• #163, கிருலபன எவனியூ, கொழும்பு 05, இ லங்கை​
  • +94 112 51 5759

engsin

அமைச்சரவை தீரமானங்கள் 12.09.2017

01. உயிரியல் பாதுகாப்பு சட்டமூலம் (விடய இல. 11)
 
 
இயற்கை காரணிகள் மற்றும் பல்வேறு மனித நடத்தைகளால் உயிரியல் பல்வகைமையின் நிலவுகைக்கு தாக்கம் ஏற்பட்டுள்ளது. உயிரியல் தொழில்நுட்பத்தின் விருத்தியின் மூலம் நிறமூர்த்தங்களை மாற்றி உருவாக்கப்பட்டுள்ள உயிரினங்களை எல்லையற்ற விதத்தில் சூழலுக்கு விடுவிப்பதும் உயிரியல் பல்வகைமைக்கு அச்சுறுத்தலாக அமைகின்றது. இவ்வனைத்தும் மனித நடத்தைகளால் ஏற்பட்டுள்ள விபரீதங்களாகும். இவ்வச்சுறுத்தல்களில் இருந்து விடுபடுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியது காலத்தின் தேவையாகும். அதனடிப்படையில் உயிரியர் பாதுகாப்பு தொடர்பான கார்டிஜினா நெறிமுறையில் அங்கத்தவராக இருக்கும் இலங்கை குறித்த உயிரியல் தொழில்நுட்பத்தை பயன்படுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. அதன் கீழ் குறைந்த பாதிப்பில் அல்லது பாதிப்பற்ற நிலையில் குறித்த தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதற்கு தேவையான சட்ட விதிகளை தயாரிப்பதற்கான தேவை எழுந்துள்ளது. அதற்காக புதிய உயிரியல் பாதுகாப்பு சட்ட மூலம் ஒன்றை அறிமுகப்படுத்துவது தொடர்பில் மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சர் எனும் ரீதியில் அதிமேதகு ஜனாதிபதி அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
 
 
02. கிராமிய பிரதேசங்களில் பாலங்கள் நிர்மாணித்தல் (விடய இல. 13)
 
 
தேசிய மட்டத்திலான அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் கீழ் கிராமிய பாலங்களை அமைக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதன் கீழ் கிராமிய பிரதேசங்களில் உள்ள 3500 – 4000 வரையான பாலங்களை நிர்மாணிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளதுடன், அவற்றினை மேற்கொள்வதற்கு ஐக்கிய இராச்சியம் மற்றும் நெதர்லாந்து ஆகிய நாடுகள் நிதியுதவிகளை வழங்கியுள்ளதுடன் அவற்றின் மூலம் இரு வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
 
அதேபோன்று ஹங்கேரியா மற்றும் பெல்ஜியம் ஆகிய அரசாங்கங்களும் குறித்த வேலைத்திட்டங்களுக்காக நிதியுதவி வழங்குவதற்கு இணக்கம் தெரிவித்துள்ளது. அதனடிப்படையில் அவ்வரசாங்கங்களின் நிதியுதவியினை பெற்று கிராமிய பிரதேசங்களிலுள்ள பாலங்களை நிர்மாணிக்கும் வேலைத்திட்டங்கள் இரண்டினை முன்னெடுப்பதற்கான விலைமனுக்களை கோருவதற்கு மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் அமைச்சுக்கு அதிகாரத்தை வழங்குவது தொடர்பில் தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார விவகாரங்கள் அமைச்சர் எனும் ரீதியில் கௌரவ பிரதமர் ரணில் விக்ரமசிங்க அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
 
 
03. ரிடிகல யான் ஓயா தேசிய பூங்கா மற்றும் எல்லை திருத்தம் செய்யப்பட்ட ஹொரொபொதானை தேசிய பூங்காவினை பிரகடனப்படுத்துதல் (விடய இல. 14)
 
 
இலங்கையில் அமைக்கப்பட்டுள்ள இரண்டாவது யானைகள் சரணாலயமான 'ரிடிகல எத் அதுரு செவண' மற்றும் அதனை அண்டிய வனாந்தரத்தை உட்பட்ட 427.8 ஹெக்டேயார் பூமிப்பகுதியை 'ரிடிகல – யான் ஓயா தேசிய பூங்காவாக' பிரகடனப்படுத்துவதற்கு பிரேரிக்கப்பட்டுள்ளது.
அதேபோன்று யானை, மனித மோதலினை குறைக்கும் நோக்கில் கிராமங்களுக்குள் நுழையும் யானைகளை சிறைப்பிடிப்பதற்காக ஹொரொபொதான பிரதேசத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள காட்டு யானைகள் தடுத்து வைக்கும் நிலையத்தை அண்டிய பிரதேசமும் உட்படும் வகையில் 'ஹொரொபொதான தேசிய பூங்காவின் எல்லையினை திருத்தம் செய்து மீண்டும் பிரகடனப்படுத்த வேண்டியுள்ளது. அதனடிப்படையில் ரிடிகல யான் ஓயா தேசிய பூங்கா மற்றும் எல்லை திருத்தம் செய்யப்பட்ட ஹொரொபொதானை தேசிய பூங்காவினை பிரகடனப்படுத்துவது தொடர்பில் நிலைபேறான அபிவிருத்தி மற்றும் வன ஜீவராசிகள் அமைச்சர் கௌரவ காமினி ஜயவிக்ரம பேரேரா அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
 
