• #163, கிருலபன எவனியூ, கொழும்பு 05, இ லங்கை​
  • +94 112 51 5759

engsin

அமைச்சரவை தீர்மானம் - 2020.02.12

2020.02.12 அன்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்கள் பின்வருமாறு:

 

01. சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) அங்கத்துவ நாடுகளின் பங்களிப்புடன் சர்வதேச வளங்களை மானியமாக பயன்படுத்தி சோமாலியாவில் மறுசீரமைப்பு நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்குதவற்காக நிறுவப்பட்ட உத்தேச நிலுவை நிதியை சமாளித்தல் மற்றும் கடன் நிவாரண பொதி ஒன்றுக்காக இலங்கையின் பங்களிப்பை வழங்குதல்.

சர்வதேச நாணய நிதியத்தின் சிரமங்களை பகிர்ந்துகொள்ளும் நடைமுறை (Burden Sharing Mechanism) அதன் நிறைவேற்று சபையின் மூலம் 1986 ஆம் ஆண்டில் அங்கீகரிக்கப்பட்ட கொள்கையாவதுடன் பல்வேறு காரணங்களின் அடிப்படையில் அங்கத்துவ உறுப்பினர்களினால் கட்டணம் செலுத்தப்படாமையால் நிதியம் இழக்கப்பட்ட வருமானத்தை சரி செய்வதற்காக இந்த நடைமுறை வகுக்கப்பட்டுள்ளது. இதற்கு அமைவாக அறக்கட்டளையின் நிறைவேற்று சபையினால் 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் அங்கீகரிக்கப்பட்ட சோமாலியாவினால் செலுத்தப்படவேண்டிய எஞ்சியை தொகையை சமாளிப்பதற்கும் கடன் நிவாரண பொதிக்காக அங்கத்துவ நாடுகளின் உள்ளக வளங்களை முழுமையான ரீதியில் அல்லது பகுதியளவில் பங்களிப்பு செய்வதைப் போன்று அறக்கட்டளையினால் அங்கத்துவ நாடுகளுக்கு கோரிக்கை விடுக்கப்பட்;டுள்ளது. இதற்காக இலங்கையின் பங்களிப்பை வழங்குவது தொடர்பில் இலங்கை மத்திய வங்கி மற்றும் வெளிநாட்டு தொடர்புகள் அமைச்சினால் உடன்பாடு தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு அமைவாக, 163 மில்லியன் ரூபாவிற்கு சமனான தொகை ஒன்றை இலங்கையின் மொத்த பங்களிப்பாக சோமாலியா கட்டுப்படுத்தப்பட்ட கணக்கிற்கு மாற்றுவதற்காக நிதி, பொருளாதார மற்றும் கொள்கை அபிவிருத்தி அமைச்சர் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பரிந்துரைக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.

02. கலால் வரி கட்டளைச் சட்டம் (52 ஆவது அதிகாரம்) கீழ் அதிவிசேட வர்த்தமானியின் அறிவிப்பை பாராளுமன்றத்தின் அனுமதிக்காக சமர்ப்பித்தல்.

கலால் வரி கட்டளைச் சட்டத்தின் கீழ் அறவிடப்படும் சில வரிகளை திருத்துவதற்கு அமைவாக இந்த கட்டளைச் சட்டத்தின் (52 ஆவது அதிகாரம்) கீழ் வெளியிடப்பட்ட கீழ் கண்ட வர்த்தமானி அனுமதிக்காக பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்காக நிதி, பொருளாதாரம் மற்றும் கொள்கை அபிவிருத்தி அமைச்சர் என்ற ரீதியில் கௌரவ பிரதமர் அவர்கள் சமர்ப்பித்த பரிந்துரைக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
• 2019.12.03 திகதி அன்று இலக்கம் 2152/1 என்ற அதிவிசேட வர்த்தமானியில் வெளியிடப்பட்ட இலக்கம் 07/2019 என்ற கலால் வரி அறிவிப்பு.
• 2019.12.03 திகதி அன்று இலக்கம் 2152/12 என்ற அதிவிசேட வர்த்தமானி அறிவிப்பில் வெளியிடப்பட்ட இலக்கம் 08/2019 என்ற கலால் வரி அறிவிப்பு.
• 2019.12.03 திகதி இலக்கம் 2013/13 என்ற அதிவிசேட வர்த்தமானி அறிவிப்பில் வெளியிடப்பட்ட இலக்கம் 09/2019 என்ற கலால்வரி அறிவிப்பு.

