லெபனானில் உரிய ஆவணங்களின்றி தொழில்புரிந்து வருகின்ற இலங்கையர்களை சட்டரீதியாக பதிவு செய்வதற்கான வசதிகளை ஏற்படுத்த உள்ளதாக அந்நாட்டு பிரதமர் சாட் ஹரீரி தெரிவித்துள்ளார்.
லெபனானுக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ள வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் வசந்த சேனாநாயக்க, அந்த நாட்டுப் பிரதமரை சந்தித்தார். இதன்போதே அவர் இந்த விடயத்தைக் கூறியுள்ளார்.
லெபனானில் சுமார் 5 ஆயிரம் இலங்கையர்கள் பதிவுகளற்ற நிலையில், தங்கியிருந்து பணிபுரிகின்றனர்.
அவர்களை சட்டரீதியாக பதிவுசெய்ய நடவடிக்கை எடுப்பதுடன், அவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தி நலன்புரி நடவடிக்கைகளையும் முன்னெடுக்க உள்ளதாக லெபனான் பிரதமர் கூறியுள்ளார்.
இந்த நிலையில், மேலும் திறமையான பணியாளர்களை லெபனானுக்கு அனுப்ப இலங்கை விரும்புவதாக வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் வசந்த சேனாநாயக்க தெரிவித்துள்ளார்.