மீன்பிடித்துறையில் பட்ட மேற்படிப்பை மேற்கொள்வதற்காக முதலாவது இலங்கை மாணவன் நாளை (27) திகதி கொரியாவுக்கு செல்லவுள்ளார்.
கொரிய தேசிய மீன்பிடி பொதுச்சம்மேளத்தினூடாக வழங்கப்பட்டுள்ள புலமைப்பரிசிலை பெற்ற இசுரு உமந்த டி சில்வா என்ற மாணவன் கொரியாவுக்கு செல்லவுள்ளார்.
அம்மாணவருக்கான விமான டிக்கட்டை மீன்பிடி மற்றும் நீர் வள அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் திலிப் வெத ஆராய்ச்சி அமைச்சில் வைத்து வழங்கினார்.
இராஜாங்க அமைச்சர் திலிப் வெத ஆராய்ச்சி, கொரியாவுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டபோது, அந்நாட்டு தேசிய மீன்பிடி பொதுச்சம்மேளனம் குறித்த புலமைப்பரிசிலை வழங்குவதற்கு இணக்கம் தெரிவித்துள்ளது. அதற்கமைய அம்மாணவனுக்கான விமான டிக்கட்டை கொரிய அரசு வழங்கியுள்ளது.
பத்திரிகை விளம்பரத்தினூடாக விண்ணப்பங்கள் கோரப்பட்டு, தகைமையுடைய மாணவர் தெரிவு செய்யப்பட்டதுடன் குறித்த பட்ட மேற்படிப்புக்கான காலம் இரண்டு வருடங்களாகும்.
இரண்டு வருட கற்கை நெறியை பூர்த்தி செய்து இலங்கை திரும்பிய பின்னர் குறித்த மாணவனின் துறைசார் அறிவை இலங்கை மீன்பிடித்துறைக்கு பயன்படுத்தப்படும் என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.