03. அம்பாறை திகாவாவி ஸ்தூபியை (Dagoba) மறுசீரமைப்பதற்காக செங்கல்லை கொள்வனவு செய்வதற்காக விண்ணப்பங்களைக் கோரல்.

அம்பாறை திகாவாவி ஸ்தூபி (Dagoba) மறுசீரமைப்புக்கு செங்கல்லை கொள்வனவு செய்வதற்கு தேசிய போட்டி அடிப்படையிலான கேள்வி மனு கோரப்பட்டுள்ளதுடன், இதற்கு அமைவாக கிடைக்கப்பட்டுள்ள 08 கேள்வி மனுக்கள் இந்த பணிக்கு அமைவாக நியமிக்கப்பட்டுள்ள தொழில்நுட்ப மதிப்பீட்டு பிரிவினால் மதிப்பிடப்பட்டுள்ள சிபாரிசுகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. இதன் சிபாரிசுகளை கவனத்தில கொண்டு 7 விநியோகஸ்தர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளதுடன் தேவையான செங்கல்லை இதன் 7 விநியோகஸ்தர்கள் மூலம் விநியோகிப்பதற்காக கௌரவ பிரதமரும் பௌத்த சாசன கலாச்சார மற்றும் மத அலுவல்கள் அமைச்சர் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பரிந்துரைக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

04. அரச உடமையாக்கப்பட்ட மணல் மற்றும் மரக் குற்றிகளை தள்ளுபடி செய்வதற்கான நடவடிக்கை.

நாடு முழுவதிலும் உள்ள நீதி மன்றங்களினால் அரச உடமையாக்கப்பட்ட மணல் மற்றும் மரக் குற்றிகளை மத வழிபாட்டு தலங்கள் மற்றும் அரச நிறுவனங்களை நிர்மாணிப்பதற்கும், செப்பனிடும் நடவடிக்கைகளுக்காகவும் நிவாரண விலைக்கு வழங்குவதற்கு 2016 ஆம் ஆண்டில் அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. அத்தோடு நிவாரண விலைக்கு வழங்கும் காலத்தை அடிக்கடி நீடித்து இறுதியான ரீதியில் 2019.12.31 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டிருந்தது. மேலும் மத வழிபாட்டு தலங்களுக்காக மாத்திரம் தேவையான மணல் மற்றும் மரப் பலகைகளை வழங்கக்கூடிய வகையில் இதன் நடைமுறையை மேலும் ஒரு வருடத்துக்கு நீடிப்பதற்காக நீதி மன்றம், மனித வள மற்றும் சட்ட மறுசீரமைப்பு அமைச்சர் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணத்துக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

05. ஊழியர் சேமலாப நிதியத்தின் அங்கத்தவர்களுக்கு தமது மாதாந்த பங்களிப்பு பணம் கணக்கில் சேர்க்கப்படுவது தொடர்பாக உடனடியாக அறியத்தரும்; கையடக்க தொலைபேசி குறுஞ்செய்தி தகவல் சேவையை நடைமுறைப்படுத்துதல்.

தற்பொழுது ஊழியர் சேமலாப நிதியத்தின் அங்கத்தவர்கள் கொண்டுள்ள நிலையான சேவையாளர்களின் எண்ணிக்கை 2.6 மில்லியன் ஆகும். தற்பொழுது உள்ள நடைமுறைக்கு அமைவாக ஊழியர் சேமலாப நிதியத்தின் அங்கத்தவர்கள் தமது பங்களிப்பு தொகை நிதியத்தின் கணக்கில் சேர்க்கப்பட்டுள்ளதா என்பதை அறிந்துகொள்வதற்காக 06 தொடக்கம் 12 மாத காலப்பகுதி செல்வதுடன் இதன் காரணமாக பங்களிப்பு செய்யப்பட்ட நிதி கணக்கில் சேர்க்கப்பட்டமை தொடர்பில் பல பிரச்சினைகளை அங்கத்தவர்கள் அடிக்கடி எதிர்கொள்வதாக அடையாளம் காணப்பட்டுள்ளது. இதனால் இந்த நிதியத்தின் அங்கத்தவர்கள் தமது மாதாந்த பங்களிப்பு தொகை தமது கணக்கில் வைப்பீடு செய்யப்பட்டுள்ளதை மாதாந்தம் அவர்களால் உறுதி செய்யக்கூடிய வகையில் கணக்கில் சேர்க்கப்பட்டதுடன் அங்கத்தவர்களினால் தாம் குறிப்பிடும் கையடக்க தொலைபேசிக்கு குறுஞ் செய்தியின் மூலம் அறிவிக்கும் சேவை ஒன்றை ஆரம்பிப்பதற்கு திறனாற்றல் அபிவிருத்தி தொழில் வாய்ப்பு மற்றும் தொழிலாளர் தொடர்பு அமைச்சர் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பரிந்துரைக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

