• #163, கிருலபன எவனியூ, கொழும்பு 05, இ லங்கை​
  • +94 112 51 5759

engsin

அமைச்சரவை தீர்மானங்கள் 2016.07.12

01. தேசிய அபிவிருத்திக்காக சிவில் மற்றும் இராணுவ பிரிவுகளின் புரிந்துணர்வை ஏற்படுத்துவதற்காக நிறுவனம் ஒன்றை ஸ்தாபித்தல் (விடய இல. 09)
முப்படையினரிடத்திலும் காணப்படுகின்ற வளங்கள்இ சக்தி மற்றும் பயிற்சி ஆகியவற்றை முழு தேசிய அபிவிருத்தி மற்றும் சமாதானத்தை ஏற்படுத்தும் செயற்பாட்டிற்கு பங்களிப்பு வழங்கும் வகையில் மாற்றிக் கொள்வதற்காக சிவில் அதிகாரிகளுடன் அந்நியோன்னிய புரிந்துணர்வுடன் செயற்படுவதற்கான சிவில் மற்றும் இராணுவ பிரிவுகளை உள்ளடக்கிய நிறுவனம் ஒன்றை ஸ்தாபிப்பதற்கு பாதுகாப்பு அமைச்சர் எனும் ரீதியில் அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

02. இலங்கையின் நிலையான அபிவிருத்தி சட்டமூலம் (விடய இல. 10)
இலங்கையின் நிலையான அபிவிருத்தி தொடர்பில் தேசிய கொள்கை மற்றும் உபாய முறைகள் விருத்தி செய்தல் மற்றும் செயற்படுத்துவதற்காக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்ட இலங்கையின் நிலையான அபிவிருத்தி சட்ட மூலத்தினை வர்த்தமானியில் பிரசுரித்து அதனுடன் தொடர்பான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கும்இ அதன் பின்னர் அனுமதியினை பெறுவதற்காக பாராளுமன்றத்தில் முன்வைப்பதற்கும் தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார நடவடிக்கைகள் தொடர்பான அமைச்சர் எனும் ரீதியில் கௌரவ பிரதமர் ரணில் விக்ரமசிங்க அவர்களினால் முன்வைக்கப்பட்ட அமைச்சரவை யோசனைகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

03. மோட்டார் வாகனங்களின் உடைமை மாற்றமடைந்ததன் பின்னர் உரிமை மாற்றத்தை பதிவு செய்வதற்காக விண்ணப்பிப்பதற்கு தாமதம் ஏற்படும் போது அறவிடப்படும் மேலதிக கட்டணம் தொடர்பாக சலுகைக் காலத்தை வழங்குதல் (விடய இல. 15)
பதிவு உடைமை மாற்றமடைந்து அதிகளவு காலம் கடந்துள்ள வாகனங்களின் உரிமை மாற்றத்தை பதிவு செய்யாது முதல் உரிமையாளரின் பெயரினால் உபயோகிப்பதினால் அரசாங்கத்தினால் அறவிடப்படும் கட்டணங்களில் பாரியளவு குறைவினை காணக்கூடியதாக உள்ளது. அதே போன்று சட்டத்தை நடைமுறைப்படுத்தும் நிறுவனங்களும் பாரியளவு பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்து வருகின்றது. இவ்வாறான நிலைமையை கட்டுப்படுத்தம் நோக்கில் மோட்டார் வாகனங்களின் உடைமை மாற்றமடைந்ததன் பின்னர் உரிமை மாற்றத்தை பதிவு செய்வதற்காக விண்ணப்பிப்பதற்கு தாமதம் ஏற்படும் போது அறவிடப்படும் மேலதிக கட்டணம் தொடர்பாக 03 மாத சலுகைக் காலத்தை வழங்குவதற்கு போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் கௌரவ நிமல் சிறிபால டி சில்வா அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

