சூழல் பாதுகாப்புக்கு பங்கம் விளைவிக்கும் அஸ்பஸ்டோஸ் கணியத்தை இறக்குமதி செய்வதில் கட்டுப்பாடு
வீட்டுக்கூரைத் தகடுகள், டையில் வகை, சீமேந்து குழாய், வாகனங்களுக்கான ப்ரேக் பேட்ஸ், கடதாசி மற்றும் கயிறு என்பவற்றை தயாரிப்பதற்கு அஸ்பஸ்டோஸ் கணியம் பயன்படுத்தப்படுகிறது.
உலக சுகாதார அமை்பபினால் (WHO) புற்றுநோயை ஏற்படுத்தும் காரணிகளில் ஒன்றாக அடையாளங்காணப்பட்டுள்ள நீலஸ்பஸ்டோஸ் (Crocidolite) இலங்கைக்கு இறக்குமதி செய்வது கடந்த 1987ஆம் ஆண்டே தடை செய்ப்பட்டதையடுத்து தற்போது பயன்படுத்தப்படும் வௌ்ளை அஸ்பஸ்டோஸ் (Chrysotile) உட்பட அனைத்து அஸ்பஸ்டோஸ் கணியவகைகளும் புற்றுநோய் காரணியாக உலக சுகாதார அமைப்பினால் அடையாளங்காணப்பட்டுள்ளது.
இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் அஸ்பஸ்டோஸ் கணிய வகைகளில் 80 வீதமானவை கூரைத் தகடுகள் தயாரிப்பதற்காக பயன்படுத்தப்படுகிறது. இந்நிலையில் நாட்டு மக்களின் சுகாதாரத்தை மேம்படுத்துவதற்காக இலாபம் தரக்கூடிய மாற்று திட்டமொன்றை அறிமுகம் செய்வதற்கும் அஸ்பஸ்டோஸ் உற்பத்தி மற்றும் பாவனையை எதிர்வரும் 2018ஆம் ஆண்டு ஜனவரி முதலாம் திகதி முதல் கட்டுப்படுத்துதவற்கும் 2024ஆம் ஆண்டளவில் நாட்டில் அஸ்பஸ்டோஸ் சார் உற்பத்திகளை முற்றாக நிறுத்துவதற்கான நடவடிக்கையை மேற்கொள்வதற்கும் மகாவெலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி முன்வைத்த கோரிக்கைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியது.
பொலிதீனினால் ஏற்படும் சுற்றாடல் பிரச்சினைகளை கட்டுப்படுத்துக்கு முறையான முகாமைத்துவத்தை கடைப்பிடித்தல்
பிளாஸ்டிக் மற்றும் பொலிதீன் சார் உற்பத்திகளை பயன்படுத்துகின்றமையை தற்காலத்தில் பொதுவாக காணக்கூடிய விடயமாகும். அவ்வுற்பத்திகளை முறையாக பயன்படுத்தாமை, அகற்றுதல் மற்றும் எரித்தல் என்பவற்றினால் பல்வேறு சமூக , சுற்றாடல் , சுகாதார மற்றும் பொருளாதார பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளன.
உலகில் சில நாடுகளில் பொலிதீன் பாவனை முற்றாக தடை செய்யப்பட்டுள்ள நிலையில் சில நாடுகள் தெரிவு செய்யப்பட்ட பொலிதீன் வகைகளை பயன்படுத்துகின்றனர். இலங்கையில் நாளொன்றுக்கு தனிநபர் ஒருவர் 0.5 கிலோ கிராம் பொலிதீனை பயன்படுத்துகிறாார். அதேவேளை, இலங்கையில் வருடாந்தம் 5 இலட்சம் டொன் பொலிதீன் மூலப்பொருட்கள் இறக்குமதி செய்யப்படுகின்றன. மக்கிப் போவதற்கு அதிக காலம் எடுக்கும் பொலிதீன் சூழலுடன் இணைவதால் சூழல் அதிகம் பாதிக்கப்படுவதுடன் பொலிதீன் உற்பத்தி தொழிற்சாலைகளில் பணியாற்றும் ஊழியர்களும் பல்வேறு சுகாதார பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்கவேண்டியுள்ளது. இவற்றைக் கருத்திற்கொண்டு இலங்கையில் பொலிதீன் மற்றும் பிளாஸ்டிக் பாவனை தொடர்பான தேசிய கொள்கை மற்றும் திட்டமொன்றை உருவாக்குவதற்காக நிபுணர்கள் குழுவொன்றை உருவாக்குவதற்காக மகாவெலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி முன்வைத்த கோரிக்கைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியது.
