2020.02.05 அன்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தின் போது மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்கள்
2020.02.05 அன்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தின் போது மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்கள்:
01.ரஜகல தொல்பொருள் வளவில் தொல் பொருள் உரிமை முகாமைத்துவத்தை மேற்கொள்ளல்.
உஹன பிரதேச செயலாளர் பிரிவிற்கு உட்பட்ட ரஜகல தென்னே என்ற இடத்தில் சுமார் 1025 ஏக்கரளவில் பரந்து காணப்படும் 'அரியாகார' விகாரை கட்டிட தொகுதியில் தொல் பொருள் முக்கியத்துவத்தைக் கொண்ட 593 இடங்கள் இருப்பதாக உறுதி செய்யப்பட்டுள்ளன. அவற்றுள் மிகவும் முக்கியமான இடங்கள் தற்பொழுது கணக்கிடப்பட்டு பாதுகாக்கப்பட்டு நாட்டுக்கு வழங்கப்பட்டுள்ளதுடன், இதன் அடிப்படையில் இந்த சுற்றாடலில் சுற்றுலாப்பயணிகளை இப்பகுதி வெகுவாக கவர்ந்துள்ளது.
தொல் பொருள் மற்றும் வரலாற்று ரீதியில் மிகவும் முக்கியமானதாக காணப்படும் சம்பந்தப்பட்ட நினைவுச்சின்னங்களை பாதுகாப்பதற்காக 2022 ஆம் ஆண்டு நிறைவடையும் வரையில் தொல் பொருள் திணைக்களம் மற்றும் ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகமும் கூட்டாக இணைந்து ரஜகல மறுசீரமைப்பு திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக புத்தசாசன கலாச்சார மற்றும் மத அலுவல்கள் அமைச்சர் கௌரவ பிரதமர் அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
02.சர்வதேச தொழிலாளர் அமைப்பின் 2005, 2006 சிபாரிசுகள் மற்றும் 190 ஆவது இணக்கப்பாட்டை பாராளுமன்றத்திற்கு சமர்ப்பித்தல்
சர்வதேச தொழிலாளர் சம்மேளனத்தின் 108 மற்றும் 106 ஆவது கூட்ட தொடர்களில் நிறைவேற்றப்பட்ட கீழ் கண்ட சிபாரிசுகள் மற்றும் பாராளுமன்ற இணக்கப்பாட்டை பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்காக திறனாற்றல் அபிவிருத்தி தொழில் வாய்ப்பு மற்றும் தொழிலாளர் தொடர்பு அமைச்சர் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணம் அமைச்சரவையினால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
2019 ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட சர்வதேச தொழிலாளர் சம்மேளனத்தில் 108 ஆவது கூட்ட தொடரில்:
இணக்கப்பாடு 190 – உலக அளவிலான வன்முறை மற்றும் இம்சைகளை இல்லாதொழிப்பது தொடர்பிலான இணக்கப்பாடு.
சிபாரிசு 206 – உலக அளவிலான வன்முறை மற்றும் இம்சைகளை இல்லாதொழிப்பது தொடர்பான சிபாரிசு.
2017 ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட சர்வதேச தொழிலாளர் சம்மேளனத்தில் 106 ஆவது கூட்ட தொடரில்.
சிபாரிசு 205 – சமாதானம் மற்றும் மன அழுத்தம் வேலைவாய்ப்புத்திறனியல் தொடர்பிலான சிபாரிசு
03.அங்கேரியா மனிதவள அபிவிருத்தி அமைச்சு மற்றும் இலங்கை உயர்கல்வி மற்றும் புத்தாக்க அமைச்சுக்கு இடையில் கல்வி மற்றும் விஞ்ஞான அறிவைப் பரிமாறும் புலமைப்பரிசில் வேலைத்திட்டம் தொடர்பிலான புரிந்துணர்வு உடன்படிக்கையை எட்டுதல்.
ஷஷசௌபாக்கிய தொலைநோக்கு' என்ற அரசாங்கத்தின் தேசிய கொள்கை கட்டமைப்பிற்கு அமைவாக மனிதவள அபிவிருத்தி ஊடாக அறிவை அடிப்படையாக கொண்ட பொருளாதாரத்தை முன்னெடுக்கும் அபிவிருத்தி மூலோபாய வேலைத்திட்டத்திற்கு அமைவாக, நாட்டின் மாணவர்களுக்கு வெளிநாட்டு உயர் கல்விக்கான சந்தர்ப்பத்தை விரிவுப்படுத்தும் நோக்கத்தைக் கொண்டு அங்கேரிய அரசாங்கத்துடன் புரிந்துணர்வு உடன்படிக்கையை எட்டுவதற்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. உத்தேச உடன்படிக்கையின் மூலம் அங்கேரிய அரசாங்கத்தினால் இலங்கை மாணவர்களுக்கு வருடாந்தம் இருபது (20) புலமைப்பரிசில்களுக்கான சந்தர்ப்பம் கிடைப்பதுடன் 3 வருட காலத்தில் 60 புலமைப்பரிசில்களுக்கான சந்தர்ப்பம் இலங்கைக்கு கிட்டும். வருடாந்தம் அங்கேரிய நாட்டின் ஐந்து (5) மாணவர்களுக்கு நாட்டில் கல்வி அல்லது ஆய்விற்கான சந்தர்ப்பத்திற்காக இலங்கை அரசாங்கத்தினால் புலமைப்பரிசில் வழங்கப்படும்.