04. கிழக்கு மாகாணத்தில்இ நிலாவெளியில் அமைக்கப்பட்டுள்ள தொழில் பயிற்சி மத்திய நிலையத்தை திவிநெகும அபிவிருத்தி திணைக்களத்தின் கீழ் ஒப்படைத்தல் (விடய இல. 16)
வட கிழக்கு மாகாணங்களில் வாழும் திவிநெகும பயன்பெறும் மக்களுக்காக பயிற்சி நெறிகளை முன்னெடுப்பதற்காக திருகோணமலை மாவட்டத்தில் நிலாவெளிஇ கோபாலபுரம் பிரதேசத்தில் அமைக்கப்பட்டுள்ள தொழில் பயிற்சி மத்திய நிலைய கட்டிடத்தை 126 மில்லியன் அரச மதிப்பீட்டில் திவிநெகும அபிவிருத்தி திணைக்களத்தின் கீழ் ஒப்படைப்பது தொடர்பில் சமூக வலுவூட்டல் மற்றும் நலன்புரி அமைச்சர் எஸ்.பி. திசாநாயக்க அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

05. ஸ்ரீ ஜயவர்தனஇ சபரகமுவஇ யாழ்ப்பாணம்இ களனிஇ கொழும்புஇ பேராதனைஇ ஊவா வெல்லஸ்ஸ மற்றும் தென் கீழ் பல்கலைக்கழகம் ஆகியவற்றில் அடிப்படை வசதிகளை அபிவிருத்தி செய்தல் (விடய இல. 19)
ஒவ்வொரு வருடமும் பல்கலைக்கழக அனுமதி 05மூ ஆல் அதிகரிக்கின்றது. அவ்வாறு அதிகரிக்கும் பட்டப்படிப்பை தொடரும் அனைத்து மாணவர்களுக்கும் முழுமையான முறைகளில் வசதிகளை செய்து கொடுப்பதற்கு ஸ்ரீ ஜயவர்தனஇ சபரகமுவஇ யாழ்ப்பாணம்இ களனிஇ கொழும்புஇ பேராதனைஇ ஊவா வெல்லஸ்ஸ மற்றும் தென் கீழ் பல்கலைக்கழகம் ஆகியவற்றில் தொழில்நுட்ப பீடங்களை ஆரம்பிப்பதற்கு தேவையான அடிப்படை வசதிகளை அபிவிருத்தி செய்வதற்காக 2016 ஆம் ஆண்டு ஒதுக்கப்பட்டுள்ள 1இ369 மில்லியன் ரூபாய் நிதியினை கொண்டு ஆரம்பிப்பதற்கும்இ 2017 மற்றும் 2018 ஆம் ஆண்டுகளுக்காக தேவையான நிதியினை திறைசேரியில் ஒதுக்கி கொள்வதற்கும் உயர் கல்வி மற்றும் பெருந்தெருக்கள் அமைச்சர் கௌரவ லக்ஷ்மன் கிரியெல்ல அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

06. பாரிய கொழும்பு குடி நீர் மற்றும் கழிவுநீர் முகாமைத்துவம் ஆகியவற்றை விருத்தி செய்யும் வேலைத்திட்டத்தின் மூன்றாம் கட்டத்தினை செயற்படுத்தல் (விடய இல. 20)
பாரிய கொழும்பு குடி நீர் மற்றும் கழிவுநீர் முகாமைத்துவம் ஆகியவற்றை விருத்தி செய்யும் வேலைத்திட்டத்தின் மூன்றாம் கட்டத்தினை 156 மில்லியன் யூரோ செலவில் செயற்படுத்த இலங்கை அரசுக்கும் ஐரோப்பிய முதலீட்டு வங்கியுடன் கடன் ஒப்பந்தம் ஒன்றில் கைச்சாத்திடுவது தொடர்பில் நிதி அமைச்சர் கௌரவ ரவி கருணாநாயக்க அவர்கள் முன்வைத்த அமைச்சரவை யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