தேசிய சமுத்திர வள பாதுகாப்பு வாரத்தை அறிவித்தல்
மக்கிப்போகாத கழிவுகள் நேரடியாக கடலில் சேர்வதனால் சமுத்திர வளம் மாத்திரமன்றி அதனுடன் தொடர்புபட்ட மீன்பிடித்துறை மற்றும் சுற்றுலாத்துறை என்பனவும் பாதிக்கப்படுகின்றன. எனவே சமுத்திர சூழல் தொகுதியை பாதுகாப்பதற்கும் அதனுடன் தொடர்புட்ட துறைகளின் வளத்தை பாதுகாப்பதற்கும் மக்கள் பங்களிப்புடன் திட்டமொன்றை உருவாக்குவதற்கான தேவை தற்போதுஏற்பட்டுள்ளது. ஒவ்வொரு வருடமும் செப்டெம்பர் மாதம் மூன்றாம் வாரத்தில் வரும் சனிக்கிழமை தினத்தன்று சர்வதேச கரையோர துப்புறவு தினத்தை முன்னிட்டு எதிர்வரும் 17ஆம் திகதி தொடக்கம் 23ஆம் திகதி வரை கரையோர தூய்மைப்படுத்தல் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளை பொதுமக்கள், பாடசாலை மாணவ மாணவியர், அரச மற்றும் அரச சார்பற்ற அமைப்புக்களின் பங்களிப்புடன் முன்னெடுக்கப்படவுள்ளன. இத்தினத்தின் தேசிய நிகழ்வு 2016 செப்டெம்பர் மாதம் 17 ஆம் திகதி கொழும்பு, மட்டக்குளி கடற்கரையில் மேற்கொள்வதற்குமகாவெலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி முன்வைத்த கோரிக்கைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியது.
வனவிலங்கு பாதுகாப்பு மற்றும் அது தொடர்பான சர்வதேச கோட்பாடுகள், செயற்பாடுகளை இலங்கையினுல் பலப்படுத்தல்
வனவிலங்கு பாதுகாப்பு தொடர்பான பல சர்வதேச கொள்கைகளில் இலங்கை கைச்சாத்திட்டுள்ளது. எனினும் அவற்றுடன் தொடர்புபட்ட செயற்பாடுகளை முறையான வகையில் முன்னெடுக்கும் வகையில் உறுதியான சட்டரீதியான ஒதுக்கீடுகள் செய்யப்படவில்லை. அதற்கமைய இலங்கை கையெழுத்திட்டுள்ள அருகி வரும் விலங்குகள் மற்றும் தாவரங்களை சர்வதேச ரீதியில் விற்பனை செய்தல் ஒப்பந்தம் (Convention on International Trade in Endangered Species of Wild Fauna and Flora - CITES), மற்றும் இலங்கை கையெழுத்திட்டுள்ள ஏனைய ஒப்பந்தங்களை தேசிய ரீதியாக நடைமுறைப்படுத்துவதற்கு வனவிலங்குகள் மற்றும் தாவரங்கள் பாதுகாப்பு சட்டத்தை மாற்றம் செய்வதற்கு வள அபிவிருத்தி மற்றும் வனவிலங்கு அமைச்சர் காமினி ஜயவிக்கிரம முன்வைத்த கோரிக்கைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியது.
வௌிவிவகார அமைச்சை வேறிடத்துக்கு கொண்டு செல்லல்
வௌிவிவகார அமைச்சானது தற்போது கொழும்பு, கோட்டை பிரதேசத்தில் அமைந்துள்ள பிரித்தானிய ஆட்சி காலத்தில் நிர்மாணிக்கப்பட்ட கட்டிடத்திலேயே இயங்குகிறது. அக்கட்டிடமானது பாதுகாக்கப்படவேண்டியதொன்றாக அடையாளங்காணப்பட்டுள்ளதுடன் அதனால் வௌிவிவகார அமைச்சை வேறிடத்துக்கு மாற்ற வேண்டியது அவசியம் என்பதும் அறியப்பட்டுள்ளது. இவ்வமைச்சுக்கு பொருத்தமான இடமென்று அடையாளங்காணப்பட்ட ஜாவத்தை பிரதேசத்திலுள்ள இரண்டு ஏக்கர் நிலப்பரப்பை வௌிவிவகார அமைச்சுக்கு பெற்றுக்கொள்வதற்காக வௌிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர முன்வைத்த கோரிக்கைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
ஸ்லோவேனியா- இலங்கை நாடுகளுக்கிடையில் அரசியல் ஆலோசனை வழங்கல் திட்டமொன்றை ஏற்படுத்துவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம்.