 
04. சர்வதேச சிவில் விமான சேவைகள் அமைப்பின் விமான சேவைகள் கொடுக்கல் வாங்கல் தொடர்பான 10 ஆவது மாநாடு (விடய இல. 15)
 
 
சர்வதேச சிவில் விமான சேவைகள் அமைப்பின் விமான சேவைகள் கொடுக்கல் வாங்கல் தொடர்பான 10 ஆவது மாநாட்டினை 2017ம் ஆண்டு டிசம்பர் மாதம் 04ம் திகதி முதல் 08ம் திகதி வரை இலங்கையில் நடாத்துவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. அதற்காக தலைமை பொறுப்பை ஏற்பது தொடர்பில் சர்வதேச சிவில் விமான சேவைகள் அமைப்பு மற்றும் இலங்கை அரசாங்கம் என்பவற்றுக்கு இடையில் ஒப்பந்தம் ஒன்றில் கைச்சாத்திடுவது தொடர்பில் போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் கௌரவ நிமல் சிறிபால டி சில்வா அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
 
 
05. சமிஞ்சை மொழி சட்டமூலம் (விடய இல. 16)
 
 
அங்கவீனம் தொடர்பான தேசிய கொள்கையின் மூலம் 'சமிஞ்சை மொழியானது' விசேட தேவையுடைய நபர்களின் தொடர்பாடல் மொழியாக ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. அதனடிப்படையில் இலங்கையில் அங்கீகரிக்கப்பட்ட மொழியாக சமிஞ்சை மொழியினை ஏற்படுத்துவதற்கு தேவையான சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளும் நோக்கில், பிரேரிக்கப்பட்டுள்ள சமிஞ்சை மொழி சட்டமூலத்தை தயாரிப்பது தொடர்பில் சமூக வலுவூட்டல், நலன்புரி மற்றும் மலைநாட்டு உரிமைகள் தொடர்பான அமைச்சர் கௌரவ எஸ்.பி.திசாநாயக்க அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
 
 
06. இரத்தினபுரி மற்றும் பதுளை மாவட்ட தொழிலாளர் அலுவலக கட்டிடத் தொகுதிகளை நிர்மாணிப்பதற்காக காணிப்பகுதியொன்றை பெற்றுக் கொள்ளல் (விடய இல. 17 மற்றும் 18)
 
 
இரத்தினபுரி மற்றும் பதுளை மாவட்ட தொழிலாளர்களின் நலன்களை விருத்தி செய்யும் வகையில் வாடகை அடிப்படையில் தொழிலாளர் அலுவலக கட்டிடத் தொகுதிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. அவற்றுக்கு அன்றாடம் அதிகமான தொழிலாளர்கள் வருகை தருவதோடு , அவர்களுக்கு போதுமான வசதிகளும் அங்கு இல்லை. இவற்றினை கவனத்திற் கொண்டு நிரந்தரமான தொழிலாளர் அலுவலக கட்டிடத் தொகுதியொன்றை அமைப்பதற்கு பிரேரிக்கப்பட்டுள்ளது.
 
அதனடிப்படையில் இரத்தினபுரி மற்றும் பதுளை மாவட்ட தொழிலாளர் அலுவலக கட்டிடத் தொகுதிகளை நிர்மாணிப்பதற்காக காணிப்பகுதியொன்றை பெற்றுக் கொள்வது தொடர்பில் தொழிலாளர், தொழிற்சங்கங்க உறவுகள் மற்றும் சபரகமுவ மாகாண அபிவிருத்தி அமைச்சர் கௌரவ டிபிள்யு.டி.ஜே. செனவிரத்ன அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
 
 
07. பாரிய வவுனியா நீர் வழங்கல் வேலைத்திட்டத்துக்கான சாத்தியவள ஆய்வினை மேற்கொள்ளல் (விடய இல. 20)
 
 
பாரிய வவுனியா நீர் வழங்கல் வேலைத்திட்டத்துக்கான சாத்தியவள ஆய்வினை மேற்கொள்வதற்காக தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை மற்றும் சீனாவின் M/s China National Complete Plant Import & Export Corporation Limited (COMPLANT) நிறுவனம் ஆகியவற்றுக்கு இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில் கைச்சாத்திடப்பட்டுள்ளதாக நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் கௌரவ ரவூப் ஹக்கீம் அவர்களினால் முன்வைக்கப்பட்ட தகவல்களை அமைச்சரவை கவனத்திற் கொண்டது.
 