07. ஜேர்மனி பெடரல் அரசின் மூலம் 13 மில்லியன் யூரோ பெறுமதியான தொழில்நுட்ப ஒத்துழைப்பு மானியத்தை (வூநஉhniஉயட ஊழழிநசயவழைn புசயவெ) பெற்றுக் கொள்ளல் (விடய இல. 23)
அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களினால் 2016 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் மேற்கொள்ளப்பட்ட ஜேர்மனி விஜயத்தின் போதுஇ இலங்கையில் 04 வேலைத்திட்டங்களை முன்னெடுப்பதற்காக ஜேர்மனி பெடரல் அரசின் மூலம் தருவதாக வாக்களித்த 13 மில்லியன் யூரோ பெறுமதியான தொழில்நுட்ப ஒத்துழைப்பு மானியத்தை (வூநஉhniஉயட ஊழழிநசயவழைn புசயவெ) பெற்றுக் கொள்வதற்கான ஒப்பந்தம் ஒன்றில் கைச்சாத்திடுவது தொடர்பில் நிதி அமைச்சர் கௌரவ ரவி கருணாநாயக்க அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

08. டிஜிடல் வர்த்தகம் தொடர்பில் கொடுப்பனவுகளை மேற்கொள்ளும் தேசிய நடைமுறையொன்றை ஸ்தாபித்தல் மற்றும் டிஜிடல் கொடுக்கல் வாங்கலினை இலகுபடுத்தல் (விடய இல. 22)
இன்று பெரும்பாலும் பொது மக்களினால் மேற்கொள்ளப்படும் பொருள் மற்றும் சேவை கொள்வனவு முறைகளுக்கு சர்வதேச கடன்அட்டைகளின் மூலமே கொடுப்பனவுகள் மேற்கொள்ளப்படுகின்றன. எனினும் இலங்கையின் கடன் அட்டை பாவனை மிகவும் குறைந்த மட்டத்திலேயே காணப்படுகின்றது. இவற்றினை கருத்திற் கொண்டு நிதி அமைச்சு மற்றும் மத்திய வங்கி ஆகியவற்றினால் முன்வைக்கப்பட்ட சிபார்சுகளை ஆராய்ந்த குறித்த துறைகளில் பாண்டித்தியம் பெற்ற சிரேஷ்ட அதிகாரிகளை உள்ளடக்கிய குழுவின் மூலம் முன்வைக்கப்பட்ட யோசனைகளின் படி இலங்கையின் அரச நிறுவனங்கள்இ வியாபார மற்றும் பிரஜைகளுக்காக இலத்திரனியல் வர்த்தக நடவடிக்கைகள் மற்றும் இலத்திரனியல் கொடுப்பனவுகள் மேற்கொள்ளும் போது வசதிகளை செய்து கொடுப்பதற்கான செயன்முறை ஒன்றாக “தேசிய கட்டண தளம்” (யேவழையெட Pயலஅநவெ Pயடவகழசஅ) ஸ்தாபிப்பது தொடர்பில் நிதி அமைச்சர் கௌரவ ரவி கருணாநாயக்க அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

09. வெலிகடை சிறைச்சாலையை புனரமைப்பு செய்தல் (விடய இல. 26)
வெலிகடை சிறைச்சாலையில் இருந்து அடிக்கடி நீதிமன்றத்துக்கு கொண்டு செல்ல வேண்டிய சிறைக் கைதிகளை தடுத்து வைப்பதற்கான ரிமான்ட் சிறைச்சாலையை ஸ்தாபிப்பதற்காகஇ மேல் நீதிமன்ற கட்டிடத்தொகுதிக்கு அண்மையில் காணப்படுகின்ற வரையறுக்கப்பட்ட பீ.சீ.சீ லங்கா நிறுவனத்துக்கு உரித்தான காணியினை பெற்றுக் கொள்வது தொடர்பில் பாரிய நகரங்கள் மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் கௌரவ பாடலி சம்பிக்க ரணவக்க அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

