• #163, கிருலபன எவனியூ, கொழும்பு 05, இ லங்கை​
  • +94 112 51 5759

engsin

அமைச்சரவை தீர்மானங்கள் 26.09.2017

01. நாட்டின் எல்லையினூடாக மேற்கொள்ளப்படும் பல்வேறு குற்றச்செயல்களை தடுப்பது தொடர்பில் இலங்கை மற்றும் அவுஸ்திரேலியா ஆகிய நாடுகளுக்கு இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில் கைச்சாத்திடல் (விடய இல. 07)
 
இலங்கை - அவுஸ்திரேலியா இடையில் காணப்படுகின்ற மனித கடத்தல்கள் மற்றும் எல்லை மீறிச்செல்கின்ற ஏனைய குற்றங்களை தடுப்பதற்காக ஏற்கனவே நடைமுறையில் இருக்கும் ஒத்துழைப்பினை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் முன்மொழியப்பட்டுள்ள ஒப்பந்தத்தில் இலங்கையின் பாதுகாப்பு அமைச்சுக்கும் அவுஸ்திரேலியா அரசாங்கத்தின் குடிவரவு மற்றும் எல்லை பாதுகாப்பு திணைக்களத்துக்கும் இடையில் கைச்சாத்திடுவது தொடர்பில் பாதுகாப்பு அமைச்சர் எனும் ரீதியில் அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
 
 
02. காலி, மஹமோதர மகப்பேற்று வைத்தியசாலையின் வேலைகளை பூர்த்தி செய்வதற்காக மேலதிக நிதியனை பெற்றுக் கொள்ளல் (விடய இல. 09)
 
சுனாமியினால் பாதிப்புக்கு உள்ளான காலி, மஹமோதர மகப்பேற்று வைத்தியசாலையின் வேலைகளை பூர்த்தி செய்வதற்காக மேலதிக நிதியனை பெற்றுத் தருவதற்கு ஜேர்மனி அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளது. அதனடிப்படையில் இந்நடவடிக்கைகளை பூர்த்தி செய்வதற்காக வேண்டி 13 மில்லியன் யூரோ ரூபாய் கடன் வசதிகளை பெற்றுக் கொள்வது தொடர்பில் ஜேர்மனி மீளப்புதுப்பிக்கத்தகு வங்கியுடன் (KFW) கடன் இணக்க கலந்துரையாடல்களை மேற்கொண்டு குறித்த கடன் ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுவது தொடர்பில் தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார விவகாரங்கள் அமைச்சர் எனும் ரீதியில் கௌரவ பிரதமர் ரணில் விக்ரமசிங்க அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
 
03. பாதுகாப்பற்ற புகையிரத குறுக்கு வீதிகளுக்காக குறுகிய கால தீர்வுகளை பெற்றுக் கொடுத்தல் (விடய இல. 10)
 
அனைத்து புகையிரத குறுக்கு வீதிகளுக்கும் பாதுகாப்பினை வழங்குவது அரசாங்கத்தின் கொள்கையாகும். குறித்த குறுக்கு வீதிகளில் பாதுகாப்பு சமீஞ்சைகளை பொறுத்துவதற்கான நடவடிக்கைகள் அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டு வருவதுடன், அந்நடவடிக்கைகள் முடியும் வரை புகையிரத குறுக்கு வீதிகளில் ஏற்படக்கூடிய விபத்துக்களை தடுப்பதற்காக புகையிரத குறுக்கு வீதிக்கான கதவுகளை இயக்குகின்ற நபர்களை பயன்படுத்த வேண்டும்.
 
இலங்கை பொலிஸின் தலையீட்டினால் நியமிக்கப்பட்டுள்ள புகையிரத குறுக்கு வீதிக்கான கதவுகளை இயக்குகின்ற நபர்களின் மூலம் 687 குறுக்கு வீதிகள் பராமரிக்கப்படுகின்றன. அவற்றில் ஒரு குறுக்கு வீதி கதவினை இயக்குவதற்கு மூவர் வீதம் நியமிக்கப்பட்டுள்ளனர். அதில் பணிபுரியும் ஒருவருக்கு 7,500 ரூபா மாதாந்த கொடுப்பனவு வழங்கப்படுகின்றது. எனினும் குறித்த கொடுப்பனவு போதுமான அளவில் காணப்படாமையினால் கடந்த காலங்களில் சிலர் வேளையினை விட்டும் விலகி சென்றுள்ளனர். இந்நிலைமைக்கு தீர்வாக புகையிரத குறுக்கு வீதிகளின் பாதுகாப்பினை நாள் முழுவதும் வழங்கும் பொறுப்பினை குடும்பத்தின் நிலையான பிரதிநிதி ஒருவருக்கு ஒப்படைக்கும் வகையில் அப்பாதுகாப்பு கதவுகளை பராமரிக்கும் பணியினை தகுதிவாய்ந்த சமூர்த்தி குடும்பங்களுக்கு வழங்குவதற்கும், அதற்காக ஒரு குறுக்கு வீதிக்கதவுக்காக வேண்டி 22,500 ரூபாவினை மாதாந்த கொடுப்பனவாக ஒரு குடும்பத்துக்கு வழங்குவதற்கும் போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் கௌரவ நிமல் சிறிபால டி சில்வா அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
 
04. உலகளாவிய நிலைப்படுத்தல் அமைப்பு (GPS) தொழில்நுட்பத்தினை அறிமுகப்படுத்துவதன் மூலம் புகையிரத செயற்பாட்டு திறனை விருத்தி செய்தல் மற்றும் பொதுமக்களுக்கு புகையிரதம் தொடர்பான தகவல்களை பெற்றுக் கொடுத்தல் (விடய இல. 13)
 
உலகளாவிய நிலைப்படுத்தல் அமைப்பு (GPS) தொழில்நுட்பத்தினை அறிமுகப்படுத்துவதன் மூலம் புகையிரத திணைக்களத்தின் கொழும்பு, அநுராதபுரம் மற்றும் நாவலப்பிட்டிய கட்டுப்பாட்டு நிலையங்களை ஒன்றிணைத்தல், சுயமாக புகையிரத கால அட்டவணையினை தயாரித்தல், புகையிரத கட்டுப்பாடு தொடர்பான சகல விடயங்களையும் சேமித்து வைத்தல், புகையிரத தாமதங்கள் தொடர்பில் மேற்பார்வை செய்தல் போன்ற விரிவான விடயங்களை உள்ளடக்கும் வகையில் புகையிரத செயற்பாட்டு திறனை விருத்தி செய்தல் மற்றும் பொதுமக்களுக்கு புகையிரதம் தொடர்பான தகவல்களை பெற்றுக் கொடுத்தல் போன்ற நடவடிக்கைகளை மேலும் செவ்வனே நிறைவேற்ற முடியும். இதனை கவனத்திற் கொண்டு குறித்த பிரிவினை தொடர்ந்தும் விரிவுபடுத்துவது தொடர்பில் பாதுகாப்பு அமைச்சினால் முன்வைக்கப்பட்டுள்ள யோசனைகளின் அடிப்படையில் 31.8 மில்லியன் ரூபா செலவில் உரிய பிரிவினை பெற்றுக் கொள்வது தொடர்பில் போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் கௌரவ நிமல் சிறிபால டி சில்வா அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
 