 
08. மீள பயன்படுத்த முடியுமான மின்கலங்களுக்கு பயன்படுத்தப்படுத்துவதற்காக இலங்கை காரிய கற்களை விருத்தி செய்தல் (விடய இல. 22)
 
 
மீண்டும் பயன்படுத்த முடியுமான மின்கலங்களை உற்பத்தி செய்வதற்காக பயன்படுத்துவதற்கு உகந்த முறையில் பொருத்தமான நவீனமயப்படுத்தல்களை பயன்படுத்துவதன் மூலம் இந்நாட்டு இயற்கை காரிய கற்களை விருத்தி செய்வதற்கான ஆய்வு வேலைத்திட்டமொன்றை அடிப்படை ஆய்வுகளுக்கான தேசிய நிறுவனத்தின் மூலம் செயற்படுத்துவது தொடர்பில் விஞ்ஞானம், தொழில்நுட்பம் மற்றும் ஆராய்ச்சி அமைச்சர் கௌரவ சுசில் பிரேமஜயந்த அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
 
09. பின்தங்கிய பிரதேசங்களில் வசிக்கும் பொதுமக்களின் போக்குவரத்து வசதிகளை மேம்படுத்துவதற்காக சிறு பாலங்களை நிர்மாணித்தல் (விடய இல. 23)
 
 
பின்தங்கிய பிரதேசங்களில் வாழ்கின்ற பொதுமக்களுக்கு பாதுகாப்பான முறையில் போக்குவரத்தினை மேற்கொள்வதற்கு வசதிகளை செய்து கொடுக்கும் நோக்கில் சிறு பாலங்களை நிர்மாணிக்க வேண்டியுள்ளது. இதற்காக குறைந்த செலவில் நீண்ட காலம் நிலைத்து நிற்கவல்ல விசேடமான வளர்ச்சியடைந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தி நிர்மாணித்துஇலங்கை தேசிய பொறியியல் ஆராய்ச்சி அபிவிருத்தி நிலையம் பரிசீலித்து பார்த்து வருகின்றது.
அதனடிப்படையில் பின்தங்கிய பிரதேசங்களை இனங்கண்டு, அவ்விடங்களில் இவ்வாறான 1000 பாலங்களை அடுத்து வருகின்ற 03 வருட காலத்தினுள் நிர்மாணிப்பது தொடர்பில் விஞ்ஞானம், தொழில்நுட்பம் மற்றும் ஆராய்ச்சி அமைச்சர் கௌரவ சுசில் பிரேமஜயந்த அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
 
 
10. சமூக கண்டுபிடிப்பு ஆய்வகமொன்றை (Social Innovation Lab) நிர்மாணித்தல் (விடய இல. 25)
 
 
செயற்றிறன் மிக்க கொள்கைகளை உருவாக்குவதற்காகவும் கொள்கைகளின் உறுதித்தன்மையின் ஊடாக பலனுள்ள அரச சேவையினை வழங்குவதை இலக்காகக் கொண்டு முன்மொழியப்பட்டுள்ள சமூக கண்டுபிடிப்பு ஆய்வகமொன்றை ஐக்கிய நாடுகள் அமைப்பின் அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் (UNDP) ஒத்துழைப்புடன் விஞ்ஞானம், தொழில்நுட்பம் மற்றும் ஆராய்ச்சி அமைச்சில் ஸ்தாபித்து முறையான வேலைத்திட்டமொன்றாக செயற்படுத்துவது தொடர்பில் விஞ்ஞானம், தொipல்நுட்பம் மற்றும் ஆராய்ச்சி அமைச்சர் கௌரவ சுசில் பிரேமஜயந்த அவர்களினால் அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
 
 
11. கிளிநொச்சி, இலங்கை ஜேர்மனி பயிற்சி நிலையத்தின் மாணவர்களுக்காக விடுதி வசதிகளை செய்து கொடுத்தல் (விடய இல. 28)
 
 
கிளிநொச்சி, இலங்கை ஜேர்மனி பயிற்சி நிலையத்தில் தற்போது 200 மாணவர்கள் பயிற்சிகளை பெற்று வருகின்றனர். அவற்றில் 144 பேருக்கு மாத்திரமே விடுதி வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளன. எனினும் இவ்வருடத்தில் மேலும் 400 பேர் சேர்த்துக் கொள்வதற்கு எதிர்பார்க்கப்படுகின்றனர். அதனடிப்படையில் மேலதிக 400 மாணவர்களுக்காக விடுதி வசதிகளை வழங்குவதற்கு ஏதுவான வகையில் கிளிநொச்சி, இலங்கை ஜேர்மனி பயிற்சி நிலையத்தில் புதிய விடுதியொன்றை ஸ்தாபிப்பது தொடர்பில் திறன்முறை அபிவிருத்தி மற்றும் தொழில்பயிற்சி அமைச்சர் கௌரவ சந்திம வீரக்கொடி அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
 
 
12. காலி நகரத்தில் புதிய கேட்போர் கூடம் ஒன்றை அமைத்தல் (விடய இல. 29)
 
 
காலி உட்பட முழு தென் மாகாணத்திற்குமான அரச உற்சவங்கள், மாநாடுகள், செயலமர்வுகள், பொதுக்கூட்டங்கள் என்பவற்றை நடாத்துவதற்கு தற்போது பயன்படுத்தப்படுகின்ற கேட்போர் கூடமானது வசதிகள் குறைந்த நிலையிலேயே காணப்படுகின்றது. அதனால், காலி நகரில் அவ்வாறான நிகழ்வுகளுக்கு பயன்படுத்துவதற்கு உகந்த முறையில் 2000 இருக்கைகள் அடங்கிய கேட்போர் கூடமொன்றை காலி அதிவேக வீதிக்கு உட்பிரவேசிக்கும் பகுதிக்கு அண்மையில் அமைப்பது தொடர்பில் உள்நாட்டலுவல்கள் அமைச்சர் கௌரவ வஜிர அபேவர்தன அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
 
