• #163, கிருலபன எவனியூ, கொழும்பு 05, இ லங்கை​
  • +94 112 51 5759

engsin

அமைச்சரவை தீர்மானங்கள் 10.10.2017

01. ஹைட்ரொபுலோரோகாபன் (HFC) வாயுவினை மட்டுப்படுத்துவது தொடர்பான மொன்ரியல் கூட்டமைப்பு முன்வைத்த கிகாலி திருத்தத்தினை இலங்கையும் ஏற்றுக் கொள்ளல் (விடய இல. 07)
 
மொன்ரியல் கூட்டமைப்பிற்காக இறுதி திருத்தமானது 2016ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 15ம் திகதி ருவண்டாவே, கிகாலியில் மேற்கொள்ளப்பட்டதோடு, அவற்றில் பூகோள வெப்பமடைதலினை கட்டுப்படுத்துவதற்காக 2050ம் ஆண்டளவில் பூகோள வெப்பமடைதலுக்கு பங்களிப்பு செலுத்துகின்ற ஹைட்ரொபுலோரோகாபன் (HFC) போன்ற ஓசோன் படையினை சேதமாக்குகின்ற இரசாயன பதார்த்தங்கள் பாவனையினை கட்டம் கட்டமாக கட்டுப்படுத்துவதற்கு அங்கத்துவ நாடுகள் இணக்கம் தெரிவித்துள்ளன. அதனடிப்படையில், இலங்கையில் கைத்தொழில் பிரிவிற்கு மற்றும் பொருளாதாரத்துக்கு தாக்கம் செலுத்தாத வகையில் ஹைட்ரொபுலோரோகாபன் (HFC)  பயன்பாட்;டினை கட்டுப்படுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை மற்றும் அறிவுறுத்தல் நடவடிக்கைகளை ஏற்கனவே ஆரம்பித்துள்ளதை கவனத்திற் கொண்டு கிகாலி திருத்தத்தினை இலங்கை அரசாங்கத்தினால் ஏற்றுக் கொள்வதற்கும், அது தொடர்பில் பாராளுமன்றத்திற்கு தெரிவிப்பதற்கும் மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சர் எனும் ரீதியில் அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
 
 
02. கம்பஹா மாவட்டத்தில் செயற்படுத்துவதற்கு பிரேரிக்கப்பட்டுள்ள ஒன்றிணைந்த கழிவு முகாமைத்துவ வேலைத்திட்டம் (விடய இல. 08)
 
 
கம்பஹா மாவட்டத்தில் அனைத்து உள்ளூராட்சி மன்றங்களில் சேகரிக்கப்படுகின்ற கழிவுகளை முறையாக முகாமைத்துவம் செய்வதற்காக வேண்டி ஆரோக்கியமான கழிவு சேகரிக்கும் இடம் மற்றும் உயிரியல் வாயு உரவகைகளை உற்பத்தி செய்யும் முறைமையினை ஸ்தாபிக்கும் வேலைத்திட்டம் ஆகியவற்றை மத்திய சுற்றுச்சூழல் அதிகார சபையினால் 989 மில்லியன் ரூபா மதிப்பீட்டு செலவில் செயற்படுத்துவது தொடர்பில் மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சர் எனும் ரீதியில் அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
 
03. இயந்திர இலத்திரனியல் ஆய்வுத் துறையினை அபிவிருத்தி செய்வதன் மூலம் பொருளாதாரத்தை வலுப்படுத்தல் (விடய இல. 14)
 
இயந்திர இலத்திரனியல் ஆய்வுடன் தொடர்புடைய நிறுவனங்களுக்காக உற்பத்தி திட்டங்களை நிர்மாணிக்கும் பொறியியல் பூங்காவொன்றினை ஹோமாகம, பிடிபன பிரதேசத்தில் காணப்படுகின்ற இலங்கை நிதினி தொழில்நுட்ப நிறுவனத்தினுள் ஸ்தாபிப்பதற்கும், அதன் முகாமைத்துவ நடவடிக்கைகளை தேசிய பொறியியல் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி மத்திய நிலையத்துக்கு ஒப்படைப்பதற்கும் (NERDC) விஞ்ஞானம், தொழில்நுட்பம் மற்றும் ஆராய்ச்சி அமைச்சர் கௌரவ சுசில் பிரேமஜயந்த அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
 