இதற்கு அமைவாக அங்கேரிய அரசாங்கத்தின் மனிதவள உற்பத்தித்திறன் அமைச்சுக்கும் இலங்கை உயர் கல்வி, தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்க அமைச்சுக்கு இடையில் கல்வி மற்றும் விஞ்ஞான அறிவை பரிமாறிக்கொள்ளும் புலமைப்பரிசில் வேலைத்திட்டம் தொடர்பில் புரிந்துணர்வு உடன்படிக்கை ஒன்றை கைச்சாத்திடுவதற்கும் இந்த புரிந்துணர்வு உடன்படிக்கைக்கு அமைவாக புலமைப்பரிசில்களை பரிமாறிக்கொள்ளும் வேலைத்திட்டம் உயர் கல்வி அமைச்சு, தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்க அமைச்சினால் நடைமுறைப்படுத்துவதற்கு உயர் கல்வி அமைச்சு, தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்க அமைச்சர் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
04. காலநிலை தாக்கங்களை கட்டுப்படுத்தும் திட்டத்தில் (CRIP) எஞ்சிய திட்டத்தை பயன்படுத்தி அடையாளம் காணப்பட்ட திட்டத்தை நடைமுறைப்படுத்துதல்.
2014 ஆம் அண்டில் உலக வங்கி நிதி உதவியின் கீழ் ஆரம்பிக்கப்பட்ட காலநிலை தாக்கங்களை குறைப்பதற்கான திட்டம் 2020.06.30 ஆம் திகதி அன்று நிறைவடையவுள்ளது. திட்டத்தின் மொத்த பெறுமதி 152 மில்லியன் அமெரிக்க டொலர்களாகும். இத் திட்டத்திற்கான உடன்படிக்கைக்கு அமைவாக எட்டப்படவேண்டிய இலக்கு தற்பொழுது நெருங்கி வருகின்றது. திட்டத்தில் அடையாளம் காணப்பட்ட கூறுகளின் வேலைத்திட்டம் நிறைவடைந்தவுடன் 2500 மில்லியன் ரூபா அளவில் மானியம் எஞ்சியிருக்கும் என்பது அடையாளம் காணப்படும். இதற்கு அமைவாக இந்த எஞ்சிய மானியத்தை பயன்படுத்தி திட்டம் வகுக்கப்படும் சந்தர்ப்பத்தில் அடையாளம் காணப்படாத அத்தியாவசியமானவற்றை நிர்மாணிப்பதற்காக நிதியை ஒதுக்கீடு செய்வதற்கும், மேலும் எஞ்சிய மானியத்தை உலக வங்கி நிதியத்தின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும் காலநிலை தாக்கங்களை குறைப்பதற்கு பல்வேறு கட்ட வேலைத்திட்டங்களை அடையாளம் கண்டு பணிகளுக்கான ஆரம்ப திட்டத்தை வகுப்பதற்காக பயன்படுத்துவதற்கு மகாவலி விவசாய நெடுஞ்சாலைகள் மற்றும் கிராமிய அபிவிருத்தி அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த பரிந்துரைக்கு அமைச்சரையினால் உடன்பாடு தெரிவிக்கப்பட்டுள்ளது.
05.100,000 கிலோ மீற்றரைக் கொண்ட மாற்று வீதி கட்டமைப்பை அபிவிருத்தி செய்வதற்கான வேலைத்திட்டம்
பிரதான வீதி மற்றும் அதிவேக நெடுஞ்சாலையில் உயர் மட்டத்திலான பிரவேசத்திற்காக வசதிகளைச் செய்வதற்காக 100,000 கிலோ மீற்றர் மாற்று வீதி கட்டமைப்பு ஒன்றை அபிவிருத்தி செய்வதற்காக 2019.12.18 ஆம் திகதி அன்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தின் போது அங்கீகாரம் வழங்கப்பட்டது. இதற்கு அமைவாக கடந்த 10 வருட காலத்தில் எந்தவித மறுசீரமைப்பும் மேற்கொள்ளப்படாமை சீர்திருத்த மற்றும் அடையாளம் காணப்பட்ட வீதி பயன்பாட்டைக் கொண்ட குடும்பங்களின் எண்ணிக்கை வீதியைப் பயன்படுத்தி கல்வி, வைத்தியம், வர்த்தகம் போன்ற வசதிகளுக்காக பிரவேசிப்பதற்கு உள்ள ஆற்றல் போன்ற விடயங்களை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்ட அளவுக்கோல்களை பயன்படுத்தி அபிவிருத்தி செய்யப்படவேண்டிய வீதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இதற்கு அமைவாக மாகாண சபையின் பங்களிப்புடன் உத்தேச வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காகவும் வெளிநாட்டு நிதி உதவியின் கீழ் வீதியை அபிவிருத்தி செய்தவற்காக தற்பொழுது நடைமுறைப்படுத்தப்படும் திட்டங்களை அடையாளம் கண்டு பகுதியளவிலான உத்தேச வேலைத்திட்டத்தின் கீழ் நடைமுறைப்படுத்துவதற்காகவும் வீதி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
06. காங்கேசந்துறை துறைமுகத்தை அபிவிருத்தி செய்யும் திட்டம்
காங்கேசந்துறை துறைமுகத்தை அபிவிருத்தி செய்வதற்காக துறைமுகத்துக்கு அருகில் சுமார் 50 ஏக்கர் காணியை இலங்கை துறைமுக அதிகார சபையிடம் வழங்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கு அமைவாக, துறைமுகத்துக்கு அருகாமையில் 15 ஏக்கர் அரசாங்கத்துக்கு சொந்தமான காணி ஒன்றை 52 மில்லியன் ரூபா செலுத்தப்பட்டமைக்கு அமைவாக பொறுப்பேற்பதற்கும் தனியார் உரித்துடைமையின் கீழ் மேலும் 32 ஏக்கர் காணிக்கு இழப்பீட்டை செலுத்தி காணியை பெற்றுக்கொள்ளும் சட்டத்தின் விதிகளுக்கு உட்பட்டதாக பொறுப்பேற்பதற்கும், துறைமுகம் மற்றும் கடல் நடவடிக்கைகள் அமைச்சர் அவர்கள் முன்வைத்த பரிந்துரைக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
07.இலங்கை பழ வகைகளுடன் தொடர்புபட்ட தயாரிப்பு விநியோக தொழிற்சாலை ஒன்றை நிறுவுதல்.