05. வெளிவிவகார அமைச்சுக்காக வேண்டி இட வசதிகளை பெற்றுக் கொள்ளல் (விடய இல. 15)
 
வெளிவிவகார அமைச்சு அமைந்துள்ள இடத்தில் அமைச்சினை கொண்டு செல்வதற்கான இட வசதிகள் போதாமையினால் மேலதிகமாக 30,000 அடி அளவிலான இட வசதியினை பெற்றுக் கொள்ள வேண்டிய தேவை எழுந்துள்ளது. அதனால் தற்போது வெளிவிவகார அமைச்சு அமைந்துள்ள கட்டிடத்துக்கு அண்மையில் உள்ள ஒல்லாந்து ஆட்சிக் காலத்துக்கு உட்பட்ட, அண்மைக்காலம் வரை சிவில் பாதுகாப்பு திணைக்களத்தினால் பயன்படுத்தப்பட்டு வந்த கட்டிடத்தை பொறியியல் நடவக்கைகள் தொடர்பான மத்திய ஆலோசனை பணியகத்தின் மூலம் புனர்நிர்மாணம் செய்து கொள்வது தொடர்பில் வெளிவிவகார அமைச்சர் கௌரவ திலக் மாரப்பன அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
 
06. 2017ம் ஆண்டு மே மாதம் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவினால் வீடுகள் முழுமையாக சேதமடைந்த மற்றும் குடியேறுவதற்கு பொருத்தமற்ற முறையில் காணப்படுகின்ற வீடுகள் உரித்துடைய நபர்களுக்கு தொடர்ந்தும் வீட்டு வாடகை கொடுப்பனவினை பெற்றுக் கொடுத்தல் (விடய இல. 17)
 
2017ம் ஆண்டு மே மாதம் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவினால் வீடுகள் முழுமையாக சேதமடைந்த மற்றும் குடியேறுவதற்கு பொருத்தமற்ற முறையில் காணப்படுகின்ற வீடுகள் உரித்துடைய குடும்பங்களை மீளகுடியமர்த்துவதற்கு அவசியமான அடிப்படை வேலைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதுடன், அந்நடவடிக்கைகளை முழுமைப்படுத்தும் வரையில் அக்குடும்பங்களுக்கு தற்போது வழங்கப்பட்டு வருகின்ற வீட்டு வாடகை கொடுப்பனவுகளை தொடர்ந்தும் மேலும் 03 மாதங்களுக்கு வழங்குவது தொடர்பில் அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் கௌரவ அநுர பிரியதர்ஷன யாப்பா அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
 
07. மண்சரிவு அவதானம் நிறைந்த மாவட்டங்களில் தேசிய கட்டிட ஆராய்ச்சி அமைப்பின் நிலையான அலுவலகம் ஒன்றை அமைத்தல் (விடய இல. 18)
 
புதிய கட்டுமானங்கள் தொடர்பில் ஆய்வுகளை மேற்கொண்டு சான்றிதழ்களை வழங்கும் பணியினை தேசிய கட்டிட ஆராய்ச்சி அமைப்பின் கொழும்பு தலைமை அலுவலகம் மற்றும் 09 மாவட்டங்களை அமைந்துள்ள கிளை அலுவலகங்கள் மேற்கொண்டு வருகின்றன. எனினும் தற்போதைய சூழ்நிலையில் மண்சரிவு மற்றும் வெள்ளப்பெருக்கினால் பாதிப்புகள் அதிகம் ஏற்படுவதனால் குறித்த பணியினை செயற்றிறன் மிகுந்த முறையில் மேற்கொள்வதற்காக தெரிவு செய்யப்பட்ட 02 மாவட்டங்களில் நவீன ஆய்வு கூட வசதிகளுடன் நிரந்தர அலுவலக கட்டிடங்களை நிர்மாணிப்பதற்கும், பின்னர் தேவையின் அடிப்படையில் பிற மாவட்டங்களிலும் குறித்த அலுவலக கட்டிடங்களை அமைப்பது தொடர்பில் அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் கௌரவ அநுர பிரியதர்ஷன யாப்பா அவர்களினால் முன்வைக்கப்பட்ட தகவல்களை அமைச்சரவை கவனத்திற் கொண்டது.
 
08. அதி நவீன தேசிய அறிவியல் மையம் ஒன்றை ஸ்தாபித்தல் (விடய இல. 19)
 
பரிசீலனை செய்து பார்த்தல் போன்ற செயற்பாடுகளுக்காக வேண்டி வாய்ப்புக்களை செய்து கொடுத்து, விசேடமாக பாடசாலை மாணவர்களுக்காக விஞ்ஞான அறிவினை பெற்றுக் கொடுக்கும் நோக்காகக் கொண்ட நவீன வசதிகளுடன் கூடிய தேசிய அறிவியல் மையம் ஒன்றை இந்நாட்டில் அமைப்பதற்கு முன்மொழியப்பட்டுள்ளது. அதனடிப்படையில், ஹோமாகம, பிடிபனை, மாஹேன்வத்தை பிரதேசத்தில் ஸ்தாபிக்கப்பட்டுள்ள தொழில்நுட்ப கிராமத்தில் இருந்து ஒதுக்கிக் கொள்ளப்பட்ட பூமிப்பகுதியில் 2,550 மில்லியன் ரூபா மதிப்பீட்டு செலவில் தேசிய அறிவியல் மையம் ஒன்றை ஸ்தாபிப்பது தொடர்பில் விஞ்ஞானம், தொழில்நுட்பம் மற்றும் ஆராய்ச்சி அமைச்சர் கௌரவ சுசில் பிரேமஜயந்த அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
 
09. அணு ஆராய்ச்சிக்கான ஐரோப்பிய அமைப்புடன் (CERN) புரிந்துணர்வுக்கு வருதல் (விடய இல. 20)
 