06. மெட்ரிட் ஒப்பந்தத்தின் கீழ் வர்த்தக சேவை குறியீட்டு பதிவு முறையை நடைமுறைப்படுத்தக்கூடிய வகையில் மெட்ரிட் கூட்டணி ஆவணத்துக்குள் பிரவேசித்தல் மற்றும் அதற்கு அமைவான வகையில் 2003 ஆம் ஆண்டு இலக்கம் 36 இன் கீழான புலமைச் சொத்து சட்டத்தில் திருத்தத்தை மேற்கொள்ளுதல்.

புலமைச் சொத்து அலுவலகம் தனது வர்த்தக குறியீட்டு அல்லது சேவை குறியீட்டை பதிவு செய்வதற்காக விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களுக்கு இந்த அலுவலகத்தின் ஊடாக நேரடியாக சர்வதேச ரீதியில் இந்த பணிகளை நிறைவேற்றிக் கொள்வதற்கு தற்பொழுது உடனடி மானிய வசதி இல்லை. இதற்காக ஒவ்வொரு நாடுகளும் புலமைச் சொத்து பிரதிநிதித்துவத்தின் மூலம் தனித்தனியாக விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டும். இந்த நிலைமையின் கீழ், வர்த்தக குறியீட்டை பதிவு செய்வதற்காக சர்வதேச புலமைச் சொத்து அமைப்பு (WIPO) மூலம் நிர்வகிக்கப்படும் மெட்ரிட் விதிமுறை ஆவணத்தில் (Madrid Protocol) இலங்கை அரசாங்கம் பிரவேசிக்க வேண்டும் என்று பரிந்துரைக்கப்பட்டுள்ளது. ஏற்றுமதியாளர்களுக்கு நீதிமன்ற அதிகார வரையறைக் குழுமத்தில் வர்த்தக குறியீட்டை பாதுகாப்பதற்கான நம்பிக்கையான வசதியான மற்றும் செலவை பயனுள்ள முறையில் மெட்ரிட் முறை மூலம் வசதிகள் செய்யப்படுகின்றன. இதற்கு அமைவாக இந்த நடைமுறையின் கீழ் சர்வதேச ரீதியில் விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்படுவதை இலகு படுத்துவதன் மூலம் இலங்கை வணிக சமூகத்தினரை ஊக்குவிப்பதை நோக்காக கொண்டு இலங்கை அரசாங்கத்தினால் மெட்ரிட் குழும பத்திரத்தில் பிரவேசிப்பதற்கும் அதற்காக புலமைச் சொத்து சட்டத்தில் மேற்கொள்ளப்படவேண்டிய திருத்தங்களை மேற்கொள்வதற்கு உயர் கல்வி, தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்க அமைச்சர் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பரிந்துரைக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

07. பேண்தகு அரிசி உற்பத்தியின் கீழ் இலங்கையில் உணவை பாதுகாப்பதற்கான சர்வதேச விஞ்ஞான ரீதியிலான ஒத்துழைப்பு.

விவசாய திணைக்களத்தின் நெல் ஆய்வு மற்றும் அபிவிருத்தி நிறுவனம் இலங்கையின் நெல் ஆய்வு தொடர்பிலான பொறுப்பை வகிப்பதுடன், இலங்கையில் உற்பத்தி செய்யப்படும் அனைத்து நெல் வகைகளும் இந்த நிறுவனத்துக்கு அமைவாக ஆய்வு இடங்களில் இனப்பெருக்கம் செய்யப்படுகின்றன. இந்த நடவடிக்கைக்கு அமைவாக தேவையான ஆலோசனை, வழிகாட்டல் மரபணு வளம் மற்றும் தொழில்நுட்பத்தை வழங்குவதன் மூலம் பிலிப்பைன்ஸ்; அரிசி ஆய்வு நிறுவனம் தனது ஒத்துழைப்பை வழங்குகின்றது. இதற்கு அமைவாக தற்பொழுது போன்று எதிர் காலத்திலும் எதிர்பார்க்கப்படும் காலநிலை மாற்றத்துக்கும் நோய் கிருமி நாசினிகளுக்கு தாக்குபிடிக்கக்கூடிய நெல் வகைகளை உற்பத்தி செய்வதற்காக சர்வதேச அரிசி ஆய்வு நிறுவனத்தின் ஒத்துழைப்புடன் பணியாற்றும் வேலைத்திட்டம் ஒன்றை நடைமுறைப்படுத்துவதற்காக மகாவலி, நீர்ப்பாசனம், விவசாயம் மற்றும் கிராமிய அபிவிருத்தி அமைச்சர்; சமர்ப்பித்த பரிந்துரைக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

08. உணவு பாதுகாப்பு மற்றும் வர்த்தக சந்தையில் அரிசி விலையை ஸ்திரப் படுத்துவதற்காக பாதுகாப்பான அரிசி தொகையை முன்னெடுத்தல்.