 
13. புத்தளம் - அருவக்கால் பகுதியில் நகர திண்மக் கழிவுகளை இறுதியாக வெளியேற்றுவதற்கான வசதிகளை ஸ்தாபித்தல் (விடய இல. 32)
 
நகர மற்றும் சன நெருக்கடி மிகுந்த பிரதேசங்களில் வெளியேற்றப்படுகின்ற திண்மக் கழிவுகளை வெளியேற்றுவதற்கு புத்தளம் - அருவக்காலு பகுதியில் கழிவகற்றுவதற்கு உகந்த வசதிகள் அடங்கிய வேலைத்திட்டத்தினை மேற்கொள்வதற்கு ஏற்கனவே அமைச்சரவையின் அனுமதி கிடைத்துள்ளது. அதனடிப்படையில், குறித்த பிரதேசத்தில் திண்மக் கழிவுகளை வெளியேற்றும் தொகுதியினை அமைப்பதற்கும், அப்பணியினை 2020ம் ஆண்டிலிருந்து ஆரம்பிப்பதற்கும் பாரிய நகரம் மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் கௌரவ பாட்டலி சம்பிக்க ரணவக்க அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
 
 
14. கடல்களில் கூடுகளினுள் கடற் மீன்வளர்ப்பு வேலைத்திட்டமொன்றை செயற்படுத்தல் (விடய இல. 33)
 
 
கடல்களில் கூடுகளினுள் கடற் மீன்வளர்ப்பு வேலைத்திட்டமொன்றை செயற்படுத்துவதற்காக திருகோணமலை மாவட்டத்தில், கொட்டியார் பிரதேசத்தில் இலங்கை துறைமுக அதிகார சபைக்கு உரித்தான தேசிய கடற்பரப்பில் 150 ஹெக்டேயார் கடற் பிரதேசத்தை குலோபல் சிலோன் சீ புட் (தனியார்) நிறுவனத்துக்கு 30 வருட குத்தகை அடிப்படையில் பெற்றுக் கொடுப்பது தொடர்பில் மீன்பிடி மற்றும் நீரியல் வளங்கள் அபிவிருத்தி அமைச்சர் கௌரவ மஹிந்த அமரவீர அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
 
 
15. 2017/2018 பெரும்போக நெற்செய்கைக்காக வேண்டி நெல் விதைகள் வழங்குவதை துரிதப்படுத்தல் (விடய இல. 38)
 
நாட்டின் பல்வேறு பகுதிகளில் நிலவுகின்ற அசாதாரண காலநிலையினால் 2017/2018 பெரும்போகத்தின் போது நெல் விதைகளுக்கு தட்டுப்பாடு நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது. அதனடிப்படையில், 2017ம் ஆண்டு சிறுபோகத்தின் போது வெற்றிகரமாக நெற்செய்கையில் ஈடுபட்ட விவசாயிகளிடத்தில் இருந்து உயர் தரத்திலான 560,000 பூசல் நெல் விதைகளினை துரித கதியில் பெற்றுக் கொண்டு, குறித்த விதைகள் தட்டுப்பாடாக காணப்படுகின்ற பிரதேசங்களுக்கு விற்பனை செய்வது தொடர்பில் கமத்தொழில் அமைச்சர் கௌரவ துமிந்த திசாநாயக்க அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. மேலும் கடந்த போகத்தின் போது கடுமையான வறட்சியினால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு பெறுமதியில் 50மூ மாத்திரம் அறவிட்டுக் கொண்டு குறித்த நெல் விதைகளை விற்பனை செய்வதற்கும் அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டது.
 
 
16. சிறுவர் உரிமைகள் தொடர்பான கொள்கையினை செயற்படுத்துவதற்கான இயந்திரத்தினை பலப்படுத்தல் (விடய இல. 43)
 
 
சிறுவர் உரிமைகள் தொடர்பான கொள்கையின் 40 பிரிவின் கீழ் பின்னூட்டல் மற்றும் அறிக்கையிடல் செயற்பாடுகளுக்காக தேசிய மட்டத்தில், மாவட்ட மட்டத்தில் மற்றும் பிரதேச மட்டத்தில் செயற்குழுக்களை அமைப்பதற்கு 2000ம் ஆண்டில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தற்போதைய தேவையினை கவனத்திற் கொண்டு குறித்த செயற்குழுக்களின் அமைப்பு மற்றும் அதன் பணிகள் என்பவற்றை விசாலப்படுத்துவது தொடர்பில் மகளீர் மற்றும் சிறுவர் விவகாரங்கள் அமைச்சர் கௌரவ சந்திராணி பண்டார அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
 
 
17. பிரிவெனாக்களில் இருக்கின்ற மாணவ பிக்குகளுக்காக புலமைப்பரிசில்களை வழங்குதல் (விடய இல. 44)
 
நாடு தழுவிய ரீதியில் காணப்படுகின்ற 758 பிரிவெனாக்களிலும் இருக்கின்ற மாணவ பிக்குகளின் கல்வி மேம்பாட்டுக்காக புலமைப்பரிசில் திட்டமொன்றை வழங்குவதற்கு 2017ம் ஆண்டு வரவு செலவு திட்டத்தின் மூலம் முன்மொழியப்பட்டது. அதனடிப்படையில் குறித்த பிக்குகளின் தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்கு பயன்படுத்துவதற்காக 'கல்வி மேம்பாட்டு நன்கொடை' ஒன்றை அவ்வவ் பிரிவெனாக்களின் செயல் வடிவில் உள்ள வங்கிக் கணக்கில் வரவிடுவதற்கும், கல்வி அமைச்சின் பூரண மேற்பார்வையின் கீழ் இவ் வேலைத்திட்டத்தினை செயற்படுத்துவதற்கும் கல்வி அமைச்சர் கௌரவ அகில விராஜ் காரியவசம் அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
 