அணு ஆராய்ச்சிக்கான ஐரோப்பிய அமைப்புடன் இலங்கையானது 2017ம் ஆண்டு மே மாதம் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில் கைச்சாத்திட்டது. குறித்த புரிந்துணர்வின் ஊடாக இந்நாட்டு கல்வியல் பிரஜைகளுக்கு பல நன்மைகள் கிடைக்க உள்ளன. அதனடிப்படையில் அது தொடர்பான அடுத்த கட்ட புரிந்துணர்வுகளுக்கு வருவது தொடர்பில் அடுத்து வருகின்ற 05 வருட செயற்பாடுகளுக்கு தேவையான 250.45 மில்லியன் ரூபா நிதியினை ஒதுக்கீடு செய்து கொள்வது தொடர்பில் விஞ்ஞானம், தொழில்நுட்பம் மற்றும் ஆராய்ச்சி அமைச்சர் கௌரவ சுசில் பிரேமஜயந்த அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
 
10. சமூக பணிகளுக்கான விஞ்ஞான தொழில்;நுட்ப (STS) மாநாடு - 2018 (விடய இல. 25)
 
2016ம் ஆண்டு நடாத்தப்பட்ட முதலாவது சமூக பணிகளுக்காக விஞ்ஞான தொழில்;நுட்ப (ளுவுளு) மாநாட்டின் மூலம் வெளிநாடுகளில் வசிக்கின்ற இலங்கை விஞ்ஞானிகளின் உதவிகளை இந்நாட்டு விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப வேலைத்திட்டங்களுக்காக பயன்படுத்திக் கொள்வதற்கான ஆரம்ப முயற்சியினை எடுப்பதற்கு வாய்ப்பு கிடைத்தது. 
குறித்த மாநாட்டின் வெற்றியினை கவனத்திற் கொண்டு வெளிநாடுகளில் இருக்கின்ற இலங்கை விஞ்ஞானிகள், ஏனைய விஞ்ஞானிகள் மற்றும் ஆராய்ச்சி துறையில் பிரபல்யம் பெற்ற நபர்கள் மற்றும் 1000 பல்கலைக்கழக, பாடசாலை மாணவர்களையும் இணைத்துக் கொண்டு இரண்டாவது சமூக பணிகளுக்கான விஞ்ஞான தொழில்நுட்ப மாநாட்டினை நடாத்துவதற்கு முன்மொழியப்பட்டுள்ளது. அதனடிப்படையில் பல்வேறு தொனிப்பொருள்களின் கீழ் 'சமூக பணிகளுக்கான விஞ்ஞான தொழில்நுட்ப (STS) மாநாட்டினை' இரண்டாவது முறையாகவும் 2018ம் ஆண்டு ஒக்டோபர் மாதத்தில் கொழும்பில் நடாத்துவது தொடர்பில் விஞ்ஞானம், தொipல்நுட்பம் மற்றும் ஆராய்ச்சி அமைச்சர் கௌரவ சுசில் பிரேமஜயந்த அவர்களினால் அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
 
11,12,13 மற்றும் 14. சுகாதாரம், போசணை மற்றும் சுதேச மருத்துவ அமைச்சரினால் முன்வைக்கப்பட்ட அமைச்சரவை பத்திரங்கள்; (விடய இலக்கங்கள் 22, 23, 24 மற்றும் 25)
சுகாதாரம், போசணை மற்றும் சுதேச மருத்துவ அமைச்சர் வைத்தியர் ராஜித சேனாரத்ன அவர்களினால் முன்வைக்கப்பட்ட பின்வரும் யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
 
• கராபிட்டிய போதனா வைத்தியசாலையின் புற்றுநோய் சிகிச்சை பிரிவினை முன்னேற்றுவதற்காக 10 மாடிகளைக் கொண்ட கட்டிடம் ஒன்றை அமைப்பதற்காக 2,000 மில்லியன் செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளதுடன், அதனை கூட்டு முயற்சியுடன் மேற்கொள்வதற்கு Colors of Courage Trust (COC) அமைப்பு முன்வந்துள்ளதுடன், நாடு பூராகவும் நடைபவனிகளை மேற்கொண்டு குறித்த நற்பணிக்காக நிதி திரட்டல்களில் ஈடுபடவும் குறித்த அமைப்பு தீர்மானித்துள்ளது. அதனடிப்படையில் குறித்த நலன்புரி அமைப்புடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில் கைச்சாத்திடல்.
 
• பதுளை மாகாண ஆதார வைத்தியசாலையில், உதவி மருத்துவ சேவையுடன் கூடிய இருதய கேஷன் ஆய்வகம் ஒன்றை, யப்பான் சர்வதேச ஒத்துழைப்பு முகவர் நிலையத்தின் நிதியுதவியுடன் 698 மில்லியன் ரூபா மதிப்பீட்டு செலவில் ஸ்தாபித்தல்.
 
• இலங்கை ஆயர்வேத ஒளடதங்கள் கூட்டுத்தாபனத்தின் அநுராதபுர பிரதேச காரியாலயம், விற்பனை நிலையம் மற்றும் ஒளடதங்களை கொள்வனவு செய்யும் நிலையம் என்பவற்றை ஒரே கட்டிடத்தில் ஸ்தாபிப்பதற்காக, வரையறுக்கப்பட்ட லங்கா சலுசல கம்பனிக்கு குத்தகை அடிப்படையில் வழங்கப்பட்டுள்ள அநுராதபுரம் பொது விளையாட்டு மைதான மாவத்தையில் அமைந்துள்ள அரசாங்க காணியினை மற்றும் தற்போது கைவிடப்பட்டுள்ள அங்கு அமைந்துள்ள கட்டிடத்தை அப்பணிக்காக இலங்கை ஆயர்வேத ஒளடதங்கள் கூட்டுத்தாபனத்துக்கு நீண்ட கால குத்தகையின் அடிப்படையில் ஒதுக்கிக் கொள்ளல்.
 
• சபரகமுவ மாகாணத்தில் காணப்படுகின்ற இனங்காணப்பட்ட வைத்தியசாலைகளை 1,547 மில்லியன் ரூபா மதிப்பீட்டு செலவில் அபிவிருத்தி செய்தல்.
 