ஒவ்வொரு வருடத்திலும் நவம்பர், டிசம்பர் மாதங்களில் சந்தையில் அரிசியின் விலை அதிகரிப்பை காணக்கூடியதாக இருப்பதினால் இந்த காலப்பகுதியில் விநியோகத்துக்காக பாதுகாப்பான அரிசி தொகையை முன்னெடுப்பதன் தேவை உண்டு. 24 ஆயிரம் மெட்றிக் தொன் அரிசியை பாதுகாப்பு தொகையாக முன்னெடுப்பதற்கு தேவையான களஞ்சிய வசதியை தற்பொழுது உணவு ஆணையாளர் திணைக்களம் கொண்டுள்ளது. அரிசி விலை அதிகரிக்கும் சந்தர்ப்பத்தில் முன்னெடுக்கப்படும் பாதுகாப்பான அரிசி தொகையை சதொச ஊடாக சந்தைக்கு அரசாங்கத்தின் உறுதி செய்யப்பட்ட விலைக்கு வழங்குவதன் மூலம் அரிசி விலையை நிலையான மட்டத்தில் முன்னெடுப்பதற்கு எதிர்பார்க்கப்பட்டுள்ளது. இதற்கு அமைவாக நெல் சந்தைப்படுத்தும் சபையினால் கொள்வனவு செய்யப்படும் நெல்லை பெற்றுக்கொண்டு 20,000 மெட்றிக்தொன் சம்பா மற்றும் நாட்டரிசியை கையிருப்பில் முன்னெடுப்பதற்கு தேவையான நடவடிக்கையை மேற்கொள்வதற்காக மகாவலி, விவசாயம், நீர்ப்பாசனம் மற்றும் கிராமிய அபிவிருத்தி அமைச்சர் அவர்களினால் சமர்ப்பித்த பரிந்துரைக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

09. பிரதேச தொழில்பேட்டைகளில் தொழிற்சாலைகளை அமைப்பதற்காக காணிகளை ஒதுக்கீடு செய்தல்.

தொழிற்சாலை மற்றும் விநியோக முகாமைத்துவ அமைச்சினால் நடைமுறைப்படுத்தப்படும் பிரதேச தொழில்பேட்டை அபிவிருத்தி வேலைத்திட்டம் தொழிற்சாலை மேம்பாட்டை நோக்காக கொண்டு நடைமுறைப்படுத்தப்படும் பிரதான வேலைத்திட்டமாகும். இந்த வேலைத்திட்டத்தின் கீழ் தொழில் பேட்டை திட்டத்தை ஆரம்பிப்பதற்காக 8 முதலீட்டாளர்களுக்கு காணியை ஒதுக்கீடு செய்யும் அமைச்சின் திட்ட மதிப்பீட்டு குழுவினால் சிபாரிசு செய்யப்பட்டுள்ளது. இந்த முதலீட்டாளர்களினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள திட்ட பரிந்துரையை நடைமுறைப்படுத்துவதற்காக 726.3 மில்லியன் ரூபா முதலீடு செய்யப்படவுள்ளது. அத்தோடு இதன் மூலம் நேரடியாக 270 பேருக்கு தொழில்வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டுள்ளது. இதற்கு அமைவாக இந்த காணிகள் அடையாளம் காணப்பட்டு முதலீட்டாளர்களுக்கு ஒதுக்கீடு செய்வதற்காக தொழிற்சாலை மற்றும் விநியோக முகாமைத்துவ அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணத்துக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

10. இலங்கைக்கு வருகை தரும் சுற்றுலாப்பயணிகளுக்கு கட்டணம் அறவிடப்படாமல் விசா அனுமதி வழங்கும் முறையை நீடித்தல்.

