• #163, கிருலபன எவனியூ, கொழும்பு 05, இ லங்கை​
  • +94 112 51 5759

engsin

அமைச்சரவை தீர்மானங்கள் 23.08.2016

Cabinet01. நல்லிணக்க இயந்திரங்கள் ஒருங்கிணைப்புக்கான செயலகத்தினை வலுப்படுத்தல்(விடய இல. 07)
இலங்கையில் நல்லிணக்க இயந்திரங்களை தயாரித்து செயற்படுத்தும் பொறுப்பினை நல்லிணக்க இயந்திரங்கள் ஒருங்கிணைப்புக்கான செயலகம் (Secretariat for Coordinating the Reconciliation Mechanisms – SCRM) ஆற்றி வருகின்றது. அதேபோன்று இலங்கையில் நல்லிணக்க செயற்பாட்டினுள் கொள்கைகளை வகுக்கும் நிறுவனம் மற்றும் அதனை நடைமுறைப்படுத்தும் நிர்வனங்களுக்கிடையில் இடையில் தொழிற்படும் நிறுவனமாக தொழிற்பட்டு குறித்த பணியினை இலகுபடுத்துகின்றது. அதனடிப்படையில் இக்காரியாலயத்திற்கு தேவையான மனித வளங்கள் மற்றும் நிதியினை திரட்டிக் கொள்ளும் பொருட்டு தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார விவகாரங்கள் அமைச்சர் எனும் ரீதியில் கௌரவ பிரதமர் ரணில் விக்ரமசிங்க அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. 
 
02. ஆசிய ஆயர்களின் சம்மேளனத்தின் மாநாடு (விடய இல. 09)
 
ஹோங்கோங் நகரில் ஸ்தாபிக்கப்பட்டுள்ள ஆசிய ஆயர்களின் சம்மேளனமானது, ஆசி நாடுகளில் வசிக்கும் கிறிஸ்தவ மதத்தவர்களிடத்தில் சிறந்த பரஸ்பர உறவு காணப்படுவதை உறுதி செய்வதற்காக தொழிற்படுகின்றது. இச்சம்மேளனத்தின் குழுநிலை கூட்டம் 04 வருடங்களுக்கு ஒருமுறை இடம்பெறுவதோடு, இவ்வருடத்திற்கான குழுநிலை கூட்டத்தினை 2016 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 28 ஆம் திகதி முதல் டிசம்பர் மாதம் 04 ஆம் திகதி வரை நீர்கொழும்பில் நடாத்துவதற்கும், அதற்கு ஆசியாவின் அனைத்து நாடுகளிலும் இருந்தும் 150 க்கும் அதிகமான கிறிஸ்தவ ஆயர்களை இணைத்துக் கொள்வதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில் குறித்த கூட்டத்தினை இலங்கையில் நடாத்துவதற்கு இலங்கை அரசாங்கத்தின் அனுசரணையினை பெற்றுக் கொள்வதற்கு சுற்றுலாத்துறை அபிவிருத்தி மற்றும் கிறிஸ்தவ சமய விவகார அமைச்சர் கௌரவ ஜோன் அமரதுங்கஅவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
 
03. உராய்வு நீக்கி கைத்தொழிலை தாராளமயப்படுத்துதல்  (விடய இல. 14)
 