15. கம்பஹா மாவட்ட செயலக காரியாலயத்துக்காக புதிய கட்டிட தொகுதி ஒன்றை நிர்மாணித்தல் (விடய இல. 28)
 
கம்பஹா மாவட்ட செயலக காரியாலயத்துக்காக 200,000 சதுர அடியினைக் கொண்ட 07 மாடிகளைக் கொண்ட புதிய கட்டிட தொகுதியொன்றை 2,960 மில்லியன் ரூபா மதிப்பீட்டு செலவில் அமைப்பது தொடர்பில் உள்நாட்டலுவல்கள் அமைச்சர் கௌரவ வஜிர அபேவர்தன அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
 
16. கலாச்சார விவகாரங்கள் திணைக்களத்தின் மூலம் ஒழுங்கு செய்யப்படுகின்ற அரச விருது வழங்கும் விழாக்கம் மற்றும் வேறு விழாக்களுக்காக வேண்டி ஒதுக்கப்படுகின்ற ஒதுக்கீடுகளை அதிகரித்தல் (விடய இல. 30)
 
கலாச்சார விவகாரங்கள் திணைக்களத்தின் மூலம் ஒழுங்கு செய்யப்படுகின்ற அரச விருது வழங்கும் விழாக்கம் மற்றும் வேறு விழாக்களுக்காக வேண்டி வருடாந்தம் ஒதுக்கப்படுகின்ற நிதி ஒதுக்கீடுகளை 55 மில்லியன் ரூபாயிலிருந்து 100 மில்லியன் ரூபா வரை அதிகரிப்பது தொடர்பில் உள்ளக அலுவல்கள், வடமேல் அபிவிருத்தி மற்றும் கலாச்சார விவகாரங்கள் அமைச்சர் கௌரவ எஸ்.பி. நாவின்ன அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
 
17. கைத்தொழில்களை நிறுவுவதற்காக பிரதேச தொழிற்பேட்டைகளில் இருந்து காணிகளை ஒதுக்கிக் கொள்ளல் (விடய இல. 32)
 
பிரதேச மட்டத்தில் கைத்தொழில்களை மேம்படுத்தும் நோக்கில் நாடு தழுவிய ரீதியில் காணப்படுகின்ற தொழிற்பேட்டைகளின் சிறு பூமிப்பகுதிகளை 26 தொழில் வேலைத்திட்டங்களை உருவாக்குவதற்காக தெரிவு செய்யப்படுகின்ற முதலீட்டாளர்களுக்கு குத்தகை அடிப்படையில் ஒதுக்கிக் கொடுப்பது தொடர்பில் கைத்தொழில் மற்றும் வணிக அலுவல்கள் அமைச்சர் கௌரவ ரிஷhட் பதியூதீன் அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
 
18 மற்றும் 19. பாரிய நகரம் மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சரினால் முன்வைக்கப்பட்ட அமைச்சரவை பத்திரங்கள் (விடய இல. 33 மற்றும் 34)
 
பாரிய நகரம் மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் கௌரவ பாட்டலி சம்பிக்க ரணவக்க அவர்களினால் முன்வைக்கப்பட்ட பின்வரும் யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
 
• இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தின் இரத்தினபுரி கல்வியல் நிலையத்தின் நிர்மாணப்பணிகளுக்காக வேண்டி இரத்தினபுரி புதிய நகரத்தில் காணப்படுகின்ற நகர அபிவிருத்தி அதிகார சபைக்கு உட்பட்ட 01 ஏன்னர் 02 ரூட் பூமிப்பகுதியினை இலங்கை திறந்த பல்கலைக்கழகத்துக்கு சுதந்திர கொடுப்பனவின் பெயரில் வழங்கல்.
 
• கொள்ளுப்பிட்டிய தொடக்கம் தெஹிவளை வரையில் பொழுதுபோக்கு கடற்கரை பிரதேசமொன்றை அபிவிருத்தி செய்வதற்கும் அதன் மூலம் கடல் அரிப்பினை குறைப்பதற்காக மேலதிக புகையிரத வீதியினை நிர்மாணிப்பதற்கான இடவசதிகளை செய்து கொடுத்தல்.
 
20. தேங்காய் துறையில் செயற்றிறனுக்காக வேண்டி 2018ம் ஆண்டிலிருந்து செயற்படுத்துவதற்கு முன்மொழியப்பட்டுள்ள புதிய வேலைத்திட்டம் (விடய இல. 38)
 
தேங்காய் அறுவடையினை அதிகரித்தல் மற்றும் தேங்காய் பயிரிடல் துறையில் பலனை அதிகரித்தல் ஆகியவற்றை நோக்காகக் கொண்டு, விசேடமாக வடக்கு, கிழக்கு பிரதேசங்களில் தேங்காய் உற்பத்தி துறையில் செயற்றிறனை விருத்தி செய்வதற்காக முன்மாதிரி தென்னந் தோட்டங்களை ஸ்தாபித்தல் மற்றும் தென்னம் பயிர் செய்கைக்காக வேண்டி பணியாளர்கள் செயலணியொன்றை ஸ்தாபிப்பது போன்ற வேலைத்திட்டங்களை 2018ம் ஆண்டிலிருந்து செயற்படுத்துவது தொடர்பில் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் கௌரவ நவின் திசாநாயக்க அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
 
21. பயிரிப்படாது கைவிடப்பட்டுள்ள விவசாய நிலங்களை சூரிய சக்தி மின்னுற்பத்தி வேலைத்திட்டங்களுக்காக பயன்படுத்தல் (விடய இல. 40)
 
மேல் மற்றும் சபரகமுவ மாகாணங்களில் காணப்படுகின்ற பயிரிப்படாது கைவிடப்பட்டுள்ள விவசாய நிலங்களை, விவசாய அபிவிருத்தி ஆணையாளர் மற்றும் பிற அதிகாரிகளின் இணக்கத்துடன் சூரிய சக்தி மின்னுற்பத்தி வேலைத்திட்டங்களுக்காக பயன்படுத்திக் கொள்வது தொடர்பில் மின்சக்தி மற்றும் மீளப்புதுப்பிக்கத்தகு சக்தி வளங்கள் அமைச்சர் கௌரவ ரன்ஜித் சியபலாப்பிட்டிய அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
 
22 மற்றும் 23. கமத்தொழில் அமைச்சரினால் முன்வைக்கப்பட்ட அமைச்சரவை பத்திரங்கள்; (விடய இல. 42 மற்றும் 43)
 
கமத்தொழில் அமைச்சர் கௌரவ துமிந்த திசாநாயக்க அவர்களினால் முன்வைக்கப்பட்ட பின்வரும் யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
 
• 2017ம் ஆண்டு வரவு செலவு திட்ட முன்மொழிவுகளுக்கு அமைய முறையான விவசாய காப்புறுதி முறையொன்றை செயற்படுத்துவது தொடர்பில் தெரிவு செய்யப்பட்ட பயிர்செய்கையில் ஈடுபடும் விவசாயிகளுக்கு ஏக்கர் ஒன்றுக்கு 40,000 ரூபா வீதம் காப்புறுதி தொகையினை வழங்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. குறித்த திட்டத்தினை செயற்படுத்துவதற்காக தேசிய காப்புறுதி நிதியத்துடன் இணைந்து பொருத்தமான செயன்முறையொன்றை தயாரித்தல்.
 