 
04. இலங்கைக்கு பொருத்தமான தொழில்நுட்பத்தினை விருத்தி செய்தல் மற்றும் அறிவார்ந்த சொத்துக்களை பகிர்ந்துகொள்ளும் வேலைத்திட்டம் (2017) (விடய இல. 15)
 
 
பல்வேறு நன்மைகள் நிறைந்த பொருத்தமான தொழில்நுட்பத்தினை விருத்தி செய்தல் மற்றும் அறிவார்ந்த சொத்துக்களை பகிர்ந்து கொள்ளல் வேலைத்திட்டத்தினை தென்கொரியா குடியரசின் அறிவார்ந்த சொத்துக்கள் அலுவலகம் (KIPO) மற்றும் கொரியா புதிய உற்பத்திகள் மேம்படுத்தும் சங்கம் (KIPA) ஆகியவை செயற்படுத்தி வருகின்றது. அவ்வேலைத்திட்டத்தின் கீழ் தேங்காய் பூ பயன்பாட்டினால் இந்நாட்டில் பொருத்தமான தேங்காய் எண்ணெய் பிரித்தெடுக்கும் முறைமையினை நிர்மாணிப்பதற்கும் அதனுடன் தொடர்புடைய ஏனைய விடயங்களை விருத்தி செய்வதற்குமான வேலைத்திட்டத்தினை முன்னெடுப்பதற்கு முன்மொழியப்பட்டுள்ளது. இப்பொருத்தமான தொழில்நுட்ப வேலைத்திட்டத்தினை செயற்படுத்துவது தொடர்பில் உரிய நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில் கைச்சாத்திடுவது தொடர்பில் விஞ்ஞானம், தொழில்நுட்பம் மற்றும் ஆராய்ச்சி அமைச்சர் கௌரவ சுசில் பிரேமஜயந்த அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
 
 
05. இலங்கையில் 'தேசிய விஞ்ஞான தினம்' மற்றும் 'தேசிய விஞ்ஞான வாரம்' என்பவற்றை கொண்டாடுதல் (விடய இல. 16)
 
 
ஒவ்வொரு வருடமும் நவம்பர் மாதம் 10ம் திகதி 'உலக விஞ்ஞான தினம்' அனுஷ;டிக்கப்படுகின்றது. அதற்கு நிகராக இலங்கையில் 'தேசிய விஞ்ஞான தினம்' மற்றும் 'தேசிய விஞ்ஞான வாரம்' என்பவற்றை அனுஷடிப்பது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. 
அதனடிப்படையில், விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப துறையின் விருத்தியினை இலக்காகக் கொண்டு பல்வேறு வேலைத்திட்டங்களுக்கு முன்னுரிமை வழங்கி ஒவ்வொரு வருடமும் நவம்பர் மாதம் 10ம் திகதி 'தேசிய விஞ்ஞான தினம்' எனவும், அத்தினத்துடன் ஆரம்பமாகும் வாரத்தினை 'தேசிய விஞ்ஞான வாரம்' ஆகவும் பிரகடனப்படுத்துவது தொடர்பில் விஞ்ஞானம், தொழில்நுட்பம் மற்றும் ஆராய்ச்சி அமைச்சர் கௌரவ சுசில் பிரேமஜயந்த அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
 
06. செயற்கை கள் (TODDY) உட்பட ஏனைய சட்டவிரோத கள் உற்பத்தியினை தடுப்பதற்கான மதுவரி கட்டளைகள் சட்டத்தினை திருத்தம் செய்தல் (விடய இல. 18)
 
 
இந்நாட்டில் கள் உற்பத்தியினை நிர்ணயம் செய்யும் நோக்கில், கித்துல் கள் தவிர்ந்த ஏனைய கள் குடிபான  வகைகளை இறக்குவதற்கு பயன்படுத்தப்படுகின்ற தென்னை மற்றும் பனை மரங்களில் இருந்து கள் இறக்குவதற்குவதற்காக அனுமதி பத்திரத்தினை பெற வேண்டும் என விதப்புரைகளை உட்படுத்தி மதுவரி கட்டளைகள் சட்டத்தினை திருத்துவதற்கும், அதற்காக தயாரிக்கப்பட்டுள்ள மதுவரி (திருத்தங்கள்) சட்டமூலத்தினை அரசாங்க வர்த்தமானியில் பிரசுரிப்பதற்கும் பின்னர் அங்கீகாரத்தினை பெற்றுக் கொள்வதற்காக வேண்டி பாராளுமன்றத்தில் முன்வைப்பதற்குமாக நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் கௌரவ மங்கள சமரவீர அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
 