பாலுடன் தொடர்புபட்ட பான வகைகள் மற்றும் பேக்கரி தயாரிப்புக்களுக்கு தேவையான வகையில் தயாரிக்கப்பட்ட பழ வகையுடன் தொடர்புபட்ட மூலப்பொருட்களை விநியோகிக்கும் உலகின் பரிய டென்மார்க் விநியோகஸ்தரான ORANA என்ற நிறுவனத்தினால் பழ வகையுடன் தொடர்புபட்ட விநியோக தொழிற்சாலை ஒன்றை நிறுவுவதற்காக பன்னலவில் அமைந்துள்ள கைத்தொழில் பண்ணையில் 2 ஏக்கர் அளவிலான காணி ஒன்றை பெற்றுக்கொள்வதற்கான கோரிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. உத்தேச திட்டத்தின் முதல் கட்டத்தின் கீழ் 1.5 மில்லியன் அமெரிக்க டொலர் முதலீட்டை மேற்கொள்வதற்காக முதலீட்டாளரினால் திட்டமிடப்பட்டுள்ளது. அத்தோடு இந்த கட்டத்தின் கீழ் சுமார் 30 தொழில் வாய்ப்புகள் புதிதாக உருவாகும் ORANA நிறுவனம் மற்றும் இலங்கை கைத்தொழில் சபைக்கும் இடையில் ஒப்பந்தம் ஒன்றை எட்டுவதற்கு அமைவாக சம்பந்தப்பட்ட திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக பன்னல கைத்தொழில் பண்ணையில் காணி ஒன்றை வழங்குவதற்காக கைத்தொழில் மற்றும் விநியோக முகாமைத்துவ அமைச்சர் அவர்களினால் சமர்பிக்கப்பட்ட ஆவணத்துக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
08. இலங்கை பீங்கான் கூட்டுத்தாபனத்தை மீளக்கட்டியெழுப்பும்; பணியின் கீழ் ஒட்டுசுட்டான் தயாரிப்பு பணிகளை மீள ஆரம்பிப்பதற்கான திட்டம்.
அரசாங்கத்தின் கொள்கை பிரகடனத்தில் குறிப்பிடப்பட்ட அரச தொழில் துறையை மீண்டும் ஆரம்பிக்கும் கொள்கைக்கு அமைவாக கைத்தொழில் மற்றும் விநியோக முகாமைத்துவ அமைச்சுக்கு உட்பட்டதாக உள்ள இலங்கை பீங்கான் கூட்டுத்தாபனத்தை மீளக்கட்டியெழுப்பி அதன் கீழ் சீர்குலைந்த நிலையில் உள்ள அனைத்து தொழிற்சாலைகளையும் மீண்டும் ஆரம்பிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன் முதல் கட்ட நடவடிக்கை என்ற ரீதியில் முல்லைத்தீவு மாவட்டத்தில் ஒட்டுச்சுட்டானில் அமைந்துள்ள ஓடு மற்றும் செங்கல் தெழிற்சாலையின் தயாரிப்பு பணிகளை மீண்டும் ஆரம்பிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளதுடன் இதன் மூலம் ஒரு மாதத்தில் சுமார் 400,000 ஓடு மற்றும் செங்கல்லை தயாரிப்பதற்கு எதிர்பார்க்கப்பட்டுள்ளது. இதற்கு அமைவாக தொழிற்சாலையின் கட்டிடம் மற்றும் இயந்திரங்களின் முழுமையான உரிமையை இலங்கை பீங்கான் கூட்டுத்தாபனத்துடன் தக்கவைத்துக்கொண்ட ஓடு மற்றும் செங்கல் தயாரிப்புக்கனை டி.எஸ்.ஐ. நிறுவனத்தின் துணை நிறுவனமான சென்சென் ரஜரட்ட ரைல்ஸ் பிரைவட் நிறுவனத்துடன் இணைந்து செயற்படுவதற்காக கைத்தொழில் மற்றும் விநியோக முகாமைத்துவ அமைச்சர் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பரிந்துரைக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
09.கஹடகஹ கிரைனைட் லங்கா லிமிட்டட் நிறுவனத்தின் மூலம் அகழ்வின் மூலம் பெறப்படும் காரீயத்துக்காக அரசாங்கம் மற்றும் தனியார் பங்குடைமை முறை ஒன்றின் அடிப்படையிலான பெறுமதி சேர்க்கப்பட்ட திட்டம் ஒன்றை நடைமுறைப்படுத்துதல்.