10. கிராமிய அடிப்படை வசதிகள் மற்றும் வாழ்வாதாரம் அபிவிருத்தி தொடர்பில் நிதி ஒதுக்கிடு செய்தல் (விடய இல. 30)
‘கிராமிய அடிப்படை வசதிகளை அபிவிருத்தி செய்யும் வேலைத்திட்டம்’ இனை முன்னெடுப்பதற்காக 2016 ஆம் ஆண்டு வரவு செலவு திட்டத்தில் 13.3 பில்லியன் ரூபாய்கள் ஒதுக்கப்பட்டன. இந்த வேலைத்திட்டத்தை தேசிய மற்றும் மாகாண மட்டத்தில் பல்வேறு நிறுவனங்கள் மூலம் முன்னெடுக்கப்படும் சிறிய அளவிலான அடிப்படை வசதிகளை அபிவிருத்தி செய்யும் வேலைத்திட்டங்களின் மூலம் பயன் பெறாத பிரஜைகளை இலக்காகக் கொண்டு கிராமிய அடிப்படை வசதிகள் மற்றும் வாழ்வாதாரம் அபிவிருத்தி தொடர்பிலான வேலைத்திட்டம் ஒன்றினை அநுராதபுரம்இ மட்டக்களப்பு மற்றும் பொலன்னறுவை ஆகிய மாவட்டங்களில் செயற்படுத்துவதற்கு கிராமிய அபிவிருத்தி தொடர்பான அமைச்சர் கௌரவ பி.ஹெரிசன் அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

11. தொழில்நுட்பவியல் புலமைப்பரிசில் நிதியம் (விடய இல. 33)
க.பொ.த (உ.த) இற்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புதிய பாடத்துறையான தொழில்நுட்பவியல் பாடத்துறையைத் தொடரும் குறைந்த வருமானம் பெறும் மாணவ மாணவிகளுக்காக தொழில்நுட்பவியல் புலமைபரிசில் வேலைத்திட்டத்திற்கு ஆசிய அபிவிருத்தி வங்கி மூலம் ரூ. 100 மில்லியன் நிதியுதவி வழங்ககப்பட்டது. எனினும் இவ்வேலைத்திட்டத்தினை நம்பிக்கை பொறுப்புத் திணைக்களம் முன்னெடுக்கும் போது அதன் நிர்வாக செயற்பாடுகளுக்காக பாரிய நிதி குறித்து நிதியில் இருந்து பெறப்படுகின்றது. இதனால் குறித்த நிதியுதவியினால் எதிர்பார்க்கப்படுகின்ற இலக்கை அடைய முடியாது உள்ளது. இதனடிப்படையில் குறித்த இலக்கை அடைந்து கொள்ளும் நோக்கில் தற்போது நம்பிக்கை பொறுப்புத் திணைக்களத்தின் கீழ் நிர்வகிக்கப்படும் குறித்த நிதியினை கல்வி அமைச்சின் கீழ் கொண்டு வருவதற்கும்இ பின்னர் திறைசேரியினால் தொடர்ச்சியாக வருடா வருடம் குறித்த நிதியினை பெற்றுக் கொண்டு குறித்த புலமைப்பரிசில் வேலைத்திட்டத்தினை தொடர்ச்சியாக முன்னெடுத்துச் செல்ல கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

12. பொலன்னறுவை மாவட்ட செயலகத்திற்கான புதிய நான்கு மாடிக் கட்டிடத்தினை நிர்மாணித்தல் (விடய இல. 40)
பொலன்னறுவை மாவட்ட செயலகத்திற்கான புதிய நான்கு மாடிக் கட்டிடத்தினை நிர்மாணிக்கும் முதல் கட்டத்திற்கான ஒப்பந்தத்தினை அமைச்சரவை குழுவினால் நியமிக்கப்பட்டுள்ள அமைச்சரவை பெறுகைக் குழுவின் சிபார்சின் பெயரில் குறைந்த கேள்வி மனுவுக்கு வழங்குவதற்கு உள்நாட்டலுவல்கள் அமைச்சர் கௌரவ வஜிர அபேவர்தன அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