 
07. அங்கொடை பகுதியில் புதிதாக நிர்மாணிக்கப்படுகின்ற மாடிக்கட்டிட வீட்டுத்தொகுதியின் வீடுகளை விற்பனை செய்தல் (விடய இல. 23)
 
கொழும்பு நகரத்தில் வாழும் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களை குடியமர்த்துவதற்காக 500 வீட்டு அலகுகளுடன் கூடிய மாடி வீட்டுத்திட்டமொன்று அங்கொடை வைத்தியசாலை சூழலில் காணப்படுகின்ற 05 ஏக்கர் பூமிப்பகுதியில் நிர்மாணிக்கப்பட்டு வருகின்றது. அதனால், 4-5 மில்லியன் பெறுமதியான தொகைக்கு விலை குறிக்க முடியுமான வீட்டு அலகுகளை பத்திரிகை விளம்பரத்தின் மூலம் விண்ணப்பங்கள் கோரப்பட்டு, முப்படை அங்கத்தவர்கள் உட்பட குறைந்த வருமானம் பெறுகின்ற அரச சேவையாளர்கள், கலைஞர்கள், சிறு மற்றும் நடுத்தர அளவிலான விவசாயிகள், சமூக ஆர்வலர்கள் ஆகிய குழுக்களுக்கு விற்பனை செய்வது தொடர்பில் பாரிய நகரம் மற்றும் மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சர் கௌரவ பாட்டலி சம்பிக்க ரணவக்க அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
 
 
08. மிருக பரிசீலனை மத்திய நிலையத்தினுள் கோழி மற்றும் மீனின நோய்களை இனங்காணல் மற்றும் கண்காணிப்புக்கான வசதிகளை விருத்தி செய்தல் (விடய இல. 31)
 
 
கோழி வளர்ப்பு, இறால் உற்பத்தி மற்றும் செல்ல மீன்வளர்ப்பு ஆகிய துறைகளில் பாரியளவிலான விருத்தியினை கடந்த காலங்களில் காணக்கூடியதாகவுள்ளது. அத்துறையில் ஏற்படுகின்ற பல்வேறு வகையான நோய்களை இனங்கண்டு அவற்றுக்கான சிகிச்சைகளை துரித கதியில் பெற்றுக் கொள்வதற்கான வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்தல் காலத்தின் தேவையாக உள்ளது. அதனடிப்படையில் கோழி மற்றும் மீனின நோய்களை இனங்காணல் மற்றும் கண்காணிப்பதற்காக வாரியபொல, சிலாபம் மற்றும் வெலிசர ஆகிய பிரதேசங்களில் நிர்மாணிக்கப்பட்டுள்ள மிருக பரிசீலனை மத்திய நிலையங்களில் காணப்படுகின்ற ஆய்வு கூடங்களை சர்வதேச தரத்திலான ஆய்வு கூடமாக மாற்றியமைப்பது தொடர்பில் கிராமிய பொருளாதார தொடர்பான அமைச்சர் கௌரவ பி.ஹெரிசன் அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. மேலும் குறித்த நிலையங்களில் பணிபுரிகின்ற மிருக வைத்தியர்களுக்கு குறித்த விடயங்கள் தொடர்பில் விசேட அறிவினை பெற்றுக் கொடுப்பதற்கான வேலைத்திட்டமொன்றை மீன்பிடி மற்றும் நீரியல் வள அபிவிருத்தி அமைச்சுடன் இணைந்து தயாரிப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டது.
 