• நவீன விவசாய தொழில்நுட்பங்களை கிராமிய விவசாய நிலங்களுக்கு கொண்டு செல்வதற்கு உகந்த விதத்தில் சிறு நீர்ப்பாசன திட்டங்களில் இனங்காணப்பட்ட அடிப்படை வசதிகளை அபிவிருத்தி செய்தல்.
 
24. தடுத்து வைக்கப்பட்டுள்ள நபர்களின் உரிமைகளை பாதுகாப்பதற்காக 2013ம் ஆண்டு 02ம் இலக்க குற்றவியல் தண்டனை சட்டக்கோவை (விசேட விதப்புரைகள்) சட்டத்தினை திருத்தம் செய்தல் (விடய இல. 46)
 
தடுத்து வைக்கப்பட்டுள்ள நபர்களின் உரிமைகளை பாதுகாப்பதற்காக 2013ம் ஆண்டு 02ம் இலக்க குற்றவியல் தண்டனை சட்டக்கோவை (விசேட விதப்புரைகள்) திருத்தம் செய்வதற்கான திருத்த சட்ட மூலத்தினை பாராளுமன்றத்தில் முன்வைப்பதற்கு முன்னர் அத்துடன் சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினரதும் கலந்தாலோசிக்கப்பட்டதுடன், அவர்களும் குறித்த சட்டமூலத்துக்கு இணக்கம் தெரிவித்துள்ளனர். அதனடிப்படையில் ஆரம்பத்தில் 04 வருடங்களுக்கு அமுலாகும் வகையில் குறித்த சட்ட மூலத்தை அரசாங்க வர்த்தமானியில் பிரசுரிப்பதற்கும், பின்னர் பாராளுமன்றத்தில் சமரப்பிப்பதற்கும் வெளிநாட்டு வேலைவாய்ப்புகள் அமைச்சர் கௌரவ தலதா அதுகோரல அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
 
25. தேசிய கல்வியல் கல்லூரிகளில் பயிற்சி பெறுகின்ற ஆசிரியர்களுக்காக செலுத்தப்படுகின்ற நாளாந்த சிற்றுண்டி கொடுப்பனவை அதிகரித்தல் (விடய இல. 52)
 
தேசிய கல்வியல் கல்லூரிகளில் பயிற்சி பெறுகின்ற ஆசிரியர்களுக்காக செலுத்தப்படுகின்ற நாளாந்த சிற்றுண்டி கொடுப்பனவை 3,500 ரூபாவிலிருந்து 5,000 ரூபா வரை அதிகரிப்பதற்கும், வதிவிட பயிற்சி காலமும் உட்பட்ட 03 வருட கால பூரண பயிற்சிகாலத்திற்கும் குறித்த கொடுப்பனவினை பெற்றுக் கொடுப்பதற்கும் கல்வி அமைச்சர் கௌரவ அகில விராஜ் காரியவசம் அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
 
26. குருநாகல் நகர எல்லையினுள் மற்றும் வாரியபொல நகரத்தில் புதிய தேசிய பாடசாலைகள் இரண்டினை ஸ்தாபித்தல் (விடய இல. 53)
 
குருநாகல் மற்றும் வாரியபொல பிரதேசங்களில் வசிக்கின்ற மாணவர்களின் நலனைக் கருத்திற் கொண்டு அனைத்து வசதிகளுடன் கூடிய இரு தேசிய பாடசாலைகளை குருநாகல் நகர எல்லையினுள் மற்றும் வாரியபொல நகரத்தில் அமைப்பது தொடர்பில் கல்வி அமைச்சர் கௌரவ அகில விராஜ் காரியவசம் அவர்களினால் முன்வைக்கப்பட்ட பின்வரும் யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. மேலும் தேசிய பாடசாலைகளை ஸ்தாபிப்பது தொடர்பிலான தேசிய கொள்கை ஒன்றினையும் தயாரிக்க வேண்டும் எனவும் அமைச்சரவை தீர்மானித்தது.
 
27. பெருந்தோட்ட பிரஜைகளின் நலன்புரி விடயங்களை வழங்குவதற்காக பிரதேச சபை சட்டத்தினை திருத்தம் செய்தல் (விடய இல. 54)
 
பெருந்தோட்ட பிரஜைகளின் நலன்புரி விடயங்களை வழங்குவதற்காக 1987ம் ஆண்டு 15ம் இலக்க பிரதேச சபை சட்டத்தினை திருத்தம் செய்வதற்காக ஏற்கனவே அமைச்சரவையின் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில் குறித்த சட்டமூலத்தினை அரசாங்க வர்த்தமானியில் பிரசுரிப்பதற்கும் பின்னர் அனுமதிக்காக பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கும் மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி மன்றங்கள் அமைச்சர் கௌரவ பைசல் முஸ்தபா அவர்களினால் முன்வைக்கப்பட்ட பின்வரும் யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
 
28 மற்றும் 29. விளையாட்டுத்துறை அமைச்சரினால் முன்வைக்கப்பட்ட பின்வரும் யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. (விடய இல. 59 மற்றும் 60)
 
விளையாட்டுத்துறை அமைச்சர் கௌரவ தயாசிறி ஜயசேகர அவர்களினால் முன்வைக்கப்பட்ட பின்வரும் யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
 
• மனித விளையாட்டு செயற்றிறன் ஆய்வகத்தினை நிர்மாணிக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அதனடிப்படையில், குறித்த ஆய்வகத்துக்காக உயர் தொழில்நுட்பத்துடனான இயந்திரங்களை கொள்வனவு செய்வதற்கும், நிபுணத்துவம் பெற்றவர்களின் ஒத்துழைப்பினை பெற்றுக் கொள்வதற்கான நடவடிக்கையினை ஆரம்பித்தல்.
 
• தேசிய விளையாட்டு நூதனசாலையினை எதிர்வருகின்ற டிசம்பர் மாதம் திறப்பதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளதுடன், அதன் இரண்டாம் கட்ட நிர்மானப்பணிகளை பூர்த்தி செய்து கொள்வதற்காக வேண்டி திறைசேரியில் இருந்து நிதியினை ஒதுக்கிக் கொள்வதற்கும், நூதனசாலையில் காட்சிப்படுத்துவதற்கு தேவையான காட்சிப் பொருட்களை உரிய அரச நிறுவனங்களிலிருந்தும் பெற்றுக் கொள்ளல்.
 