ஸ்லோவேனியா- இலங்கை நாடுகளுக்கிடையில் அரசியல் , பொருளாதாரம், கொன்சியுலர் விஞ்ஞானம் மற்றும் கலாசார ஒத்துழைப்பு உள்ளடங்கலான இருதரப்பு உறவுகளை ஏற்படுத்தல், வலப்படுத்தல் மற்றும் விரிவாக்கல் ஆகிய நோக்கங்களுடன் இரு நாடுகளின் வௌிவிவகார அமைச்சுக்களுக்கிடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தத்தை எதிர்வரும் டிசம்பர் மாதம் 4ஆம திகதி தொடக்கம் 8 ஆம் திகதி வரை மேற்கொள்ளப்படவுள்ள உத்தியோகபூர்வ விஜயத்தின் போது கைச்சாத்திடுவதற்கு வௌிவிவகார அமைச்சர் மங்கல சமரவீர முன்வைத்த கோரிக்கை்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியது.
'பொலன்னறுவையை மலரச்செய்வோம்' (புபுதமு பொலன்னறுவ)மாவட்ட அபிவிருத்தி திட்டம் உட்பட நீர்வள திட்டத்தை நடைமுறைப்படுத்தல்
பொலன்னறுவை மாவட்ட மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்கு சுத்தமான குடிநீரை வழங்கும் நோக்குடன் முன்னெடுக்கப்படும் 'பொலன்னறுவையை மலரச்செய்வோம்' மாவட்ட அபிவிருத்தி திட்டத்தினூடாக 9 குடிநீர் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கும் 2017, 2018 ஆண்டுகளின் அத்திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கு தேவையான 6,464.36 மில்லியன் ரூபா நிதியை ஒதுக்குவதற்கும் நகர திட்டமிடல் மற்றும் நீர்வள அமைச்சர் ரவுப் ஹக்கீம் முன்வைத்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியது
அரச- தனியார் இணைப்பு திட்டத்தின் கீழ் (PPP) புதிய உள்ளக நீர் விநியோக தொகுதியை செயற்படுத்தல்
நகரபுறங்களில் அதிகரித்துவரும் வாகன நெருக்கடியை முறையாக கையாள்வதற்கான திட்டமொன்று அவசியம் என்று அடையாளங்காணப்பட்டுள்ளது. இதனால் ரயில் மற்றும் பொது வாகன போக்குவரத்து முறையாக ஏற்படாதிருக்கும் பிரதேசங்களில் நீர்நிலைகள், ஓடைகளை செல்லும் வழிகளை அடையாளங்கண்டு விரைவாகவும் இலகுவாகும் போக்குவரத்து சேவையை ஏற்படுத்த முடியும் என்று கண்டறியப்பட்டுள்ளது. அதற்கமைய கொழும்பு கிழக்கு- மேற்கு மற்றும் வடக்கு- தெற்கு பிரதேசங்களை தொடர்புபடுத்தும் வகையில் தற்போது காணப்படும் ஓடைகள் மற்றும் சமுத்திரம் என்பவற்றை பயன்படுத்தி சிறந்த போக்குவரத்து வழியை ஏற்படுத்த முடியும். அதற்கமைய வெள்ளவத்தை- பத்தரமுல்லை ( ஓடை வழியாக), கோட்டை- யூனியன் இடம் (பேர வாவி ஊடாக) மட்டக்குளி- ஹங்வெல்ல ( களனி ஆற்றினூடாக) செல்லும் உள்ளக நீர் செல்லும் வழிகளினூடாக அமைக்க முடியும் என்று மாநகர போக்குவரத்து குழுவினால் அடையாளங்காணப்பட்டுள்ளது. பொருத்தமான தனியார் முதலீட்டாளர்களை அடையாளங்கண்டு- அரச- தனியார் இணைப்பு திட்டத்தினூடாக புதிய உள்ளக நீர் விநியோக திட்டத்தை கட்டியெழுப்புவதற்காக விரிவான ஆய்வொனறை மேற்கொள்வதற்கு மாநகர மற்றும் மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாடலி சம்பிக்க ரணவக்க முன்வைத்த ஆலோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியது.
தம்பலகாமத்தில் பொலிஸ் நிலையம் ஸ்தாபித்தல்
கிழக்கு மாகணத்தின் மூதூர், சேருவில, மற்றும் திருகோணமலை ஆகிய பிரதேசங்களில் மக்கள் பாதுகாப்புக்காக அமைக்கப்பட்ட சோதனைச்சாவடிகள் இயங்கி 2004 ஆம் ஆண்டு தொடக்கம் பொலிஸ் நிலையாக மாற்றப்பட்ட 155 பொலிஸ் அதிகாரிகள் பணியாற்றும் தம்பலகாமம் பொலிஸ் நிலையம் தற்போது வாடகை இடத்திலேயே இயங்குகின்றது. குறைந்த வசதிகளுடன் இரு கட்டிடங்களில் இயங்கும் இப்பொலிஸ் நிலையம் இயங்கி வருகிறது. சிறந்த சேவையை மக்களுக்கு வழங்குவதற்காக பொலிஸ் திணைக்களத்திற்கு சொந்தமான இடத்தில் 90 மில்லியன் ரூபா செலவில் புதிய கட்டிடமொன்றை நிர்மாணிப்பதற்காக சட்டம், ஒழுங்கு மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சர் சாகல ரத்நாயக்க முன்வைத்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியது.