தற்போது இலங்கையில் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் மற்றும் லங்கா இன்டியன் ஒய்ல் கம்பனி பீஎல்சீ உட்பட மொத்தம் 13 நிறுவனங்கள் உராய்வு நீக்கி கைத்தொழிலில் ஈடுபடுகின்றன. எனினும் உராய்வு நீக்கி கைத்தொழிலில் புதிதாக ஈடுபடுவதற்கு புதிய அனுமதிப் பத்திரங்கள் வழங்காமை, 2006 ஆம் ஆண்டிலிருந்து அரையாண்டு ரீதியான பதிவு செய்வதில், அனுமதிப் பத்திரக் கட்டணத்தில் திருத்தங்கள் இல்லாமை, சுயாதீன ஒழுங்குமுறைப்படுத்தல் தாபிக்கப்படாமை ஆகிய பிரச்சினைகளினால் உராய்வு நீக்கி கைத்தொழிலில் சிறந்த பெறுபேற்றினை பெற்றுக் கொள்வதற்கு முடியாது உள்ளது. அதனடிப்படையில் இலங்கையில் உராய்வு நீக்கி சந்தையில் பயனுள்ள போட்டித்தன்மைக்காக வசதிகளை செய்து கொடுக்கும் நோக்கில் முன்வைக்கப்பட்ட 2016 ஆம் ஆண்டின் வரவு செலவு திட்ட யோசனைகளை செயற்படுத்துவது தொடர்பில் நிதி அமைச்சர் கௌரவ ரவி கருணாநாயக்க அவர்களினால் முன்வைக்கப்பட்ட திருத்தங்கள் அடங்கிய யோசனைகளுக்குஅமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
 
04. தார் வர்த்தகத்தை தாராளமயப்படுத்துதல்(விடய இல. 15)
 
தார் என்பது வீதி நிர்மாண வேலைகள் மற்றும் ஏனைய தொடர்புடைய நிர்மாண வேலைகள் ஆகியவற்றுக்கான மூலப்பொருளாகும். தாருக்கான கேள்வி நிர்மாண வேலைகளின் விரிவாக்கத்துடன் அதிகரித்து வந்துள்ளது. சரியான முறையில் ஊக்குவிக்கப்பட்டால் தீவக வர்த்தகப் பொருளாதாரமாக இருக்கின்ற இலங்கைக்கு, தென் ஆசியாவில் ஒரு பிராந்திய தார் வழங்குநராக உருவாகுவதற்கான 
வாய்;ப்பு இருக்கின்றது. அதனடிப்படையில் இலங்கையில் தார் வர்த்தகத்தை தாராளமயப்படுத்துதல் மற்றும் போட்டித்தன்மை மிக்க சந்தை வசதியினை ஏற்படுத்தும் நோக்கில் முன்வைக்கப்பட்ட2016 ஆம் ஆண்டின் வரவு செலவு திட்ட யோசனைகளை செயற்படுத்துவது தொடர்பில் நிதி அமைச்சர் கௌரவ ரவி கருணாநாயக்க அவர்களினால் முன்வைக்கப்பட்ட திருத்தங்கள் அடங்கிய யோசனைகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
 
05. இராஜ தந்திர மற்றும் உத்தியோகபூர்வ சேவை கடவூச் சீட்டுக்களை வைத்திருப்பவர்கள் விசா தேவைப்பாட்டிலிருந்து விடுவிப்பது தொடர்பில் இலங்கை மற்றும் ஜோர்ஜியாவிற்கும் இடையில் கைச்சாத்திடப்படவிருக்கும் ஒப்பந்தம்(விடய இல. 17)
 
இராஜ தந்திர மற்றும் உத்தியோகபூர்வ சேவை கடவூச் சீட்டுக்களை வைத்திருப்பவர்கள் விசா தேவைப்பாட்டிலிருந்து விடுவிப்பது தொடர்பில் இலங்கை மற்றும் ஜோர்ஜியாவிற்கும் இடையில் ஒப்பந்தம் ஒன்றில் கைச்சாத்திடுவது தொடர்பில் உள்ளக அலுவல்கள்வ, வடமேல் அபிவிருத்தி மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் கௌரவ எஸ்.பி.நாவின்ன அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
 
06.அரைவாசியளவில் நிறைவு பெற்றிருக்கும் வேலைத்திட்டங்களை பூரணப்படுத்துவதற்காக நிதிவசதிகளை ஏற்படுத்திக் கொள்ளல்(விடய இல. 22)
 