கஹடகஹ கிரைனைட் லங்கா லிமிட்டட் நிறுவனம் முழுமையான வகையில் அரசாங்கத்தை சார்ந்த நிறுவனமாவதுடன் அதன் மூலம் காரீயம் அகழ்வு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் கஹடகஹ சுரங்கத்தில் மாதம் ஒன்றுக்கு 65 தொடக்கம் 70ற்கு இடைப்பட்ட மெற்றிக்தொன் காரீயம் பெறப்பட்டு அவை மூலப்பொருள் வடிவில் ஏற்றுமதி செய்யப்படுகின்றது. உலக சந்தையின்; தேவையில் 7 சதவீத காரீயம் இலங்கையினால் விநியோகிக்கப்படுகின்றது. இந்த நிலையின் அடிப்படையில் சர்வதேச சந்தையில் அழுத்தத்தை ஏற்றபடுத்துவதற்கு முடியாது என்பதினால் கஹடகஹ சுரங்கத்தின் அகழ்வு மூலம் பெறப்படும் காரீயத்துக்கு பெறுமதி சேர்க்கப்படுவது அத்தியாவசியமாக மேற்கொள்ளப்பட வேண்டும் என்று அடையாளம் காணப்பட்டுள்ளது. இதற்கு அமைவாக அகழ்வு மற்றும் விநியோகிக்கப்படும் காரீயத்துக்கு பெறுமதி சேர்க்கப்படும் செயற்பாடுகளை மேற்கொள்வதற்காக மாத்திரம் போட்டித்தன்மையுடனான பெறுகையைக் கோரும் முறையின் கீழ் உள்ளுர் மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்களுடன் விருப்பத்தை வெளிப்படுத்துவதற்காக அழைப்புகளை விடுப்பதற்கும் திட்ட குழு ஒன்றையும் அமைச்சரவையினால் நியமிக்கப்பட்ட பேச்சுவார்த்தை இணக்கப்பாட்டு குழுவின் மூலம் சமர்பிக்கப்படும் பரிந்துரையை பாராட்டி பொருத்தமான முதலீட்டாளர் ஒருவரை தெரிவு செய்து உத்தேச திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கும் கைத்தொழில் மற்றும் விநியோக முகாமைத்துவ அமைச்சர் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணத்திற்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
10. இலகு ரக வாகனங்களுக்கான (Lite vehicle) சாரதி அனுமதிப் பத்திரத்தை வழங்கும் நடவடிக்கையில் வைத்திய சான்றிதழ் விநியோகிப்பதற்காக அரசாங்க வைத்தியசலைகளில் வசதிகளை ஏற்படுத்துதல்.
மோட்டர் வாகன போக்குவரத்து அனுமதிப் பத்திரத்தை விநியோகிப்பதற்காக தற்பொழுது தேசிய போக்குவரத்து வைத்திய நிறுவனத்தினால் வழங்கப்படும்; வைத்திய சான்றிதழில் உள்ளடங்கும் வைத்திய பரிசோதனை நடத்துவதற்கான வசதிகளுடன் கூடிய 150 ஆரம்ப வைத்தியசாலைகள் மற்றும் மாவட்ட வைத்திசாலைகள் தற்பொழுது நாடு முழுவதிலும் உண்டு. இருப்பினும் அந்த வைத்தியசாலைகளின் மூலம் சம்பந்தப்பட்ட வைத்திய சான்றிதழ்களை வழங்கும் போது சேவை பயனாளிகளுக்கு ஒரே இடத்தில் அனைத்து பரிசோதனைகளையும் மேற்கொள்வதற்கும் முடியாமல் உள்ளது. இதனால் அரச வைத்தியசாலைகளில் இந்த பணிகளுக்காக தனியான அலகொன்றை முன்னெடுப்பது பொருத்தமானது என அடையாளம் காணப்பட்டுள்ளது. இதற்கு அமைவாக தேசிய போக்குவரத்து வைத்திய நிறுவனத்தினால் தயாரிக்;கப்பட்ட பட்டியலுக்கு அமைவான அரசாங்க வைத்தியசாலைகளின் மூலம் சம்பந்தப்பட்ட பரிசோதனைகளை மேற்கொண்டு சேவைப் பயனாளிகளுக்கு வைத்திய அறிக்கைகளை பெற்றுக்கொடுப்பதற்கும், அனைத்து சேவைகளையும் ஒரே இடத்தில் பெற்றுக்கொள்ளும் வகையில் அரச வைத்தியசாலைகளில் வசதிகளுடன் கூடிய பிரிவு ஒன்றை அமைப்பதற்காக போக்குவரத்து சேவை முகாமைத்துவ அமைச்சர் அவர்களினால் அமைச்சரவைக்கு ஆலோசனை ஒன்று முன்வைக்கப்பட்டுள்ளது. இதில் உள்ள விடயங்களை கவனத்தில் கொண்டு சம்பந்தப்பட்ட வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு வசதி செய்யும் வகையில் வைத்திய கட்டளை சட்டத்தில் பதிவு செய்யப்பட்ட வைத்தியர்களுக்கு சாரதி அனுமதிப்பத்திரத்தை வழங்கும் போது கவனத்தில் கொள்ளப்படும் வைத்திய சான்றிதழை வழங்குவதற்கு அதிகாரம் வழங்கும் வகையில் 2009 ஆம் ஆண்டு இலக்கம் 8 இன் கீழான மோட்டார் வாகன சட்டத்தில் திருத்தத்தை மேற்கொள்வதற்கு அமைவாக அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
11.கிளிநொச்சியில் அமைந்துள்ள இலங்கை ஜேர்மன் தொழில்நுட்ப பயிற்சி நிறுவனத்தில் (SLGTI) மாணவர் தங்குமிட விடுதியை நிர்மாணிப்பதற்கான ஒப்பந்தத்தை வழங்குதல்.