13. மட்டக்களப்பு மாவட்ட செயலகத்திற்கான புதிய 03 மாடிக் கட்டிடத்தினை நிர்மாணித்தல் (விடய இல. 41)
மட்டக்களப்பு மாவட்ட செயலகத்திற்கான புதிய மூன்று மாடிக் கட்டிடத்தினை நிர்மாணிக்கும் முதல் கட்டத்திற்கான ஒப்பந்தத்தினை அமைச்சரவை குழுவினால் நியமிக்கப்பட்டுள்ள அமைச்சரவை பெறுகைக் குழுவின் சிபார்சின் பெயரில் குறைந்த கேள்வி மனுவுக்கு வழங்குவதற்கு உள்நாட்டலுவல்கள் அமைச்சர் கௌரவ வஜிர அபேவர்தன அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

14. மாத்தளை மாவட்ட செயலகத்திற்கான புதிய 05 மாடிக் கட்டிடத்தினை நிர்மாணித்தல் (விடய இல. 42)
மாத்தளை மாவட்ட செயலகத்திற்கான புதிய ஐந்து மாடிக் கட்டிடத்தினை நிர்மாணிக்கும் முதல் கட்டத்திற்கான ஒப்பந்தத்தினை அமைச்சரவை குழுவினால் நியமிக்கப்பட்டுள்ள அமைச்சரவை பெறுகைக் குழுவின் சிபார்சின் பெயரில் குறைந்த கேள்வி மனுவுக்கு வழங்குவதற்கு உள்நாட்டலுவல்கள் அமைச்சர் கௌரவ வஜிர அபேவர்தன அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

15. அரையாண்டு அரசிறை நிலைமை அறிக்கை (விடய இல. 58)
2003 ஆம் ஆண்டின் 3 ஆம் இலக்க அரசிறை முகாமைத்துவ (பொறுப்புச்) சட்டத்தின் 10 ஆம் பிரிவிற்கு அமைவாகஇ நிதியமைச்சினால் அரையாண்டு அரசிறை நிலைமை அறிக்கையினை ஒவ்வொரு நிதியாண்டின் ஜுன் மாதம் 30 ஆந் திகதியளவில் பொது மக்களின் தகவல்களுக்காக வெளியிடுவதற்கும் அதனை தொடர்ந்து பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கவும் வேண்டும். இதற்கமைவாக நிதி அமைச்சின் அரையாண்டு அரசிறை நிலைமை அறிக்கை 2016 இனை பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்காக நிதி அமைச்சர் கௌரவ ரவி கருணாநாயக்க அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளதோடு பின்வரும் அம்சங்கள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டது.

- இலங்கையின் பொருளாதாரம் 2015 ஆம்வருடத்தின் முதல் காலாண்டு காலப்பகுதியில் பதிவான 4.4மூ அதிகரிப்பானதுஇ 2016 ஆம் ஆண்டின் முதல் காலாண்டு காலப்பகுதியில் 5.5மூ அதிகரிப்பை காட்டுகின்றது.
- 2015 ஆம் ஆண்டு பெறப்பட்ட அரச வருமானத்தை விட 2016 ஆம் ஆண்டில் 19.5மூ அதிகரிப்பை காட்டுகின்றது.
- 2015 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும் போது சந்தை தட்டுப்பாடு 2016 ஆம் ஆண்டின் முதல் 04 மாதங்களில் 2.4மூ குறைவை காட்டுகின்றது.