 
09. உள்ளூராட்சி மன்றங்களினால் அறவிடப்படுகின்ற வரி, அனுமதிபத்திர கட்டணங்கள் மற்றும் வேறு கட்டணங்களை நிர்ணயிப்பது தொடர்பான செயன்முறையொன்றை தயாரித்தல் (விடய இல. 34)
 
 
உள்ளூராட்சி மன்றங்களினால் அறவிடப்படுகின்ற வரி, அனுமதிபத்திர கட்டணங்கள் மற்றும் வேறு கட்டணங்கள் தொடர்பில் முறையான செயன்முறையொன்று கடைப்பிடிக்கப்படாமையினால் பொதுமக்கள் பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்து வருகின்றனர். அதனடிப்படையில், உள்ளூராட்சி மன்றங்களினால் அறவிடப்படுகின்ற பல்வேறு வரி மற்றும் கட்டணங்கள் தொடர்பில் தேசிய மட்டத்திலான சாராம்சம் ஒன்றை மேற்கொள்வதற்காக தமது அமைச்சின் செயலாளரின் தலைமையிலான குழுவொன்றை நியமிப்பது தொடர்பில் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் அமைச்சர் கௌரவ பைசல் முஸ்தபா அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
 
 
10 மற்றும் 11. விளையாட்டு அமைச்சரினால் முன்வைக்கப்பட்ட பின்வரும் அமைச்சரவை பத்திரங்களுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் கிடைத்துள்ளது. (விடய இல. 37 மற்றும் 38)
 
 
விளையாட்டுத் துறை அமைச்சர் கௌரவ தயாசிறி ஜயசேகர அவர்களினால் முன்வைக்கப்பட்ட பின்வரும் யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
 
• விளையாட்டு அமைச்சு மற்றும் அதன் கீழ் இயங்குகின்ற நிறுவனங்களின் நிர்மாணத்துறை அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கான ஆலோசனை சேவையினை பொறியியல் பணிகள் தொடர்பான மத்தி ஆலோசனை பணியகத்துக்கு மேலதிகமாக, அரச பொறியியல் கூட்டுத்தாபனம், நகர அபிவிருத்தி அதிகார சபை, கட்டிட திணைக்களம், அரச பல்கலைக்கழகங்கள், அரச அபிவிருத்தி மற்றும் நிர்மாண வரையறுக்கப்பட்ட கூட்டுத்தாபனம், இலங்கை நில மீட்பு மற்றும் அபிவிருத்தி செய்யும் கூட்டுத்தாபனம் ஆகிய அரசஃ அறை அரச நிறுவனங்களினதும், முப்படைகளிடம் இருந்தும் பெற்றுக் கொள்ளல்.
 
• தடைசெய்யப்பட்ட ஊக்கமருந்து பாவனையில் இருந்து விடுபட்டு விளையாட்டு நிகழ்ச்சிகளில் வெற்றிகளை அடைந்துக்கொள்வதற்காக, குறித்த விடயங்கள் தொடர்பில் அறிவுறுத்தும் வேலைத்திட்டங்களை செயற்படுத்துதல், ஊக்கமருந்து பாவனை தொடர்பில் பரிசீலனை செய்வதற்கான வசதிகளை இலங்கையினுள் ஏற்படுத்திக் கொடுப்பதற்கு அவசியமான நிதியினை இலங்கை ஊக்கமருந்து தடுக்கும் முகவர் நிறுவனத்துக்கு ஒதுக்கிக் கொடுத்தல்.
 
 
12. காவல்துறை தகவல்கள் மற்றும் தொடர்பாடல் முறைமை (PICS) வேலைத்திட்டம் (விடய இல. 40)
 
காவல்துறைக்கான தகவல் மற்றும் தொடர்பாடல் முறைமையொன்றினை உருவாக்குவதற்கு ஏற்கனவே அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. அவ்வேலைத்திட்டத்தினை நவீன தொழில்நுட்பத்தினை பயன்படுத்தி 2018ம் ஆண்டு முதல் செயற்படுத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. அதனடிப்படையில் அதன் முதற்கட்டமாக மேல் மாகாணத்தை உள்ளடக்கும் வகையில் முறையான திட்டமொன்றாக முன்னெடுப்பதற்கும், அதன் வெற்றியின் அடிப்படையில் திட்டத்தின் இரண்டாம் கட்டத்தினை முழு நாடு தழுவிய ரீதியிலும் மேற்கொள்வதற்கும் சட்டமும் ஒழுங்கும் மற்றும் தென் அபிவிருத்தி அமைச்சர் கௌரவ சாகல ரத்னாயக அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
 
 
13. தேசிய இளைஞர் மென்பொருள் போட்டி – 2017 - 2019 (விடய இல. 42)
 
தேசிய இளைஞர் சேவைகள் மன்றம், இலங்கை தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் நிலையம் மற்றும் ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி வேலைத்திட்டத்துடன் (UNDP) இணைந்து செயற்படுத்துகின்ற தேசிய இளைஞர் மென்பொருள் போட்டியின் கீழ், அபிவிருத்தி சவால்களுக்கு தீர்வாக பயன்படுத்துவதற்கு உகந்த மென்பொருற்களை நிர்மாணிப்பதற்காக மாகாண மட்டத்தில் 03 போட்டிகளை நடாத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதுடன், அதன் மூலம் தெரிவு செய்யப்படுகின்ற வெற்றியாளர்களுக்கு அது தொடர்பிலான வியாபாரங்களை ஆரம்பிப்பதற்கான அனுசரனையும் பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில் திட்டமிடப்பட்டுள்ள இளைஞர் மென்பொருள் போட்டித்தொடரினை 2017 – 2019 காலப்பிரிவில் நடாத்துவது தொடர்பில் தொலைத்தொடர்புகள் மற்றும் டிஜிடல் உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சர் கௌரவ ஹரின் பர்னாந்து அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
 
 
14. இரத்தினபுரி, சமன் தேவாலயத்தை அபிவிருத்தி செய்தல் (விடய இல. 44)
 
பழுதடைந்து காணப்படுகின்ற இரத்தினபுரி சமன் தேவாலயத்தின் தொல்பொருள்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாத விதத்தில் புனர்நிர்மாணம் செய்வதற்கு தேவையான நிதிவசதிகளை செய்து கொடுப்பது தொடர்பில் பாரிய நகரம் மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் கௌரவ பாட்டலி சம்பிக்க ரணவக்க அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
 
 
15. கொழும்பு மற்றும் ருஹுணு பல்கலைக்கழகங்களில் நிர்மாணிக்கப்பட உள்ள கட்டிடங்களுக்கான ஒப்பந்தத்தினை வழங்குதல் (விடய இல. 48)
 
 
அமைச்சரவையினால் நியமிக்கப்பட்டுள்ள நிலையியல் கொள்முதல் குழுவின் சிபார்சின் பெயரில் கொழும்பு பல்கலைக்கழகத்தின் தொழில்நுட்ப பீடத்தின் மேற்கொள்ளப்படவுள்ள வேலைத்திட்டத்துக்கான ஒப்பந்தத்தை 1,801 மில்லியன் ரூபா மதிப்பீட்டு செலவில் M/s International Construction Consortium (Pvt.) Ltd.  நிறுவனத்துக்கும், ருஹுணு பல்கலைக்கழகத்தில் மேற்கொள்ளப்படவுள்ள வேலைத்திட்டத்துக்கான ஒப்பந்தத்தை 850 மில்லியன் ரூபா மதிப்பீட்டு செலவில் M/s Link Engineering (Pvt.) Ltd.  நிறுவனத்துக்கும் வழங்குவது தொடர்பில் உயர் கல்வி மற்றும் பெருந்தெருக்கள் அமைச்சர் கௌரவ லக்ஷ்மன் கிரியெல்ல அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
 
 
16 மற்றும் 17. நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சரினால் முன்வைக்கப்பட்ட அமைச்சரவை பத்திரங்கள் (விடய இல. 33 மற்றும் 34)
 
நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் கௌரவ ரவூப் ஹக்கீம் அவர்களினால் முன்வைக்கப்பட்ட பின்வரும் யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
 
• விசல் பொலன்னறுவை உப நகர நீர் வழங்கல் வேலைத்திட்டத்தினை செயற்படுத்துவதற்கு அவசியமான இயந்திரங்கள் மற்றும் மின்னியல் உபகரணங்கள் என்பவற்றை வழங்குதல், ஸ்தாபித்தல், பரிசீலித்தல் மற்றும் செயற்படுத்துவதற்கான ஒப்பந்தத்தை அமைச்சரவையினால் நியமிக்கப்பட்டுள்ள நிலையியல் கொள்முதல் குழுவின் சிபார்சின் பெயரில் 154 மில்லியன் ரூபா மதிப்பீட்டு செலவில் M/s K P Projects International (Pvt.) Ltdநிறுவனத்துக்கு வழங்கல்.
 