பொல்பித்திகம பொலிஸ் நிலைய பணிகளை பூர்த்தி செய்தல்
நிகவெரட்டிய பொலிஸ் பிரிவிற்கு சொந்தமான 130 அதிகாரிகளை கொண்ட பொல்பித்திகம பொலிஸ் நிலைய பணிகள் 2007 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு பல்வேறு காரணங்களினால் இடைநிறுத்தப்பட்டது. அடையாளங்காணப்பட்ட புதிய தேவைகளுடன் நிர்மாணப்பணிகளை மீண்டும் ஆரம்பிப்பதற்கு 49.7 மில்லியன் ரூபா தேவை என்று அடையாளங்காணப்பட்டுள்ள நிலையில் பணிகளை தொடர்வதற்காக சட்டம், ஒழுங்கு மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சர் சாகல ரத்நாயக்க முன்வைத்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியது.
மாதுறு ஓயா நீர்த்தேக தெற்கு கரையை அபிவிருத்தி
1982ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட மாதுறுஓயாநீர்தேக்கமானது மகாவெலி அபிவிருத்தி திட்டத்தின் கீழ் நிர்மாணிக்கப்பட்ட பிரதான நீர்த்தேக்கமாகும். பொலன்னறுவை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களை அடிப்படையாகக் கொண்டு மகாவெலி 'பி' வலயத்தின் 39 ஹெக்டேயர் விவசாய திட்டத்தை அபிவிருத்தி செய்வதே இதன் நோக்கமாகும். இதன் இடது கரை அபிவிருத்தி செய்யப்பட்ட போதிலும் தெற்கு கரையோரப்பகுதி நிதி பற்றாக்குரை காரணமாக முன்னெடுக்கப்படவில்லை. நீண்டகால யுத்தத்தினால் கடுமையாக பாதிக்கப்பட்ட பொலன்னறுவை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களின் சமூக- பொருளாதார அப்விருத்திக்காக குடிநீர் விநியோகம், வடிகாலமைப்பு மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளை அபிவிருத்திகளை உடனடியாக முன்னெடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ள நிலையில் இத்திட்டத்தை 2017-2020 காலப்பகுதியில் நடைமுறைப்படுத்துவதற்காக மகாவெலி அபவிருத்தி மற்றும் சுற்றாடல் அமைச்சர் என்ற வகையில் முன்வைத்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியது.
குருநாகல தொடக்கம் தம்புள்ள வரையில் (கி.மீ 60 மத்திய அதிவேக வீதிகளின் நான்காவது பிரிவை நிர்மாணித்தல்
'ரஜரட்ட நவோதய' அபிவிருத்தி திட்டத்தின் கீழ் தற்போது உள்ள வீதியில் 150 கி.மீ புனர்நிர்மாணம் செய்வதற்கும் 100 கி.மீ தூரத்திற்கு புதிய வீதியை நிர்மாணிப்பதற்கும் அமைச்சரவை ஏற்கனவே அங்கீகாரம் வழங்கியுள்ளது. அதற்கமைய குருநாகலயில் ஆரம்பமாகி தம்புள்ள வரை செல்லம் 60 கி.மீ உத்தேச மத்திய அதிவேக வீதியின் நான்காவது பிரிவை நிர்மாணிக்கும திட்டத்தின் ரஜட்ட நவோதய திட்டத்தின் கீழ் முன்னெடுப்பதற்கு உயர்கல்வி மற்றும் பெருந்தெருக்கல் அமைச்சர் லஷ்மன் கிரியெல்ல முன்வைத்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியது.
உத்தேச மூலதன சந்தை அபிவிருத்தி திட்டத்திற்காக ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதியுதவி
பொருளாதார அபிவிருத்திக்கு தேவையான நிதிவளத்தை இலங்கை மூலதன சந்தை அபிவிருத்தி பயனுள்ள வகையில் சேர்த்துக்கொள்ளும் நோக்குடன் சட்டரீதியான மற்றும் கொள்கைகளுடன் கூடிய செயற்றிறன் மிக்க நிலையான, வௌிப்படையான மூலதன சந்தையை அபிவிருத்தி செய்வதற்காக ஆசிய அபிவிருத்தி வங்கியினால் 250 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியை கடனடிப்படையில் பெற்றுக்கொள்வதற்கான கலந்துரையாடலை நடத்துவதற்கு நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க முன்வைத்த கோரிக்கைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியது.