• #163, கிருலபன எவனியூ, கொழும்பு 05, இ லங்கை​
  • +94 112 51 5759

engsin

அமைச்சரவை தீர்மானங்கள் 07.11.2017

01. பொருளாதார அபிவிருத்தி ஒத்துழைப்புக்காக கொரியா குடியரசுடன் கட்டமைக்கப்பட்ட ஒப்பந்தம் (விடய இல. 06)
 
கொரியா ஏற்றுமதி மற்றும் இறக்குமதி வங்கியின் பொருளாதார அபிவிருத்தி ஒத்துழைப்பு நிதியத்தின் மூலம் பெற்றுத்தருவதற்கு இணக்கம் தெரிவித்த கடன் தொகையினை பெற்றுக் கொள்வதற்காக கொரியா குடியரசு அரசாங்கத்துடன் கட்டமைப்பு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுவது தொடர்பில் தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் எனும் ரீதியில் கௌரவ பிரதமர் ரணில் விக்ரமசிங்க அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
 
02. 100 வயதினைக்கடந்த வயோதிபர்களுக்கு மாதாந்த கொடுப்பனவொன்றினை பெற்றுக் கொடுத்தல் (விடய இல. 08)
 
100 வயதினைக்கடந்த குறைந்த வருமானம் பெறுகின்ற வயோதிப பிரஜைகளுக்கு மாதாந்தம் 5,000 ரூபா வீதம் கொடுப்பனவொன்றினை பெற்றுக் கொடுப்பது தொடர்பில் சமூக வலுவூட்டல், நலன்புரி மற்றும் மலைநாட்டு உரிமைகள் தொடர்பான அமைச்சர் கௌரவ எஸ்.பி. திசாநாயக்க அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
 
03. வருமான பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வெளியிடப்பட்ட 2031/49 ம் இலக்க வர்த்தமானி அறிவித்தலினை அங்கீகாரத்தினை பெற்றுக் கொள்வதற்காக வேண்டி பாராளுமன்றத்தில் முன்வைத்தல் (விடய இல. 10)
 
1962ம் ஆண்டு 19ம் இலக்க வருமான பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வெளியிடப்பட்ட 2031/49 ம் இலக்க வர்த்தமானி அறிவித்தலினை அங்கீகாரத்தினை பெற்றுக் கொள்வதற்காக வேண்டி பாராளுமன்றத்தில் முன்வைப்பது தொடர்பில் நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் கௌரவ மங்கள சமரவீர அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
 
04. பாராளுமன்ற கட்டிடத்தொகுதிக்காக பயன்படுத்தப்படுகின்ற இடப்பகுதியினை உரிமையினை மாற்றுதல் (விடய இல. 17)
 
பாராளுமன்ற கட்டிடத்தொகுதிக்காக பயன்படுத்தப்படுகின்ற இதுவரை பாராளுமன்றத்திற்கு உரித்தற்று காணப்படுகின்ற இடப்பகுதியினை உரிமையினை முறையான முறையில் இலங்கை பாராளுமன்றத்திற்கே பெற்றுக் கொடுப்பது தொடர்பில் பாரிய நகரம் மற்றும் மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சர் கௌரவ பாட்டலி சம்பிக்க ரணவக்க அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
 
05. தண்டனை விதிக்கப்பட்டுள்ள நபர்களை இரு நாடுகளுக்குமிடையில் பரிமாற்றிக் கொள்வது தொடர்பில் இலங்கை மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளுக்கு இடையில் ஒப்பந்தம் ஒன்றில் கைச்சாத்திடல் (விடய இல. 12)
 
தண்டனை விதிக்கப்பட்டுள்ள நபர்களை இரு நாடுகளுக்குமிடையில் பரிமாற்றிக் கொள்வது தொடர்பில் இலங்கை மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளுக்கு இடையில் ஒப்பந்தம் ஒன்றில் கைச்சாத்திடுவதற்கும் மற்றும் அவ்வாறு ஏற்படுத்திக் கொள்ளும் ஒப்பந்தத்தை அமுல்படுத்துவதற்கும் நீதி அமைச்சர் கௌரவ தலதா அதுகோரல அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
 
06. வீடுகள் மற்றும் மனித குடியிருப்புக்களை அபிவிருத்தி செய்வதற்காக பயன்பாடற்று கிடக்கின்ற இடங்களை பயன்படுத்தல் (விடய இல. 26)
 
வீடுகள் மற்றும் மனித குடியிருப்புக்களை அபிவிருத்தி செய்வதற்காக பயன்பாடற்று கிடக்கின்ற இடங்களை எவ்வாறு பயன்படுத்துவது என்பது தொடர்பில் சிபார்சுகளை முன்வைப்பதற்காக நியமிக்கப்பட்ட குழுவின் சிபார்சின் அடிப்படையில், அவ்வாறான பயன்பாடற்ற இடங்களை வீடுகள் அமைப்பதற்காக பயன்படுத்துவதற்கு முன்னுரிமை அளித்து, அது தொடர்பில் நடவடிக்கைகளை மேற்கொள்ள கமத்தொழில் அபிவிருத்தி திணைக்களத்தின் பிரதான காரியாலயத்தில் விசேட குழுவொன்றினை நியமித்து உரிய நிறுவனங்களுடன் இணைந்து களவாய்வினை மேற்கொண்டதன் பின்னர் உரிய அனுமதியினை பெற்றுக் கொடுப்பது தொடர்பில் கமத்தொழில் அமைச்சர் கௌரவ துமிந்த திசாநாயக்க அவர்கள் மற்றும் வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சர் கௌரவ சஜித் பிரேமதாச ஆகியோர் இணைந்து முன்வைத்த யோசனைகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
 
07. இயற்கை அனர்த்தத்தினால் பாதிப்புக்கு உள்ளான அக்குரஸ்ஸ நில்வலா தேசிய கல்வியியல் கல்லூரியினை மறுசீரமைப்பு செய்தல் (விடய இல. 29)
 
இயற்கை அனர்த்தத்தினால் பாதிப்புக்கு உள்ளான அக்குரஸ்ஸ நில்வலா தேசிய கல்வியியல் கல்லூரியினை மறுசீரமைப்பு செய்வதற்கு தேவையான நிதியினை வழங்குவதற்கு செக் குடியரசு இணக்கம் தெரிவித்துள்ளது. அதனடிப்படையில் அக்குரஸ்ஸ நில்வலா தேசிய கல்வியியல் கல்லூரியினை மறுசீரமைப்பு செய்து விருத்தி செய்வதற்கு தேவையான 15 மில்லியன் ரூபா நிதியினை பெற்றுக் கொள்வது தொடர்பில் செக் குடியரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில் கைச்சாத்திடுவது தொடர்பில் கல்வி அமைச்சர் கௌரவ அகில விராஜ் காரியவசம் அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
 
08. தெஹிவளை – கல்கிஸ்ஸ பிரதேசத்தினுள் குழாய்கள் மூலம் மேற்கொள்ளப்படுகின்ற கழிவகற்றும் செயன்முறையினை விரிவுபடுத்தல் (விடய இல. 34)
 
தெஹிவளை – கல்கிஸ்ஸ பிரதேசத்தினுள் குழாய்கள் மூலம் மேற்கொள்ளப்படுகின்ற கழிவகற்றும் செயன்முறையினை விரிவுபடுத்தல் மற்றும் அதற்கான நிதியினை பெற்றுக் கொள்வதற்கான ஒப்பந்தத்தை M/s Vinci Construction Grands Projects/ LUDWIG PEEIFFER Hoch-u Tiefabau GmBH & Co நிறுவனத்துக்கு வழங்குவது தொடர்பில் நகர திட்டமிடல் மற்றும் நீர்வழங்கல் அமைச்சர் கௌரவ ரவூப் ஹக்கீம் அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
 
09. பாரிய கொழும்பு நீர் மற்றும் கழிவுநீர் முகாமைத்துவத்தினை விருத்தி செய்யும் முதலீட்டு வேலைத்திட்டத்தின் கீழ் தெலவல பயிற்சி நிலையம் மற்றும் ஏனைய கட்டிடங்களை நிர்மாணித்தல் (விடய இல. 17)
 
பாரிய கொழும்பு நீர் மற்றும் கழிவுநீர் முகாமைத்துவத்தினை விருத்தி செய்யும் முதலீட்டு வேலைத்திட்டத்தின் கீழ் தெலவல பிரதேசத்தில் 04 மாடிகளைக் கொண்ட பயிற்சி நிலையம், 05 மாடிகளைக் கொண்ட விடுதியொன்று மற்றும் சிற்றுண்டிச்சாலை போன்ற கட்டிடங்களை நிர்மாணிப்பதற்கான ஒப்பந்தத்தினை அமைச்சரவையினால் நியமிக்கப்பட்டுள்ள நிலையியல் கொள்முதல் குழுவின் சிபார்சின் அடிப்படையில் M/s Sierra Construction (Pvt) Ltd. நிறுவனத்துக்கு வழங்குவது தொடர்பில் நகர திட்டமிடல் மற்றும் நீர்வழங்கல் அமைச்சர் கௌரவ ரவூப் ஹக்கீம் அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
 
10. கலிகமுவ நீர் வழங்கல் திட்டம் (விடய இல. 36)
 
நாளொன்றுக்கு 9,000 கன மீட்டர் சுத்திகரிப்பு நீர் உற்பத்தி கொள்ளளவினைக் கொண்ட நீர் சுத்திகரிப்பு நிலையம் ஒன்றை கலிகமுவ நீர் வழங்கல் திட்டத்தின் கீழ் நிர்மாணித்தல், பகிர்ந்தளிக்கின்ற குழாய் தொகுதியினை பொருத்துதல் என்பவற்றுக்கான ஒப்பந்தத்தை அமைச்சரவையினால் நியமிக்கப்பட்டுள்ள நிலையியல் கொள்முதல் குழுவின் சிபார்சின் அடிப்படையில் 4.6 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கும் 1,268 மில்லியன் ரூபாய் மதிப்பீட்டு தொகைக்கும் M/s Sierra Construction (Pvt) Ltd. நிறுவனத்துக்கு வழங்குவது தொடர்பில் நகர திட்டமிடல் மற்றும் நீர்வழங்கல் அமைச்சர் கௌரவ ரவூப் ஹக்கீம் அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
 
11. புத்தளம் அனல் மின்னிலையத்திற்காக அவசர நிலைமைகளின் போது கொள்வனவு செய்யும் (Spot Tender) முறைமையின் கீழ் தேவையான நிலக்கரிகளை கொள்வனவு செய்தல் (விடய இல. 37)
 
புத்தளம் அனல் மின்னிலையத்திற்கு அவசியமான 300,000 மெட்ரிக் தொன் நிலக்கரிகளை, அவசர நிலைமைகளின் போது கொள்வனவு செய்யும் (Spot Tender) முறைமையின் கீழ், பதிவு செய்யப்பட்டுள்ள வழங்குனர்களின் மூலம் பெறப்பட்ட விலைமனுக்களில் குறைந்த விலைமனுவினை முன்வைத்துள்ள Swiss Singapore Overseas Enterprises (Pvt) Ltd. இடம் இருந்து 01 மெட்ரிக்தொன் 87.97 அமெரிக்க டொலர்கள் எனும் குழுடீவு விலைக்கு கொள்வனவு செய்வது தொடர்பில் மின்சக்தி மற்றும் மீளப்புதுப்பிக்கத்தகு சக்தி அமைச்சர் கௌரவ ரன்ஜித் சியபலாப்பிட்டிய அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
 
12. 'அதிகரன நிவகன' வேலைத்திட்டம் (விடய இல. 42)
 
இலங்கை நீதிமன்ற துறையில் காணப்படுகின்ற இடப்பற்றாக்குறை மற்றும் ஏனைய அத்தியவசிய குறைப்பாடுகளைக் கவனத்திற் கொண்டு 40 அறைகளைக் கொண்ட நீதிமன்ற கட்டிடத்தொகுதியொன்றினை நிர்மாணித்தல், நீதி அமைச்சின் கட்டிடத்தொகுதியினை நிர்மாணித்தல், நீதிபதிகள் பயிற்சி நிலையமொன்றை நிர்மாணித்தல் போன்றவற்றுக்காக 'அதிகரன நிவகன' வேலைத்திட்டமொன்றை செயற்படுத்துவதற்கு தகுதி வாய்ந்த அபிவிருத்தியாளர்ஃ ஒப்பந்தக்காரர் ஒருவரை நாட்டினுள் அபிவிருத்தி பணிகளில் ஈடுபடும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு ஒப்பந்தக்காரர்களிடத்தில் இருந்து போட்டித்தன்மையின் அடிப்படையில் தெரிவு செய்வது தொடர்பில் நீதி அமைச்சர் கௌரவ தலதா அதுகோரல அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
 
13. 400 மெகாவொட் இயற்கை வாயு மின்னுற்பத்தி நிலையமொன்றை ஹம்பாந்தோட்டை பிரதேசத்தில் நிர்மாணித்தல் (விடய இல. 44)
 
400 மெகாவொட் இயற்கை வாயு மின்னுற்பத்தி நிலையமொன்றை ஹம்பாந்தோட்டை பிரதேசத்தில் நிர்மாணிப்பதற்கான வேலைத்திட்டத்தினை சீனா அரசாங்கத்தினால் பெயர் குறிப்பிடப்பட்டுள்ள China Machinery Engineering Corporation (CMEC)  நிறுவனம் மற்றும் இலங்கை மின்சார சபை ஆகிய இரு நிர்வனங்களும் இணைந்த வேலைத்திட்டமாக முன்னெடுப்பதற்கு முன்மொழியப்பட்டுள்ளது. அதற்கமைய இலங்கை பொதுமக்கள் பயன்பாட்டு ஆணைக்குழுவினால் அனுமதி அளிக்கப்பட்டுள்ள நீண்ட கால மின்சக்தி திட்டத்தினுள் உள்வாங்கி உரிய அனுமதியுடன் செயற்படுத்துவது தொடர்பில் மின்சக்தி மற்றும் மீளப்புதுப்பிக்கத்தகு சக்தி அமைச்சர் கௌரவ ரன்ஜித் சியபலாப்பிட்டிய அமைச்சரவையின் மூலம் கொள்கை அளவிலான அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
 
14. இலஞ்சம் மற்றும் ஊழலுக்கு சட்டத்தினை திருத்தம் செய்தல் (விடய இல. 45)
 
இலங்கையில் இலஞ்சம் மற்றும் ஊழலினை இல்லாதொழிப்பதற்காக காணப்படுகின்ற சட்ட திட்டங்களை காலத்திற்கு ஏற்றால் போல் திருத்தியமைப்பதற்கும், தற்போது காணப்படுகின்ற சட்டத்தில் உள்ள குறைகளை நிவர்த்தி செய்து கொள்வதற்காகவும் இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை பரிசீலிக்கும் ஆணைக்குழு சட்டம் மற்றும் அதனுடன் தொடர்பான சட்டங்களை திருத்தம் செய்வது தொடர்பில் அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
 
15. இலங்கை மத்திய வங்கியின் 'கடந்த கால பொருளாதார போக்கு : 2017ம் ஆண்டின் முக்கியமான நிகழ்வுகள் மற்றும் 2018ம் ஆண்டின் எதிர்பார்ப்புகள்' தொடர்பான அறிக்கையினை பாராளுமன்றத்தில் முன்வைத்தல் (விடய இல. 49)
 