16. களனி வலது கரை நீர் வழங்கல் கருத்திட்டத்தின் இரண்டாம் கட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான நிதியுதவியைப் பெற்றுக் கொள்ளுதல் (விடய இல. 60)
களனி வலது கரை நீர் வழங்கல் கருத்திட்டத்தின் இரண்டாம் கட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு 13 மில்லியன் யூரோ இற்குச் சமமான இலங்கை ரூபாவிலான தொகையொன்றையும் இலங்கை ரூபா 10 பில்லியன் வரை வசதியொன்றைப் பெற்றுக் கொள்வதற்காக திறைசேரியினால் முறியொன்றை வழங்குவதற்கு நிதியமைச்சர் கௌரவ ரவி கருணாநாயக்க அவர்களினால் முன்வைத்த யோசனைகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

17. வருடாந்தப் பேரூந்துக் கட்டணங்களைத் திருத்தஞ் செய்தல் - 2016 (விடய இல. 61)
வருடாந்தப் பேரூந்துக் கட்டணங்களை திருத்தஞ் செய்வதற்காக தொடர்புடைய நிறுவகங்களை பிரதிநிதித்துவப்படுத்தி நிபுணர் குழுவொன்று நியமிக்கட்டடுள்ளதுடன்இ குறித்த நிபுணர் குழு பல தடைவைகள் கூட்டப்பட்டு பேரூந்துச் சங்க பிரதிநிதிகள் மற்றும் பயணிகள் சங்கப் பிரதிநிதிகளின் கருத்துக்கள் மற்றும் முன்மொழிவுகளையும் பெற்று அறிக்கையொன்றை முன்வைத்துள்ளது. திருத்தஞ் செய்யப்பட்ட பேரூந்துக் கட்டணங்கள் அதிகரிப்பு 6மூ ஆக இடம்பெறும் என அக்குழுவின் பரிந்துரையில் காணப்படுகின்றது. இப்பரிந்துரைகளை இலங்கை போக்குவரத்து ஆணைக்குழுவின் ஊடாக முறையான முறையில் நடைமுறைப்படுத்த வேண்டி இருப்பதால்இ குறித்த கட்டண அதிகரிப்பை 2016 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 01 ஆம் திகதி முதல் செயற்படுத்த அமைச்சரவையின் அனுமதி வழங்கப்பட்டது.

18. அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்கு கட்டுப்பாட்டு விலையினை நிர்ணயித்தல் (விடய இல. 64)
அத்தியாவசிய நுகர்வுப் பொருட்களின் விலைகள் மாவட்டத்துக்கு மாவட்டம் வித்தியாசப்படுவதுஇ கடந்த தினங்களில் அதிகரிக்கப்பட்ட வெட் வரி அதிகரிப்பினாலே ஆகும் என்ற பிழையான கருத்துக்கள் மக்கள் மத்தியில் பரவலாக பேசப்படுகின்றது. சில நுகர்வுப் பொருட்களுக்கு குறித்த வெட் வரி தாக்கம் செலுத்திய போதும்இ அரிசிஇ சீனிஇ பருப்புஇ பெரிய வெங்காயம்இ உருளைக்கிழங்குஇ சிறிய வெங்காயம்இ மாவுஇ காய்ந்த மிளகாய்இ பயறுஇ கௌபிஇ டின் மீன்இ கோழி இறைச்சிஇ காய்ந்த நெத்தலி ஆகிய பொருட்கள் மற்றும் மருந்து பொருட்களுக்கு குறித்த வெட் வரி தாக்கம் செலுத்தவில்லை. எனினும் சந்தையில் குறித்த பண்டங்கள் அதிக விலையில் விற்கப்படுவதாக குற்றம் சாட்டப்படுகின்றது. இந்நிலையினை முடிவுக்கு கொண்டு வரும் வகையில்இ அத்தியாவசிய நுகர்வுப்பொருட்கள் 15 இனை இனங்கண்டு நுகர்வு தொடர்பான அதிகாரசபை சட்டத்தின் கீழ் வர்த்தமானி அறிவித்தலில் பிரசுரிப்பதற்கும்இ குறித்த நுகர்வுப் பொருட்களின் அதிகப்பட்ட சில்லறை விலையினை வாழ்க்கைச் செலவு தொடர்பான அமைச்சரவை உப குழுவின் மூலம் நிர்ணயிப்பதற்கும்இ அதனடிப்படையில் குறித்த கட்டுப்பாட்டு விலையினை செயற்படுத்துவதற்கு நுகர்வோர் அதிகாரசபைக்கு பட்டதாரிகள் 200 பேரினதும்இ தேவைப்படும் பட்சத்தில் பாதுகாப்பு தரப்பினரின் உதவிகளை பெற்றுக் கொள்வதற்கும் கைத்தொழில் மற்றும் வர்த்தக நடவடிக்கைகள் அமைச்சர் கௌரவ ரிசாட் பதியூதீன் அவர்களினால் முன்வைத்த யோசனைகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