கிளிநொச்சியில் அமைந்துள்ள இலங்கை ஜேர்மன் தொழில்நுட்ப பயிற்சி நிறுவனத்தில் (SLGTI) மாணவர் தங்குமிட விடுதியை நிர்மாணிப்பதற்கான ஒப்பந்தம் அமைச்சரவையினால் நியமிக்கப்பட்ட பெறுகைக்குழுவின் சிபாரிசுக்கமைய 185.61 மில்லியன் ரூபாவிற்கு (ஒன்றுசேர்க்கப்பட்ட பெறுமதி அடிப்படையிலான வரி, அரசாங்கத்தின் வரி விதிகள் மற்றும் அனுமதிக்கப்பட்ட சதவீதத்திற்கு அமைவாக செலுத்துவதற்கு உட்பட்டதாக) 450ஃ4 லக்வில், புத்தளம் வீதி யன்தம்பலாவ, குருநாகல் என்ற முகவரியில் அமைந்துள்ள எம்ஃஎஸ் வகையிட் கன்ஸ்ட்ரக்சன் (தனியார்) நிறுவனம்) (M/s Wahid Construction (Pvt Ltd) என்ற நிறுவனத்திடம் வழங்குவதற்காக திறனாற்றல் அபிவிருத்தி, தொழில் வாய்ப்பு மற்றும் தொழிலாளர் தொடர்பு அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த பரிந்துரைக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
12. 4000 ஐ.இ.யூ - 5000 எப்போயிடின் மீள்நிரப்பைக் கொண்ட 950,000 ஐ.இ.யூ சிறின்ஞர்களை விநியோகிப்பதற்கான பெறுகை
சிறுநீரக நோயாளர்களின் சிகிச்சைக்காக பயன்படுத்தப்படும் எப்போயிடின் மீள் நிரப்பை கொண்ட 4000 ஐ.இ.யூ - 5000 ஐ.இ.யூ சிறின்ஞர் 950,000 விநியோகிப்பதற்கான பெறுகை, அமைச்சரவையினால் நியமிக்கப்பட்ட நிலையியற் பெறுகைக்குழுவின் சிபாரிசுக்கமைய இந்தியாவில் உள்ள s M/s Reiance Life Science என்ற நிறுவனத்திடம் மொத்த செலவாகவும் வாடகை செலவாகவும் 1.39 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்குவதற்காக சுகாதார அமைச்சு மற்றும் சுதேசிய வைத்தியத்துறை சேவைகள் அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
13.ரேப்பிஸ் வெக்சின் (மனித பயன்பாடு) (மி.லீ. 1ஃமி.லீ 0.5) ரக 340,000 குப்பிகளை விநியோகிப்பதற்கான பெறுகை
விசர் நாய்க்கடி நோய் ஏற்படுவதில் இருந்து பாதுகாப்பதற்காக பயன்படுத்தப்படும் ரேப்பிஸ் வெக்சின் (மனித பாவனை) (மி.லீ. 1ஃமி.லீ 0.5) 340,000 குப்பிகளை விநியோகிப்பதற்கான பெறுகை, அமைச்சரவையினால் நியமிக்கப்பட்ட நிலையியற் பெறுகைக்குழுவின் சிபாரிசுக்கமைய M/s New Arumed (Pvt) Ltd என்ற நிறுவனத்திடம் மொத்த செலவாக 399.84 மில்லியன் ரூபாவை வழங்குவதற்காக சுகாதார மற்றும் சுதேசிய வைத்திய சேவை அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த பரிந்துரைக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
14.கொழும்பு துறைமுகத்திற்கான ஒருங்கிணைந்த பாதுகாப்பு கெமரா கட்டமைப்பு ஒன்றை (சி.சி.டி.வி) நடைமுறைப்படுத்துதல்.
துறைமுக வளவில் பிரவேசிக்கும் அனைத்து பிரவேச கிடங்கு, முனை திறந்த களஞ்சிய பிரதேசம், வீதி, எல்லை வேலிகள் மற்றும் துறைமுக நீர்;த்தடை பிரவேசங்களை உள்ளடக்கிய வகையில் அந்த இடங்களில் இடம்பெறும் அனைத்து நடவடிக்கைகளையும் கண்காணிப்பதற்கும், பதிவுகளை மேற்கொள்வதற்கும் பாதுகாப்பு கெமரா கட்டமைப்பு ஒன்றை ஸ்தாபிப்பதற்காக இலங்கை துறைமுக அதிகார சபையினால் ஆலோசனை ஒன்றை முன்வைத்துள்ளது. இதன் மூலம் கொழும்பு துறைமுகத்தின் பாதுகாப்பை மேலும் உறுதி செய்வதற்கும் பயனுள்ளதாகவும், செயல்திறனை மேம்படுத்துதல் மற்றும் கொழும்பு துறைமுகத்தில் வணிக பணிகளுக்கு பொருத்தமான சுற்றாடல் ஒன்று உருவாகும். இதற்கமைவாக இந்த பணிகளுக்காக அமைச்சரவையினால் நியமிக்கப்பட்ட பெறுகைக்குழு ஒன்று மற்றும் தொழில்நுட்ப மதிப்பீட்டுக்குழு ஒன்றையும் நியமிப்பதற்காக துறைமுக மற்றும் கடல் நடவடிக்கைகள் அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த பரிந்துரைக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
15. ரயில் செயல்திறனை மேம்படுத்துவதற்கான திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான ஆலோசனைச் சேவை
ரயில் செயல்திறனை மேம்படுத்துவதற்கான திட்டத்திற்கு ஆசிய அபிவிருத்தி வங்கியின் மூலம் கிடைக்கப்பெற்றுள்ள கடன் நிதியின் மூலம் ஒரு பகுதி திட்டத்தின் ஆலோசனைச் சேவையை வழங்குவதற்காக பயன்படுத்தப்படவுள்ளது. இதற்கமைவாக ஆசிய அபிவிருத்தி வங்கியின் உடன்பாட்டின் அடிப்படையில் அமைச்சரவையியால் நியமிக்கப்பட்ட ஆலோசனை பெறுகைக்குழுவின் சிபாரிசிற்கு அமைய சம்பந்தப்பட்ட ஆலோசனை சேவை ஒப்பந்தம் Egis Rail மற்றும்Egis International மற்றும் ; Greentech Consultants (Pvt) Ltd மாற்று வர்த்தகத்திடம் வழங்குவதற்காக போக்குவரத்து சேவைகள் முகாமைத்துவ அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த பரிந்துரைக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
