01. இலங்கையின் மூன்றாவது தேசிய காலநிலை மாற்றங்கள் தொடர்பாடல் அறிக்கை தயாரிக்கும் வேலைத்திட்டம் (விடய இல. 10)
காலநிலை மாற்றங்களுக்கு முகங்கொடுப்பதற்கு ஏதுவான முறையில் நிர்வாக மற்றும் தொழில்நுட்ப தகைமைகளை மிகவும் பலனுள்ள விதத்தில் பலப்படுத்தல் மற்றும் இலங்கை மூலம் UNFCCC ஒப்புதலின் கீழ் செயற்படுத்துவதற்கு பொருந்தியுள்ள உறுதியினை செயற்படுத்துவதற்கும், ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் (UNDP) மூலம் பூகோள சூழல் வசதிகளின் கீழ் (Global Environment Facility) ஏற்படுத்திக் கொடுக்கப்பட்ட நன்கொடைகளை உபயோகித்து காலநிலை மாற்றங்கள் தொடர்பான மூன்றாவது தொடர்பாடல் அறிக்கையினை தயாரிக்கும் வேலைத்திட்டத்தை செயற்படுத்தவும், அவ்வாறு தயாரிக்கப்பட்ட அறிக்கையினை (UNFCCC) செயலகத்திற்கு சமர்ப்பிக்கவும் மகாவலி அபிவிருத்தி மற்றும் சூழலியல் அமைச்சர் எனும் ரீதியில் அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
02. கரையோர பாதுகாப்பு திணைக்களத்தின் நீர்கொழும்பு பிரதேச பொறியியல் அலுவலகத்திற்காக புதிய இரண்டு மாடி கட்டிடம் ஒன்றை நிர்மாணித்தல் (விடய இல. 11)
கரையோர பாதுகாப்பு திணைக்களத்தின் நீர்கொழும்பு பிரதேச பொறியியல் அலுவலகத்திற்காக புதிய இரண்டு மாடி கட்டிடம் ஒன்றை 60 மில்லியன் ரூபா மதிப்பீட்டு செலவில் நிர்மாணிப்பதற்கு மகாவலி அபிவிருத்தி மற்றும் சூழலியல் அமைச்சர் எனும் ரீதியில் அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
03. வனஜீவராசிகள் வலயத்திற்கு அண்மையில் வசிக்கும் மக்களின் வாழ்க்கை தரத்தை அதிகரித்தல் (விடய இல. 12)
காட்டு யானைகள் பயணிக்கும் மார்க்கங்களில் வாழும் மக்கள் மூன்று கட்டங்களாக அகற்றுவதற்கு ஏற்கனவே அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. அதனடிப்படையில் பல்வேறு வேலைத்திட்டங்களை முன்னெடுப்பதற்கு அது தொடர்பில் அனுவபம் நிறைந்த நிறுவனமான வனஜீவராசிகள் பொறுப்பிற்கு ஒப்படைப்பதற்கும், வனஜீவராசிகள் பாதுகாப்பிற்கு உரித்தான அவசர மற்றும் முக்கியத்துவம் வாய்ந்த நடவடிக்கைகளை அப்பொறுப்பின் மூலம் மேற் கொள்வதற்கும் நிலையான அபிவிருத்தி மற்றும் வனஜீவராசிகள் அமைச்சர் காமினி ஜயவிக்ரம பெரேரா அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
04. 2013ம் ஆண்டின் 01ம் இலக்க திவிநெகும சட்டத்தை திருத்தம் செய்வதற்கான சட்டமூலம் (விடய இல. 16)
திவிநெகும எனும் பதத்திற்கு பதிலாக சமூர்த்தி எனும் பதத்தை உபயோகிக்கும் வகையில் 2013ம் ஆண்டின் 01ம் இலக்க திவிநெகும சட்டத்தை திருத்தம் செய்வதற்கான சட்டமூலத்தை அரசாங்க வர்த்தமானியில் பிரசுரிப்பதற்கும், பின்னர் அதனை அங்கீகாரத்துக்காக பாராளுமன்றத்தில் முன்வைப்பதற்கும் சமூக வலுவூட்டல் மற்றும் நலன்புரி அமைச்சர் கௌரவ எஸ்.பி திசாநாயக்க அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