• பொலன்னறுவை கிழக்கு நகர நீர் வழங்கல் வேலைத்திட்டத்தினை செயற்படுத்துவதற்கான ஒப்பந்தத்தை அமைச்சரவையினால் நியமிக்கப்பட்டுள்ள நிலையியல் கொள்முதல் குழுவின் சிபார்சின் பெயரில் 354 மில்லியன் ரூபா மதிப்பீட்டு செலவில் M/s China Harbour Engineering Company Ltd. நிறுவனத்துக்கு வழங்கல்.
 
 
18,19 மற்றும் 20. சுகாதார, போசணை மற்றும் சுதேச மருத்துவ அமைச்சரினால் முன்வைக்கப்பட்ட அமைச்சரவை பத்திரங்கள் (விடய இல. 38)
 
சுகாதார, போசணை மற்றும் சுதேச மருத்துவ அமைச்சர் கௌரவ டாக்டர் ராஜித சேனாரத்ன அவர்களினால் முன்வைக்கப்பட்ட பின்வரும் யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
 
• களுத்துறை ஆதார வைத்தியசாலையில் வைத்திய வாட்டு கட்டிடத் தொகுதியினை மேம்படுத்தும் திட்டத்தின் கீழ் 07 மாடிகளைக் கொண்ட புதிய வாட்டு கட்டிடத் தொகுதியொன்றை நிர்மாணிப்பதற்கான ஒப்பந்தத்தை அமைச்சரவையினால் நியமிக்கப்பட்டுள்ள நிலையியல் கொள்முதல் குழுவின் சிபார்சின் பெயரில் 2,817 மில்லியன் ரூபா மதிப்பீட்டு செலவில் பொறியியல் பணிகள் தொடர்பான மத்திய ஆலோசனை பணியகம் மற்றும் பொறியியல் சேவைகள் தனியார் நிறுவனம் என்பவற்றுக்கு வழங்கல்.
 
• குருதி பரிசோதனை செய்வதற்காக பயன்படுத்தப்படுகின்ற அமில வகை பரிசீலனை செய்யும் சிகிச்சை கட்டளைகள் 400,000 இனை கொள்வனவு செய்வதற்கான ஒப்பந்தத்தை அமைச்சரவையினால் நியமிக்கப்பட்டுள்ள நிலையியல் கொள்முதல் குழுவின் சிபார்சின் பெயரில் 5.94 மில்லியன் ரூபா மதிப்பீட்டு தொகைக்கு M/s Apcot Marketing (Pvt.) Ltd. நிறுவனத்துக்கு வழங்கல்.
 
• மருத்துவ பரிசோதனை கையுறைகள் மற்றும் சத்திர சிகிச்சை கையுறைகளை கொள்வனவு செய்வதற்கான ஒப்பந்தத்தை அமைச்சரவையினால் நியமிக்கப்பட்டுள்ள நிலையியல் கொள்முதல் குழுவின் சிபார்சின் பெயரில் 1,196 மில்லியன் ரூபா மதிப்பீட்டு தொகைக்கு Sisili Project Consortium (Pvt.) Ltd. நிறுவனத்துக்கு வழங்கல்.
 
 
21. இலங்கை மின்சார சபைக்கு தேவையான வாகனங்களை கொள்வனவு செய்தல் (விடய இல. 60)
 
 
அமைச்சரவையினால் நியமிக்கப்பட்டுள்ள நிலையியல் கொள்முதல் குழுவின் சிபார்சின் பெயரில் இலங்கை மின்சார சபையின் பகிர்ந்தளிக்கும் 02ம் வலயத்துக்கு அவசியமான குறுகிய சில்லுகளைக் கொண்ட கெப் ரக வாகனங்கள் 50இனை கொள்வனவு செய்வதற்கான ஒப்பந்தத்தினை 185.6 மில்லியன் ரூபா மதிப்பீட்டு தொகைக்கு சதோச மோட்டர்ஸ் பீ.எல்.சீ நிறுவனத்துக்கும், நீண்ட சில்லுகளைக் கொண்ட கெப் ரக வாகனங்கள் 15இனை கொள்வனவு செய்வதற்கான ஒப்பந்தத்தினை 56.5 மில்லியன் ரூபா மதிப்பீட்டு தொகைக்கு யுனைடட் மோட்டர்ஸ் பீ.எல்.சீ நிறுவனத்துக்கும் வழங்குவது தொடர்பில் மின்சக்தி மற்றும் மீளப்புதுப்பிக்கத்தகு சக்தி வளங்கள் அமைச்சர் கௌரவ ரன்ஜித் சியபலாப்பிட்டிய அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
 