16.இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கான பராமரிப்பு மற்றும் அவசர செயற்பாட்டு (MERV) கப்பல் ஒன்றை வாடகைக்கு அமர்த்தல்
இலங்கையின் எரிபொருள் தேவையில் 70 சதவீதம் வழங்கப்படுவது இறக்குமதி செய்யப்பட்ட சுத்திகரிக்கப்பட்ட கனியவள உற்பத்தி மூலமாவதுடன் இதற்காக கொழும்பு துறைமுகத்திற்கு வெளியில் மற்றும் கொழும்பு துறைமுகத்தில் எரிபொருளை விநியோகிப்பதற்காக மூன்று இடங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றில் கொழும்பு துறைமுகத்திற்கு 9.2 கிலோமீற்றர் தொலைவில் அமைக்கப்பட்டுள்ள ஒரு இடத்தில் மிதக்கும் மிதவை கட்டமைப்பில் செயற்பாட்டு பணிகள் மற்றும் பராமரிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவது விஷேடமாக நிர்மாணிக்கப்பட்ட பராமரிப்பு மற்றும் அவசர பெறுபேறை அறிவிக்கும் இயந்திரம் ஒன்று (MERV) பயன்படுத்தப்படுகின்றது. இதற்கமைவாக இவ்வாறான இயந்திரம் ஒன்றை வாடகை அடிப்படையில் பெற்றுக்கொண்டு சம்பந்தப்பட்ட சேவையை நிறைவேற்றுவதற்காக துறைமுகம் மற்றும் கடல் நடவடிக்கைகள் அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
17.2020.03.15 தொடக்கம் 2020.11.14 வரையிலான எட்டு மாதக்காலத்திற்கு டீசல் (ஆக்கூடிய சல்பர் சதவீதம் 0.05) 520,000 பீப்பாய்கள் மற்றும் பெற்றோல் (92 Un1) 680,000 பீப்பாய்களை இறக்குமதி செய்வதற்காக நீண்டகால ஒப்பந்தத்தை மேற்கொள்ளுதல்
2020.03.15 தொடக்கம் 2020.11.14 வரையிலான எட்டு மாதக்காலத்திற்கு டீசல் (ஆக்கூடிய சல்பர் சதவீதம் 0.05) 520,000 பீப்பாய்கள் மற்றும் பெற்றோல் (92 Un1) 680,000 பீப்பாய்களை இறக்குமதி செய்வதற்காக நீண்டகால பெறுகைக்கு அமைச்சரவையினால் நியமிக்கப்பட்ட விஷேட நிலையியற் பெறுகைக்குழுவின் சிபாரிசுக்கமைய M/s Swiss Singapore Overseas Enterprises Pte. Ltd என்ற நிறுவனத்திடம் வழங்குவதற்கு மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
18.2020.03.01 – 2020.10.31 வரையிலான எட்டு மாத காலத்திற்கு டீசல் (ஆக்கூடிய சல்பர் சதவீதம் 0.05) 2,240,000 பீப்பாய்களை இறக்குமதி செய்வதற்காக நீண்ட கால ஒப்பந்தத்தை மேற்கொள்ளுதல்
2020.03.01 – 2020.10.31 வரையிலான எட்டு மாத காலத்திற்கு மதிப்பீடு செய்யப்பட்ட டீசல் (ஆக்கூடிய சல்பர் சதவீதம் 0.05) 2,240,000 பீப்பாய்களை இறக்குமதி செய்வதற்காக அமைச்சரவையினால் நியமிக்கப்பட்ட விஷேட நிலையியற் பெறுகைக்குழுவின் சிபாரிசுக்கமைய ஆஃள ளுறளைள ளுiபெயிழசந ழுஎநசளநயள நுவெநசிசளைநள Pவந. டுவன என்ற நிறுவனத்திடம் மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணத்திற்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
19. 2020 ஃ 2022 ஆண்டுக்கான திரவ (LPG) பெற்றோலியத்திற்கான ஒப்பந்தத்தை வழங்குதல் - Litro Gas Lanka Ltd
Litro Gas Lanka Ltd நிறுவனம் அரசாங்கத்திற்கு உட்பட்ட நிறுவனமாக ஸ்தாபிக்கப்பட்டுள்ள இலங்கையின் திரவ பெற்றோலியம் (LPG) பயன்படுத்துவோரின் 75 சதவீதம் வர்த்தக பங்கை கொண்ட திரவ பெற்றோலிய வாயுவை விநியோகிக்கும் நிறுவனம் ஆகும். இதற்கமைவாக சந்தைக்குதொடர்ச்சியாக விநியோகத்தை உறுதி செய்து 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதலாம் திகதி தொடக்கம் இரண்டு வருட காலத்திற்கு திரவ பெற்றோலியம் (LPG) 740,000 மெற்றிக் தொன் Litro Gas Lanka Ltd நிறுவனத்திடம் கொள்வனவு செய்வதற்கான ஒப்பந்தம் அமைச்சரவையினால் நியமிக்கப்பட்ட நிலையியற் பெறுகைக்குழுவின் சிபாரிசுக்கமைய ஆM/s Oman Trading International Ltd என்ற நிறுவனத்திடம் வழங்குவதற்காக நிதி, பொருளாதார மற்றும் கொள்கை அபிவிருத்தி அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
20.காலநிலை மாற்றத்தினால் ஏற்படும் பாதிப்பை குறைப்பதற்கான திட்டம் (CRIP) கீழ் ' முன்தெனிய ஆறு கங்கா என்ற நதிப்படுகை மற்றும் மட்டக்களப்பில் வெள்ள அனர்த்தத்தை கட்டுப்படுத்துவதற்கான சாத்தியவள அறிக்கை மற்றும் விரிவான பொறியியல் திட்டத்திற்கான ஆலோசனைச் சேவை'