இடைநடுவில் இடைநிறுத்தப்பட்டுள்ள பொல்தூவ கிளைவழி வீதி நிர்மாணம், இமதூவ பட்டின மத்திய அபிவிருத்தி வடிகால் சீர்த்திருத்தம், தங்காலை மற்றும் அங்குணுகொலபலஸ்ச வர்த்தகத் தொகுதி நிர்மாணம், லுணுகம் விஹாரை மற்றும் வலஸ்முல்லை பேருந்து நிலைய நிர்மாணம் ஆகியவற்றினை பூரணப்படுத்திக் கொள்வதற்கு தேவையான 516.8 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடுகளை பெற்றுக் 
கொள்வதற்கும், அவ்வவ் வேலைத்திட்டங்களின் ஆரம்ப ஒப்பந்தக்காரர்களினூடாகவே குறித்த வேலைத்திட்டங்களை முடிவுக்கு கொண்டு வருவதற்கும் மாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் கௌரவ பாட்டலி சம்பிக்க ரணவக்கஅவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
 
07. மாத்தளை அலுவிஹாரை புனித பூமிக்குள் திட்டமிடல்கள் முன்மொழிவு முறையின்கீழ் நிர்மாணிக்கப்பட்ட அரசாங்க ஓய்வூ விடுதி கட்டிடத்தினை மாத்தளை அலுவிஹாரையிற்கு கைமாற்றம் செய்தல்(விடய இல. 24)
 
மாத்தளை அலுவிஹாரை புனித பூமிக்குள் திட்டமிடல்கள் முன்மொழிவு முறையின் கீழ் நிர்மாணிக்கப்பட்ட அரசாங்க ஓய்வு விடுதி கட்டிடத்தினை நிர்வகிப்பதற்காக மாத்தளை அலுவிஹாரையிற்கு மேலும்05 வருடத்திற்கு கைமாற்றம் செய்வதற்கு மாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் கௌரவ பாட்டலி சம்பிக்க ரணவக்கஅவர்களினால் முன்வைக்கப்பட்ட அமைச்சரவை பத்திரத்திற்குஅமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
 
08. “வாவியுடன் கிராமம்” எனும் வேலைத்திட்டத்தின் கீழ் ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் அபிவிருத்தி நடவடிக்கைக்கு இந்திய உதவித் திட்டத்தின் கீழ் உதவியினை பெற்றுக் கொள்ளல்(விடய இல. 25)
 
ஹம்பாந்தோட்டை மாவட்டத்தை அண்டி கடற்றொழில் மற்றும் ஏனைய நடவடிக்கைகளுக்காகப் பயன்படுத்துவதற்கு 300 மில்லியன் ரூபா உதவித் தொகையாக வழங்குவதற்கு இந்திய அரசு இணக்கம் தெரிவித்துள்ளது. அவ்வுதவித் தொகையில் ஒரு தொகுதியை பயன்படுத்தி “வாவியுடன் கிராமம்” வேலைத்திட்டத்தின் கீழ் மாதிரி மீன்பிடி கிராமம் ஒன்றை தாபிப்பதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது. 
எனவே குறித்த உதவித் தொகையை பெற்றுக் கொள்வது தொடர்பில் இந்திய மற்றும் இலங்கை அரசாங்கங்ளுக்கு இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில் கைச்சாத்திட கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் அபிவிருத்தி அமைச்சர் கௌரவ மஹிந்த அமரவீரஅவர்களினால் முன்வைக்கப்பட்ட அமைச்சரவை பத்திரத்திற்குஅமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
 