48 நாடுகளில் இருந்து இலங்கைக்கு வருகை தரும் சுற்றுலாப்பயணிகளுக்கு சுதந்திர விசா விநியோகிக்கும் வேலைத்திட்டம் 2019 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 01 ஆம் திகதி தொடக்கம் 6 மாத காலத்திற்கு நடைமுறைப்படுத்துவதற்கென 2019 ஆம் ஆண்டு ஜுலை மாதம் 30 ஆம் திகதி அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டிருந்தது. இதற்கு அமைவாக, சுதந்திர விசா வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்ட காலப்பகுதியில் இந்த நாடுகளில் இருந்து வரும் சுற்றுலாப்பயணிகளின் வருகை அதிகரித்திருந்தமை அவதானிக்கப்பட்டுள்ளது. இந்த நிலைமையை கவனத்தில் கொண்டு கட்டணம் அறவிடப்படாமல் விசா வழங்கும் முறைக்கான வேலைத்திட்டம் தற்பொழுது அனுமதிக்கப்பட்டுள்ளது. இந்த 48 நாடுகளுக்காக 2020 பெப்ரவரி 1 ஆம் திகதி தொடக்கம் 2020 ஏப்ரல் 30 ஆம் திகதி வரையில் மேலும் 3 காலப்பகுதிக்காக நீடிப்பதற்கு சுற்றுலா மற்றும் விமான சேவைகள் அமைச்சர் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பரிந்துரைக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

11. புறக்கோட்டை மெனிங் வர்த்தக சந்தையை பெஹலியகொடவிற்கு இடம் மாற்றுவதற்காக ஆக கூடிய கட்டமைப்பபை நிர்மாணித்தல் - அதிவேக நெடுஞ்சாலை தொடர்புபடும் வீதியில் இருந்து உத்தேச மெனிங் வர்த்தக தொகுதி வரையில் நுழைவாயிலுக்கு இடைப்பட்ட தொடர்புடைய பகுதியை அபிவிருத்தி செய்தல் மற்றும் மேம்படுத்துதல்.

புதிய மெனிங் சந்தை கட்டிட தொகுதியை பெஹலியகொடவில் நிர்மாணிக்கும் பணி 2016 ஆம் ஜனவரி மாதம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன் இதன் நிர்மாணப் பணிகள் பூர்த்தி செய்யப்பட்டு 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதம் அதனை பொதுமக்கள் பாவனைக்காக திறப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இந்த புதிய கட்டிட தொகுதிக்காக உள்ள பிரதான நுழைவாயிலான ஞானரத்தன மாவத்தை, மெனிங் சந்தை மற்றும் மீன் சந்தை கட்டிட தொகுதிக்கு திறந்த பின்னர் கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலை மற்றும் தொடர்புபடும் வீதியில் பாரிய வீதி நெரிசல் ஏற்படக்கூடும் என்பதினால் இந்த உள்ளக தொடர்பு பகுதியில் 350 மீற்றர் வீதி நிரலொன்றை குறுகிய காலத்துக்குள் விரிவுபடுத்தும் தேவை ஏற்பட்டுள்ளது. இதற்கு அமைவாக அமைச்சரவையினால் நியமிக்கப்பட்ட நிலையியற் பெறுகைக்குழுவின் சிபாரிசுக்கு அமைய தற்பொழுது மெனிங் சந்தை கட்டிட தொகுதியில் ஆகக்கூடிய கட்டமைப்பை நிர்மாணிக்கு பணியை பூர்த்தி செய்துவரும் மஹா பொறியியலாளர்( தனியார்) நிறுவனத்துக்கு இந்த நிர்மாண பணிகளுக்கு அமைவாக சம்பந்தப்பட்ட வீதி பகுதியை அபிவிருத்தி செய்தல் மற்றும் மேம்படுத்துவதற்காக ஒப்பந்தத்தை வழங்குவதற்கு நகர அபிவிருத்தி, நீர் விநியோகம் மற்றும் வீடமைப்பு அமைச்சர் என்ற ரீதியில் கௌரவ பிரதமர் அவர்கள் சமர்ப்பித்த பரிந்துரைக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

12. சுகாதார கட்டமைப்பை மேம்படுத்தும் திட்ட ஒழுங்குறுத்தல் மற்றும் மதிப்பீட்டிற்காக ஆலோசனை நிறுவனம் ஒன்றை தெரிவு செய்வதற்கான பெறுகை.

