புத்தளம் மாவட்டத்தின் சிலாபத்தின் மாதம்பே பிரதேசத்தில் உள்ள குறை வருமானமுள்ள குடும்பங்களுக்கு 'அனைவருக்கும் நிழல் விசரி வீட்டுக் கடன் வழங்கும் நிகழ்வு இன்று (23) இடம்பெறுகிறது.
மாதம்பே கூட்டுறவுச் சங்க கேட்போர்கூடத்தில் வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சர் சஜித் பிரேமதாச தலைமையில் இடம்பெறும் இந்நிகழ்வில் அப்பிரதேசத்தைச் சேர்ந்த 510 வறிய குடும்பங்களுக்கு வீடமைப்புக் கடன் வழங்கப்படவுள்ளது.
தெரிவு செய்யப்பட்ட குறித்த குடும்பங்களின் வீடுகளில் நிலவும் குறைபாடுகளை நிவர்த்தி செய்துக்கொள்வதற்கு இக்கடன் வழங்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.