வட மத்திய மாகாணத்தில் சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்ட நோயாளர்களுக்கு சிகிச்சை வழங்குவதற்கான மத்திய நிலையமொன்றை அநுராதபுரத்தில் நிறுவுவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் அண்மையில் கைச்சாத்திடப்பட்டது.
சுகாதாரம், போஷாக்கு மற்றும் சுதேச வைத்தியதுறை அமைச்சர் ராஜித்த சேனாரத்ன தலைமையில் அமைச்சில் இப்புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது.
அவுஸ்திரேலியாவில் இயங்கும் 'சாந்தி' மன்றம் இம்மத்திய நிலைய நிர்மாணிப்புக்கான நிதியுதவியை வழங்குகிறது.
இம்மத்திய நிலையத்தை நிர்மாணித்து பராமரிப்பதற்கான தொகையாக 120 மில்லியன் ரூபாவை வழங்குவதற்கு 'சாந்தி' மன்றம் இணக்கம் தெரிவித்துள்ளதுடன் எதிர்கால பராமரிப்பிற்கும் நிதியுதவி வழங்க இந்நிறுவனம் இணக்கம் தெரிவித்துள்ளது. இலங்கையில் நிறுவப்படும் முதலாவது சிகிச்சை வழங்கும் மத்திய நிலையம் இதுவாகும்.
அவுஸ்திரேலிய - இலங்கை சொலிஸ்டர் ஜெனரல் காரியாலயம் மற்றும் பிரதமர் செயலக அதிகாரிகள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.