 
18. இலங்கை மற்றும் லெபனான் ஆகிய நாடுகளுக்கு இடையில் மேற்கொள்வதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ள முயற்சியாண்மை துறை தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் (விடய இல. 50)
 
 
லெபனான் நாட்டில் பணிபுரியும் பணியாளர்களின் நன்மைக்கருதி இலங்கை மற்றும் லெபனான் ஆகிய நாடுகளுக்கு இடையில் மேற்கொள்வதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ள முயற்சியாண்மை துறை தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில் கைச்சாத்திடுவது தொடர்பில் நீதியமைச்சர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்புகள் அமைச்சர் கௌரவ தலதா அதுகோரல அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
 
 
19. சிவில் விமான சேவை பயிற்சி நிலையத்துக்காக விமான சேவை கட்டுப்பாட்டு கிமியுலேடர் பயிற்சி பிரிவினை வழங்குதல், பொருத்துதல் மற்றும் செயற்படுத்தல் (விடய இல. 51)
 
 
சிவில் விமான சேவை பயிற்சி நிலையத்துக்காக விமான சேவை கட்டுப்பாட்டு கிமியுலேடர் பயிற்சி பிரிவினை வழங்குதல், பொருத்துதல் மற்றும் செயற்படுத்துவது தொடர்பான ஒப்பந்தத்தை கொள்முதல் மேற்முறையீட்டு சபையின் தீர்மானம் மற்றும் அமைச்சரவையினால் நியமிக்கப்பட்டுள்ள நிலையியல் கொள்முதல் குழுவின் சிபார்சின் பெயரில் M/s. Adacel Technologies Limited  நிறுவனத்துக்கு வழங்குவது தொடர்பில் போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் கௌரவ நிமல் சிறிபால டி சில்வா அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
 
 
20. கொழும்பு மற்றும் ருஹுணு ஆகிய பல்கலைக்கழகங்களில் புதிய கட்டிடங்களை நிர்மாணித்தல் (விடய இல. 52)
 
 
கொழும்பு பல்கலைக்கழகத்தின் விஞ்ஞான பிரிவிற்காக தகவல் மற்றம் கற்றல் நிலையத்தை அமைப்பதற்கான ஒப்பந்தத்தை 516.54 மில்லியன் ரூபா மதிப்பீட்டு செலவில் சன்கென் கன்ஸ்ரக்ஷன் தனியார் கம்பனிக்கும், ருஹுணு பல்கலைகழகத்தின் முகாமைத்துவ பீடத்துக்காக வேண்டி புதிய கட்டிட தொகுதியொன்றை அமைப்பதற்கான ஒப்பந்தத்தை 198.02 மில்லியன் ரூபா மதிப்பீட்டு செலவில் ஆ.னு.வு. கன்ஸ்ரக்ஷன் நிறுவனத்துக்கும் அமைச்சரவையினால் நியமிக்கப்பட்டுள்ள நிலையியல் கொள்முதல் குழுவின் சிபார்சின் பெயரில் வழங்குவது தொடர்பில் உயர் கல்வி மற்றும் பெருந்தெருக்கள் அமைச்சர் கௌரவ லக்ஷ;மன் கிரியெல்ல அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
 
 
21,22,23 மற்றும் 24. சுகாதாரம், போசணை மற்றும் சுதேச மருத்துவ அமைச்சரினால் முன்வைக்கப்பட்ட அமைச்சரவை பத்திரங்கள் (விடய இலக்கங்கள். 55, 56, 57 மற்றும் 58)
 
 
சுகாதாரம், போசணை மற்றும் சுதேச மருத்துவ அமைச்சர் வைத்தியர் ராஜித சேனாரத்ன அவர்களினால் முன்வைக்கப்பட்ட பின்வரும் யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
 
• கேகாலை அடிப்படை வைத்தியசாலையின் விபத்து மற்றம் அவசர சிகிச்சை பிரிவொன்றை அமைப்பதற்கான ஒப்பந்தத்தை அமைச்சரவையினால் நியமிக்கப்பட்டுள்ள நிலையியல் கொள்முதல் குழுவின் சிபார்சின் பெயரில் குறைந்த விலை மனுவின் அடிப்படையில் M/s Link Engineering (Pvt) Ltd.  நிறுவனத்துக்கு 320.1 மில்லியன் ருபா மதிப்பீட்டு செலவில் வழங்குதல்.
 
• சிலாபம் பெரிய வைத்தியசாலையின் விபத்து மற்றம் அவசர சிகிச்சை பிரிவொன்றை அமைப்பதற்கான ஒப்பந்தத்தை அமைச்சரவையினால் நியமிக்கப்பட்டுள்ள நிலையியல் கொள்முதல் குழுவின் சிபார்சின் பெயரில் குறைந்த விலை மனுவின் அடிப்படையில் M/s AMSK Construction (Pvt) Ltd. நிறுவனத்துக்கு 501.2 மில்லியன் ருபா மதிப்பீட்டு செலவில் வழங்குதல்.
 