30. கண்டி ஆதார வைத்தியசாலையினை அபிவிருத்தி செய்வதற்காக வேண்டி வைத்தியசாலையின் காணியில் வசித்து வருகின்ற சட்ட விரோதமான குடியிருப்பாளர்களுக்கு வீடுகளை பெற்றுக் கொடுத்து வேறு இடங்களில் குடியமர்த்துதல் (விடய இல. 59)
 
கண்டி ஆதார வைத்தியசாலையினை அபிவிருத்தி செய்வதற்காக வேண்டி வைத்தியசாலையின் காணியில் வசித்து வருகின்ற சட்ட விரோதமான குடியிருப்பாளர்களுக்கு வீடுகளை பெற்றுக் கொடுத்து வேறு இடங்களில் குடியமர்த்துவதற்கு தேவையான காணி வசதிகளை பெற்றுக் கொடுப்பதற்கும், 2018ம் ஆண்டு வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சுக்கு ஒதுக்கிக் கொடுப்பதற்கு எதிர்பார்க்கப்படுகின்ற நிதியினை பயன்படுத்தி வைத்தியசாலை காணியில் பிறிதொரு பகுதியில் குறைந்த வருமானம் கொண்ட சட்டவிரோத குடியிருப்பாளர்களுக்கு 66 வீடுகளுடன் கூடிய வீடமைப்பு தொகுதியொன்றை அமைத்து அதில் வீடுகளை பகிர்ந்தளிப்பதற்கும் விசேட செயற்றிட்டங்கள் அமைச்சர் கலாநிதி சரத் அமுணுகம அவர்கள், சமூக வலுவூட்டல், நலன்புரி மற்றும் மலைநாட்டு உரிமைகள் தொடர்பான அமைச்சர் கௌரவ எஸ்.பி. திசாநாயக்க அவர்கள், சுகாதார, போசணை மற்றம் சுதேச மருத்துவ அமைச்சர் கௌரவ டாக்டர் ராஜித சேனாரத்ன அவர்கள், வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சர் கௌரவ சஜித் பிரேமதாச அவர்கள், அபிவிருத்தி உபாயமுறைகள் மற்றும் சர்வதேச வர்த்தக அமைச்சர் கௌரவ மலிக் சமரவிக்ரம அவர்கள் ஆகியோர் முன்வைத்த யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
 
31. மருதானை புகையிரத நிலையத்திலிருந்து மாளிகாவத்தை வரையான பாலம் மற்றும் புகையிரத வீதியினை திட்டமிடுவதற்கான ஆலோசனை சேவையினை பெற்றுக் கொள்ளல் (விடய இல. 61)
 
மருதானை புகையிரத நிலையத்திலிருந்து மாளிகாவத்தை வரையில் மேலும் 04 வீதிகளை அமைப்பதற்கும், அதற்காக மாளிசாவத்தை பாடசாலை ஒழுங்கை பாலம் மற்றும் மரதானை பயணிகள் பாலம் என்பவற்றை விஸ்தரிப்பதற்குமான ஆலோசனை சேவைகளை புகையிரத திணைக்களத்தின் நிபுணர்களின் ஒத்துழைப்புடன் வீதி அபிவிருத்தி அதிகார சபையிடம் இருந்து பெற்றுக் கொள்வதற்கும் போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் கௌரவ நிமல் சிறிபால டி சில்வா அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
 
32 மற்றும் 33. உயர் கல்வி மற்றும் பெருந்தெருக்கள் கௌரவ அமைச்சரினால் முன்வைக்கப்பட்ட பின்வரும் யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. (விடய இல. 63)
 
உயர் கல்வி மற்றும் பெருந்தெருக்கள் அமைச்சர் கௌரவ லக்ஷ;மன் கிரியெல்ல அவர்களினால் முன்வைக்கப்பட்ட பின்வரும் யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
 
• அமைச்சரவையினால் நியமிக்கப்பட்டுள்ள நிலையியல் கொள்முதல் குழுவின் சிபார்சின் பெயரில் கடுவலை – அதுருகிரிய வீதியின் 9.5 கி.மீ தூரம் மற்றும் வல்கம – அதுருகிரிய வீதியன் 1.2 கி.மீ வரையான வீதியினை விருத்தி செய்வதற்கான ஒப்பந்தத்தை 1,065 மில்லியன் ரூபா மதிப்பீட்டு செலவில் Hovael Constructions (Pvt.) Ltd. . நிறுவனத்துக்கு வழங்குதல்.
 
• அமைச்சரவையினால் நியமிக்கப்பட்டுள்ள நிலையியல் கொள்முதல் குழுவின் சிபார்சின் பெயரில் களனி கங்கைக்கு குறுக்காக புதிய பாலம் ஒன்றை நிர்மாணிக்கும் வேலைத்திட்டத்தின் இரும்பு பாலத்தினை அமைப்பதற்கான ஒப்பந்தத்தை 31,539 மில்லியன் ரூபா மதிப்பீட்டு செலவில் JFE Engineering Corporation, Mitsui Engineering, Shipbuilding Co. Ltd.     மற்றும் TODA Corporation ஆகிய நிறுவனங்களினால் ஆன யப்பானின் JMT நிறுவனத்துக்கு வழங்குதல்.
 
34 மற்றும் 35. சுகாதாரம், போசணை மற்றும் சுதேச மருத்துவ கௌரவ அமைச்சரினால் முன்வைக்கப்பட்ட பின்வரும் யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. (விடய இல. 65 மற்றும் 66)
 
சுகாதாரம், போசணை மற்றும் சுதேச மருத்துவ அமைச்சர் ராஜித சேனாரத்ன அவர்களினால் முன்வைக்கப்பட்ட பின்வரும் யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
 
• முன்மொழியப்பட்டுள்ள தாதியர் பீடத்தினை ஸ்ரீ ஜயவர்தனபுற தாதியர் கல்லூரி வளாகத்தில் ஸ்தாபிப்பதற்கும், அதன் விடுதியினை முல்லேரியாவில் அமைக்கப்பட்டுள்ள கிழக்கு கொழும்பு வைத்தியசாலை பூமியில் அமைப்பதற்குமான ஒப்பந்தத்தை அரச பொறியியல் கூட்டுத்தாபனம் மற்றும் பொறியியல் சேவைகள் தொடர்பான மத்திய ஆலோசனை பணியகத்துக்கும் வழங்குதல்.
 
