கடுமையான குடிநீர் தட்டுப்பாடு நிலவும் ரம்புக்கன தேர்தல் தொகுதியில் நீர் விநியோகத் திட்டங்களை ஆரம்பிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக சப்ரகமுவ மாகாணசபை தெரிவித்துள்ளது.
றம்புக்கன, சூரியபுர நீர் விநியோகத்திட்டம் அண்மையில் மாகாண முதலமைச்சர் மஹிபால ஹேரத்தினால் மக்கள் பாவனைக்காக கையளிக்கப்பட்டது.
28 இலட்சம் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட குறித்த நீர் விநியோகத்திட்டத்தினூடாக சுமார் 300 குடும்பங்கள் நன்மையடையும் என்பது குறிப்பிடத்தக்கது.