ஹட்டன் - ஸ்ட்ரதன் தோட்டத்தில் 50 வீடுகள் நிர்மாணிப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்ப வசதிகள் மற்றும் பொது அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரம் தலைமையில் அண்மையில் இடம்பெற்றது.
மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்ப வசதிகள் மற்றும் பொது அபிவிருத்தி அமைச்சின் நிதியொதுக்கீட்டில் நிர்மாணிக்கப்படவுள்ளது.ழெ
ஏழு பர்ச்சஸ் காணியில் 550 சதுர அடிகள் கொண்ட இரு அறைகள், வரவேற்பறை, சமையலறை மற்றும் குளியலறையுடன் இவ்வீடுகள் நிர்மாணிக்கப்படவுள்ளன.
மத்திய மாகாண பாராளுமன்ற உறுப்பினர்களான சின்பொன்னையா, எஸ். ஶ்ரீதரன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.