 
22. கூட்டுறவு மொத்த வியாபார கூட்டுத்தாபனத்தின் (சதோச) மூலம் அரிசி கொள்வனவு செய்தல் (விடய இல. 62)
 
 
2017ம் ஆண்டு சிறுபோகத்தின் போது எதிர்பார்க்கப்பட்ட அரிசி உற்பத்தி 50 சதவீதத்தால் குறைவடைந்துள்ளது. அதனால் 2017ம் ஆண்டில் டிசம்பர் மாதம் வரை சந்தையில் அரிசி தேவையினை பூர்த்தி செய்து கொள்வதற்கு ஏதுவான வகையில் 500,000 மெட்ரிக் தொன் கூட்டுறவு மொத்த வியாபார கூட்டுத்தாபனத்தின் (சதோச) மூலம் இறக்குமதி செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது. இவற்றில் 100,000 மெட்ரிக் தொன் அரிசி இந்தியாவில் இருந்து கொள்வனவு செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. எஞ்சியுள்ள 400,000 மெட்ரிக் தொன் அரிசியினை இறக்குமதி செய்வது தொடர்பில் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு திறைசேரியின் செயலாளர் அவர்களின் தலைமையில் விசேட குழுவொன்றை நியமிப்பது தொடர்பில் கைத்தொழில் மற்றும் வணிக அமைச்சர் கௌரவ ரிஷhட் பதியூதீன் அவர்கள், நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் கௌரவ மங்கள சமரவீர அவர்கள், மீன்பிடி மற்றும் நீரியல் வளங்கள் அபிவிருத்தி அமைச்சர் கௌரவ மஹிந்த அமரவீர அவர்கள் மற்றும் அபிவிருத்தி உபாய முறைகள் மற்றும் சர்வதேச வியாபார அமைச்சர் கௌரவ மலிக் சமரவிக்ரம அவர்கள் ஆகியோர் இணைந்து முன்வைத்த யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
 
 
23. சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் வெளியிடல் தொடர்பான சட்டத்தினை திருத்தம் செய்தல் (விடய இல. 68)
 
 
உரிய முறையில் சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் வெளியிடுவதற்கு மறுத்தல், அவ்வாறு வெளியிடும் போது பிழையான விபரங்களை வெளியிடல், தேவையான சந்தர்ப்பங்களில் மேலதிக தகவல்களை வெளியிடுவதற்கு முன்வராமை போன்ற சந்தர்ப்பங்களில் குற்றம் பிடிக்கப்படுகின்ற நபர்களுக்கு தற்போது 1,000 ரூபாவுக்கு அதிகரிக்காத தண்டப்பணமும், அல்லது 01 வருடத்துக்கு அதிகரிக்காத சிறைவாசமும் தண்டனையாக விதிக்கப்படும். தற்போதைய நிலைமையினை கவனத்திற் கொண்டு அத்தண்டப்பணத் தொகையினை 100,000 வரை அதிகரிப்பதற்கு அவசியமான திருத்தங்களை மேற்கொள்வதற்கு சட்டமாதிபருக்கு ஆலோசனை வழங்குவது தொடர்பில் நீதியமைச்சர் அமைச்சர் கௌரவ தலதா அதுகோரல அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
 
 
24. 'கிராமிய சக்தி' முன்மாதிரி கிராமிய வேலைத்திட்டத்துக்காக இந்திய அரசாங்கத்துக்கும் இலங்கை அரசாங்கத்துக்கும் இடையில் மேற்கொள்ளப்பட உள்ள புரிந்துணர்வு ஒப்பந்தம் (விடய இல. 69)
 