• முன்மொழியப்பட்டுள்ள அம்பாரை மாவட்டத்தில் நிந்தவூரில் தொற்றா நோய் தொடர்பான ஆயர்வேத ஆய்வு வைத்தியசாலையினை நிர்மாணிப்பதற்கான ஒப்பந்தத்தை அரச பொறியியல் கூட்டுத்தாபனம் மற்றும் பொறியியல் சேவைகள் தொடர்பான மத்திய ஆலோசனை பணியகத்துக்கும் வழங்குதல்.
 
36. தொழில் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்துக்காக ((UNIVOTEC) மாணவர் விடுதியொன்று, சிற்றுண்டிச்சாலை மற்றும் பட்டறை ஒன்றினை அமைத்தல் (விடய இல. 68)
 
தொழில் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்துக்காக (UNIVOTEC)) மாணவர் விடுதியொன்று, சிற்றுண்டிச்சாலை மற்றும் பட்டறை ஒன்றினை அமைப்பதற்காக ஆலோசனைகளை பெற்றுக் கொள்ளவதற்கான ஒப்பந்தத்தை அரச பொறியியல் கூட்டுத்தாபனம் மற்றும் பொறியியல் சேவைகள் தொடர்பான மத்திய ஆலோசனை பணியகத்துக்கும் வழங்குவது தொடர்பில் திறன்முறை அபிவிருத்தி மற்றும் தொழிற்பயிற்சி அமைச்சர் கௌரவ சந்திம வீரக்கொடி அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
 
 
37 மற்றும் 38. மின்சக்தி மற்றும் மீளப்புதுப்பிக்கத்தகு கௌரவ அமைச்சரினால் முன்வைக்கப்பட்ட பின்வரும் யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. (விடய இல. 65 மற்றும் 66)
 
மின்சக்தி மற்றும் மீளப்புதுப்பிக்கத்கு கௌரவ அமைச்சர் ரன்ஜித் சியபலாபிட்டிய அவர்களினால் முன்வைக்கப்பட்ட பின்வரும் யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
 
• அமைச்சரவையினால் நியமிக்கப்பட்டுள்ள நிலையியல் கொள்முதல் குழுவின் சிபார்சின் பெயரில் புத்தளம், நுரைச்சோலை, விக்டோரியா தோட்ட வீடமைப்பு தொகுதியின் வீதிகள், மதகுகள் மற்றும் மின்விளக்குகள் என்பவற்றை நிர்மாணிப்பதற்கான ஒப்பந்தத்தை 332.7 மில்லியன் ரூபா மதிப்பீட்டு செலவில் ஆஃள. ளுநைசசய ஊழளெவசரஉவழைளெ (Pஎவ.) டுவன. நிறுவனத்துக்கு வழங்குதல்.
 
• அமைச்சரவையினால் நியமிக்கப்பட்டுள்ள நிலையியல் கொள்முதல் குழுவின் சிபார்சின் பெயரில் குறைந்த விலைமனுவின் அடிப்படையில் ஏரியல் பண்டல் கடத்திகளை வழங்குதல் மற்றும் பகிர்ந்தளித்தல் என்வற்றுக்கான ஒப்பந்தத்தை 363.7 மில்லியன் ரூபா மதிப்பீட்டு செலவில் M/s. Sierra Constructions (Pvt.) Ltd. நிறுவனத்துக்கு வழங்குதல்.
-
39. லீட்ரோ கேஸ் லங்கா கம்பனியின் ஹம்பாந்தோட்டை வாயு நிரப்பும் தொழிற்சாலை வேலைத்திட்டம் (விடய இல. 73)
 
அமைச்சரவையினால் நியமிக்கப்பட்டுள்ள நிலையியல் கொள்முதல் குழுவின் சிபார்சின் பெயரில் லீட்ரோ கேஸ் லங்கா கம்பனியின் ஹம்பாந்தோட்டை வாயு நிரப்பும் தொழிற்சாலை வேலைத்திட்டத்தினை முன்னெடுப்பதற்கான ஒப்பந்தத்தை 647.2 மில்லியன் ரூபா மதிப்பீட்டு செலவில் குறைந்த விலைமனுக்கோரலுக்கு M/s. Dockyard General Engineering Services (Pvt.) Ltd. . நிறுவனத்துக்கு வழங்குவது தொடர்பில் அரச தொழிற்முயற்சிகள் அபிவிருத்தி அமைச்சர் கௌரவ கபீர் ஹஷPம் அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
 
40. நுகேகொடை, மிரிஹானை பொலிசுக்கு வீடுகள் மற்றும் சிற்றுண்டிசாலை வசதிகளைக் கொண்ட கட்டிடம் ஒன்றை நிர்மாணித்தல் (விடய இல. 74)
 
அமைச்சரவையினால் நியமிக்கப்பட்டுள்ள நிலையியல் கொள்முதல் குழுவின் சிபார்சின் பெயரில் நுகேகொடை, மிரிஹானை பொலிசுக்கு வீடுகள் மற்றும் சிற்றுண்டிச்சாலை வசதிகளைக் கொண்ட மூன்று மாடிகளைக் கொண்ட கட்டிடம் ஒன்றை நிர்மாணிப்பதற்கான ஒப்பந்தத்தை 340.6 மில்லியன் ரூபா மதிப்பீட்டு செலவில் குறைந்த விலைமனுக்கோரலுக்கு ஸ்ரீபாலி கன்ஸ்ரக்ஷன் நிறுவனத்துக்கு வழங்குவது தொடர்பில் வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சர் கௌரவ சஜித் பிரேமதாச அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
 
41. மிருக வளங்கள் துறையில் மிருக வைத்தியர்களுக்கு நவீன மாடுகள் பராமரிப்பு முறை தொடர்பான பயிற்சிகளை வழங்குதல் (விடய இல. 83)
 
மிருக வளங்கள் துறையில் மிருக வைத்தியர்களுக்கு நவீன மாடுகள் பராமரிப்பு முறை தொடர்பான பயிற்சிகளை வழங்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. அதனடிப்படையில் பசுமாடுகள் பராமரிப்பு சேவையில் ஈடுபடுகின்ற மிருக வைத்தியர்கள் 10 பேருக்கு பெலரூஸ் அரசாங்கத்தின் விவசாய நடவடிக்கைகள் தொடர்பான பல்கலைக்கழகத்தில் பயிற்சிகளை அளிப்பதற்காக அப்பல்கலைக்கழகத்துக்கும் இலங்கை அரசாங்கத்துக்கும் இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில் கைச்சாத்திடுவது தொடர்பில் கிராமிய பொருளாதார தொடர்பான அமைச்சர் கௌரவ பீ.ஹெரீசன் அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
 
42. ஒன்றிணைந்த வீதி முதலீட்டு வேலைத்திட்டத்தின் நான்காவது கட்டத்தினை செயற்படுத்தல் (விடய இல. 84)
 