05. இலங்கையில் குவிப்பெதிர்ப்பு, எதிரீட்டு தீர்வைகள் மற்றும் பாதுகாப்பு மீதான சட்டவாக்கத்தினை சட்டமாக்குதல் (விடய இல. 18)
இலங்கையில் குவிப்பெதிர்ப்பு, எதிரீட்டு தீர்வைகள் சட்டமூலம் மற்றும் இலங்கைக்கு இறக்குமதி செய்யும் உற்பத்திகள் தொடர்பில் பாதுகாப்பு விதிமுறைகளை சுமத்துதல் மற்றும் விசாரணைகளை நடாத்துதல் தொடர்பில் விதிமுறைகளை காட்டும் 'பாதுகாப்பு செயன்முறை சட்டமூலத்தினை' சட்டமாதிபரின் அனுமதியுடன், அரசாங்க வர்த்தமானியில் பிரசுரிப்பதற்கும் பின்னர் அதனை பாராளுமன்றத்தின் அங்கீகாரத்துக்காக முன்வைப்பதற்கும் கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் கௌரவ ரிஷாட் பதியூதீன் அவர்கள் மற்றும் சர்வதேச வர்த்தக மற்றும் திறமுறை அபிவிருத்தி அமைச்சர் கௌரவ மலிக் சமரவிக்கிரம ஆகியோர் இணைந்து முன்வைத்த யோசனைகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
06. நெல்லினை அரிசியாக்கி விநியோகிப்பது தொடர்பில் செயன்முறையொன்றை தயாரித்தல் (விடய இல. 20)
நெல்லினை அரிசியாக்கி லங்கா சதோச, கூட்டுறவு நிலையம் மற்றும் மொத்த வியாபாரிகள் மூலமாக நுகர்வோருக்கு விநியோகிப்பது தொடர்பில் செயன்முறையொன்றை தயாரிப்பது தொடர்பில் கைத்தொழில் மற்றும் வணிக அலுவல்கள் அமைச்சர் கௌரவ ரிஷhட் பதியூதீன் அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
07. இலங்கைக்கே உரித்தான பூகோள சுட்டெண்களின் பாதுகாப்பினை உறுதி செய்வது தொடர்பில் 2003ம் ஆண்டின் 36ம் இலக்க புத்திகூர்மையான சொத்துக்கள் சட்டத்தினை திருத்தம் செய்தல் (விடய இல. 21)
இலங்கைக்கே உரித்தான பூகோள சுட்டெண்களின் பாதுகாப்பினை உறுதி செய்வது தொடர்பில் 2003ம் ஆண்டின் 36ம் இலக்க புத்திகூர்மையான சொத்துக்கள் சட்டத்தினை திருத்தம் செய்வதற்கான சட்டமூலத்தை அரசாங்க வர்த்தமானியில் பிரசுரிப்பதற்கும், பின்னர் அதனை அங்கீகாரத்துக்காக பாராளுமன்றத்தில் முன்வைப்பதற்கும் கைத்தொழில் மற்றும் வணிக அலுவல்கள் அமைச்சர் கௌரவ ரிஷhட் பதியூதீன் அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
08. களுத்துறை றைகம கைத்தொழில் மற்றும் தொழில்நுட்ப அபிவிருத்தி அதியுயர் வலயத்தினை நிர்மாணித்தல் (விடய இல. 22)
நுகர்வு மற்றும் நவீன தொழில்நுட்ப உற்பத்திக்காக ஒதுக்கப்பட்ட தொழில்நுட்ப அபிவிருத்தி அதியுயர் வலயம் ஒன்றினை களுத்துறை மாவட்டத்தின் றைகம பிரதேசத்தில் அமைப்பது தொடர்பில் கைத்தொழில் மற்றும் வணிக அலுவல்கள் அமைச்சர் கௌரவ ரிஷhட் பதியூதீன் அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
09. மேல் மாகாண வலயத்தினுள் நிர்மாணிப்பதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ள இலகுவான புகையிரத இணைப்பு (LRT) வீதிகள் 5 தொடர்பில் கற்கையினை மேற்கொள்ளல் (விடய இல. 25)