09. கடற்றொழில் கைத்தொழில் ஒத்துழைப்பை கட்டியெழுப்புவதற்கு ஏற்படுத்திக் கொள்ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தம்(விடய இல. 26)
மக்கள் சீன குடியரசின் சுவாங் (Guangxl Zhuang) சுய ஆட்சி மாநிலத்தில் கடற்றொழில் விலங்கு கட்டுப்பாட்டு மற்றும் கால்நடை வள பணிமனை மற்றும் இலங்கை தேசிய நீர்வாழ் உயிரினச் செய்கை அபிவிருத்தி அதிகாரசபை உடன் மீன் பரிமாற்ற பணிமனை மற்றும் தொடர்புகளை மென்மேலும் வலுப்படுத்திக் கொள்வதற்காக இரு நாடுகளுக்குமிடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில் கைச்சாத்திட கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் அபிவிருத்தி அமைச்சர் கௌரவ மஹிந்த அமரவீர அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. 
 
10. தேயிலை, இறப்பர் மற்றும் தென்னை முதலிய பெருந்தோட்டத் துறைகளின் பசளைகளை பெற்றுக் கொள்வதற்காக நிதி மானியம் வழங்குவதை விரிவுபடுத்தல்(விடய இல. 28)
 
பொருளாதார முகாமைத்துவம் தொடர்பாக அமைச்சரவைக் குழு கூட்டத்தின் போது எடுத்த தீர்மானத்தின் படி தேயிலை, தென்னை மற்றும் இறப்பர் முதலிய துறைகளில் ஹெக்டேயர் 01 அல்லது அதனை விட குறைந்த பயிர் நிலங்கள் சொந்தமான சிறு தோட்ட உரிமையாளர்களிடம் ஆண்டுதோறும் பயிரிடப்பட்ட நிலப்பரப்பிற்கு விகிதாசார அடிப்படையில் தேயிலை துறைக்கு 15,000 ரூபாவும், 
 தென்னைத் துறைக்கு 9,000 ரூபாவும், இறப்பர் துறைக்கு 5,000 ரூபாவும் மானியமாக வழங்கப்பட்டு வருகின்றது. அதற்கு அக்கறை காட்டும் நபர்களின் தொகையை அதிகரிக்கும் நோக்கில் தென்னை மற்றும் இறப்பர் துறைகளில் பசளை மானியத்தை வழங்கும் ஹெக்டேயர் ஒன்றின் நிலப்பரப்பை 02 ஹெக்டேயர் வரை அதிகரித்து குறித்த பசளை மானியத் தொகையை வழங்க பெருந்தோட்டக் 
கைத்தொழில் அமைச்சர் கௌரவ நவின் திசாநாயக்கஅவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவைஅங்கீகாரம் வழங்கியுள்ளது.
 
11. உத்தேச வவுனியா விசேட பொருளாதார நிலையங்கள் 02 இனை நிர்மாணித்தலும் அதற்காக ஆலோசனை சேவையினைப் பெற்றுக் கொள்ளுதலும் (விடய இல. 32)
 
பொருளாதார முகாமைத்துவம் தொடர்பான அமைச்சரவைக் குழுவின் பிரேரணைகளுக்கு அமைய விசேட பொருளாதார நிலையம் ஒன்றுக்கு பதிலாக விசேட பொருளாதார நிலையங்கள் 02 இனை முல்லைத்திவு மாவட்டத்தின் மாங்குளம் பிரதேசத்திலும், வவுனியா மாவட்டத்தின் மதகுவைத்தகுளம் பிரதேசத்திலும் அமைப்பதற்கு கிராமிய பொருளாதார அலுவல்கள் அமைச்சர் கௌரவ பி.ஹெரிசன் அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
 
12. சர்வதேச சமய மாநாடு -2016 நவம்பர் மாதம் கொழும்பில் நடாத்துதல்  (விடய இல. 40)
 
