம்பந்தமான புரிந்துணர்வு ஒப்பந்தம் (விடய இல. 13)
உயர் கல்வித் துறையில் கல்விசார் ஒத்துழைப்பை விருத்தி செய்யும் நோக்கில் இலங்கையின் உயர் கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சு மற்றும் வியட்னாமின் கல்வி மற்றும் பயிற்சி அளித்தல் அமைச்சுக்குமிடையில் கல்விசார் ஒத்துழைப்பு சம்பந்தமான புரிந்துணர்வு ஒப்பந்தமானது 2011 – 2015 வரையிலான காலப்பகுதியில் அமுல்படுத்தப்பட்டது. இரு நாடுகளுக்குமிடையிலான உயர் கல்வி நிறுவகங்களிடையேயான தொடர்புகளை மேலும் விருத்தி செய்து கொள்ளும் நோக்கில் 2016 – 2020 காலப்பிரிவில் குறித்த திருத்தங்களுடன் அவ்வொப்பந்தத்தில் கைச்சாத்திடுவதற்கு இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில் இலங்கை மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகளுக்கு இடையில் கல்விசார் ஒத்துழைப்பு சம்பந்தமான புதிய புரிந்துணர்வு ஒப்பந்தமொன்றில் கைச்சாத்திடுவது தொடர்பில் உயர் கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் கௌரவ லக்ஷ்மன் கிரியெல்ல அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
02. இலங்கை மற்றும் ஜேர்மனி ஆகிய நாடுகளுக்கு இடையில் தொழில்நுட்ப துறை சார்ந்த மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களை மாற்றீடு செய்து கொள்ளும் வேலைத்திட்டம் (விடய இல. 16)
இலங்கை மற்றும் ஜேர்மனி ஆகிய நாடுகளுக்கு இடையில் தொழில்நுட்ப துறை சார்ந்த மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களை மாற்றீடு செய்து கொள்ளும் வேலைத்திட்டத்தின் கீழ் இலங்கையின் தொழில்நுட்பக் கல்வி மற்றும் பயிற்சித் திணைக்களம் மற்றும் ஜேர்மனியின் மயின்ஷல் தொழில்நுட்பவியல் கல்லூரிகளுக்கு இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில் கைச்சாத்திடுவது தொடர்பில் திறன்கள் அபிவிருத்தி மற்றும் வாழ்க்கைத் தொழிற் பயிற்சி அமைச்சர் கௌரவ மஹிந்த சமரசிங்க அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
03. சுஹித்தபுறவற நகராண்மை அபிவிருத்தி நிகழ்ச்சி முறையின் கீழ், 2017ம் ஆண்டில் செயல்திட்டங்களை தொடர்தல் (விடய இல. 20)
பாரிய நகரம் மற்றும் மேற்கத்திய அபிவிருத்தி அமைச்சினால் நாடு முழுவதும் உள்ளடக்கப்படும் விதத்தில் செயற்படுத்தப்படுகின்ற 'சுஹித்தபுறவற' நகராண்மை அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் கீழ் 2016ம் ஆண்டினுள் 64 ஒப்பந்தங்கள் வழங்கப்பட்டுள்ளன. பல்வேறு காரணங்களினால் 2016ம் நிதியாண்டில் முடிவடையாத அதில் சில வேலைத்திட்டங்கள் மற்றும் 2017ம் ஆண்டில் மேற்கொள்வதற்கு இனங்காணப்பட்டுள்ள புதிய வேலைத்திட்டங்கள் ஆகியவற்றை 2017ம் நிதியாண்டில் செயற்படுத்துவது தொடர்பில் பாரிய நகரம் மற்றும் மேற்கத்திய அபிவிருத்தி அமைச்சர் கௌரவ பாட்டலி சம்பிக்க ரணவக்க அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
04. மலைநாடு வலயத்தில் சிறு தேயிலைத் தோட்ட உரிமையாளர்களுக்காக விசேட கருத்திட்ட முன்மொழிவுகளை நடைமுறைப்படுத்தல் (விடய இல. 22)
சிறு தேயிலைத் தோட்ட உரிமையாளர்களால், இலங்கையில் தேயிலை உற்பத்திக்காக 68மூ பங்களிப்பு வழங்கப்பட்டுள்ளதுடன், நாட்டில் மொத்த தேயிலை நிலப்பரப்பின் 73மூ சிறு தேயிலைத் தோட்ட உரிமையாளர்களுக்கு சொந்தமானதாக இருக்கின்றது. சிறு தேயிலைத் தோட்ட உரிமையாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு பெற்றுக் கொடுக்கும் நோக்கில் குறித்த தோட்டங்களுக்கான கிராம பிரவேச பாதைகளில் காணப்படுகின்ற தடைகள் அகற்றி, போக்குவரத்திற்கு பொருத்தமான வகையில் புனர் நிர்hமனம் செய்வதற்கும், சிறு தேயிலைத்தோட்ட உரிமையாளர்களின் வருமானத்தை நிலையான மட்டத்திற்கு கொண்டு வர மேலதிக வருமான வழிகளை பெற்றுக் கொடுப்பதற்கான வேலைத்திட்டங்களை முன்னெடுப்பதற்குமான தேவை எழுந்துள்ளது. அதனடிப்படையில் நுவரெலியா, கண்டி மற்றும் மாத்தளை மாவட்டங்களில் உள்ள சிறு தேயிலைத் தோட்டங்கள் சார்ந்த கிராம பிரவேச பாதைகள் 200இனை போக்குவரத்துக்கு உகந்த முறையில் புனருத்தாபனம் செய்வதற்கும், மேலதிக வருமானம் தரும் சிறு பயிர்களை பயிரிடுவதற்காக தேயிலை தோட்டங்களுக்கு அண்மையில் பசுமை இல்லங்களை அமைப்பதற்கும், சிறு தேயிலைத் தோட்ட மேலதிக உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கும் பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சர் கௌரவ நவீன் திசாநாயக்க அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
05. குற்றத்தடுப்புக் கட்டளைச் சட்டத்துக்கான திருத்தங்கள் (விடய இல. 25)
தற்போது ஏதேனுமொரு சந்தேகநபரின் விரலடையாளங்களை குற்றத்தடுப்பு கட்டளைச் சட்டத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள குற்றங்கள் பட்டியலில் உள்ள குற்றங்களுக்காக மாத்திரமே பெற்றுக்கொள்ள முடியும். எமது சட்டவாக்கங்களில் உள்ளடக்கப்பட்டுள்ள புதிய குற்றங்களின் பாரதூரத் தன்மையினால் இச்சட்டத்தை திருத்தஞ் செய்யும் அவசியம் எழுந்துள்ளதுடன், அத்தகைய குற்றங்கள் தொடர்பாக குற்றஞ் சாட்டப்பட்ட ஆட்களின் ஆளடையாளத்தை உறுதி செய்து கொள்ளல் மற்றும் அவர்களை கண்காணிப்பதை இலகுபடுத்துவதற்காக அவர்களின் விரலடையாளங்களை பெற்றுக் கொள்ளும் வகையில் குற்றங்கள் பட்டியலை திருத்துவதற்கும், அவ்வகையான குற்றமொன்று குற்றஞ் சாட்டப்பட்ட ஆளொருவருக்கு இடைநிறுத்தப்பட்ட தண்டனையொன்று விதிக்கப்பட்டுள்ளபோது, மற்றும் அந்நபர் தொடர்பாக முன்னைய தவறுகள் நிரூபிக்கப்பட்டிருக்கும் போது, இடைநிறுத்தப்பட்ட தண்டனை வலுவிலிருக்கும் காலம் முடியும் வரை அந்நபர் பொலிஸ் கண்காணிப்பின் கீழ் வைக்க வேண்டுமென நீதிமன்றத்தால் விதிக்கப்பட முடியுமான வகையில் குற்றத்தடுப்புக் கட்டளைச் சட்டத்தினை திருத்துவதற்கான சட்ட மூலத்தை அரசாங்க வர்த்தமானிப் பத்திரிவையில் வெளியிடுவதற்கும், பின்னர் அனுமதிக்காக வேண்டி பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கும் நீதியமைச்சர் கௌரவ கலாநிதி விஜயதாச ராஜபக்ஷ அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
06. ஹசலக நீர் வழங்கல் திட்டத்தை செயற்படுத்தல் (விடய இல. 32)
ஹசலக நீர்வழங்கல் திட்டத்தின் ஊடாக 33 கிராம சேவையாளர் பிரிவுகளை உள்ளடக்கும் வகையில் 12,500 புதிய நீர் இணைப்புக்கள் பெற்றுக் கொடுப்பதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது. அதனால் சுமார் 49,370 பயனாளிகளுக்கு நன்மைக் கிடைக்கின்றது. பொருளாதார முகாமைத்துவம் தொடர்பான அமைச்சரவை குழு மற்றும் அமைச்சரவையினால் நியமிக்கப்பட்டுள்ள நிலையியல் கொள்முதல் குழுவின் விதப்புரையின் அடிப்படையில் ஹசலக நீர் வழங்கல் திட்டத்தினை முன்னெடுப்பது தொடர்பில் நகரதிட்டமிடல் மற்றும் நீர்வழங்கல் அமைச்சர் கௌரவ ரவூப் ஹக்கீம் அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
