புலம்பெயர் தொழிலாளர்களின் குடும்பங்களின் நன்மை கருதி நடத்தப்படும் 'ஷ்ரமிக்க சுரக்கும்' நடமாடும் சேவை இன்று (19) அம்பாறை மாவட்டத்தில் ஆரம்பமானது.
வௌிநாட்டு வேலைவாய்ப்பு ஊக்குவிப்பு அமைச்சு மற்றும் வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் ஆகிய இணைந்து இந்நடமாடும் சேவையை நடத்துகின்றன.
தெஹியத்தகண்டிய பிரதேச செயலகம், பதியதலாவ பிரதேச செயலகம், மகாஓய பிரதேச செயலகம் மற்றும் உஹன பிரதேச செயலகம் ஆகியவற்றில் இந்நடமாடும் சேவை நடத்தப்படுகிறது.
நாளை (20) அம்பாறை, எலகம, தமன மற்றும் லாஹுகல பிரதேச செயலகங்களிலும் 21ம் திகதி பொத்துவில், திருக்கோவில், ஆலையடிவேம்பு ஆகிய பிரதேச செயலகங்களிலும் 27ம் திகதி அட்டாளைச்சேனை, நிந்தாவூர், காரைதீவு, சாய்ந்தமருது ஆகிய பிரதேச செயலகங்களிலும், 28ம் திகதி கல்முனை முஸ்லிம், தமிழ் பிரதேச செயலக பிரதேச செயலகங்களிலும் நாவிதன்வௌி, சம்மாந்துறை ஆகிய பிரதேச செயலகங்களிலும் இந்நடமாடும் சேவை நடைபெறவுள்ளது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் 'நல்லாட்சியும் நிலையான நாடும் கொள்கைக்கமைய வௌிநாட்டில் பணியாற்றும் இலங்கையரின் பாதுகாப்பை உறுதிபடுத்தும் நோக்கில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் வழிகாட்டலில் கீழ் அனைத்து கிராமங்களிலும் இந்நடமாடும் சேவை நடத்தப்படுகிறது.