தென்கிழக்கு ஆசியப் பிராந்தியத்திற்கு உரித்தான சுமார் 16 நாடுகளின் அரச தலைவர்கள் உட்பட உயர் மட்ட தேசிய மற்றும் சர்வதேச உறுப்பினர்களின் பங்குபற்றலுடன் “ இஸ்லாமிய பார்வையில்தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசியப் பிராந்திய நாடுகளில் பலவகை மற்றும் ஜனநாயக சமூகங்களுக்கான சமயச் செயற்பணி எனும் தொணிப்பொருளில் சர்வதேச சமய மாநாடு -2016  
நவம்பர் மாதம் கொழும்பில் நடாத்துவதற்கு தேவையான நிதி ஒதுக்கீடு செய்வதற்கு தபால்இ தபால் சேவைகள் மற்றும் முஸ்லிம் சமய அலுவல்கள் அமைச்சர் எம்.எச்.ஏ.ஹலீம் அவர்களினால் முன்வைக்கப்பட்ட அமைச்சரவை பத்திரத்திற்கு அமைச்சரவை கொள்கையளவில் அங்கீகாரம் வழங்கியுள்ளது.
 
13. மீனவர்களுக்கு பகிர்ந்தளிப்பதற்காக தேவையான மீன்பிடி வலை தயாரிப்புக்களை வரையறுக்கப்பட்ட நொத்சீ கம்பனியிடம் இருந்து பெற்றுக் கொள்ளல் (விடய இல. 41)
 
மீனவர்களுக்கு பகிர்ந்தளிப்பதற்காக தேவையான மீன்பிடி வலை தயாரிப்புக்களை 100 சதவீதம் திறைசேரிக்குப் பங்குரிமையூள்ள நிறுவனமாகிய நொத்சீ நிறுவனத்தில் இருந்து பெற்றுக் கொள்வதற்கு சிறைச்சாலைகள் மறுசீரமைப்புஇ புனர்வாழ்வளிப்பு மீள்குடியேற்றம் மற்றும் இந்துமத அலுவல்கள் அமைச்சர் கௌரவ டி.எம். சுவாமிநாதன் மற்றும் கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் 
 அபிவிருத்தி அமைச்சர் கௌரவ மஹிந்த அமரவீரஅகியோர் இணைந்து முன்வைத்தஅமைச்சரவை பத்திரத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
 
14. 2016 ஆம் ஆண்டிற்கான இராணுவம், கடற்படை, விமானப்படை மற்றும் சிவில் பாதுகாப்பு படைகளுக்கான சீருடை மற்றும் ஏனைய துணிவகைகள் பெற்றுக் கொள்ளல்  (விடய இல. 45)
 
முப்படைகள் மற்றும் பாதுகாப்பு அமைச்சின் கீழ் இயங்கும் இதர நிறுவனங்களின் துணித்தேவைகளை தேசிய துணிவகை உற்பத்தியாளர்களின் மூலம் பூர்த்தி செய்து கொள்ளும் திட்டமானது 2005 ஆம் ஆண்டிலிருந்து செயற்படுத்தப்பட்டு வருகின்றது. இதனடிப்படையில் 2016 ஆம் ஆண்டிற்கான இராணுவம், கடற்படை, விமானப்படை மற்றும் சிவில் பாதுகாப்பு படைகளுக்கான சீருடை மற்றும் ஏனைய துணிவகைகளை, தேசிய துணிவகை பெற்றுக் கொடுக்கும் சபை குழு கூட்டத்தின் தீர்மானத்திற்கிணங்க, அவ்வவ் தேசிய உற்பத்தியாளர்களிடத்தில் இருந்து கொள்வனவு செய்வதற்கு பாதுகாப்பு அமைச்சர் எனும் ரீதியில் அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனஅவர்களினால் முன்வைக்கப்பட்ட அமைச்சரவை பத்திரத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
 
15. மொரகஹகந்தை – களுகங்கை அபிவிருத்திக் கருத்திட்டத்தின் கீழ் தாழ் அபிவிருத்திப் பிரதேசங்களில் பாதைகளை நிர்மாணித்தல்    (விடய இல. 46)
 
மொரகஹகந்தை – களுகங்கை அபிவிருத்திக் கருத்திட்டத்தின் கீழ் தாழ் அபிவிருத்திப் பிரதேசங்களில் காணப்படும் பிரதேச நீர்ப்பாசன மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளை அபிவிருத்தியினை மேற்கொள்வது அத்தியவசிய தேவையொன்றாக இனங்காணப்பட்டுள்ளது. அதனடிப்படையில் தேவையான வீதி அபிவிருத்தி செயற்பாடான மொரகஹகந்தை – வெல்லவெல பாதை (6.37 கி.மீ.), அக்போபுர ஊடாக மெதிரிகிரிய – கந்தளை பாதை 8.5 கி.மீ), மற்றும் புதிய லக்கல நகரினுள் அமையூம் பாதைகள் ஆகியவற்றிற்கான ஒப்பந்தத்தினை அமைச்சரவையின் மூலம் நியமிக்கப்பட்டுள்ள நிலையியல் கொள்முதல் குழுவின் சிபார்சின் பெயரில் வழங்குவதற்கு மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் அமைச்சர் எனும் ரீதியில் அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
 
16. மத்திய கடுகதிப்பாதை கருத்திட்டம் - பொத்துஹரவிலிருந்து கலகெதர வரையிலான (32.5 கி.மீ) பிரிவு 3 இனை நிர்மாணித்தல் - விலைமனு மற்றும் யோசனைகளை பெற்றுக் கொள்ளல்  (விடய இல. 47)
 
ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்புக்கான முகவர் நிறுவனத்தின் ((JICA) நிதியிடலின் கீழ் நிர்மாணிக்கப்படும் மத்திய கடுகதிப்பாதை கருத்திட்டம் - பொத்துஹரவிலிருந்து கலகெதர வரையிலான (32.5 கி.மீ) பிரிவு 3 இனை நிர்மாணிப்பதற்கு தகுந்த ஒப்பந்தம் ஒன்றினை மற்றும் ஆலோசனை வழங்கும் நபர் ஒருவரை தெரிவு செய்வதற்காக பொருளாதார தொடர்பிலான அமைச்சரவை செயற்குழுவின் சிபார்சின் அடிப்படையில் விலைமனு மற்றும் யோசனைகளை பெற்றுக் கொள்வது தொடர்பில் உயர் கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் கௌரவ லக்ஷ்மன் கிரியெல்ல அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
 
17. யாழ்ப்பாணம் இலங்கை உயர் தொழில்நுட்பக் கல்வி நிறுவகங்களின் உட்கட்டமைப்பு வசதிகளை அபிவிருத்தி செய்தல் (விடய இல. 48)
யாழ்ப்பாணம் உயர் தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்துக்காக 04 மாடிகளைக் கொண்ட கட்டிடம் ஒன்றை நிர்மாணிப்பதற்கான ஒப்பந்தத்தை அமைச்சரவையின் மூலம் நியமிக்கப்பட்டுள்ள நிலையியல் கொள்முதல் குழுவின் சிபார்சின் பெயரில் வழங்குவதற்கு உயர் கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் கௌரவ லக்ஷ்மன் கிரியெல்ல அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
 
18. ருவன்புர கடுகதிப்பாதை கருத்திட்டம் - சிவில் வேலைகள் ஒப்பந்தங்களின் பெறுகைக்கான முன்மொழிவுகளைப் பெற்றுக் கொள்ளல்  (விடய இல. 50)
 
தென் பிராந்திய கடுகதிப்பாதையின் கஹதுடுவ இடைமாறலிலிருந்து பெல்மதுவை வரையில் ருவன்புர கடுகதிப்பாதையை (73.9 கி.மீ) நிர்மாணிப்பதற்கு முன்மொழியப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் சிவில் வேலைகளை நிறைவேற்றுவதற்கு சீன ஏற்றுமதி - இறக்குமதி வங்கி (EXIM) இணக்கம் தெரிவித்துள்ளது. பொருளாதார முகாமைத்துவ தொடர்பிலான அமைச்சரவை செயற்குழுவின் சிபாரிசின் அடிப்படையில் இப்பாதையினை 04 கட்டங்களின் கீழ் நிர்மாணிக்கப்பட உள்ளதுடன்இ அதற்காக சீன அரசாங்கத்தின் மூலம் சிபார்சு செய்யப்பட்டுள்ள கம்பனியின் மூலம் குறித்த திட்டத்தின் ஒரு பகுதியினை நிறைவேற்றிக் கொள்வதற்கான தொழில்நுட்ப மற்றும் நிதி யோசனைகளை கோருவது தொடர்பில் உயர் கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் கௌரவ லக்ஷ்மன் கிரியெல்ல 
அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
 
19. ஹாலிஎல பிரதேச செயலகத்திற்கு புதிய 03 மாடிக் கட்டிட நிர்மாணிப்பு (விடய இல. 52)
 
பதுளை மாவட்டத்தில் அமைந்துள்ள ஹாலிஎல பிரதேச செயலாளர் பிரிவானது 57 கிராம சேவையாளர் பிரிவூகளை கொண்டுள்ளதோடு, அதில் சுமார் 90,000 மேற்பட்ட சனத்தொகை காணப்படுகின்றது. குறித்த பிரதேச செயலகமானது மிகவூம் பழைய கட்டிட தொகுதியில் இயங்கி வருகின்றது. எனவே ஹாலிஎல பிரதேச மக்களுக்கு பயனுள்ள விதத்தில் சேவையினை பெற்றுக் கொடுக்கும் நோக்கில் 176 
மில்லியன் ரூபா மதிப்பீட்டு தொகையில் புதிய 03 மாடிக் கட்டிடம் ஒன்றை நிர்மாணிப்பது தொடர்பில் உள்நாட்டலுவல்கள் அமைச்சர் கௌரவ வஜிர அபேவர்தன அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
 
20. ஹபரன வெயாங்கொட 220KV மின்சார செலுத்துகை மார்க்கத்தை நிர்மாணிப்பது தொடர்பான கேள்வி ஒப்பந்தத்தை வழங்குதல் (விடய இல. 55)
 
ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்புக்கான முகவர்நிறுவனத்தின் (JICA) நிதியிடலின் கீழ் நிர்மாணிக்கப்படும்இஹபரன வெயாங்கொட 220முஏ மின்சார செலுத்துகை மார்க்கத்தை (துண்டு டீ) நிர்மாணிப்பது தொடர்பான கேள்வி ஒப்பந்தத்தை அமைச்சரவையின் மூலம் நியமிக்கப்பட்டுள்ளநிலையான கொள்முதல் குழுவின் சிபார்சின் அடிப்படையில் வழங்குவதற்கு மின்வலு மற்றும் மீள்புத்தாக்க சக்தி அமைச்சர் கௌரவ ரன்ஜித் சியபலாப்பிட்டியஅவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவைஅங்கீகாரம் வழங்கியுள்ளது.
 
21. விசேட செயற்படையணியின் கலபளுவாவ முகாமின் விவாகமான அலுவலகர்களுக்கு வீடமைப்பு தொகுதியினை நிர்மாணித்தல் (விடய இல. 56)
அதியூயர் பாதுகாப்பு தொடர்பிலான செயற்பாடுகளில் ஈடுபடும் விவாகமான பொலிஸ் விசேட படையணியின் அலுவலகர்களுக்காக வீடமைப்பு தொகுதியொன்றினை, விசேட செயற்படையணியின் கலபளுவாவ முகாமில் காணப்படும் இடவசதியினை பயன்படுத்தி 338 மில்லியன் ரூபா மதிப்பீட்டில் நிர்மாணிப்பதற்கு சட்டமும் ஒழுங்கும் மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சர் கௌரவ சாகல ரத்னாயக அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவைஅங்கீகாரம் வழங்கியூள்ளது.
 