19. ஆலோசனை நிறுவனம் ஒன்றை ஸ்தாபிப்பதற்காக இலங்கை முதலீட்டு சபை மற்றும் சிங்கப்பூர் சர்பானா புரோக் (ளுரசடியயெ துரசழபெ) தனியார் கம்பனிக்கும் இடையில் மேற்கொள்ளப்பட உள்ள புரிந்துணர்வு ஒப்பந்தம் (விடய இல. 65)
இலங்கையில் முதலீடு தொடர்பில் அதிக பயனை அடைந்து கொள்ளும் நோக்கில் ஆலோசனை நிறுவனம் ஒன்றை ஸ்தாபிப்பதற்காக இலங்கை முதலீட்டு சபை மற்றும் சிங்கப்பூர் சர்பானா புரோக் (ளுரசடியயெ துரசழபெ) தனியார் கம்பனிக்கும் இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில் கைச்சாத்திட அபிவிருத்தி உபாய முறைகள் மற்றும் சர்வதேச வர்த்தக அமைச்சர் கௌரவ மலிக் சமரவிக்ரம அவர்களினால் முன்வைத்த யோசனைகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

டீPமுஃளுஆஆகு

சமீபத்திய செய்திகள்

அமைச்சரவை தீர்மானங்கள் - ஒக்டோபர் மாதம்

04 October 2023

அமைச்சரவை தீர்மானங்கள் - 02.10.2023

அமைச்சரவை தீர்மானங்கள் - செப்டெம்பர் மாதம்

04 October 2023

அமைச்சரவை தீர்மானங்கள் - 25.09.2023

அமைச்சரவை தீர்மானங்கள் - ஒகஸ்ட் மாதம்

16 August 2023

அமைச்சரவை தீர்மானங்கள் - 28.08.2023, 14.08.2023, 07.08.2023

அமைச்சரவை தீர்மானங்கள் - ஜூலை மாதம்

05 July 2023

அமைச்சரவை தீர்மானங்கள் - 17.07.2023, 11.07.2023, 04.07.2023

அமைச்சரவை தீர்மானங்கள் - 26.06.2023

28 June 2023

அமைச்சரவை தீர்மானங்கள் - 26.06.2023

அமைச்சரவை தீர்மானங்கள் - ஜூன் மாதம்

07 June 2023

அமைச்சரவை தீர்மானங்கள்

அமைச்சரவை தீர்மானங்கள் - மே மாதம்

09 May 2023

அமைச்சரவை தீர்மானங்கள் - மே மாதம்

அமைச்சரவை தீர்மானங்கள் - ஏப்ரல் மாதம்

09 May 2023

அமைச்சரவை தீர்மானங்கள் - ஏப்ரல் மாதம்

அமைச்சரவை தீர்மானங்கள் - மார்ச் மாதம்

23 March 2023

அமைச்சரவை தீர்மானங்கள் 

அத்துடன் இலங்கையிலுள்ள ஊடகத்துறையின் கொள்கை திட்டமிடல் , பயிற்சி நெறிகளை வழங்குதல் , மற்றும் ஊடகத்துறைக்கான அங்கீகாரங்களை வழங்குவதிலும் இந்நிறுவனம் முன்னின்று உதவுகின்றது.