ஆசிய அபிவிருத்தி வங்கியினால் நிதி உதவி வழங்கப்படும் சுகாதார கட்டமைப்பை மேம்படுத்தும் திட்டத்திற்காக ஆலோசகர்களை தெரிவு செய்வதற்காக நடைமுறைப்படுத்தப்படும் பெறுகை தொடர்பில் அமைச்சரவையினால் நியமிக்கப்பட்ட ஆலோசனை பெறுகைக் குழுவினால் சமர்ப்பிக்கப்பட்ட சிபாரிசுக்கு அமைய இதன் பெறுகை (Sri Lanka Business Development Centre) என்ற நிறுவனத்துக்கு வரிகளை உள்ளடக்கிய வகையில் 94.23 மில்லியன் ரூபாவை வழங்குவதற்காக சுகாதாரம் மற்றும் சுதேசிய வைத்திய சேவை அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்துக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

13. ஆசிய அபிவிருத்தி வங்கியினால் நிதி உதவி வழங்கப்படும் 2 ஆவது ஒன்றிணைந்த வீதி முதலீட்டு திட்டம் - மேல் மாகாண சிவில் பணி ஒப்பந்தம் 1000 பொதிகளை வழங்குதல்.

இரண்டாவது ஒன்றிணைந்த வீதி முதலீட்டு வேலைத் திட்டத்தின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும் மேல் மாகாண கிராமிய வீதி புனரமைப்பு ஃ மேம்படுத்துதல் மற்றும் பராமரிப்பதற்கான சிவில் ஒப்பந்தம் 10 பொதிகள் அமைச்சரவையினால் நியமிக்கப்பட்ட நிலையியற் பெறுகைகுழுவின் சிபாரிசுக்கு அமைய NCC Limited, Kalika Construction Pvt Ltd மற்றும் Gamini Construction கூட்டு வியாபாரம், Hovel Construction Pvt Ltd. மற்றும் Senok Trade Combine Pvt Ltd. கூட்டு வர்த்தகம் ; Access Engineering PLC மற்றும் Luxman Metal Crushers and Enterprises என்ற நிறுவனங்களுக்கு வழங்குவதற்காக வீதி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்துக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

14. இந்திய கடனுதவி வேலைத்திட்டத்தின் கீழ் குருநாகல் மற்றும் மாஹாவிற்கு இடையில் ரயில் பாதையை இரட்டைப் பாதைகளாக மேம்படுத்துவதற்கான பரிந்துரை.

வடக்கு ரயில் பாதையில் குருநாகல் மற்றும் மாஹவிற்கு இடையிலான பகுதியில் நிலவும் நெருக்கடியின் காரணமாக காலை மற்றும் அலுவலக ரயில்கள் ஒரு மணித்தியாலத்திற்கு மேற்பட்ட காலம் தாமதமாவது இயல்பான ஒன்றாகும் என்பதினால் வடக்கு நோக்கி செல்லும் பயணிகள் ரயில்களின் பயணக்காலத்தை குறைத்து, வடக்கு ரயில் பாதையை மீள கட்டியெழுப்புவதன் மூலமான நன்மைகளை பெற்றுக்கொள்வதற்காக இந்திய கடன் உதவியின் கீழ் எஞ்சியுள்ள நிதியைப் பயன்படுத்தி குருநாகல் மற்றும் மாஹவிற்கும் இடையில் தற்பொழுது உள்ள வீதிக்கும் மேலதிகமாக, மேம்படுத்தப்படவேண்டிய சமிஞ்சை கட்டமைப்புடனான 43 கிலோ மீற்றர் மேலதிக வீதி ஒன்றை அமைப்பதற்கும் சம்பந்தப்பட்ட ஆலோசனை சேவைக்காக பொறியியலாளர் பணிகள் தொடர்பான மத்திய ஆலோசனை அலுவலகத்தின் (CECB) சேவையைப் பெற்றுக்கொள்வதற்காக போக்குவரத்து சேவைகள் முகாமைத்துவ அமைச்சர் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பரிந்துரைக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

15. 2019/2020 பெரும் போகத்தில் அரசாங்கத்தினால் நெல்லைக் கொள்வனவு செய்யும் வேலைத்திட்டத்துக்காக நிதி வழங்குதல்.

விவசாயிகள் தமது நெல் அறுவடைக்காக நியாயமான விலை வழங்கப்படுவதை உறுதி செய்வதற்காக 2019/2020 பெரும் போகத்தில் அரசாங்கத்தினால் நெல் கொள்வனவு வேலைத்திட்டம் தற்பொழுது ஆரம்பிக்கப்பட்டுள்ளது. நேரடியாக நெல் சந்தைப்படுத்தும் சபையினாலும் பிரதேச செயலாளர்களின் மூலமும் சிறிய மற்றும் நடுத்தர அளவிலான நெல் உரிமையாளர்கள் மற்றும் கூட்டுறவு சங்கத்தின் ஊடாகவும் சம்பந்தப்பட்ட மாவட்ட செயலாளர்கள் / அரசாங்க அதிபர்கள் மூலமும் முன்னெடுக்கப்படும் இந்த நெல் கொள்வனவு வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகின்றது. சம்பந்தப்பட்ட வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக இதுவரையில் இலங்கை வங்கி, மக்கள் வங்கி மற்றும் பிரதேச அபிவிருத்தி வங்கி ஊடாக 3830 மில்லியன் ரூபா கடனை விடுவிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு தேவையான நிதியை இந்த வங்கிகள் ஊடாக வழங்குவதற்காக நிதி, பொருளாதாரம் மற்றும் கொள்கை அபிவிருத்தி அமைச்சர் என்ற ரீதியில் கௌரவ பிரதமர் அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்தக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