22. தேசிய ஊடக மத்திய நிலையத்தினை தாபித்தல் (விடய இல. 57)
 
அரச பொறிமுறையை செயற்படுத்தும் போது பொதுமக்களது கருத்துக்களை பெற்றுக் கொள்வதன் மூலம் வெளிப்படைத்தன்மையை உறுதிப்படுத்திக் கொள்ள முடியூம் என்பதுடன்இ நல்லாட்சியின் அடிப்படைக் கோட்பாடுகளை மிகவும் சிறப்பாக அமுப்படுத்த முடியும். முழுமையானஇ நம்பகமான சரியான உத்தியோகபூர்வ தகவல்களை மக்களுக்கு உரிய நேரத்தில் பெற்றுக் கொடுப்பது அரசின் முக்கிய பொறுப்பாக இருப்பதுடன், அதன் ஒரு நடவடிக்கையாகவே அண்மையில் தகவலறியும் சட்டம் அமுல்படுத்தப்பட்டது. இதன் மற்றுமொரு முக்கிய நடவடிக்கையாக பொதுமக்களின் கருத்துக்கள் மற்றும் பங்களிப்பு ஊடாக அரச கட்டமைப்பினுள் உபாய ரீதியிலான தகவல்கள் சென்றடைவதற்காக “தேசிய ஊடக மத்திய நிலையம்” ஒன்றினை தாபிப்பதற்கும்இ அதனை அரச உத்தியோகபூர்வ தகவல் வழங்கியாக பிரகடனப்படுத்துவதற்கும் கௌரவ பிரதமர் ரணில் விக்ரமசிங்கஅவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவைஅங்கீகாரம் வழங்கியுள்ளது.
 
 
 
 
 
 

சமீபத்திய செய்திகள்

அமைச்சரவை தீர்மானங்கள் - ஒக்டோபர் மாதம்

04 October 2023

அமைச்சரவை தீர்மானங்கள் - 02.10.2023

அமைச்சரவை தீர்மானங்கள் - செப்டெம்பர் மாதம்

04 October 2023

அமைச்சரவை தீர்மானங்கள் - 25.09.2023

அமைச்சரவை தீர்மானங்கள் - ஒகஸ்ட் மாதம்

16 August 2023

அமைச்சரவை தீர்மானங்கள் - 28.08.2023, 14.08.2023, 07.08.2023

அமைச்சரவை தீர்மானங்கள் - ஜூலை மாதம்

05 July 2023

அமைச்சரவை தீர்மானங்கள் - 17.07.2023, 11.07.2023, 04.07.2023

அமைச்சரவை தீர்மானங்கள் - 26.06.2023

28 June 2023

அமைச்சரவை தீர்மானங்கள் - 26.06.2023

அமைச்சரவை தீர்மானங்கள் - ஜூன் மாதம்

07 June 2023

அமைச்சரவை தீர்மானங்கள்

அமைச்சரவை தீர்மானங்கள் - மே மாதம்

09 May 2023

அமைச்சரவை தீர்மானங்கள் - மே மாதம்

அமைச்சரவை தீர்மானங்கள் - ஏப்ரல் மாதம்

09 May 2023

அமைச்சரவை தீர்மானங்கள் - ஏப்ரல் மாதம்

அமைச்சரவை தீர்மானங்கள் - மார்ச் மாதம்

23 March 2023

அமைச்சரவை தீர்மானங்கள் 

அத்துடன் இலங்கையிலுள்ள ஊடகத்துறையின் கொள்கை திட்டமிடல் , பயிற்சி நெறிகளை வழங்குதல் , மற்றும் ஊடகத்துறைக்கான அங்கீகாரங்களை வழங்குவதிலும் இந்நிறுவனம் முன்னின்று உதவுகின்றது.