• இலங்கை ஒளடதங்கள் உற்பத்தி தொழிலினை கட்டியெழுப்புவதற்காக முன்மொழியப்பட்டுள்ள 36 யோசனைகளில் ஏற்றுக் கொள்ளத்தக்க 31 யோசனைகளை திறைசேரி செயலாளரின் தலைமையில் நியமிக்கப்பட்டுள்ள குழுவின் சிபார்சின் பெயரில் செயற்படுத்துவதற்காக அரச – தனியார் இணை வியாபாரம் ஒன்றை ஸ்தாபித்தல்.
 
• ஸ்ரீ ஜயவர்தனபுற பெரிய வைத்தியசாலைக்காக MRI (Whole Body MRI Scanner) இயந்திரம் ஒன்றை வழங்குதல் மற்றும் நிறுவுவதற்கான ஒப்பந்தத்தை அமைச்சரவையினால் நியமிக்கப்பட்டுள்ள நிலையியல் கொள்முதல் குழுவின் சிபார்சின் பெயரில் குறைந்த விலை மனுவின் அடிப்படையில் M/s Dimo (Pvt) Ltd. . நிறுவனத்துக்கு 45 மில்லியன் ருபா மதிப்பீட்டு செலவில் வழங்குதல்.
 
 
25 மற்றும் 26. பாரிய நகரம் மற்றும் மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சரினால் முன்வைக்கப்பட்ட பின்வரும் யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. (விடய இல. 59 மற்றும் 60)
 
பாரிய நகரம் மற்றும் மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சர் கௌரவ பாட்டலி சம்பிக்க ரணவக்க அவர்களினால் முன்வைக்கப்பட்ட பின்வரும் யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
 
• நகர்புற மீள்உருவாக்க வேலைத்திட்டத்தின் கீழ் கொழும்பு 07, டொரின்டன் மாவத்தையில் 115 வீட்டு அலகுகளைக் கொண்ட வேலைத்திட்டத்தினை முன்னெடுப்பதற்கான ஒப்பந்தத்தை அமைச்சரவையினால் நியமிக்கப்பட்டுள்ள நிலையியல் கொள்முதல் குழுவின் சிபார்சின் பெயரில் குறைந்த விலை மனுவின் அடிப்படையில் சுபசிங்க கன்ஸ்ரக்ஷன் என்ட் எர்த் முவர்ஸ் நிறுவனத்துக்கு 395 மில்லியன் ருபா மதிப்பீட்டு செலவில் வழங்குதல்.
 
• கொட்டாவ, குலசெவன தோட்டம், தொழிலாளர்களுக்காக நடுத்தர வர்க்க வீட்டு வேலைத்திட்டத்தினை முன்னெடுப்பதற்கான ஒப்பந்தத்தை அமைச்சரவையினால் நியமிக்கப்பட்டுள்ள நிலையியல் கொள்முதல் குழுவின் சிபார்சின் பெயரில் குறைந்த விலை மனுவின் அடிப்படையில் சதுட பில்டர்ஸ் தனியார் நிறுவனத்துக்கு 3,699 மில்லியன் ருபா மதிப்பீட்டு செலவில் வழங்குதல்.
 
 
27. லிட்ரோ எரிவாயு கம்பனிக்காக தேவையான திரவ பெற்றோலியம் எரிவாயுவினை கொள்வனவு செய்தல் (விடய இல. 61)
 
லீட்ரோ கேஸ் லங்கா கம்பனியின் மூலம் பகிர்ந்தளிப்பதற்கு தேவையான எல்.பி. எரிவாயு கொள்வனவு செய்வதற்காக சர்வதேச விலை மனுக்கோரலின் விலைமனு கோரப்பட்டுள்ளது. அதனடிப்படையில் அமைச்சரவையினால் நியமிக்கப்பட்டுள்ள நிலையியல் கொள்முதல் குழுவின் சிபார்சின் பெயரில் 2017 – 2018ம் ஆண்டுக்காக அக்கம்பனிக்கு அவசியமான 300,000 மெட்ரிக் தொன் எல்பீ எரிவாயுவினை M/s Shell International Eastern Trading Company  இடத்திலிருந்து கொள்வனவு செய்வதற்கு அரச தொழிற்முயற்சிகள் அபிவிருத்தி அமைச்சர் கௌரவ கபீர் ஹாஷpம் அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
 
28. நிர்மாணத்துறை ஒப்பந்தக்காரர்களின் பணப்பாய்ச்சலினை உயர்த்துதல் (விடய இல. 62)
 
நாட்டில் காணப்படுகின்ற அடிப்படை வசதிகள் அபிவிருத்தி இன்மையினால் முதலீட்டாளர்கள் பெரும் சிரமத்தை எதிர்நோக்கி வருகின்றனர். இதற்கு தீர்வொன்றாக ஒப்பந்தக்காரர்களின் பணப்பாய்ச்சலினை இலகுபடுத்தும் வகையில் பொருத்தமான இயந்திரம் ஒன்றை அறிமுகப்படுத்துவதற்கு வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சர் கௌரவ சஜித் பிரேமதாச அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
 