16. 2019 ஆம் ஆண்டு நிதி ஆண்டில் கொடுப்பனவு தீர்க்கப்படாமல் பற்றுச்சீட்டு கொடுப்பனவை செலுத்துவதற்காக மானியத்தை பெற்றுக்கொள்வதற்கான பிரேரணையை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தல்.

கடந்த அரசாங்கத்தினால் கடந்த வருடத்தில் ஆரம்பிக்கப்பட்ட திட்டம் மற்றும் வேலைத்திட்டங்களுக்கு அமைவாக 367 மில்லியன் ரூபா செலுத்தப்படாத பொறுப்பு தீர்க்கப்படுவதற்கு தேவையான மானியத்தை பெற்றுக்கொள்ளும் நோக்கில் 2020 இடைக்கால நிறைவேற்று கணக்கு திருத்தத்தை மேற்கொள்வதற்காக பாராளுமன்றத்தில் பிரேரணை ஒன்றை சமர்ப்பிப்பதற்காக 2020 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 5 ஆம் திகதி நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டது. இதற்கு அமைவாக திருத்த சட்ட மூல வரைவு பிரிவினால் தயாரிக்கப்பட்ட சட்டமா அதிபரின் அனுமதி கிடைத்துள்ள அதன் பிரேரணையை பாராளுமன்றத்தில் சமரப்;பிப்தற்காக நிதி, பொருளாதாரம் மற்றும் கொள்கை அபிவிருத்தி அமைச்சர் என்ற ரீதியில் கௌரவ பிரதமர் அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்தக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

17. இலங்கை கனிம சென்டிஸ்; லிமிட்டெட் நிறுவனத்தினால் அகழ்ந்தெடுக்கப்பட்டு விநியோகிக்கப்படும் கனிய வள மணலுக்கு பெறுமதி சேர்க்கும் திட்டம் அரசாங்கம் மற்றும் தனியார் பங்குடமை முறையின் கீழ் நடைமுறைப்படுத்தப்படுகின்றது.

தற்பொழுது பெறுமதி சேர்க்கப்பட்டு தயாரிக்கப்பட்டு விற்பனை செய்வதன் மூலம் ஏனைய நாடுகள் உலக சந்தையில் போட்டித் தன்மையை எற்படுத்தியுள்ளதுடன் (Raw Form) சுயமான வழியில் கனிம மணல் ஏற்றுமதிக்கு கூடுதலான கனிம மணலுக்கு பெறுமதி சேர்க்கப்பட்டு தயாரிக்கப்பட்டு உலக சந்தைக்கு அனுப்பவுது தொடர்பில் கவனம் செலுத்துவது அத்தியாவசியமாக அடையாளம் காணப்பட்டுள்ளது. இந்த நோக்கத்தை வெற்றிகொள்வதற்காக இலங்கை கனிம சென்டிஸ் லிமிட்டெட் நிறுவனத்தினால் அகழ்ந்தெடுக்கப்படும் கனிம மணலைப் பயன்படுத்தி அரச – தனியார் பங்குடமை திட்டத்தை ஆரம்பித்து பெறுமதி சேர்க்கப்பட்ட ஏற்றுமதி வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக கைத்தொழில் மற்றும் விநியோக முகாமைத்தவ அமைச்சர் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணத்துக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

18. நீண்ட காலமாக பதவி உயர்வு கிடைக்கப்பெறாத பொலிஸ் கான்ஸ்டபிள் தரத்தில் இருந்து பொலிஸ் பரிசோதகர் பதவி வரையில் மகளிர் மற்றும் ஆண் பொலிஸ் அதிகாரிகளுக்கு ஒரு முறை மாத்திரம் வழங்கப்படும் பதவி உயர்வை வழங்குதல்.

