கிழக்கு மாகாண சிரேஸ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபராக எச்.டி.கே.எஸ்.கபில ஜயசேகர இன்று (25) மட்டக்களப்பு, லேடி மனிங் வீதி, மட்டக்களப்பிலுள்ள அலுவலகத்தில் கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டார்.
புதிய சிரேஸ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபரை வரவேற்குமுகமாக பொலிஸ் அணிவகுப்பு மரியாதை நிகழ்வு நடைபெற்று பின்னர் சமய வழிபாடுகளையடுத்து சிரேஸ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டார்.
அந்த நிகழ்வில் மதத்தலைவர்கள் மட்டக்களப்பு அம்பாறை மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஜெயகொட ஆராச்சி , சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர்கள், மாவட்ட மற்றும் பிரீவுகளின் பொலிஸ் அத்தியட்சகர்கள், பொலிஸ் நிலையங்களின் பெறுப்பதிகாரிகள், மாவட்ட பொலிஸ் அதிகாரிகள்ää உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டடிருந்தனர்.
சுமித் எதிரிசிங்க கிழக்கு மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபராக பணியாற்றி ஓய்வு பெற்றுச் சென்றதையடுத்து எச்.டி.கே.எஸ்.கபில ஜயசேகர புதிய கிழக்கு மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபராக நியமிக்கப்பட்டுள்ளார்.
கடந்த காலங்களில் திருகோணமலை, அம்பாறை, கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் கடமையாற்றியுள்ளார்.