29. தேசிய சமூக அபிவிருத்தி நிறுவனத்துக்காக கட்டிட தொகுதியொன்றை நிர்மாணித்தல் (விடய இல. 63)
 
தேசிய சமூக அபிவிருத்தி நிறுவனத்துக்காக கட்டிட தொகுதியொன்றை நிர்மாணிப்பதற்கான ஒப்பந்தத்தை அமைச்சரவையினால் நியமிக்கப்பட்டுள்ள நிலையியல் கொள்முதல் குழுவின் சிபார்சின் பெயரில் 818.63 மில்லியன் ரூபா மதிப்பீட்டு செலவில் இலங்கை அரச பொறியியல் கூட்டுத்தாபனத்துக்கு ஒப்படைப்பது தொடர்பில் சமூக வலுவூட்டல், நலன்புரி மற்றும் மலைநாட்டு உரிமைகள் அமைச்சர் கௌரவ எஸ்.பி. திசாநாயக்க அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
 
30. கொழும்பு தாதியர் கல்லூரியில், 05 மாடிகளைக் கொண்ட கட்டிடம் ஒன்றை நிர்மாணித்தல் (விடய இல. 64)
 
காலத்தின் தேவைக்கிணங்க கொழும்பு தாதியல் கல்லூரியில், 05 மாடிகளைக் கொண்ட கட்டிடம் ஒன்றை நிர்மாணிப்பதற்கான ஒப்பந்தத்தை இலங்கை அரச பொறியியல் கூட்டுத்தாபனத்துக்கு ஒப்படைப்பது தொடர்பில் சுகாதாரம், போசணை மற்றும் சுதேச மருத்துவ அமைச்சர் ராஜித சேனாரத்ன அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
 
31. இலங்கை போக்குவரத்து சபைக்கு புதிய டயர் தொகுதிகளை வழங்கல் மற்றும் பகிர்ந்தளித்தல் (விடய இல. 65)
 
இலங்கை போக்குவரத்து சபைக்கு புதிய டயர் தொகுதிகளை வழங்கல் மற்றும் பகிர்ந்தளிப்பதற்கான வேலைத்திட்டத்தின் கீழ் விலை மனுக்களை மதிப்பிடும் தொழில்நுட்ப மதிப்பீட்டு குழு மற்றும் அமைச்சரவையினால் நியமிக்கப்பட்டுள்ள நிலையியல் கொள்முதல் குழுவின் சிபார்சின் பெயரில் பல்வேறு வகையான டயர் தொகுதிகள் 33,672இனை வழங்குவதற்கான ஒப்பந்தத்தை 1,115 மில்லியன் ரூபா மதிப்பீட்டு செலவில் M/s. CEAT Kelani International Tyres (Pvt)  நிறுவனத்துக்கு வழங்குவது தொடர்பில் போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் கௌவை நிமல் சிறிபால டி சில்வா அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
 
32. கொழும்பு, கோட்டை 'சார்மஸ் கிரனரீஸ்' பூமியில் முன்மொழியப்பட்டுள்ள கலப்பு அபிவிருத்தி வேலைத்திட்டம் (விடய இல. 67)
 
கொழும்பு, கோட்டை 'சார்மஸ் கிரனரீஸ்' பூமியில் முன்மொழியப்பட்டுள்ள கலப்பு அபிவிருத்தி வேலைத்திட்டத்தை முன்னெடுப்பதற்காக அப்பூமி பகுதியை அபிவிருத்தி செய்வதற்கு பொருத்தமான முதலீட்டாளர்களிட்டாளர் ஒருவரை தெரிவு செய்வதற்காக விலை மனுக்கோருவதற்கு பாரிய நகரம் மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் கௌரவ பாடட்லி சம்பிக்க ரணவக்க அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
 
33. கமத்தொழில் அபிவிருத்திக்கான சர்வதேச நிதியத்தின் ((IFAD) தேசிய அலுவலகத்தை ஸ்தாபித்தல் (விடய இல. 69)
 
கமத்தொழில் அபிவிருத்திக்கான சர்வதேச நிதியத்தினால் இலங்கையில் மேற்கொள்ளப்படுகின்ற வேலைத்திட்டங்களை இலகுபடுத்தும் நோக்கில் அதன் தேசிய அலுவலகம் ஒன்றை இலங்கையில் ஸ்தாபிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. குறித்த அலுவலகத்தை ஸ்தாபிப்பது தொடர்பில் கமத்தொழில் அபிவிருத்திக்கான சர்வதேச நிதியத்திற்கும் ((IFAD) இலங்கை அரசாங்கத்துக்கும் இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில் கைச்சாத்திடுவது தொடர்பில் வெளிவிவகார அமைச்சர் கௌரவ திலக் மாரப்பன அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
 
34. 2018ம் நிதியாண்டுக்கான வரவு செலவு திட்ட விவாதம் தொடர்பாக எதிர்பார்க்கப்படுகின்ற வேலைத்திட்டங்கள் (விடய இல. 69)
 
கௌரவ பிரதமர் அவர்களினால் முன்வைக்கப்பட்ட 2018ம் நிதியாண்டுக்கான வரவு செலவு திட்ட விவாதம் தொடர்பாக எதிர்பார்க்கப்படுகின்ற வேலைத்திட்டங்கள் தொடர்பில் அமைச்சரவையின் கவனம் செலுத்தப்பட்டது.
 