காலநிலையினால் ஏற்படும் தாக்கத்தை கட்டுப்படுத்துவதற்கான திட்டத்தின் (CRIP) கீழ் ' முன்தெனிய ஆறு கங்கா என்ற நதிப்படுகை மற்றும் மட்டக்களப்பில் வெள்ள அனர்த்தத்தை கட்டுப்படுத்துவதற்கான சாத்தியவள அறிக்கை மற்றும் முழுமையான பொறியியல் திட்டத்திற்கான ஆலோசனைச் சேவைக்கான ஒப்பந்தத்தில் முதல் கட்டமான சாத்தியவள அறிக்கையை மேற்கொள்வதற்காக Egis Eau and SCP and Green tech JV என்ற நிறுவனத்துடன் ஒப்பந்தத்தை எட்டுவதற்கும், இந்த கட்டம் பூர்த்தி செய்யப்பட்ட பின்னர் இந்த நிறுவனத்துடன் சம்பந்தப்பட்ட ஒப்பந்தத்தின் இரண்டாம் கட்டத்தின் கீழ் விரிவான பொறியியல் திட்டத்தை வகுக்கும் ஆலோசனை ஒப்பந்தத்தை மேற்கொள்வதற்கும் மகாவலி, விவசாய, நீர்ப்பாசன மற்றும் கிராமிய அபிவிருத்தி அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த பரிந்துரைக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
21. கிரித்தலை வன ஜீவராசிகள் ஆய்வு பயிற்சி மத்திய நிலையத்தை மறுசீரமைத்தல்
கிரித்தலை வன ஜீவராசிகள் ஆய்வு பயிற்சி மத்திய நிலையத்தில் உத்தேச மறுசீரமைப்பு பணிகள் சுற்றாடல் கட்டமைப்பு பாதுகாப்பு மற்றும் முகாமைத்துவ திட்டத்தின் கீழ் நடைமுறைப்படுத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்;ளதுடன் இந்த திட்டத்தின் கால எல்லை 2021.06.30 திகதியுடன் நிறைவடையவுள்ளது. உத்தேச மறுசீரமைப்பு பணிகள் ஒரு திட்டமாக நடைமுறைப்படுத்தப்பட்;ட போதிலும் திட்டம் நிறைவடைவதிற்குள்ள நாளுக்கு முன்னர் சம்பந்தப்பட்ட நிர்மாணப் பணிகளை பூர்த்தி செய்வதற்கு முடியாது என்பது கண்காணிக்கப்பட்டுள்ளது. இதனால் கிரித்தலை வன ஜீவராசிகள் ஆய்வு மத்திய நிலையத்தில் நிலவும் கல்வி மற்றும் நிர்வாக கட்டிட தொகுதி ஆய்வு மத்திய நிலையமாக அபிவிருத்தி செய்தல், புதிய வசதிகளுடனான இருப்பிட விடுதியை புதுப்பித்தல் மற்றும் கல்வி மத்திய நிலையமாக நிர்மாணித்தல் போன்ற முக்கிய உதிரிப்பாகங்களின் கீழ் மூன்றை பெற்றுக்கொள்வதற்கான கேள்வி மனுவை கோரி சம்பந்தப்பட்ட மறுசீரமைப்பு பணிகளை மேற்கொள்வற்காக கௌரவ சுற்றாடல் மற்றும் வன ஜீவராசிகள் அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை உடன்பாடு தெரிவித்துள்ளது.
22. பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் பயணிகள் டெர்மினலுக்கான (முனையில்) விஷேட பிரவேசம்
பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு வரும் மற்றும் வெளியேறும் பெரும் எண்ணிக்கையிலான பயணிகள் காரணமாக அலுவலக நெருக்கடி மிக்க நேரங்களில் விமான நிலையத்திற்கு வரும் வீதியில் பெருமளவில் வாகன நெரிசல் இடம்பெறுவது அவதானிக்கப்பட்டுள்ளது. இதனால் விமான நிலையத்திற்குள் இலகுவாக பிரவேசிப்பதற்காக முதலீட்டு சபை மற்றும் மினுவாங்கொடை வீதியில் இருந்து இரு நிரலைக் கொண்ட இரண்;டு வீதிகள் அடங்கலாக வேறான விமான நிலைய பிரதேச வீதி ஒன்றை நிர்மாணிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கமைவாக 600 மில்லியன் ரூபா மதிப்பீட்டின் கீழ் சம்பந்தப்பட்ட வீதியை நிர்மாணிப்பதற்கும் இதற்கான நிதியை வரையறுக்கப்பட்ட விமான நிலையம் மற்றும் விமான சேவை ( ஸ்ரீலங்கா) நிறுவனத்திடம் வழங்குவதற்கும் சுற்றுலா மற்றும் விமான சேவைகள் அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
23. 2019 நிதி ஆண்டில் செலுத்தப்பட வேண்டிய தீர்க்கப்படாத பற்றுச்சீட்டு கொடுப்பனவிற்கான நிதியை பெற்றுக்கொள்ளுதல்
கடந்த அரசாங்கத்தின் கீழ் பல்வேறு அமைச்சுக்களின் கீழ் நடைமுறைப்படுத்தப்பட்ட திட்டங்களுக்கு இதுவரையில் செலுத்தப்படாத பற்றுச்சீட்டு கொடுப்பனவு மற்றும் பாராளுமன்றத்தில் அங்கீகரிக்கப்பட்டுள்ள கடனை செலுத்துவதற்கான வரையறை உள்ளடக்கப்படாத வெளிநாட்டு நிதியின் மூலம் பெறப்பட்ட நிதி கட்டளையை நடைமுறைப்படுத்தியுள்ள அபிவிருத்தி திட்டங்களுக்கான செலவை கணக்கிடுவதற்காக 367 மில்லியன் ரூபா மேலதிக நிதி தேவைப்படுகின்றது. இந்த நிதியை பெற்றுக்கொள்ளக்கூடிய வகையில் பாராளுமன்றத்திற்கு பிரேரணை ஒன்றை சமர்ப்பிப்பதற்கு தேவையான நடவடிக்கையை மேற்கொள்வதற்கு நிதி, பொருளாதாரம் மற்றும் கொள்கை அபிவிருத்தி அமைச்சர் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணத்திற்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