இலங்கை மத்திய வங்கியின் 'கடந்த கால பொருளாதார போக்கு : 2017ம் ஆண்டின் முக்கியமான நிகழ்வுகள் மற்றும் 2018ம் ஆண்டின் எதிர்பார்ப்புகள்' தொடர்பான அறிக்கையினை 2018ம் ஆண்டு வரவு செலவு திட்ட முன்வைப்புக்கு சமமாக பாராளுமன்றத்தில் முன்வைப்பது தொடர்பில் தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் எனும் ரீதியில் கௌரவ பிரதமர் ரணில் விக்ரமசிங்க அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
 
16. அரசியலமைப்பின் 105 (1) (எ) பிரிவின் கீழ் மேல் நீதிமன்றம் ஒன்றை ஸ்தாபித்தல் (விடய இல. 51)
 
நாட்டில் தேங்கி கிடக்கும் வழக்குகளை விசாரித்து துரித கதியில் தீர்ப்பினை பெற்றுக் கொடுக்கும் நோக்கில் விசேட மேல் நீதிமன்றம் ஒன்றை ஸ்தாபிப்பதற்கு பொருத்தம் என இனங்காணப்பட்டுள்ளது. அதனடிப்படையில், பிரதம நீதியரசரினால் பெயர் குறிப்பிடப்பட்ட மூவர் அடங்கிய நீதிபதிகளினை கொண்ட மேல் நீதிமன்றம் ஒன்றை அரசியலமைப்பின் 105 (1) (எ) பிரிவின் கீழ் ஸ்தாபிப்பதற்கும், குறித்தொதுக்கப்படுகின்ற குற்றங்கள் தொடர்பில் வழக்கு விசாரணைகளை சட்டமாதிபரின் வேண்டுகோளின் அடிப்படையில் பிரதம நீதியரசரினால் அந்நீதிமன்றத்திற்கு ஒப்படைப்பதற்கும், அந்நீதிமன்றத்தின் தீர்ப்புகளுக்கு எதிராக உயர் நீதிமன்றத்திற்கு நேரடியாக மேன்முறையீடுகளை முன்வைப்பதற்கு ஏதுவான முறையில் சட்ட மூலம் ஒன்றை வரைவதற்கு சட்ட மாதிபருக்கு ஆலோசனை வழங்குவது தொடர்பில் நீதி அமைச்சர் கௌரவ தலதா அதுகோரல அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
 
17. மஹியங்கனை பிரதேச செயலகத்துக்காக புதிய இருமாடிகளைக் கொண்ட கட்டிடமொன்றை நிர்மாணித்தல் (விடய இல. 52)
 
மஹியங்கனை பிரதேச செயலகத்துக்காக புதிய இருமாடிகளைக் கொண்ட கட்டிடமொன்றை நிர்மாணிப்பதற்கான ஒப்பந்தத்தை அமைச்சரவையினால் நியமிக்கப்பட்டுள்ள நிலையியல் கொள்முதல் குழுவின் சிபார்சின் பெயரில் 140.96 மில்லியன் வரியற்ற மதிப்பீட்டு தொகைக்கு Finite Lanka (Pvt.) Ltd. நிறுவனத்துக்கு வழங்குவது தொடர்பில் உள்நாட்டலுவல்கள் அமைச்சர் கௌரவ வஜிர அபேவர்தன அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
 
18. பொலன்னறுவை மாவட்ட செயலகத்திற்காக நான்கு மாடிகளைக் கொண்ட கட்டிடம் ஒன்றை நிர்மாணிப்பதற்கான ஒப்பந்தம் (விடய இல. 53)
 
பொலன்னறுவை மாவட்ட செயலகத்திற்காக நான்கு மாடிகளைக் கொண்ட கட்டிடம் ஒன்றை நிர்மாணிப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. அதனடிப்படையில் அதன் முதற்கட்டத்தினை நிர்மாணிப்பதற்கான ஒப்பந்தத்தினை Micro Construction (Pvt) Ltd. . நிறுவனத்திற்கு வழங்கப்பட்டதுடன் அப்பணிகள் தற்போது முடியும் தருவாயில் உள்ளது. அதன் முன்னேற்ற அறிக்கையினை கவனத்திற் கொண்டு அதன் இரண்டாம் கட்ட நிர்மாணப்பணிகளை 952.90 (வரியற்ற) மில்லியன் ரூபா மதிப்பீட்டு செலவில் அந்நிறுவனத்துக்கே வழங்குவது தொடர்பில் உள்நாட்டலுவல்கள் அமைச்சர் கௌரவ வஜிர அபேவர்தன அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
 