மேல் மாகாணத்தில் அதிகரித்து வரும் போக்குவரத்து தேவையினை நிவர்த்தி செய்யும் நோக்கில் 07 இலகுவான புகையிரத இணைப்பு (LRT) இனை அமைப்பதற்கு ஏற்கனவே அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. அதனடிப்படையில் அவற்றில் இரண்டு இணைப்புக்களை மேற்கொள்வதற்கு(JICA) நிறுவனம் ஒத்துழைப்பு வழங்க முன்வந்துள்ளது. எஞ்சிய 05 இணைப்புக்களை நிர்மாணிப்பதற்கு தேவையான முதலீட்டினை மேற்கொள்வதற்கு தனியார் துறையினருக்கு அழைப்பு விடுக்கும் நோக்கில் அது தொடர்பில் கற்கையொன்றினை மேற்கொள்வது தொடர்பில் பாரிய நகர அபிவிருத்தி மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் கௌரவ பாட்டலி சம்பிக்க ரணவக்க அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
10. 'எக்லென்ட் மாளிகை, உயர் தரத்திலான வசதிகள் மற்றும் சேவை வழங்கும் சிறிய ஹோட்டல்' (Boutique Hotel) ஒன்றாக அபிவிருத்தி செய்தல் (விடய இல. 27)
இரண்டு மாடிகளை கொண்ட 'எக்லென்ட் ஹவுஸ்' எனும் பழைமை வாய்ந்த கட்டிடத்தை உயர் தரத்திலான வசதிகள் மற்றும் சேவை வழங்கும் சிறிய ஹோட்டல் (Boutique Hotel) ஒன்றாக அபிவிருத்தி செய்து முகாமை செய்வது தொடர்பில் பாரிய நகர அபிவிருத்தி மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் கௌரவ பாட்டலி சம்பிக்க ரணவக்க அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
11. ஒலுவில் மீனவ துறைமுகம், மீன்பிடி மற்றும் நீர்வாழ் வளங்கள் அபிவிருத்தி அமைச்சின் கீழ் மாற்றுதல் (விடய இல. 28)
அதிகளவிலான இலாபம் ஈட்டும் நோக்கில் தற்போது இலங்கை துறைமுக அதிகாரசபையின் கீழ் இயங்கும் ஒலுவில் மீனவ துறைமுகத்தினை மீன் பிடி மற்றும் நீர்வளங்கள் அபிவிருத்தி அமைச்சின் கீழ் இயங்கும் இலங்கை மீன்பிடி துறைமுக கூட்டுத்தாபனத்தின் கீழ் கொண்டுவருவது தொடர்பில் மீன் பிடி மற்றும் நீர்வளங்கள் அபிவிருத்தி அமைச்சர் கௌரவ மஹிந்த அமரவீர அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
12. தேயிலை கைத்தொழில் தொடர்பில் தகவல் தொழில்நுட்ப மைய ஆதாரமொன்றினை உருவாக்குதல் (விடய இல. 32)
தேயிலை கைத்தொழில் துறையில் எழுத்துருவில் காணப்படும் தகவல்களை மிகவும் உயரிய மட்டத்தில் பேணுவதற்கு உகந்த வகையில் 220 மில்லியன் ரூபா மதிப்பீட்டு செலவில் தகவல் தொழில்நுட்ப மைய ஆதாரமொன்றினை உருவாக்குவது தொடர்பில் பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சர் கௌரவ எஸ்.பி. நாவின்ன அவர்களினால் முன்வைக்கப்பட்ட அமைச்சரவை பத்திரத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
13. புண்ணிய கிராமம் கருத்திட்டத்தின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும் பௌதீக மற்றும் சிந்தனை விருத்தி நிகழ்ச்சித்திட்டம் (விடய இல. 35)
புனித கிராமம் கருத்திட்டத்தின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும் பௌதீக மற்றும் சிந்தனை விருத்தி நிகழ்ச்சித்திட்டத்தின் ஓர் அங்கமாக பௌத்த விகாரைகளை மையப்படுத்தியதாக பாதுகாப்பான குடிநீர் பெற்றுக் கொடுக்கும் நீர் சுத்திகரிப்பு இயந்திரங்களை ஸ்தாபிக்கும் வேலைத்திட்டமொன்றை செயற்படுத்துவது தொடர்பில் புத்தசாசன அமைச்சர் கௌரவ கலாநிதி விஜயதாச ராஜபக்ஷ அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
14. இலங்கையில் கால்நடைவளத் துறையில் உற்பத்தித் திறனை மேம்படுத்துவதன் பொருட்டு புதிய அணுமுறைகள் (விடய இல. 36)
கால்நடை உற்பத்தி சுகாதாரத் திணைக்களத்தின் மிருக ஆராய்ச்சி நிறுவனத்தின் புதிய உணவு தொழில்நுட்ப விஞ்ஞானகூடம் ஒன்றினை ஸ்தாபிப்பதற்கும், கால்நடைத் தடுப்பூசி உற்பத்தி நிலையத்தை நவீனமயமாக்குவதற்கும், விசர்நாய்க்கடி நோயை கட்டுப்படுத்தும் பொருட்டு மாவட்ட மட்டத்தில் பல்துறை அலகை ஸ்தாபிப்பதற்கும், வனஜீவராசி நோய் பாதுகாப்பு நிமித்தம் தேசிய வேலைத்திட்டம் ஒன்றை தயார் செய்வதற்கும் 1,402 மில்லியன் ரூபா மதிப்பீட்டு தொகையை திறைசேரியிலிருந்து பெற்றுக் கொள்வதற்கு கிராமிய பொருளாதார அலுவல்கள் அமைச்சர் கௌரவ பி.ஹெரிசன் அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
15. மொனராகலை மாவட்ட விளையாட்டு வளாகம் மற்றும் மொனராகலை உள்ளக விளையாட்டரங்கு நிர்மாணிப்பதற்காக நிலத்தைப் பெற்றுக் கொள்ளல் (விடய இல. 37)
மொனராகலை மாவட்ட விளையாட்டு வளாகம் மற்றும் மொனராகலை உள்ளக விளையாட்டரங்கு நிர்மாணிப்பதற்காக காணி மறுசீரமைப்பு ஆணைக்குழுவுக்குச் சொந்தமான மக்கள் தோட்ட அபிவிருத்திச் சபைக்கு குத்தகைக்கு விடுக்கப்பட்டுள்ள மொனராகலை குமாரவத்தை தோட்டத்திலிருந்து 10 ஏக்கர் நிலத்தைப் பெற்றுக் கொள்வதற்கு அரச தொழிற்முயற்சிகள் அபிவிருத்தி அமைச்சர் கௌரவ கபீர் ஹசீம் அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
16. எல்பிட்டிய பெறுமதி சேர்க்கும் தயாரிப்பு வலயத்தை ஆரம்பித்தல் (விடய இல. 39)
காலி கமத்தொழில் உயர்வலய நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் எல்பிட்டிய பெறுமதி சேர்க்கும் தயாரிப்பு வலயத்தை ஆரம்பிப்பதற்காக எல்பிட்டிய பெருந்தோட்டக் கம்பனிக்குச் சொந்தமான தென் அதிவேகப் பாதைக்கு அண்மையில் தற்போது பயன்படாதுள்ள இகல்கந்த மற்றும் கெற்றபலவத்த பிரதேசத்தில் 200 அரச காணிகளைப் பெற்றுக் கொள்வதற்கு பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சர் கௌரவ நவீன் திசாநாயக்க , ஆரம்ப கைத்தொழில் அமைச்சர் கௌரவ தயா கமகே அவர்கள், பாராளுமன்ற மறுசீரமைப்பு மற்றும் ஊடகத்துறை அமைச்சர் கௌரவ கயந்த கருணாதிலக்க ஆகியோர் இணைந்து முன்வைத்த யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
17. நடுத்தர வருமான வீடமைப்பு மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளை அபிவிருத்தி செய்யும் துரித நிகழ்ச்சித்திட்டம் (விடய இல. 40)
நடுத்தர வருமான வீடமைப்பு மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளை அபிவிருத்தி செய்யும் துரித நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் ஐந்து ஆண்டுகளில் 500,000 வீடுகளை நிர்மாணிப்பதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளது. இவ்வேலைத்திட்டத்தை முன்னெடுத்துச் செல்வதற்காக அமைச்சரவையினால் நியமிக்கப்பட்ட தேசிய வழிப்படுத்தல் குழுவின் சிபார்சுகளின் அடிப்படையில், 332 வீடுகளை கொண்ட குண்டசாலை இஸ்காகாரவத்தை வீட்டுத் திட்டம் மற்றும் 860 வீடுகளை கொண்ட ஹோமாகம மவுன்ட் கிளிபர்ட் வத்த ஆகிய வீட்டுத் திட்டங்களின் நிர்மாணப்பணிகளை மேற்கொள்வதற்கு வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சர் சஜித் பிரேமதாசவினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
18. பெண்கள் வீட்டுத் தலைவிகளாகவுள்ள குடும்பங்களுக்கான தேசிய திட்டம் (விடய இல. 42)
பெண்கள் வீட்டுத் தலைவிகளாகவுள்ள குடும்பங்களுக்கான தேசிய திட்டத்தினை சுகாதாரம், உளவியல், சமூக உதவி, வாழ்வாதார அபிவிருத்தி, உதவிச் சேவைகள் கடட்மைப்பு, பாதுகாப்பு, சமூக அரவணைப்பு மற்றும் தேசிய மட்டத்தில் கொள்கைகளை வகுத்தல் மற்றும் விழிப்புணர்வூட்டல் ஆகிய துறைகளின் கீழ் செயற்படுத்துவதற்கு பெண்கள் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் கௌரவ சந்திராணி பண்டார அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
19. 1961ம் ஆண்டின் 28ம் இலக்க இலங்கைப் பெற்றோலியக் கூட்டுத்தாபனச் சட்டத்திற்கான திருத்தம் (விடய இல. 45)
இலங்கைப் பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் மூலம் தற்போது முன்கெடுக்கப்படுகின்ற விநியோக நடவடிக்கைகளுக்கு குந்தகம் ஏற்படாத வகையில் 1961ம் ஆண்டின் 28ம் இலக்க இலங்கைப் பெற்றோலியக் கூட்டுத்தாபனச் சட்டத்தினை திருத்தம் செய்வதற்கு பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி அமைச்சர் கௌரவ சந்திம வீரக்கொடி அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
20. சுகததாச தேசிய விளையாட்டுக் கட்டிடத் தொகுதி அதிகார சபையின் 1999ம் ஆண்டு 17ம் இலக்க அதிகார சபைச் சட்டத்தை மறுசீரமைத்தல் (விடய இல. 46)
விளையாட்டு மைதானத்தை பராமரித்தல் மற்றும் விளையாட்டு வசதிகளை பெற்றுக் கொடுப்பதற்கு தேவையான நிதியினை திரட்டி கொள்ளும் பொருட்டு விளையாட்டு மைதானம், விளையாட்டுத் திடல் விளையாட்டுத் நிகழ்ச்சிகளுக்காக பயன்படுத்தாத சந்தர்ப்பங்களில் வேறு வருமானம் பெறும் வசதிகளான கலைத்திறமைச் செயற்பாடுகள், கருத்தரங்குகள், பரீட்சைகள், வேறு பணிப்பாளர் சபைகளினால் அங்கீகரிக்கப்படும் செயற்பாடுகளுக்காக பெற்றுக் கொடுக்கும் நோக்கில் சுகததாச தேசிய விளையாட்டுக் கட்டிடத் தொகுதி அதிகார சபையின் 1999ம் ஆண்டு 17ம் இலக்க அதிகார சபைச் சட்டத்தை மறுசீரமைப்பதற்கு விளையாட்டுத் துறை அமைச்சர் கௌரவ சட்டத்தரணி தயாசிறி ஜயசேகர அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
21. இலங்கையில் ரேடியல் மற்றும் திண்ம டயர் ஆலையினை ஸ்தாபித்தல் (விடய இல. 49)