 
'கிராமிய சக்தி' முன்மாதிரி கிராமிய வேலைத்திட்டத்தின் கீழ் நாடு பூராகவும் அமைந்துள்ள 25 முன்மாதிரி கிராமங்களில் 600 வீடுகளை நிர்மாணிப்பதற்காக 300 மில்லியன் நிதியுதவியினை இந்திய அரசாங்கம் வழங்கியுள்ளது. இவ்வேலைத்திட்டத்தின் முன்னேற்றத்தினை அவதானித்ததன் பின்னர் மேலும் 600 வீடுகளை நிர்மாணிப்பதற்காக 300 மில்லியன் ரூபா நிதியினை வழங்குவதற்கு இந்திய அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளது. அதனடிப்படையில், குறித்த நிதியினை பெற்று பயன்தரக்கூடிய மேலும் 600 வீடுகளை அமைக்கும் வேலைத்திட்டத்தினை செயற்படுத்துவதற்கும், இந்திய அரசாங்கத்துடன் அது தொடர்பிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில் கைச்சாத்திடுவது தொடர்பில் வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சர் கௌரவ சஜித் பிரேமதாச அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
 
25. 'செமட செவன' மற்றும் 'கிராம சக்தி' முன்மாதிரி கிராமங்களுக்காக அடிப்படை வசதிகளை செய்து கொடுத்தல் (விடய இல. 70)
 
2016ம் ஆண்டு நாடு தழுவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட கணிப்பீட்டின் படி இலங்கையில் வீடற்ற நிலையில் குறைந்த வருமானம் ஈட்டுகின்ற 216,197 குடும்பங்கள் வசிப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலைமையினை கவனத்திற் கொண்டு மேற்கொள்ளப்பட்ட 'செமட செவன' மற்றும் 'கிராம சக்தி' முன்மாதிரி கிராமங்களை அமைக்கும் வேலைத்திட்டத்தினை வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சு முன்னெடுத்து வருகின்றது. அதன் மூலம் 2020ம் ஆண்டாகும் போது முன்மாதிரி கிராமங்கள் 2,500 இனை நிர்மாணிப்பதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது.
 
அதனடிப்படையில் குறித்த இலக்கை அடைந்துக் கொள்வதற்காக வேண்டி அடிப்படை வசதிகளை செய்து கொடுப்பதை அரசாங்கம் எதிர்காலத்தில் மேற்கொள்வதற்கு எதிர்பார்த்துள்ள அபிவிருத்தி வேலைத்திட்டங்களில் முன்னுரிமை அளிப்பதற்கு வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சர் கௌரவ சஜித் பிரேமதாச அவர்களினால் முன்வைக்கப்பட்ட பின்வரும் யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
 
27. தேசிய கணக்காய்வு சட்டமூலம் (விடய இல. 74)
 
 
தேசிய கணக்காய்வு சட்டமூலம் தொடர்பில் எழுந்துள்ள பல்வேறு மட்ட கருத்துக்களை ஆராய்ந்து பொருத்தமான திருத்தங்கள் அடங்கிய சிபார்சுகளை முன்வைப்பதற்காக நியமிக்கப்பட்ட விசேட குழுவின் சிபார்சுகளை உள்ளடக்கி தேசிய கணக்காய்வு சட்டமூலத்தை திருத்தம் செய்வதற்கான உரிய அடுத்த கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

சமீபத்திய செய்திகள்

Cabinet Decisions - 2024.10.28

29 October 2024

Cabinet Decisions taken at the Cabinet meeting conducted...

Cabinet Decisions 2024.10.21

22 October 2024

 Cabinet Decisions on 21.10.2024

Cabinet Decisions - 2024.10.07

08 October 2024

Cabinet decisions taken at the Cabinet Meeting conducted...

Cabinet Decisions - 2024.09.30

01 October 2024
Cabinet Decisions - 2024.09.30

Cabinet Decisions taken on 30.09.2024

Cabinet Decisions - 2024.09.13

14 September 2024

Cabinet Decisions taken at the Cabinet Meeting conducted...

Cabinet Decisions - 2024.09.03

03 September 2024

2024.09.03 Cabinet Decisions taken at the Cabinet Meeting...

Cabinet Decisions - 2024.08.26

28 August 2024

Decisions taken by the Cabinet of Ministers on...

Cabinet Decisions - 2024.08.21

22 August 2024

 Cabinet decisions taken at the cabinet meeting conducted...

அத்துடன் இலங்கையிலுள்ள ஊடகத்துறையின் கொள்கை திட்டமிடல் , பயிற்சி நெறிகளை வழங்குதல் , மற்றும் ஊடகத்துறைக்கான அங்கீகாரங்களை வழங்குவதிலும் இந்நிறுவனம் முன்னின்று உதவுகின்றது.