ஒன்றிணைந்த வீதி முதலீட்டு வேலைத்திட்டத்தின் நான்காவது கட்டத்தினை செயற்படுத்துவதற்காக 168 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது. அதில் 150 மில்லியன் அமெரிக்க டொலர்களை பெற்றுத் தருவதற்கு ஆசிய அபிவிருத்தி வங்கி இணக்கம் தெரிவித்துள்ளது. குறித்த கடன் வசதிகளை பெற்றுக் கொள்வதற்கான கடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு, ஒப்பந்தம் ஒன்றில் கைச்சாத்திடுவதற்கான அதிகாரத்தை நிதி மற்றும் வெகுசன ஊடகத்துறை அமைச்சர் கௌரவ மங்கள சமரவீர அவர்களுக்கு வழங்குவது தொடர்பில் தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் கௌரவ பிரதமர் ரணில் விக்ரமசிங்க அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
 
43 மற்றும் 44. மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி மன்றங்கள் கௌரவ அமைச்சரினால் முன்வைக்கப்பட்ட பின்வரும் யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. (விடய இல. 86 மற்றும் 89)
 
மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி மன்றங்கள் கௌரவ அமைச்சர் பைசல் முஸ்தபா அவர்களினால் முன்வைக்கப்பட்ட பின்வரும் யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
 
• வட மாகாணத்தின் முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு மற்றும் முஹுதுபடபத்து பிரதேச சபைகளின் உத்தியோகபூர்வ வேட்பு மனுக்களை மீண்டும் கோருவது தொடர்பில் தயாரிக்கப்பட்டுள்ள உள்ளூராட்சி மன்றங்கள் (விஷேட விதப்புரைகள்) சட்ட மூலத்தை அரசாங்க வர்த்தமானியில் பிரசுரித்து, பின்னர் அனுமதிக்காக பாராளுமன்றத்தில் முன்வைத்தல்.
 
• உள்ளூராட்சி மன்றங்களின் எல்லை நிர்ணயங்கள் தொடர்பான மேன்முறையீட்டு பரிசீலனை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள குறைகளை முழுமைப்படுத்தி அரசாங்க வர்த்தமானியில் பிரசுரிக்க வேண்டியுள்ளது. அதனால் அது தொடர்பில் பரிசீலனை மேற்கொண்டு இரு வார காலத்துக்குள் சிபார்சுகளை முன்வைப்பதற்காக உள்ளூராட்சி மன்றங்கள் தேர்தல் கட்டளைகள் சட்டத்தின் உறுப்புரைகளின் கீழ் அதிகாரிகள் கொண்ட குழுவொன்றை நியமித்தல்.
 
45. தேசிய உணவு உற்பத்தி துரித செயற்றிட்டம்
 
கடந்த காலங்களில் ஏற்பட்ட சீரற்ற காலநிலையினால் விவசாய நடவடிக்கைகள் மிக மோசமாக பாதிக்கப்பட்டது. எனவே குறித்த நிலமையில் மீண்டு வருவதற்காக உணவு உற்பத்தியினை புதிய முறையில் ஆரம்பிப்பதற்காக அனைத்து அரச நிறுவனங்கள், அரச சார்பற்ற நிறுவனங்கள், விவசாயிகள் மற்றும் தனியார் துறையினர் ஆகியோரை இணைத்துக் கொண்டு 'தேசிய உணவு உற்பத்தி துரித செயற்றிட்டம்' எனும் பெயரில் துரித வேலைத்திட்டமொன்றை செயற்படுத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
 
இத்திட்டத்தினை வெற்றிகரமாக செயற்படுத்துவதற்காக 2017ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 06ம் திகதி முதல் 12ம் திகதி வரையான காலப்பகுதிக்குள் நாடு பூராகவும் குறித்த திட்டம் தொடர்பிலான தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி செயலாளரினால் வெளியிடப்பட்டுள்ள சுற்றுநிருபத்தின் ஆலோசனைகளை பின்பற்றுமாறு அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களினால் அமைச்சரவை அறிவுறுத்தப்பட்டது.
 

சமீபத்திய செய்திகள்

அமைச்சரவை தீர்மானங்கள் - 25.10.2021

26 October 2021

அமைச்சரவை தீர்மானங்கள் - 25.10.2021

அமைச்சரவை தீர்மானங்கள் - 18.10.2021

19 October 2021
அமைச்சரவை தீர்மானங்கள் - 18.10.2021

அமைச்சரவை தீர்மானங்கள் - 18.10.2021

அமைச்சரவை தீர்மானங்கள் - 11.10.2021

12 October 2021
 அமைச்சரவை தீர்மானங்கள் - 11.10.2021

அமைச்சரவை தீர்மானங்கள் - 11.10.2021

அமைச்சரவை தீர்மானங்கள் - 05.10.2021

06 October 2021
அமைச்சரவை தீர்மானங்கள்  - 05.10.2021

அமைச்சரவை தீர்மானங்கள் - 05.10.2021

அமைச்சரவை தீர்மானங்கள் - 27.09.2021

28 September 2021
அமைச்சரவை தீர்மானங்கள் - 27.09.2021

அமைச்சரவை தீர்மானங்கள் - 27.09.2021

அமைச்சரவை தீர்மானங்கள் - 21.09.2021

22 September 2021
அமைச்சரவை தீர்மானங்கள் - 21.09.2021

அமைச்சரவை தீர்மானங்கள் - 21.09.2021

அமைச்சரவை தீர்மானங்கள் - 13.09.2021

14 September 2021
அமைச்சரவை தீர்மானங்கள்  - 13.09.2021

அமைச்சரவை தீர்மானங்கள் - 13.09.2021

அமைச்சரவை தீர்மானங்கள் - 30.08.2021

31 August 2021

அமைச்சரவை தீர்மானங்கள் - 30.08.2021

அமைச்சரவை தீர்மானங்கள் - 23.08.2021

24 August 2021

அமைச்சரவை தீர்மானங்கள் - 23.08.2021

அமைச்சரவை தீர்மானங்கள் - 17.08.2021

18 August 2021
 அமைச்சரவை தீர்மானங்கள்  - 17.08.2021

அமைச்சரவை தீர்மானங்கள் - 17.08.2021

அத்துடன் இலங்கையிலுள்ள ஊடகத்துறையின் கொள்கை திட்டமிடல் , பயிற்சி நெறிகளை வழங்குதல் , மற்றும் ஊடகத்துறைக்கான அங்கீகாரங்களை வழங்குவதிலும் இந்நிறுவனம் முன்னின்று உதவுகின்றது.