இலங்கையில் ரேடியல் மற்றும் திண்ம டயர் ஆலையினை ஹொரனை பிரதேசத்தில் அமைப்பதற்கு முன்வந்துள்ள முதலீட்டாளர் ஒருவருக்கு இலங்கை முதலீட்டு சபையின் ஊடாக தேவையான வசதிகளை செய்து கொடுப்பதற்கு அபிவிருத்தி உபாய முறைகள் மற்றும் சர்வதேச வர்த்தக அமைச்சர் மலிக் சமரவிக்ரமவினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
22. இலங்கை போக்குவரத்து சபையிற்காக புதிய உந்துபொறி தொகுதிகளை கொள்முதல் செய்தல் (விடய இல. 55)
இந்தியா கடன் உதவி திட்டத்தின் கீழ் மறு அனுப்பாணையின் அடிப்படையில் இலங்கை போக்குவரத்து சபையிற்காக அசோக் லேலண்ட் கம்பனியிடமிருந்து புதிய 163 உந்துபொறி தொகுதிகளை அமைச்சரவையினால் நியமிக்கப்பட்டுள்ள பேரம் பேசும் குழுவின் சிபார்சின் அடிப்படையில் கொள்முதல் செய்வதற்கு போக்குவரத்து மற்றும் சிவில் விமானசேவைகள் அமைச்சர் கௌரவ நிமல் சிறிபால டி சில்வா அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
23. இலங்கை புகையிரத திணைக்களத்திற்கு கொள்கலன்களை கொண்டு செல்லும் 20 சரக்கு இருப்பூர்த்திப் பெட்டிகளை மற்றும் 30 எரிபொருள் தாங்கி பெட்டிகளை கொள்முதல் செய்தல் (விடய இல. 57)
இந்தியா கடன் உதவி திட்டத்தின் கீழ் இலங்கை புகையிரத திணைக்களத்திற்கு கொள்கலன்களை கொண்டு செல்லும் 20 சரக்கு இருப்பூர்த்திப் பெட்டிகளை மற்றும் 30 எரிபொருள் தாங்கி பெட்டிகளை கொள்முதல் செய்வதற்கான ஒப்பந்தத்தை அமைச்சரவையினால் நியமிக்கப்பட்டுள்ள பேரம் பேசும் குழுவின் சிபார்சின் அடிப்படையில் வழங்குவதற் போக்குவரத்து மற்றும் சிவில் விமானசேவைகள் அமைச்சர் கௌரவ நிமல் சிறிபால டி சில்வாவினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
24. 'ரஜரட்டை நவோதய' ஜனாதிபதி நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் 'புபுதமு பொலன்னறுவை' மாவட்ட அபிவிருத்தி கருத்திட்டம் 2016 – 2020 (விடய இல. 59)
'ரஜரட்டை நவோதய' ஜனாதிபதி நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் 'புபுதமு பொலன்னறுவை' மாவட்ட அபிவிருத்தி கருத்திட்டத்தின் கீழ் விசேட வேலைத்திட்டங்கள் நான்கிற்கான பொறியியல் வரைபடங்கள் மற்றும் கட்டுமாண பணிகளை மத்திய பொறியியல் ஆலோசனைப் பணியகம், மத்திய பொறியியலாளர் சேவை தனியார் நிறுவனம் ஆகியவற்றுக்கு 4,120 மில்லியன் ரூபா மதிப்பீட்டு செலவில் ஒப்படைப்பதற்கு பாரிய நகரம் மற்றும் மேற்கத்திய அபிவிருத்தி அமைச்சர் கௌரவ பாட்டலி சம்பிக்க ரணவக்க அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
25. இலங்கை அரச வலையமைப்பு – 2.0 வேலைத்திட்டத்தை செயற்படுத்தல் (விடய இல. 66)
இலத்திரனியல் அரச நடவடிக்கைகளுக்கு தேவையான வேகமான மற்றும் பாதுகாப்பு தொடர்புகள் மற்றும் இலவசமாக வய் - பய் சேவையினை வழங்குவதை இலக்காகக் கொண்டு இலங்கை அரச வலையமைப்பு (LGN)– 2.0 வேலைத்திட்டத்தை செயற்படுத்துவது தொடர்பில் தொலைத்தொடர்புகள் மற்றும் டிஜிடல் உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சர் கௌரவ ஹரீன் பிரனாந்துவினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.