அதனடிப்படையில், 2018ம் நிதியாண்டுக்கான வரவு செலவு திட்ட உறை 2017ம் ஆண்டு நவம்பர் மாதம் 09ம் திகதி இடம்பெறவுள்ளதுடன், இரண்டாம் வாசிப்பு தொடர்பான பாராளுமன்ற விவாதம் 2017ம் ஆண்டு நவம்பர் மாதம் 10,11,13,14 மற்றும் 15ம் திகதிகளில் நடாத்துவதற்கும், அதன் குழுநிலை விவாதத்தினை 2017-11-16ம் திகதி ஆரம்பிப்பதற்கும், மூன்றாம் வாசிப்பின் வாக்கெடுப்பினை 2017-12-09ம் திகதி நடாத்துவதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது.
 
35. 2018ம் நிதியாண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலம் (விடய இல. 72)
 
2018ம் நிதியாண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தை 2017ம் ஆண்டு செப்டெம்பர் மாத இறுதியில் பாராளுமன்றத்தில் மேசைப்படுத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
 
• 2018ம் ஆண்டுக்கான அரச முழு செலவு – 3,982 பில்லியன் ரூபா
 
• 2018ம் ஆண்டுக்கான அரச வருவாய் - 2,175 பில்லியன் ரூபா
 
இவ்வாறு தயாரிக்கப்பட்ட வரவு செலவு திட்ட முன்மொழிவுகள் அடங்கிய 2018ம் நிதியாண்டுக்கான ஒதுக்கீட்டு சட்டமூலத்தை அரசாங்க வர்த்தமானியில் பிரசுரிப்பதற்கும் பின்னர் அனுமதியினை பெற்றுக் கொள்வதற்காக வேண்டி பாராளுமன்றத்தில் முன்வைப்பதற்கும் நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் கௌரவ மங்கள சமரவீர அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
 
36. பொலன்னறுவை சம்பிரதாய தொழில்நுட்ப உரிமைகள் நூதனசாலை மற்றும் தகவல் நிலையம் (விடய இல. 75)
 
பண்டைய உரிமைகள் அதிகமான காணப்படுகின்ற பொலன்னறுவை பிரதேசத்தில் பொலன்னறுவை சம்பிரதாய தொழில்நுட்ப உரிமைகள் நூதனசாலை மற்றும் தகவல் நிலையம் என்பவற்றை அமைப்பது தொடர்பில் அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்கள் மற்றும் உள்நாட்டலுவல்கள், வடமேல் மாகாண அபிவிருத்தி மற்றும் கலாச்சார விவகாரங்கள் அமைச்சர் எஸ்.பி. நாவின்ன ஆகியோர் இணைந்து முன்வைத்த யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

சமீபத்திய செய்திகள்

அமைச்சரவை தீர்மானங்கள் - 18.10.2021

19 October 2021
அமைச்சரவை தீர்மானங்கள் - 18.10.2021

அமைச்சரவை தீர்மானங்கள் - 18.10.2021

அமைச்சரவை தீர்மானங்கள் - 11.10.2021

12 October 2021
 அமைச்சரவை தீர்மானங்கள் - 11.10.2021

அமைச்சரவை தீர்மானங்கள் - 11.10.2021

அமைச்சரவை தீர்மானங்கள் - 05.10.2021

06 October 2021
அமைச்சரவை தீர்மானங்கள்  - 05.10.2021

அமைச்சரவை தீர்மானங்கள் - 05.10.2021

அமைச்சரவை தீர்மானங்கள் - 27.09.2021

28 September 2021
அமைச்சரவை தீர்மானங்கள் - 27.09.2021

அமைச்சரவை தீர்மானங்கள் - 27.09.2021

அமைச்சரவை தீர்மானங்கள் - 21.09.2021

22 September 2021
அமைச்சரவை தீர்மானங்கள் - 21.09.2021

அமைச்சரவை தீர்மானங்கள் - 21.09.2021

அமைச்சரவை தீர்மானங்கள் - 13.09.2021

14 September 2021
அமைச்சரவை தீர்மானங்கள்  - 13.09.2021

அமைச்சரவை தீர்மானங்கள் - 13.09.2021

அமைச்சரவை தீர்மானங்கள் - 30.08.2021

31 August 2021

அமைச்சரவை தீர்மானங்கள் - 30.08.2021

அமைச்சரவை தீர்மானங்கள் - 23.08.2021

24 August 2021

அமைச்சரவை தீர்மானங்கள் - 23.08.2021

அமைச்சரவை தீர்மானங்கள் - 17.08.2021

18 August 2021
 அமைச்சரவை தீர்மானங்கள்  - 17.08.2021

அமைச்சரவை தீர்மானங்கள் - 17.08.2021

அமைச்சரவை தீர்மானங்கள் - 09.08.2021

10 August 2021
அமைச்சரவை தீர்மானங்கள் - 09.08.2021

அமைச்சரவை தீர்மானங்கள் - 09.08.2021

அத்துடன் இலங்கையிலுள்ள ஊடகத்துறையின் கொள்கை திட்டமிடல் , பயிற்சி நெறிகளை வழங்குதல் , மற்றும் ஊடகத்துறைக்கான அங்கீகாரங்களை வழங்குவதிலும் இந்நிறுவனம் முன்னின்று உதவுகின்றது.