07. அரசாங்க வைத்தியசாலைகளுக்கு தேவையான ஹைபொடமிக் சிறின்ஜர்ஸ் கொள்வனவு செய்வதற்கான விலைமனுக்கோரல் (விடய இல. 33)
உடம்பினுள் மருந்து பொருட்கள் செலுத்துவதற்கும் மற்றும் உடல் திரவங்கள் வெளியே எடுப்பதற்கும் பயன்படுத்தப்படும் ஹைபொடமிக் சிறின்ஜர்ஸ் பல்வேறு அளவுகளில் கொள்வனவு செய்வதற்கான ஒப்பந்தத்தை அமைச்சரவையினால் நியமிக்கப்பட்டுள்ள நிலையியல் கொள்முதல் குழுவின் விதப்புரையின் அடிப்படையில் வழங்குவதற்கு சுகாதார, போசணை மற்றும் சுதேச வைத்திய அமைச்சர் கௌரவ டாக்டர் ராஜித சேனாரத்ன அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
08. சத்திர சிகிச்சைக்கு அவசியமான திரௌவியங்களை கொள்வனவு செய்வதற்கான விலைமனுக்கோரல் (விடய இல. 34)
சத்திர சிகிச்சைக்கு அவசியமான நுகர்வுப் பொருட்களை பல்வேறு அளவுகளில் கொள்வனவு செய்வதற்கான ஒப்பந்தத்தை அமைச்சரவையினால் நியமிக்கப்பட்டுள்ள நிலையியல் கொள்முதல் குழுவின் விதப்புரையின் அடிப்படையில் வழங்குவதற்கு சுகாதார, போசணை மற்றும் சுதேச வைத்திய அமைச்சர் கௌரவ டாக்டர் ராஜித சேனாரத்ன அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
09. புதிய நீதிமன்றத் கட்டடங்களை நிர்மாணித்தல் (விடய இல. 37)
நீதிமன்றங்களுக்காக உள்ள கட்டடங்கள் மிகப் பழமையானவையாக இருத்தல், சனத்தொகையின் அதிகரிப்புக்கு ஏற்ப வழக்குகளின் எண்ணிக்கையின் அதிகரிப்பு, நீதிமன்றக் கட்டடங்களின் இடவசதிகள் போதுமானதாக இல்லாமை போன்ற பல்வேறு காரணங்களினால் புதிய நீதிமன்றக் கட்டடங்களை நிர்மாணிப்பதற்கான தேவை எழுந்துள்ளது. அதனடிப்படையில், கம்பளை, ருவன்வெல்ல, மாங்குளம், முல்லைத்தீவு, யாழ்ப்பாணம், அநுராதபுரம் மற்றும் பொலன்னறுவை பிரதேசங்களில் காணப்படுகின்ற நீதிமன்றக் கட்டடங்களை நிர்மாணிப்பதற்கு முன்னுரிமை பெற்றுக் கொடுத்து புதிய நீதிமன்றத் கட்டடங்களை நிர்மாணிப்பது தொடர்பில் நீதியமைச்சர் கௌரவ கலாநிதி விஜயதாச ராஜபக்ஷ அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
10. ஐக்கிய நாடுகள் அமைதிகாக்கும் கடமைக்காக இணைக்கப்படவுள்ள விசேட அதிரடிப் படையினரின் சிப்பாய்களுக்கு தேவையான உபகரணங்களை கொள்வனவு செய்தல் (விடய இல. 38)
ஐக்கிய நாடுகள் அமைதிகாக்கும் கடமைக்காக இணைக்கப்படவுள்ள விசேட அதிரடிப் படையினரின் சிப்பாய்களுக்கு தேவையான உபகரணங்களை கொள்வனவு செய்வது தொடர்பில் சட்டமும் ஒழுங்கும் மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சர் கௌரவ சாகல ரத்னாயக அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
11. குறைந்த மற்றும் மத்திய வருமானம் பெறும் குடும்பங்களுக்காக வீட்டு வசதிகளை பெற்றுக் கொடுக்கும் வேலைத்திட்டத்தை துரிதப்படுத்தல் (விடய இல. 39)
குறைந்த வருமானம் பெறும் குடும்பங்கள் மற்றும் மத்திய வருமானம் பெறும் குடும்பங்கள் ஆகியோருக்காக வீட்டு உரிமையினை பெற்றுக் கொடுக்கும் அரசாங்கத்தின் வேலைத்திட்டத்தின் கீழ் 620,000 வீடுகளை 2019ம் ஆண்டில் நிர்மாணிப்பதற்கு எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வேலைத்திட்டத்தை உரிய காலத்திற்குள் செய்து முடிப்பதை உறுதி செய்வதற்காக, குறித்த வேலைத்திட்டத்துக்கு தேசிய முன்னுரிமையினை பெற்றுக் கொடுத்து துரிதமாக செயற்படுத்துவதற்கு தேவையான வசதிகளை பெற்றுக் கொடுக்கும் நோக்கில், திறைசேரியின் கீழ் விசேட செயலணி ஒன்றை ஸ்தாபிப்பதற்கும், அச்செயலணிக்காக ஒதுக்கி கொடுக்கப்படுகின்ற அனைத்து இடங்களுக்காகவும் காணி வங்கி ஒன்றை ஸ்தாபிப்பதற்குமாக கௌரவ பிரதமர் ரணில் விக்ரமசிங்க அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
12. இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசிற்கும், எதியோப்பிய சமஷடி ஜனநாயக குடியரசிற்கும் இடையில் கூட்டுறவு மீதான கூட்டு ஆணைக்குழுவொன்றைத் தாபிப்பது தொடர்பிலான புரிந்துணர்வு உடன்படிக்கை (விடய இல. 41)
நீடித்து நிலைக்கக் கூடியதும் நிலையானதுமான அடிப்படை மீது சமத்துவம் மற்றும் பரஸ்பர அனுகூலம் என்ற கோட்பாட்டின் அடிப்படையில் அரசியல், பொருளாதார, தொழில்நுட்ப மற்றும் கலாசார ஒத்துழைப்பு ஆகியவற்றை ஊக்குவிப்பதையும், வலுப்படுத்துவதையும் நோக்காகக் கொண்டு, இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசிற்கும், எதியோப்பிய சமஷ்டி ஜனநாயக குடியரசிற்கும் இடையில் கூட்டுறவு மீதான கூட்டு ஆணைக்குழுவொன்றைத் தாபிப்பது தொடர்பிலான புரிந்துணர்வு உடன்படிக்கைக்கு தனது எதியோப்பிய சுற்றுப்பயணத்தின் போது கைச்சாத்திடுவது தொடர்பில் வெளிவிவகார அமைச்சர் கௌரவ மங்கள சமரவீர அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
13. இலங்கை அரச வலையமைப்பு வேலைத்திட்டத்தின் இரண்டாவது கட்டத்தின் சேவைகள் வழங்கும் ஒப்பந்தத்தை வழங்குதல் (விடய இல. 43)
அதிவேக மற்றும் பாதுகாப்பான இணைய இணைப்புக்களை அரச நிர்வனங்களுக்கு பெற்றுக் கொடுப்பதன் மூலம் பிரசைகளுக்கும், தொழில்களுக்கும் அரச சேவையினை தடையின்றி துரிதமாக பெற்றுக் கொடுக்கும் நோக்கில், இலங்கை தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் நிறுவனத்தினால் செயற்படுத்தப்படுகின்ற இலங்கை அரச வலையமைப்புக் கருத்திட்டம் (Lanka Government Network – LGN) வேலைத்திட்டத்தின் இரண்டாம் கட்டத்தின் சேவைகள் வழங்கும் ஒப்பந்தத்தை, அமைச்சரவையினால் நியமிக்கப்பட்டுள்ள பேச்சுவார்த்தை குழுவின் சிபார்சின் அடிப்படையில் இலங்கை ரெலிகொம் நிறுவனத்திற்கு வழங்குவது தொடர்பில் தொலைத்தொடர்புகள் மற்றும் டிஜிட்டல் உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சர் கௌரவ ஹரீன் பிரனார்ந்து அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
14. இலங்கை வீதி அபிவிருத்தி அதிகாரசபைக்காக நிதி வசதியளித்தல் (விடய இல. 44)
பிரதேசங்களுக்கு இடையில் இணைப்பை மேம்படுத்தி நாட்டில் பொருளாதார செயற்பாடுகளை விருத்தி செய்வதற்கான முதன்மை வேலைத்திட்டங்களில் ஒன்றாக மத்திய அதிவேக வீதி கருத்திட்டமானது அரசாங்கத்தினால் இனங்காணப்பட்டுள்ளது. அதனடிப்படையில், மத்திய அதிவேக வீதி கருத்திட்டத்தின் இரண்டாம் (11) கட்டத்தின் நிர்மானப்பணிகளுக்காக வீதி அபிவிருத்தி அதிகார சபைக்கு (RDA) தேவையான 23.2 பில்லியன் ரூபா நிதியினை தேசிய சேமிப்பு வங்கி மற்றும் மக்கள் வங்கி ஆகியவற்றிலிருந்து கடனாக பெற்றுக் கொள்வதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வது தொடர்பில் நிதியமைச்சர் கௌரவ ரவி கருணாநாயக்க அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.