பொலிஸாருக்கு பதவி உயர்வு வழங்குவதில் கடந்த காலத்தில் உரிய முறை கடைப்பிடிக்கப்படாததன் காரணமாக தேவையான தகுதியை பூர்த்தி செய்திருந்த போதிலும் பொலிஸ் கான்ஸ்டபிள் பதவி தொடக்கம் பொலிஸ் பரிசோதகர் பதவிக்காக பதவி உயர்வை பெற்றுக்கொள்வதற்கு மகளிர் மற்றும் ஆண் பொலிஸார் பெரும் எண்ணிக்கையினரால் முடியாதிருந்தது. உரிய ஆட்களை சேர்த்துக்கொள்ளும் விதிமுறைகளுக்கு அமைவான முறை இருந்த போதிலும் இதற்கு அமைவாக பதவி உயர்வு மேற்கொள்ளப்படவில்லை என்பது தெரிய வந்துள்ளது. இதன் காரணமாக ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் வழங்கப்பட்டுள்ள பதவி உயர்வை சவாலுக்கு உட்படுத்தி உயர் நீதி மன்றத்தில் சுமார் 50 வழக்குகள் விசாரிக்கப்பட்டு வருகின்றது. பொலிஸ் தலைமையகத்தினால் நியமிக்;கப்பட்ட குழுவினால் இந்த நிலைமை மதிப்பீடு செய்யப்பட்டு சம்பந்தப்பட்ட பதவி உயர்வை வழங்குவதற்கான பரிந்துரை தயாரிக்கப்பட்டுள்ளது. அத்தோடு முதலாவது கட்டம் இதுவரையில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு அமைவாக தொடர்ந்தும் நீண்ட காலத்துக்கு பதவி உயர்வு கிடைக்காமல் இருக்கும் மகளிர் பொலிஸ் கான்ஸ்டபிள், பொலிஸ் சார்ஜன், மகளிர் பொலிஸ் சார்ஜன், உப பொலிஸ் பரிசோதகர், மகளிர் உப பொலிஸ் பரிசோதகர், பொலிஸ் பரிசோதகர்கள் மற்றும் மகளிர் பொலிஸ் பரிசோதகர்களுக்கு பதவி உயர்வுகளை வழங்குவதற்காக மகாவலி, விவசாயம் நீர்ப்பாசனம் மற்றும் கிராமிய அபிவிருத்தி அமைச்சர் மற்றும் உள்ளக வர்த்தகம், உணவு பாதுகாப்பு மற்றும் நுகர்வோர் சேமநலன் அமைச்சர் மற்றும் இராஜாங்க பாதுகாப்பு அமைச்சர் சமர்ப்பித்த ஆவணத்துக்கு அமைச்சரவை கொள்கை ரீதியிலான விடயமாக கருத்தில் கொண்டு; அங்கீகாரம் வழங்கியுள்ளது.

சமீபத்திய செய்திகள்

24.05.2022 அமைச்சரவை தீர்மானங்கள்

26 May 2022

23.05.2022 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் எட்டப்பட்ட முடிவுகள்

03.05.2022 அமைச்சரவை தீர்மானங்கள்

03 May 2022

02.05.2022 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் எட்டப்பட்ட முடிவுகள்

26.04.2022 அமைச்சரவை தீர்மானங்கள்

26 April 2022

25.04.2022 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் எட்டப்பட்ட முடிவுகள்

ஊடக அறிக்கை - 03.04.2022

04 April 2022

பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு மாத்திரமே அவசரகால சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது

ஊடக அறிக்கை - 02.04.2022

04 April 2022

இன்று மாலை 6.00 மணியிலிருந்து திங்கட்கிழமை காலை 6.00 மணிவரை...

ஊடக அறிக்கை - 01.04.2022

04 April 2022

நாடு முழுவதும் அவசர கால நிலைமை சட்டம் அமுல்படுத்தப்படுகிறது

29.03.2022 அமைச்சரவை தீர்மானங்கள்

31 March 2022

28.03.2022 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் எட்டப்பட்ட முடிவுகள்

22.03.2022 அமைச்சரவை தீர்மானங்கள்

22 March 2022

21.03.2022 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் எட்டப்பட்ட முடிவுகள்

ஊடக அறிக்கை - 17.03.2022

18 March 2022

ஊடக அறிக்கை -203/2022

15.03.2022 அமைச்சரவை தீர்மானங்கள்

15 March 2022

14.03.2022 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் எட்டப்பட்ட முடிவுகள்

அத்துடன் இலங்கையிலுள்ள ஊடகத்துறையின் கொள்கை திட்டமிடல் , பயிற்சி நெறிகளை வழங்குதல் , மற்றும் ஊடகத்துறைக்கான அங்கீகாரங்களை வழங்குவதிலும் இந்நிறுவனம் முன்னின்று உதவுகின்றது.