24. நிதி (திருத்த சட்ட மூலம்)
2019 நவம்பர் மாதம் 27 ஆம் திகதி அன்று அமைச்சரவையினால் அங்கீகரிக்கப்பட்ட அதிமேதகு ஜனாதிபதி அவர்களின் ஷஷபொருளாதாரத்தை மீள கட்டியெழுப்பும் ஆரம்பம்ஷஷ என்ற வேலைத்திட்டத்திற்கு அமைவாக 2018 ஆம் ஆண்டு இலக்கம் 35 இன் கீழான நிதி சட்டத்தில் விதிக்கப்பட்டுள்ள கடனை மீள செலுத்துவதற்கான வட்டி நீக்கப்படவேண்டியுள்ளது. இதற்கமைவாக 2020 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதலாம் திகதி தொடக்கம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள கடனை மீள செலுத்தும் வட்டியை நீக்குவதற்காக சட்ட ஒதுக்கீடுகளை உள்ளடக்கி சட்ட திருத்தம் தயாரிப்பின் மூலம் தயாரிக்கப்பட்ட நிதி (திருத்தப்பட்ட) திருத்த சட்ட மூலத்தை அரசாங்க வர்த்தமானியில் வெளியிட்ட பின்னர் பாராளுமன்றத்தின் அனுமதிக்காக சமர்ப்பிப்பதற்கென நிதி, பொருளாதாரம் மற்றும் கொள்கை அபிவிருத்தி அமைச்சர் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
25.தொழில் வாய்ப்பின்றி இருக்கும் பட்டதாரிகளை தொழிலில் ஈடுபடுத்தும் வேலைத்திட்டம்
இதற்கு முன்னர் பல சந்தர்ப்பங்களில் பட்டதாரிகளை தொழிலில் ஈடுபடுத்தும் வேலைத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்ட போதிலும் மேலும் நாடு முழுவதிலும் சில அரச நிறுவனங்களில் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் வெற்றிடங்கள் இருப்பது தெரிய வந்துள்ளது விஷேடமாக கிராமத்தில் பின்தங்கிய பிரதேசங்களில் அரச ஊழியர்களின் பற்றாக்குறையினால் கிராம மக்கள் அரச சேவையை பெற்றுக் கொளவதில்; பெரும் சிரமங்களை எதிர்கொள்வது அவதானிக்கப்பட்டுள்ளது.
பழமை கலாச்சார நிர்வாகத்திற்கு அப்பால் சென்று பொது மக்களை இலக்காக கொண்ட சேவையை வழங்கும் முறையை அறிமுகப்படுத்துவதற்காக தற்பொழுது உள்ள நடைமுறையை சிறப்பான முறையில் மாற்றுவதற்காக இளைஞர் சமூகத்தினரை ஆற்றல் மற்றும் செயல்திறனை பயன்படுத்தக் கூடிய வகையில் 2012 ஆம் ஆண்டு தொடக்கம் இது வரையில் பல்கலைக்கழகங்களில் இருந்து வெளியேறி தொழில் வாய்ப்பின்றி இருக்கும் சுமார் 50,000 இளைஞர் யுவதிகளுக்கு பங்களிப்பை பெற்றுக்கொள்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
இதற்கமைவாக 2019.12.31 திகதி அன்று பட்டத்தை பெற்ற மற்றும் பட்டதாரிக்கு சமமான கல்வி தகைமையாக பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட தகுதிகளை பூர்த்தி செய்துள்ள இளைஞர் யுவதிகளை பட்டதாரி பயிற்றுவிப்பாளர்களாக ஒரு வருட பயிற்சி காலத்திற்கு உட்பட்டதாக இணைத்துக்கொள்வதற்கும் பயிற்சி காலத்திற்கு பின்னர் ஐந்து வருடகாலம் ஆரம்ப நியமன தொழில் ஸ்தானத்தில் பணியாற்றிய பின்னர் மாவட்ட ஃ மாகாண மட்டத்தில் இடமாற்றத்தை பெற்றுக்கொள்வதற்கு சந்தர்ப்பத்தை வழங்குவதற்கு கூடிய வகையில் தொழில் வாய்ப்பற்ற பட்டதாரிகள் கீழ் கண்ட நிறுவனத்தின் கீழ் இணைத்துக் கொள்வதற்கு அதிமேதகு ஜனாதிபதி அவர்கள் சமர்ப்பித்த பரிந்துரைக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
• கல்வி அமைச்சு
(அனைத்து பாடசாலைகளிலும் தரம் மூன்று தொடக்கம் தரம் பதினொன்று வரையில் பாடசாலை கற்கை சிபாரிசுகளுக்கு ' நாயகத்வய' என்ற கற்கைநெறியை உள்ளடக்கி அந்த கற்கை நெறியை கற்பிப்பதற்காகவும், கிராமிய மற்றும் தோட்ட பாடசாலைகளில் நிலவும் வெற்றிடங்களை பூரணப்படுத்துவதற்காகவும்)
• நீர்ப்பாசன திணைக்களம் (கிராமிய நீர்ப்பாசன பராமரிப்பு)
• விவசாய அபிவிருத்தி திணைக்களம் (கிராம விவசாய அபிவிருத்தி)
• வன ஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களம் (வன ஜீவராசிகள் மற்றும் அணுகுமுறை திட்டம்)
• ஆயுர்வேத திணைக்களம் (பிரதேச ஆயுர்வேத வைத்தியசாலைகள்)
• சுகாதார மற்றும் சுதேசிய வைத்திய சேவை அமைச்சு (கிராமிய வைத்தியசாலைகள் ஃ டிஸ்பென்சரி)
• நில அளவை திணைக்களம்
• விவசாய திணைக்களம் (விவசாய சேவை மற்றும் தொழில் நுட்ப சேவை)
• ஏற்றுமதி விவசாய திணைக்களம் (சிறு ஏற்றுமதி பயிர் திட்டம்)
• கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களம் (கால்நடை பண்ணை அபிவிருத்தி)
• மதிப்பீட்டு திணைக்களம்
• குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம்.