19. நாட்டினுள் நிலவுகின்ற பெட்ரோல் தட்டுப்பாட்டினை துரித கதியில் வழமைக்கு கொண்டுவரல்
 
நாட்டினுள் நிலவுகின்ற பெட்ரோல் தட்டுப்பாட்டினை துரித கதியில் வழமைக்கு கொண்டு வருவதற்கும், அவ்வாறான நிலைமை இனிமேல் ஏற்படாத வகையில் பார்த்துக் கொள்வதற்கும், அந்நிலைமை தொடர்பில் பொறுப்புக் கூற வேண்டியவர்கள் யார் என்பது தொடர்பிலும் பரிசீலித்து காலம் தாழ்த்தாது சிபார்சுகளை முன்வைப்பது தொடர்பில் பின்வரும் அமைச்சர்கள் அடங்கிய அமைச்சரவை உபகுழுவினை நியமிப்பது தொடர்பில் அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
 
• கௌரவ (கலாநிதி) சரத் அமுணுகம அவர்கள் - விசேட வேலைத்திட்ட அமைச்சர் (தலைவர்)
 
• கௌரவ அநுர பிரியதர்ஷன யாப்பா அவர்கள் - அனர்த்த முகாமைத்துவ அமைச்சர்
 
• கௌரவ பாட்டலி சம்பிக்க ரணவக்க அவர்கள் - பாரிய நகரம் மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர்
 
• கௌரவ அர்ஜுன ரணதுங்க அவர்கள் - பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி அமைச்சர்

சமீபத்திய செய்திகள்

24.05.2022 அமைச்சரவை தீர்மானங்கள்

26 May 2022

23.05.2022 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் எட்டப்பட்ட முடிவுகள்

03.05.2022 அமைச்சரவை தீர்மானங்கள்

03 May 2022

02.05.2022 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் எட்டப்பட்ட முடிவுகள்

26.04.2022 அமைச்சரவை தீர்மானங்கள்

26 April 2022

25.04.2022 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் எட்டப்பட்ட முடிவுகள்

ஊடக அறிக்கை - 03.04.2022

04 April 2022

பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு மாத்திரமே அவசரகால சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது

ஊடக அறிக்கை - 02.04.2022

04 April 2022

இன்று மாலை 6.00 மணியிலிருந்து திங்கட்கிழமை காலை 6.00 மணிவரை...

ஊடக அறிக்கை - 01.04.2022

04 April 2022

நாடு முழுவதும் அவசர கால நிலைமை சட்டம் அமுல்படுத்தப்படுகிறது

29.03.2022 அமைச்சரவை தீர்மானங்கள்

31 March 2022

28.03.2022 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் எட்டப்பட்ட முடிவுகள்

22.03.2022 அமைச்சரவை தீர்மானங்கள்

22 March 2022

21.03.2022 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் எட்டப்பட்ட முடிவுகள்

ஊடக அறிக்கை - 17.03.2022

18 March 2022

ஊடக அறிக்கை -203/2022

15.03.2022 அமைச்சரவை தீர்மானங்கள்

15 March 2022

14.03.2022 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் எட்டப்பட்ட முடிவுகள்

அத்துடன் இலங்கையிலுள்ள ஊடகத்துறையின் கொள்கை திட்டமிடல் , பயிற்சி நெறிகளை வழங்குதல் , மற்றும் ஊடகத்துறைக்கான அங்கீகாரங்களை வழங்குவதிலும் இந்நிறுவனம் முன்னின்று உதவுகின்றது.